வே. மீனாட்சிசுந்தரம் எழுதிய "இந்தியாவின் அறிவியல் வறுமை" கட்டுரை |"India's Scientific Poverty" Tamil Article by V.Meenakshi Sundaram | www.bookday.in

இந்தியாவின் அறிவியல் வறுமை – வே. மீனாட்சிசுந்தரம்

இந்தியாவின் அறிவியல் வறுமை

– வே. மீனாட்சிசுந்தரம்

நம் நாட்டை ஆள்பவர்கள் வெட்கப்பட அவசியமான ஒரு செய்தி இதழ்களில் வெளிவந்தது. உலகின் 4,000 சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் 10 இந்தியர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். 60க்கும் மேற்பட்ட நாடுகளை உள்ளடக்கிய பட்டியலில் உள்ள 80%க்கும் அதிகமான பெயர்கள் 10 நாடுகளில் இருந்து மட்டுமே வந்தவை. குறிப்பிடத்தக்க வகையில், 70% ஐந்து நாடுகளைச் சேர்ந்தவர்கள். [யோகிதா ராவ் | TNN | ஜனவரி 04, 2019, 05:18 IST ஹைலைட்ஸ்]

ஐஐஎஸ்சி, ஐஐடிகள், டிஐஎஃப்ஆர், ஜேஎன்யூ மற்றும் டிஐஎஸ்எஸ் போன்ற புகழ்பெற்ற அறிவியல் மற்றும் சமூக அறிவியல் நிறுவனங்களை இந்தியா பெருமைப்படுத்துகிறது. ஆயினும்கூட, இரண்டு துறைகளிலும் உலகின் முதல் 1% ஆராய்ச்சியாளர்களில் (எச்.சி.ஆர்) 10 இந்தியர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
உலகின் மிகவும் ‘செல்வாக்கு மிக்க’ ஆராய்ச்சியாளர்களில் 4,000க்கும் மேற்பட்டவர்களை உள்ளடக்கிய இந்தப் பட்டியலை கிளாரிவேட் அனலிட்டிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 482 பெயர்களுடன் சீனா மூன்றாவது இடத்தில் உள்ளது. பல நாடுகளிலிருந்து குடியேறியவர்களை கொண்ட அமெரிக்கா 2,639 பெயர்களுடன் முதலிடத்திலும், இங்கிலாந்து 546 பெயர்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

இந்த புள்ளிவிவரம் உணர்த்துவதென்ன?

நமது நாட்டின் இளைய சமூகம் அறிவியல் துறைக்கு பங்களிக்க உத்வேகமூட்ட பிரபல விஞ்ஞானிகளின் வரலாறு மற்றும் அறிவியலின் படிமாற்ற வரலாறு தாய்மொழியில் வருவது அவசியம்.

அறிவியலின் வளர்ச்சி

மானுடத்திற்கும், பிற ஜீவராசிகளுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகள் என்னென்ன? மானுடத்திற்குள்ள கற்பனை ஆற்றல் அவைகளுக்கு கிடையாது, அவைகள் சாப்பிடுகின்றன. உணவுச் சங்கிலியாக அதனை இன்னொன்றால் சாப்பிடப்படவும்படுகின்றன. அடுத்து அவைகளின் வாழ்க்கையை இயற்கை தீர்மானிக்கும் அதன் வாழ்விடமும் உணவையும் இயற்கையே தீர்மானித்து விடுகிறது. அதே வேளையில் மானுடமோ வாழ்க்கையை தேர்வு செய்யும் வாய்ப்பு பெற்றது. விசும்பிலே கூடுகட்டி வாழவோ வேற்றுக்கிரகத்திற்கு குடியேறவோ ஆசைப்படும் ஒரே ஜீவராசி மானுடம்தான்.ஆனால் இவை அனைத்திற்கும் அறிவியல் வளர்ச்சியே அடிப்படையாகும். அது மட்டுமல்ல வேறு ஜீவராசிகளுக்கில்லாத குணமும் உண்டு. தான்வாழ சக மானுடத்தை கொல்லும் தன்மை இன்றும் மாறவில்லை. அறிவியல் வளர்ச்சியால் கண் இமைக்குமுன் பலட்சம் மக்களை கொல்ல முடியும். பல சதுர கிலோமீட்டரில் கட்டிடங்களை தரைமட்டமாக்கமுடியும். அதே வேளையில் மானுடம் நாகரிகமாகவும் சேர்ந்து வாழவும் அறிவியல் தொழில்நுட்பமே உதவுகிறது.. மானுட மனத்தை மேம்படுத்தும் அறிவியலின் வளர்ச்சிக்கு அறிவியல் கோட்பாடுகளை உருவாக்குவதில் இந்தியாவின் அதிலும் தமிழ் மண்ணின் பங்கும் அநேகமாக இல்லை. இனி நாம் பங்களிக்க என்ன செய்ய வேண்டும் என்ற பிரச்சினை பூதாகரமாக நம்முன் உள்ளது. வரலாறு காட்டுவதென்ன?

இயற்கை பற்றி தொல்காப்பியம், கூறுவதென்ன?

நிலம் நீர் தீவளி விசும்பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் (தொல்.மரபு–90)

பிரிக்க முடியாத வண்ணம் ஒன்றை ஒன்று பின்னிப்பிணைந்த நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற மூலக்கூறுகளால் இந்த உலகம் உருவாகியிருக்கிறது என்பதை தொல்காப்பியம் கூறுகிறது. இதை மேலோட்டமாக பார்த்தாலே போதும், காணமுடியும். அவைகளின் இயக்கம் தானாக நிகழ்கிறதா, யாராவது இயக்குகிறார்களா? அதற்கு நியதி உண்டா? என்ற ஐயங்கள் ஏன் தோன்றவில்லை என்ற கேள்வி எழுகிறது. அந்தக் கேள்விகள்தானே அறிவியலுக்கு அடிப்படையாகும். சமஸ்கிருதத்தில் துவக்ககால தத்துவம், இந்தக் கேள்வியை கேட்டது. அதனால் துவக்ககால அறிவியல் தேடல் வான சாஸ்திரமானது பின் ஏன் வளராமல் ஜோதிடமாகி மங்கி மறைந்தது.

ரிச்சர்டு பேயன்மென் என்ற பிரபல அமெரிக்க விஞ்ஞானி cargo cult science by richard feynman தலைப்பில் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார், இதனை மேல்நாட்டு விஞ்ஞானிகள் பொதுவாக கிட்ச் சயின்ஸ் என்று அழைக்கின்றனர். இதனை தமிழில் குப்பை அறிவியல் அல்லது கள்ள அறிவியல் எனலாம். அறிவை வளர்க்கும் அறிவியல் வளராமைக்கு இந்த போலி அறிவு காரணமென்கின்றனர். சராசரி மானுடத்திற்கு அறிவியல் நோக்குடன் பிரச்சினைகளை அணுக கற்பித்தல் அவசியம். அந்த நோக்குடன் தான் ஐன்ஸ்டீன் வாழ்க்கை எழுதப்பட்டது. அந்த நோக்குடன் இன்றைய குப்பை அறிவியலுக்கெதிராக நடக்கும் சித்தாந்தப் போர் பற்றி ஒரு அறிமுகத்தோடு இப்பதிப்பு வெளிவருகிறது.

இந்தியாவில் மோடி ஆட்சியில் குப்பை அறிவியல் ஊடக உதவியோடு தடையின்றி மக்களை மயக்குகிறது. எந்த எதிர்ப்பும் காட்டாமல் அறிவுலகம் சிவனேன்னு கிடக்கிறது. ஒரு வேளை போலி ஆய்வுகளுக்கு பணம் ஒதுக்குவதால் நேர்மையற்றுப் போனார்களா? ஜர்னலிசம் நேர்மையற்றுப் போனதா? ஆனால் உலகளவில் குறிப்பாக மேலை நாடுகளில் 19ம் நூற்றாண்டிலிருந்தே ஜர்னலிஸ்ட் மார்க்ஸ் மற்றும் விஞ்ஞானி மைக்கேல் ஃபாரடே போன்றோர் போலி அறிவியலுக்கெதிராக தொடுத்த போராட்டம் இன்றும் தொய்வின்றி நடப்பதை காண்கிறோம். இன்று அறிவை வளர்க்கும் ஒரு பெரும் அறிவியல் படை இருப்பதை காண்கிறோம். அறிவை வளர்க்கும் அறிவியலை வளர்க்க, தேடிட ஆர்வத்தை உருவாக்க ஐன்ஸ்டீன் வாழ்க்கை இரண்டாம் பதிப்பில் மயக்கும் அறிவியலுக்கும் அறிவை வளர்க்கும் அறிவியலுக்கும் உள்ள வேறுபாட்டை அடையாளம் காண தேவையானவற்றை வெளியிடுவது பொருத்தமாகும் என்பது மட்டுமல்ல அவசியமாகும்.

(1) அறிவியலில் கட்டுக்கதைகளும் தப்பெண்ணங்களும்

சில வருடங்களுக்கு முன்னால் கியூபா நாட்டு இதழான கிரான்மாவில் ஏர்னஸ்ட்டோ ராம்ஸ் என்பவர் எழுதிய “அறிவியல் கட்டுக்கதைகளும், தப்பெண்ணங்களும் (Myths and misconceptions of science by Ernesto Estvez Rams) என்ற கட்டுரை வெளியிடப்பட்டது. அக்கட்டுரை கியூபா நாட்டு மக்களுக்காக எழுதப்பட்டாலும் நமக்காகவும் எழுதப்பட்டதாக இருக்கிறது அந்தக் கட்டுரையில் உள்ள சில சிறப்புக் கருத்துகளை வாசகர் சிந்தனைக்கு படைக்கிறோம்.

பரபரப்பை உருவாக்கும் ஊடகங்கள்

அறிவியல் செய்திகள், உலகளாவிய செய்தி நிறுவனங்களின் கைகளில், உள்ளடக்கத்தின் தரத்தைப் பொருட்படுத்தாமல், ஒரு விளம்பரக் கொக்கியாக மாறியுள்ளது. ஏறக்குறைய தினமும் கண்கவர் “விஞ்ஞான முன்னேற்றங்களை” அறிவிப்பதும், ஆதாரமற்ற ஊகங்களுடன் பரபரப்பை ஏற்படுத்துவதையும் காண்கிறோம்.

அறிவியல் உண்மைகள் எவ்வாறு அறியப்படுகின்றன?

நாஜி ஜெர்மனியில் இருந்து தப்பித்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அவரது தாயகத்தில், சுமார் நூறு விஞ்ஞானிகள் சார்பியல் கோட்பாட்டைக் கண்டித்து ஒரு கடிதத்தில் கையெழுத்திட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. “அவர்கள் சொல்வதுதான் சரி என்றால் எதுக்கு நூறு, ஒரு கையொப்பம் போதுமானது” என்று அவர் பதிலளித்தார்
இயற்கை அறிவியல்கள் பற்றிய அறிவை உருவாக்கும் வழிகளில் மக்கள் வாக்கெடுப்பு மூலம் முடிவு செய்ய முடியாது பட்டிமன்ற விவாதம் போல் நடத்தி எது உண்மை என்று தீர்மானிக்க முடியாது. ஒருவிஞ்ஞான உண்மை பொது விசாரணையாலோ மக்கள் வாக்கெடுப்பு மூலமோ தீர்மானிக்கப்படுவதில்லை, ஆனால் புறநிலை ஆதாரங்களுடன் ஒப்பிடப்படுகிறது.

அறிவியல் உலகில் பல ஆழமான விவாதங்கள் உள்ளன, ஆனால் இவை ஆதாரங்களின் அடிப்படையில் நடைபெறும் விவாதங்கள். அந்த ஆதாரங்களை எவ்வாறு விளக்குவது என்பது ஒரு சிக்கலான பிரச்சினை.

அறிவியலில் எந்தவொரு தனிநபருக்கும் கருத்து தெரிவிக்க எந்த உரிமை இருந்தாலும் எல்லா கருத்துக்களுக்கும் ஒரே மாதிரியான செல்லுபடியாகும் தன்மை இல்லை. ஒரு தீயணைப்பு வீரர் ஒரு வகை தீயை அணைக்க அணுக வேண்டிய குறிப்பிட்ட நடைமுறையைப் பற்றி வாதாடினால், அவரது கருத்து மதிப்பு மிக்கது. அதே தீயணைக்கும் கருவி என்னிடம் உள்ளது. நான் ஒருபோதும் தீயணைப்புக் கருவியைப் பயன்படுத்தியதில்லை. குறிப்பாக எனது கருத்து அனுபவ அடிப்படையாகக் கொண்டது அல்ல, ஆனால் யதார்த்தத்திற்கு வெளியே தூய ஊகத்தை அடிப்படையாகக் கொண்டது. தீயணைப்பு வீரருடன் என்னை விவாதிக்க வைத்து, இருவரையும் சமமான பேச்சாளர்களாக முன்வைப்பது, முட்டாள்தனம்.

அதே நேரத்தில், அறிவியலின் மற்றொரு முகத்தை பார்க்க தவறக் கூடாது. மிகவும் உயர்ந்த அறிவியல் நிபுணர் வழங்கிய கருத்தை அப்படியே ஏற்க முடியுமா? விவாதிக்கவும் கருத்தை வழங்கவும்,உரிமை அவசியம். இது அவரது அதிகாரம் மற்றும் கௌரவத்திற்கு எதிராக வைப்பதாகாது ஒரு முறை. ஐன்ஸ்டீன் புகழ்பெற்ற அறிவியல் இதழான இயற்பியலில் ஒரு கட்டுரையை அனுப்பினார். அவர் முன்வைத்த ஆதாரங்களால் அவர் உருவாக்கிய கருத்தை விமர்சகர்கள் நிராகரித்தார்கள். விமர்சகர்கள் அவர் முன்வைத்த கருத்தை ஏற்க ஆதாரங்கள் போதாது என்று விமர்சித்தனர். அவர் உரையை நிராகரித்தது சரிதான் என்று பின்னால் காலம் காட்டிவிட்டது

அறிவியலின் இன்னொரு முகம்

அறிவியலின் இன்னொரு விநோதம் புவி ஈர்ப்பு தன்மை பற்றிய முரண்பட்ட கோட்பாடுகள் உள்ளன. எல்லாம் சோதனைகள் மூலம் செல்லுபடியாகின்றன. ஒவ்வொரு தருணத்திலும் நாம் சரிபார்க்கும் ஒரு உண்மை, அதன் விளைவுகளை அதை முன்மொழிபவர்களால் அளவிட முடியும், மேலும் குறைந்தபட்ச சோதனை கடுமையைப் பின்பற்றினால் முடிவுகள் மறுஉருவாக்கம் செய்யக்கூடியவை. எனவே, ஈர்ப்பு விசையின் முரண்பட்ட தன்மைகளை வைத்து ஈர்ப்புவிசை என்ற ஒன்று இல்லை என்று மறுப்பவர்களின் கருத்தை அறிவியல் கருத்தாக மதித்து நிரூபிக்க இயலுமா? இல்லை, சோதிக்கத்தான் முடியுமா? ஒரு கட்டிடத்தின் கூரைக்கு மேலே கடந்து போக நடக்க ஒருவரைத் தூண்டுவது போல ஆபத்தானது.

கொரோனா வைரஸ் இருப்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. அது ஏற்படுத்தும் நோயெதிர்ப்பு எதிர்வினை அளவிடக்கூடியது, வைரஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது, அதன் வரிசை உலகெங்கிலும் உள்ள பல ஆய்வகங்களால் டிகோட் செய்யப்பட்டுள்ளது, இது எலக்ட்ரான் நுண்ணோக்கி மூலம் கவனிக்கப்பட்டுள்ளது மற்றும் மனித ஆரோக்கியத்தில் அதன் தாக்குதல் மறுக்க முடியாதவை. கொரோனா வைரஸ் இருப்பதை மறுப்பவர்களை அதை அங்கீகரிப்பவர்களுடன் ஒப்பிடுகையில், சம உரிமைகளுடன் முரண்பட்ட கருத்துக்களாக கொள்ள முடியுமா? ஒப்பிடும் வகையில், கொரோனா வைரஸின் இருப்பு குறித்த ஒரு விவாதத்தை தடுத்தால் என்ன விளையும், கொரோனா இருப்பதை நம்புகிறவர்கள் சிகிச்சைக்கு உட்படுவர். நம்பாதவர்கள் நோயை பரப்புகிறவர்களாக ஆகிவிடுவர். எனவே விஞ்ஞான உண்மைகளை மக்களின் அபிப்ராயத்தை வைத்து தீர்மானிக்க முடியாது.

(2) மயக்கும் அறிவியல் படைப்புகள்

இயற்கை மற்றும் சமூகத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் மற்றும் அவற்றின் விளைவுகளை தீவிரமாக ஆராய்வதே அறிவைப் பெற உதவும் அறிவியலாகும். ஒரு சுற்றுச்சூழல் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம், சுற்றுச்சூழல் அமைப்புகளின் விதிகளுக்கான நேர்மையான தேடல் மற்றும் மனிதத் தாக்கம் குறித்த அக்கறையிலிருந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதில்லை. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒளிபரப்பில் உலகின் மிகப்பெரிய நிறுவனம் டிஸ்கவரி கம்யூனிகேஷன்ஸ் கூட்டமைப்பு ஆகும் நாஸ்டாக் பங்குச் சந்தையில் இதன் பங்குகள் விற்கப்படுகின்றன. லாப நோக்கே அதன் இலக்கு. டிஸ்கவரி கம்யூனிகேஷன்ஸ் அமெரிக்காவில் ஆங்கிலத்தில் 12 வெவ்வேறு சேனல்களையும், ஸ்பானிஷ் மொழியில் மூன்று சேனல்களையும் கையாளுகிறது. உலகளவில் இது 35 வெவ்வேறு மொழிகளில் ஒளிபரப்பப்படும் நூறு சேனல்களில் ஈடுபட்டுள்ளது. உள்ளடக்கத்தின் உருவாக்கம் முக்கியமாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்படுகிறது.

திட்டமிடப்பட்ட படத்திற்கு மாறாக, சந்தை அழுத்தத்தால் டிஸ்கவரி உருவாக்கும் படைப்புகள் பலியாகின்றன. அதென்ன சந்தை அழுத்தம்? பார்வையாளர்கள் விருப்பத்திற்கேற்ப படைப்பில்லையானால் சந்தையில் அதன் பங்கின் விலை சரியும் இவ்வாறு, அதன் சேனல்களில் வழக்கமான நிகழ்ச்சி நிரலாக்கங்களில், அறிவியல் செய்திகளின், உள்ளடக்கத்தின் தரத்தைப் பொருட்படுத்தாமல், ஒரு விளம்பரக் கொக்கியாக மாற்றிவிடுகிறது. கிட்டத்தட்ட தினமும் கண்கவர் “விஞ்ஞான முன்னேற்றங்களை” அறிவிக்கிறது. இந்தப் படைப்புகள் அறிவை உயர்த்தும் அறிவியலை மலினப்படுத்துகிறது. விநோதம் என்ன வெனில் அறிவியல் படைப்பில் உள்ள கோட்பாட்டு குறியீட்டுச் சொற்களான பிளாக்ஹோல்ஸ், ஸ்பேஸ் ஃபெபரிக் ஸ்டிரிங், மெம்பிரேன், மல்டிவேர்ஸ் போன்ற சொற்களை லாவகமாக கையாண்டு உண்மையான படைப்பாக தோற்றத்தை உருவாக்கிவிடுகிறது. அதனை பார்த்த பார்வையாளன், தான் அறிவியல் தெறிந்த அறிவாளியாகிவிட்டதாக கருதிக் கொள்கிறான். ஒரு புனைகதையில் உள்ள ஒரு முட்டாள் குப்பைத் தொட்டியில்கிடந்த ஸ்டெதாஸ்கோப்பை கழுத்திலே மாட்டியவுடன் டாக்டராக ஆகிவிட்டதாக கருதிக்கொண்டது போல் இந்தப்போலி படைப்புகளும் பார்வையாளனை மாற்றிவிடுகிறது. அதுமட்டுமல்ல ஆதாரமற்ற ஊகங்களுடன், பரபரப்பை ஏற்படுத்துகிறது. இது உண்மையான அறிவியலை ஒரு அபத்தமாக்குகிறது. கொச்சைப்படுத்துகிறது. அறிவியல் போலி கலாச்சாரத்தை உருவாக்குகிறது.

இணையான உலகங்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ஒரே மாதிரியாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் அல்லது சிக்கலான அண்டவியல் கோட்பாடுகள் கருந்துளைகளின் கண்கவர் தன்மையின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன, இது ஆடியோவிஷுவல் தயாரிப்பில் காணப்படுகிறது, இது ஒரு ஹோலிவுட் தயாரிப்பின் சிறப்பு விளைவுகளிலிருந்து மிகவும் வேறுபட்டதல்ல. இப்படி அறிவியலை பிரபலப்படுத்துவது என்பது மேலோட்டமான மற்றும் சாதாரண சிந்தனையின் பிரதிபலிப்பைத் தவிர வேறொன்றுமில்லை, இது வெறும் காட்சியாக சுருங்கி, கற்பித்தலுக்கு பதிலாக, வியப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அவர்கள் விற்கும் பொருளுக்கு அடிமையான ஒரு நுகர்வோர். இந்தத் தனித்துவமான சிந்தனைக் கலையை மறுகட்டமைப்பு செய்ய அதே பாணியை நாடுகிறார். இது முட்டாள்தனத்தின் நிலைக்கு தள்ளிவிடுகிறது.

அதே நேரத்தில் அறிவியல் பார்வை கொண்ட முழுமையான தனிநபரை வளர்த்தெடுக்கும் போராட்டம் கல்வியிலிருந்து தொடங்குகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதை அடைவது இன்றியமையாதது.

அதற்காக மேலாதிக்க முதலாளித்துவத்தை உருவாக்கும் வழிகளை இறக்குமதி செய்வது தவறு ஆகும், இது விஞ்ஞானத்தின் இந்த கிட்ச் சயின்சிற்கு அபினியாகவும், ஏற்கெனவே அதன் தீர்ந்துபோன அமைப்பின் நாகரிகம் மேன்மையானதாக காட்ட ஒரு ஆயுதமாகி விடுகிறது அல்லது ஒரு நுகர்வோர் தேவைப்படும் சந்தைப்படுத்தக்கூடிய பரபரப்பான படைப்பாக ஆக்கப்படுகிறது. கியூபாவுக்கும் அதன் சோஷலிசத் திட்டத்திற்கும் படைப்பாற்றல் என்னவென்றால், மேலாதிக்க மையங்களிலிருந்து வருவதின் காலனிய நகல் அல்ல, மாறாக அசல், ஈர்ப்புத் தன்மை கொண்ட உறுதியான தைரியமான, தீவிரமான வழியாகும். மேலே உள்ள விவரங்கள் கியூப அரசிற்கு எச்சரிக்கை செய்ய எழுதப்பட்டாலும் இந்தியாவிற்கும் பொருந்தும்.

(3) மோடி அரசின் கொச்சை அறிவியல் பிரச்சாரம்

கிட்ச் கலை போல் இன்று கிட்ச் அறிவியல் தோன்றிவிட்டதாக கிரான்மா கட்டுரை குறிப்பிட்டு அதன் ஆபத்தை விரிவாக பேசுகிறது. கிரான்மா இதழ் குறிப்பிட்ட கிட்ச் ஆர்ட் கிட்ச் சயின்ஸ் என்பவைகள் எதைக் குறிக்கின்றன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். “கிட்ச்” என்ற ஜெர்மன் சொல் குப்பையை குறிக்கிறது. இது குறிப்பாக மலிவான, கொச்சையான பிரபலமான மற்றும் வணிக கலாச்சாரத்தின் உணர்ச்சிகரமான வடிவங்களை விவரிக்க ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஓவியம், சிற்பம், கட்டிடம், இசை, இலக்கியம் மலினமான படைப்புகளை கிட்ச் ஆரட் உதாரணமாக ஜே.கே. ரோவ்லிங் எழுதிய ஹாரிபாட்டர் கதைகள் போன்ற ஃபேன்டசி கதைகள் மோடி கட்டிய ராமர் கோவில், படேல் சிலை அலங்கார நகைகள் கட்டிட முகப்பின், அலங்காரங்கள் இவைகளே அறிவை மழுங்கடித்து உணர்ச்சிவசப்படவைக்கும். அபினி போன்று போதையில் தள்ளவைக்கும் கலைகள் பல தமிழ் சினிமாக்கள் ஜேம்ஸ்பாண்ட் படங்கள், அமெரிக்க ரோம்போ சீரியல் இதில் அடங்கும். அதே வேளையில் சயின்ஸ்ஃபிக்சன் அறிவியல் பார்வையை கொடுக்கும் இலக்கிய படைப்புகளுமுண்டு. அறிவியலை யாவரும் புரிகிற முறையில் விஞ்ஞானிகளே எழுதி குவித்து வருகின்றனர். சயின்ஸ்ஃபிக்சன்கள் உதாரணமாக ஆர்தர்.சி கிளார்க், ராபர்ட் ஹெயிலின் அசிமோவ் படைப்புகள் உலகளவில் போற்றப்படுகின்றன. தமிழில் அறிவியல் எழுத்துக்கள் மிக மிகக் குறைவு. ஒரிஜினல் படைப்பாளிகளை “காலை சத்துணவு” சாப்பிடும் சிறுவர் சிறுமியர்களுக்கு சத்தான கல்வியும் கிடைத்தால் அவர்கள் எழுதிக் குவித்து பல மொழிகளில் பரவும்.

பிரதமர் மோடியும் குப்பை அறிவியலும்

பிரதமர் நரேந்திர மோடிஜி மேடைகளில் முழங்கும் போது முற்றிலும் நவீனமாகத் தோன்றுகிறார். இந்தியாவின் எதிர்காலம் பற்றி பேசுவதை கேட்டால் இவரன்றோ நாட்டுப் பற்றுக்கு எடுத்துக்காட்டென வியக்கிறோம். 2047க்குள் சிக்கிள் செல் அனிமியா என்ற நோய் இல்லாத நாடாக ஆக்கப் போவதாக சொல்லுகிறபொழுது ஏழைகள் மீது அவரது அக்கறை கரை புரண்டு கேட்போர் காதுக்குள் ஓடுகிறது. எந்த இந்திய அரசியல் தலைவருக்கும் இல்லாத தொலைநோக்கு என்றே விவரம் அறியாதவர்கள் வியந்து பாராட்டுகின்றனர்.

அறிவியல் தொழில்நுட்பத்திற்கு அவர் காட்டுகிற அக்கறை வியக்க வைக்கிறது. அவர் நிலவின் ஆய்வை ஊக்குவிக்கிறார், அதி நவீன போர் விமானங்களுக்கு ஆர்டர் செய்கிறார், முதல் புல்லட் ரயில் திட்டத்தைத் தொடங்குகிறார், இந்தியா உலகிற்கு தடுப்பூசிகளை வழங்கும் ஒரு தடுப்பூசி பவர்ஹவுசாக, தான் ஆக்கியதாக மார்தட்டுகிறார்.

ஆனால் அவர் ஒரே நேரத்தில் போலி அறிவியல் போலி ஜனநாயகம் மட்டரக பொருளாதாரக் கோட்பாடு பழமைவாத நிர்வாகம் இவைகளின் தூதுவனாக ஆகிறார்.
பண்டைய எண் கணிதத்தின் அடிப்படையில் புனிதமான தருணங்களில் கோங்ஸ் அடிக்கவும், சங்கு ஊதவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்துவதன் மூலம் சார்ஸ்-கொரோனா வைரஸ்-2ஐ விரட்ட பிரபஞ்ச சக்தியை அவர் ஏவுகிறார்.

யோகா குருவின் சோதனைக்குள்ளாகாத கோவிட்-19 மருந்தை அறிமுகப்படுத்துகிறார். இந்தியாவின் புராணத்தை படித்துவிட்டு கடந்த காலத்தில் இந்தியாவின் அறிவியல் சாதனைகளைப் பற்றி திரு மோடி பிரகாசமாக பேசுகிறார். எடுத்துக்காட்டாக, மேற்கத்திய நாடுகள் அதை கண்டுபிடிப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் விநாயகரின் மீது மாற்றப்பட்ட யானைத் தலை பெரும் முன்னேற்றம் என்று மேற்கோள் காட்டுகிறார். கடந்த காலங்களில் மன்னர்கள் தாங்கள் செய்த பாவத்தை போக்கவே கோவில் கட்டுவர். அதுவும் அலங்காரப் படைப்பாக இருக்குமே தவிர பயன்பாடு எதுவுமிருக்காது.

நமது மோடிஜி நூறாண்டு ஆட்சிக்காக ராமர் கோவிலை அலங்காரமாக கட்டி அவரே பூசையும் செய்து மூடநம்பிக்கையின் முழு அவதாரமாகி விடுகிறார். குஜராத் மாநிலத்தில் உள்ள ஜுன்கத் விவசாய பல்கலைக் கழகம் மாட்டுமூத்திரத்தில் மற்றும் பசும்பாலிலும் தங்கம் இருப்பதை கண்டுபிடித்ததாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியதால் வட மாநிலங்களிலே ஏராளமான விஞ்ஞானிகள் தோன்றி பாலைவிட அதிக விலை கொடுத்து மூத்திரத்தை வாங்கி ஏமாந்து போனதை பத்திரிகை செய்தியானது. விஞ்ஞானி ராம்புன்யானி இதுபற்றி கூறியதை வீடியோவில் பார்க்கமுடியும் (https://www.youtube.com/shorts/SBHcG5qj7fg?feature=share [Bad news for those still looking for gold in cow milk SABRANGINDIA MARCH 12, 2021]. இவ்வாறு பிரதமரே பழமையில் அறிவியல் இருப்பதாக சொன்னது சயின்ஸ் முட்டாள்களை உருவாக்கியதுதான் மிச்சம். இவரது மட்டரக பொருளாதாரக் கோட்பாடும் மன்னர் கால அரசியலும் நம்மை ஏகாதிபத்திய சக்திகளின் பகடைக்காயாக மாற்றிவிட்டது.

ஜனநாயகத்தை இவர் ஆட்டுவிக்கும் பொம்மையாக்கிவிட்டார். காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகளை பறித்தார். மாநில அந்தஸ்தை மறுத்தார். ஏன் ஜி.எஸ்டி. வரி என்று கேட்டால் இன்று வலி, 2049ல் வலிமை இந்தியா என்கிறார். இந்தியாவை வல்லரசாக்குவேன் என்று முழங்கி டாலர் பகவானுக்கு நாட்டை அடிமையாக்குகிறார்.

சிக்கிள் செல் இரத்த சோகை என்பது இந்தியாவில் ஒரு குறிப்பிடத்தக்க மரபணு இரத்த நோயாகும். மில்லியன் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் இந்தியா எண்ணிக்கையில் முதல் இடத்திலும் சதவீதக் கணக்கில் இரண்டாமிடத்திலும் மிகப்பெரிய சுமையாக உள்ளது. இது குறிப்பாக ஒடிசா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள பழங்குடி மக்களிடையே குவிந்துள்ளது. தேசிய சிக்கிள் செல் இரத்த சோகை இயக்கத்தை 2047ஆம் ஆண்டுக்குள் ஒழித்து முடிப்பேன் என மோடிஜி சபதம் ஏற்றுள்ளார். என்னே கருணை.

கார்கோ கல்ட் சயின்சும் மோடி அரசின் கொள்கையும்

நோபல் விருது பெற்ற இயற்பியலாளர் ரிச்சர்ட் ஃபேயன்மேன் பண்டைய மூடநம்பிக்கைகள், கருப்பு மந்திரம், வூடூ, சூனிய மருத்துவர்கள், ஜோதிடம், மனம் வாசிப்பு, ESP (அப்பாற்பட்ட உணர்வு), விரிவாக்கப்பட்ட நனவு, காண்டாமிருக கொம்புகளிலிருந்து தயாரிக்கப்பட்ட பாலுணர்வு வீரிய மருந்து மற்றும் பிற விவாதத்திற்குரிய கருத்துக்களை விவரிக்க ‘கார்கோ வழிபாட்டு அறிவியல்’ என்ற வார்த்தையை உருவாக்கினார். அவர் சேர்க்காவிட்டாலும் இந்தப் பட்டியலில் இந்துமத சடங்குகளும், யாகங்களும் திருவிழாக்களும் அடங்கும்.

பசிபிக் பெருங்கடலில் உள்ள தென் கடல் தீவுவாசிகள், உலகப் போரின் போது, விமானங்கள் தரையிறங்குவதையும், சரக்குகளை விநியோகிப்பதையும் பார்த்த அத்தீவு மக்கள் போர் நின்ற பிறகு அந்த விநியோகம் நிறுத்தப்பட்டது. அங்குள்ள மக்கள் மீண்டும் சரக்குகளை பெற ‘சரக்கு வழிபாட்டு’ முறையை பின்பற்றுவதாக கேள்விப்பட்டு அங்கு சென்று ஆய்வு செய்தார். போருக்குப் பிறகு, அவர்கள் வானத்திலிருந்து இதேபோன்ற பரிசுகளைப் பெற விரும்பினர். எனவே அவர்கள் ஓடுபாதைகளை ஒத்த தரையிறங்கும் பாதையை தயார் செய்தனர், இருபுறமும் தீப்பிழம்புகளை அமைத்தனர், ஹெட்போன்களைப் போல தோற்றமளிக்கும் மரத் துண்டுகளை உருவாக்கினர், ஆண்டெனாக்களை ஒத்த மூங்கில் பங்குகளை ஒட்டிக்கொண்டனர், மேலும் விமானங்கள் தரையிறங்கும் வரை காத்திருந்தனர்.

அவர்கள் குச்சிகள் மற்றும் தீப்பிழம்புகளை சரிசெய்வதன் மூலம் தங்கள் பயிற்சியை மீண்டும் செய்தனர். ஆனால் விமானங்கள் தரையிறங்கவில்லை. அவர்கள் எதையும் காணவில்லை. அவர்கள் எல்லாவற்றையும் சரியாக செய்தார்கள். ஆனால் விமானங்கள் இல்லை. அவர்கள் வடிவத்தை மாற்றிக் கொண்டிருந்தனர், ஆனால் பொருளை மாற்றவில்லை. இதனால் நாம் அறிவதென்ன, “நாம் உண்மையில் வேலை செய்யாத கோட்பாடுகளையும், அறிவியல் அல்லாத அறிவியலையும் கவனிக்க வேண்டும். கண்டும் காணாமல் இருந்து விடக் கூடாது என்பதை ஃபேயன்மென் சுட்டிக்காட்டுகிறார். இதன் மூலம் ஃபேயன்மென் அறிவியல் ஆய்விற்கும் அறிவியல் பார்வை தேவை. மாட்டு மூத்திரத்தில் தங்கமிருக்கிறது என்பதை ஆராயப்புகுவது கார்கோ கல்ட் சயின்ஸ் என்லாம். மூட நம்பிக்கைகளை அம்பலப்படுத்த சயின்பிக் டெம்பர் தேவை. இது ஐரோப்பாவில் 19ம் நூற்றாண்டிலேயே முளைவிட்டுவிட்டது.

மைக்கேல் ஃபாரடேயும் அறிவியல் பார்வையும்

19ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிவியல் பார்வை வீறு கொண்டு எழுந்துவிட்டது அதன் முன்னோடியாக ஃபரடே இருந்தார். ஃபாரடே வெறும் சோதனையாளர் மட்டுமல்ல. விஞ்ஞான அறிவை பரவலாக்க முயன்றவர். கடைசிவரை சாந்தமேனியன் கிருத்துவனாக வாழ்ந்த ஃபாரடே மூட நம்பிக்கைகளுக்கு எதிராக போர் தொடுத்தவிதம் தனித்துவமானது. அவர் வாழ்ந்த காலத்தில் இறந்தவர்களின் ஆவியோடு மேசையில் கைகளை வைத்து பேசமுடியும் என்ற நம்பிக்கை ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நவீனயுக ஆன்மீகமாக பரவியது. ஒரு எளிய சோதனை மூலம் அந்த மூட நம்பிக்கையை அவர் தகர்த்த விதம் மனிதகுலத்தின் கூட்டு நினைவாக ஆக்கப்படவேண்டிய ஒன்று. இயற்கையின் இயல்புகள் இரண்டு வகைப்படும். ஒன்று ஐம்புலன்களால் கண்டு, கேட்டு, தொட்டு உணரமுடிகிற இயல்புகள். மற்றொன்று மனதால் மட்டுமே காணமுடிகிற இயல்புகள். உதாரணமாக அணுசக்தி. புவிஈர்ப்பு மற்றும் காந்த சக்தி, சில வகை ஒலி ஒளி அலைகள் இவைகளை கற்பனை செய்யமுடியுமே தவிர ஊனக் கண்ணால் பார்க்க முடியாது. இவைகளால் ஏற்படும் விளைவுகள் மாயமாகப்படுவதால் மூடநம்பிக்கைகளுக்கு அடிப்படை போடுகிறது. அறிவியல் அறிவுப் பார்வை பரவலை பொறுத்தே மூட நம்பிக்கைகளின் செல்வாக்கு குறையும் என்ற உண்மையை நிரூபித்து காட்டியவர் முதலில் உணர்த்தியவர் ஃபாரடே என்றால் மிகை அல்ல.

மார்க்சும் அறிவியல் பார்வையும்

மார்க்சை எல்லாவற்றிக்கும் மேலாக கிரிட்டிக் ஆஃப் கிரிட்டிகல் கிரிட்டிக் என்பர் எதையும் அறிவியல் பார்வையோடு அணுக இந்த விமர்சனப் பார்வை தேவை என்பதை தன் எழுத்தின் மூலம் நிரூபித்தார். ஒருவரது நம்பிக்கைக்கு அடிப்படையான தத்துவங்களுக்கே அறிவியல் பார்வை தேவைப்படுகிறது என்பதை மார்க்சே முதலில் தெளிவாக்கியவர். அவர் தத்துவங்களை விமர்சிப்பதோடு நிற்கவில்லை தத்துவங்களைப் பற்றிய விமர்சனங்களை விமர்சித்து நடைமுறைக்கு வழிகாட்டியாக்கினார். எந்த ஒரு செயலுக்கும் அறிவியல் மற்றும் மனிதாபிமான அடிப்படை கொண்ட கோட்பாடு தேவை என்பதை உருவாக்கினார். மிகவும் பிரபலமான வாசகங்கள் 1) புரட்சிகரமான கோட்பாடில்லாமல் புரட்சிகரமான இயக்கமில்லை 2) ஹெகல் என்ற தத்துவஞானியின் தலைகீழாக கிடந்த தத்துவத்தை நேராக்கியவர் என்ற வாசகங்களே. அதுபோல் அறிவியல் கண்டுபிடிப்புகளின சமூகதாக்கத்தை அளவிட்டார். கணக்கியலில் உருவாகும் புதிய வழிமுறைகளை புரிய மூளையை கசக்கினார். ஸ்குயர்ரூட் ஆஃப் மைனஸ் ஒன் பற்றி அவரும் எங்கெல்சும் கருத்து பரிமாறியதை வரலாறு குறிப்பிடுகிறது. அறிவியலில் இயக்க விதிகள் இருப்பது போல் சமூக உறவிலும் இயக்க இயல் இருப்பதை தேடலானார். அறிவியல் தத்துவம் சமூகம் இம் மூன்றுக்குமிடையே முரண்படும் உறவுகளை புரியவும் தைரியமாக பிரச்சினைகளை சந்திப்பதற்கும் மார்க்ஸ் காட்டிய வழியே எளிமையானது.

சுயநலமும் பொது நலனும் முரண்படவேண்டுமா? ரிச்சர்ட் டாக்கின்ஸ் என்ற பிரபல உயிரியல் ஆய்வாளர் எழுதிய “சுய நல மரபணு” என்ற அறிவியல் புத்தகத்தைப் படித்த வாசகர் ஒருவர் அவரிடம் ஒரு கேள்வியை கேட்டார்,

1976இல் நீங்கள் சுயநல மரபணுவை வெளியிட்டபோது, பரிணாமம் போட்டி மற்றும் தகுதியானவர்களின் உயிர்வாழ்வு என்பதுதான் இயல்பானது என்று நீங்கள் கருதுவதாக எனக்கு அதிகம் தோன்றியது. இப்போது நீங்கள் ஒத்துழைப்பைப் பற்றி அதிகம் பேசுகிறீர்கள். போட்டியிலிருந்து விலகி ஒத்துழைப்பை நோக்கி உங்களை நகர்த்தியது எது? அதற்கு அவர் அளித்த பதில், அது ஒரு தவறான புரிதல் என்று நான் நினைக்கிறேன். நான் மாறவில்லை, ஏனென்றால் சுயநல மரபணு உண்மையில் சுயநலத்தைப் பற்றியது அல்ல. இது மரபணுவின் மட்டத்தில் சுயநலத்தைப் பற்றியது, ஆனால் அது தனிநபரின் மட்டங்களில் பரோபகாரமாக மாறிவிடுகிறது, என்பதையே புத்தகம் பெரும்பாலும் சுட்டிக்காட்டுகிறது. மரபணுக்கள் அடுத்த தலைமுறைக்குள் நுழைய முயல்கிறது. நுழைவதை சுயநலமாகும் அதை அவைகள் எப்படி செய்கின்றன. அவர்கள் ஒரு விதத்தில், அழியாதவைகள். ஆனால் அவைகள் ஒத்துழைப்பதன் மூலம் அதைச் செய்கின்றன. நான் எப்போதும் அதைச் சொல்லி வருகிறேன். என் புத்தகம் பெரும்பாலும் அதைப் பற்றியது. மரபணுக்கள் அடுத்த தலைமுறைக்குள் நுழைய முயல்கிறார்கள் என்ற அர்த்தத்தில் சுயநலவாதிகள். அதைத்தான் அவர்கள் செய்கிறார்கள். அவர்கள் ஒரு விதத்தில், அழியாதவர்கள். ஆனால் அவர்கள் ஒத்துழைப்பதன் மூலம் அதைச் செய்கிறார்கள். நான் எப்போதும் அதைச் சொல்லி வருகிறேன்.

தி செல்ஃபிஷ் ஜீனில், ஒரு படகு பந்தயத்தின் ஒப்புமையை காட்டியுள்ளேன். எட்டு ஆண்கள் ஒரு படகில் வரிசையில் உட்கார்ந்திருக்கிறார்கள், அவர்கள் ஒத்துழைக்கிறார்கள். அதைத்தான் மரபணுக்கள் செய்கின்றன. மரபணுக்கள் ஒரு உடலை உருவாக்குவதில் ஒத்துழைக்கின்றன, அவை அனைத்தையும் இனப்பெருக்கம் மூலம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதே மரபணுக்களின் இயல்பு என்று பதிலளித்தார்.

இதன் மூலம் மானுடம் நீடித்து வாழ நாடுகளிடையே ஒத்துழைப்பு அவசியமென்பதை மரபணு போதிக்கிறது. ஆனால் அரசியல் இந்த ஒத்துழைப்பு கோட்பாட்டை எப்படி கையாள்கிறது. அறிவியலுக்கும் அரசியலுக்குமுள்ள தொடர்பை அறிவது.

அரசியல் அறிவியல் உறவு

இன்றைய அரசியல் என்பது முரண்படும் சுயநலன் மற்றும் முரண்படும் வர்க்க நலன் இவைகளை சுற்றியே வலம் வருவது போல் தோன்றுகிறது. பாமர மக்களை எதிர்த்து நோக்கும் அறிவியல் தகவல்களை பெறமுடியாமல் குழம்புகின்றனர். முன்பு ஏகாதிபத்தியவாதிகளின் சுயநலம் சண்டையாக மாறியது.

உலகப்போராகவும் ஆகிவிட்டது. அதே வேளையில் அன்று முரண்படும் வர்க்க நலன்கள் மும்முனை போராட்டமாக உருவாகி சமூகத்தையும் மானுடப்பண்பையும் இதமாக மாற்றுகிற பாதையை உருவாக்கிவிட்டதை நம்மால் உணரமுடியவில்லை. உழைக்கும் மக்கள் அரசியல் தோல்வி அடைந்ததாகவே வரலாறு எழுதப்படுகிறது. சோவியத் மறைவு அதற்கு சாட்சியம் கூறுவது போல் உள்ளது. ஆழமாக பரிசீலித்தால் சோவியத் அறிவியல் உலகத்தின் அரசியல் விமர்சனங்களை தோண்டிப் பார்த்தால் சோவியத் கலைவதற்கான காரணங்கள் தெளிவாகின்றன. அங்கு மட்டுமல்ல ஏகாதிபத்திய நாடுகளின் அறிவியல் உலகமும் ஏகாதிபத்திய நாடுகளின் போர்முரசு கொட்டும் அரசியலின் ஆபத்தை சுட்டிக்காட்டின. ஆயுதப் போட்டியே சோவியத்தின் மக்கள் நலன் பொருளாதாரக் கட்டமைப்பை சீரழித்தது. தற்காப்பு முறைகளுக்கான ஆய்வை அலட்சியப்படுத்தியதும் ஏகாதிபத்திய கொக்கரிப்பு வென்றது.

அதே பேரழிவு ஆயுதப் குவிப்பு ராணுவ கூட்டு விரிவாக்கம் ஏகாதிபத்திய நாடுகளின் பொருளாதாரத்தை இன்று சீர்குலைப்பதை பார்க்கிறோம், 2001ல் இராக் மீது படையெடுத்தது போல் இன்று அமெரிக்கா படையெடுக்க இயலவில்லை. குரங்குக்குட்டியை ஏவுவது போல் யுக்ரேன் இஸ்ரேலை டிரம்ப் ஏவுகிறார். இந்தியாவை தூண்டுகிறார்.

இன்று சோசலிசப் பாதையை தேர்வு செய்த நாடுகளும் ஐரோப்பிய அமெரிக்க அறிவுலகமும் புதிய சர்வதேச உறவிற்காக கொடுக்கும் குரலை ஊடகங்களால் புறக்கணிக்க முடியவில்லை.

அமெரிக்க அதிபராக போர்விரும்பி டிரம்ப்பை இரண்டாம் முறையாக தேர்வானவுடன் நேச்சர் என்ற பிரபல ஆங்கில அறிவியல் இதழ் பிரபல விஞ்ஞானிகளை பேட்டிகண்டு செய்தி வெளியிட்டது [We need to be ready for a new world’: scientists globally react to Trump election win] புதிய உலக உறவிற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்: டிரம்ப் தேர்தல் வெற்றிக்கு உலகளவில் விஞ்ஞானிகள் எதிர்வினையாற்றுவதை பதிவு செய்தது. டிரம்ப் கொள்கைள் செயல்கள் நிதி ஒதுக்கீடுகள் அறிவியலுக்கு விரோதம் மட்டுமல்ல மக்களின் ஆரோக்கியம் சுற்றுப்புறச் சூழல்பாதுகாப்பு ஆபத்தை விளைவிப்பவை. அவரது ஆயுதகுவிப்பு கொள்கை மக்களின் சுகாதார வாழ்வை சீரழித்துவருகிறது என்பது மட்டுமல்ல புதிய உலக மயச் சூழலில் வளரும் நாடுகளை வறுமையில் தள்ளுகிறது. எனவே பொருளாதார நெருக்கடியை சாமாளிக்க ஒரு புதிய உலக உறவு அவசியமென்று விஞ்ஞானிகளின் கருத்தை அந்தச் செய்தி வெளியிட்டது. கடந்த காலம் போல் ஆயுதங்களை நவீனப்படுத்தி புதிய வகை நட்சத்திரப் போர் மூலமோ, நாடுகளை பணியவைக்க சி.ஐ.ஏ. பாணியில் நபர்களை கொல்வதின் மூலமோ அது நீடிக்க வாய்ப்பில்லை என்பதையும் இந்தத் தலையங்கம் உணர்த்துகிறது.

அறிவுலகமே விரும்பாத ஒரு முரடன் ஒரு ரியல் எஸ்டேட் பிசினஸ் புள்ளி எல்லா வகையிலும் வல்லமை படைத்த உலக மக்களால் நேசிக்கப்படும் அமெரிக்காவின் அதிபரானது எப்படி என்பதை அமெரிக்க சமூகத்தின் உளவியல் தன்மையை அறிந்தால் புரியும். ஆனால் ட்ரூமன் ஜார் புஷ் போன்றோருக்கு இருந்த சுதந்திரம் இன்று டிரம்பிற்கில்லை, ட்ரூமன் விஞ்ஞானிகள் சொல்லையும் மீறி ஜப்பான் மீது அணுகுண்டை வீசினான். புஷ் இராக்கை காலனி ஆக்கிட படையெடுத்து வென்றான். அதன் அதிபரை தூக்கிலிட்டான். அதற்கு முன்னரே செயற்கைகோள் ஏவ கட்டமைக்க பொறுப்பேற்ற கனடா நாட்டு என்ஜினீயரை பெல்ஜிய வீட்டில் பிணமாக்கினான். ஏவுகணை என்று புளுகி நிர்மாணித்த பல ஆயிரம் டன் எடையுள்ள உலோகக் கட்டமைப்பை உடைத்து பிரிட்டீஷ் மியூசியத்தில் வைத்தான். பிலிப்பைன்ஸ் நாட்டின் ஒருபகுதியை அமெரிக்காவின் சொத்தாக்கி அந்த நாட்டை காலனியாக்கினான் இன்று டிரம்ப் அமெரிக்காவை தூக்கி நிறுத்த நேரடியாக சண்டை போடுவதில்லை. குட்டிகளை ஏவுகிறான். இதனை எப்படி புரிவது?

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இது புரியும். பேரழிவு ஆயுதங்களை புதைக்கும் இயக்கம் உலகளவில் பரவியது. பிரபல விஞ்ஞானிகள் பங்கேற்றனர். பேரழிவு ஆயுதங்களை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட மாட்டோம் என்று பிரபல விஞ்ஞானிகளே அறிவித்தனர். மறு பக்கம் சோவியத் ஏவுகணை ஆராய்ச்சி ஆக்கபூர்வமானது. செயற்கைக் கோள்களை ஏவியது. அணுசக்திமூலம் மின்சாரம் உற்பத்தி செய்தது.

சோவியத் ஒன்றியம் விண்வெளி நிலையத்தை உருவாக்கி அமெரிக்கா உட்பட பங்கேற்க வைத்தது. மிர் என்ற விண்வெளி நிலையத்தை கட்டியது. மிர் ஒரு ரஷ்ய விண்வெளி நிலையமாக இருந்தாலும், இது யு.எஸ் பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் உட்பட உலகெங்கிலும் உள்ள ஒரு டஜன் நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விண்வெளி பயணிகளை குடியேற்றியது.

விண்வெளி நிலையம் பல சாதனைகளை படைத்தது. 1995 ஆம் ஆண்டில் விண்வெளி வீரர் வலேரி பாலியாகோவ் 437 நாட்கள், 17 மணி நேரம் மற்றும் 38 நிமிடங்கள் மீர் கப்பலில் தொடர்ந்து தங்கியிருக்க சாதனை படைத்தார். ஒரு வருடம் கழித்து, விண்வெளி வீரர் ஷரோன் லூசிட் 188 நாட்கள் மற்றும் 4 மணி நேரம் சுற்றுப்பாதையில் உள்ள பெண்களுக்கான சகிப்புத்தன்மை சாதனையை படைத்தார். அவர்களின் அனுபவங்கள் நீட்டிக்கப்பட்ட விண்வெளிப் பயணங்களின் உடலியல் மற்றும் உளவியல் விளைவுகளை கணக்கிட முடிந்தது.

விண்வெளியில் உயிர் வாழ்வதை நோக்கமாகக் கொண்ட சோதனைகளையும் மிர் நடத்தியது. இந்த நிலையம் கோதுமையை வளர்த்தது, இது விண்வெளியில் விதையிலிருந்து விதை வரை வளர்க்கப்பட்ட முதல் பயிர். எனவே மனிதர்கள் எப்போதாவது வேறொரு கிரகத்தில் உருளைக்கிழங்கை வளர்க்க வேண்டிய அவசியத்தைக் கண்டால், விண்வெளி பயணிகள் மிருக்கு நன்றி சொல்ல வேண்டும். மார்ச் 23, 2001 அன்று, ரஷ்யாவின் விண்வெளி நிறுவனம் நிலையத்தை சுற்றுப்பாதையில் சிதைக்க அனுமதித்தபோது மிர் அதன் முடிவை சந்தித்தது, 134 டன் கட்டமைப்பு பசிபிக் பெருங்கடலில் உடைந்து கடலின் அடிப்பகுதியில் துண்டுகளாக இருக்கலாம், ஆனால் அதன் மரபு, தனித்துவமானது யாவரும் கேளிர் என்ற உணர்வை உருவாக்கியது. இன்று விண்வெளி நிலையங்கள் அமெரிக்கா தவிற வேறு எந்த நாடும் கட்டுவதாக தெறியவில்லை. அதன் நோக்கம் வர்த்தகம் மற்றும் காலனி ஆதிக்க நோக்குடன் தொழில்நுட்ப சொத்தாக்கல் 1945.

2) அணுசக்தியும் அரசியலும்

ஜப்பான் மீது அணுகுண்டை வீசாதே. குண்டு தயாரிக்க உதவிய விஞ்ஞானிகள் ட்ரூமனுக்கு கடிதம். இதனை ஃபிராங்க் அறிக்கை என்பர். கையொப்பமிட்ட அணு ஆய்விற்கு பங்களித்த விஞ்ஞானிகள்.

James Franck (Chairman), Donald J. Hughes, J. J. Nickson, Eugene Rabinowitch Glenn T. Seaborg, J. C. Stearns, Leo Szilard.

ஜேம்ஸ் ஃபிராங்க் (தலைவர்), டொனால்ட், ஜே. ஜே. நிக்சன், யூஜின் ரபினோவிட்ச் க்ளென், டி. சீபோர்க், ஜே. C. ஸ்டேர்ன்ஸ் லியோ சிலார்ட்
இந்த அறிக்கை அன்றைய சூழலில் எழுதப்பட்டாலும் பேரழிவு ஆயுதங்களே நாட்டின் சுதந்திரத்தை பாதுகாக்கும் என்று கருதும் அரசியல் மூடர்களான டிரம்ப் மற்றும் மோடி ஆட்சி நீடித்தால் என்னவாகும் என்பதை புரிய உதவுகிறது.

V. சுருக்கம்

அணுசக்தியின் அபிவிருத்தி அமெரிக்காவின் தொழில்நுட்ப மற்றும் இராணுவ சக்திக்கு ஒரு முக்கியமான கூடுதலாக இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல், இந்த நாட்டின் எதிர்காலத்திற்கு கடுமையான அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்குகிறது.

அணுகுண்டுகள் சில ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாட்டின் பிரத்தியேக வசம் ஒரு “இரகசிய ஆயுதமாக” இருக்க முடியாது. அவற்றின் கட்டுமானத்தை அடிப்படையாகக் கொண்ட அறிவியல் உண்மைகள் மற்ற நாடுகளின் விஞ்ஞானிகளுக்கு நன்கு தெரியும். அணு வெடிபொருட்கள் மீதான ஒரு திறம்பட்ட சர்வதேச கட்டுப்பாடு நிறுவப்படாவிட்டால், அணு ஆயுதங்கள் உலகிற்கு நம்மிடம் இருப்பதை முதன்முதலில் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து அணு ஆயுதங்களின் ஒரு போட்டி நிச்சயம் ஏற்படும். பத்து ஆண்டுகளுக்குள் மற்ற நாடுகளில் அணுகுண்டுகள் இருக்கலாம், அவை ஒவ்வொன்றும் ஒரு டன்னுக்கும் குறைவான எடையுள்ளவை, ஐந்து சதுர மைல்களுக்கும் அதிகமான நகர்ப்புறப் பகுதியை அழிக்க முடியும்.

இத்தகைய ஆயுதப் போட்டி இட்டுச் செல்லப் போகும் போரில், ஒப்பீட்டளவில் ஒரு சில பெருநகர மாவட்டங்களில் மக்கள் தொகையும் தொழில்துறையும் திரண்டிருக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகள், பெரும் பகுதிகளில் சிதறிக் கிடக்கும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஒரு பாதகமான நிலையில் இருக்கும்.
இந்த பரிசீலனைகள் ஜப்பானுக்கு எதிரான ஆரம்ப, அறிவிக்கப்படாத தாக்குதலுக்கு அணுகுண்டுகளைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாக ஆக்குகின்றன என்று நாங்கள் நம்புகிறோம். மனிதகுலத்தின் மீது கண்மூடித்தனமான அழிவுக்கான இந்த புதிய வழிமுறையை முதன்முதலில் வெளியிடும் முதல் நாடாக அமெரிக்கா இருக்குமானால், அது உலகெங்கிலும் பொதுமக்களின் ஆதரவை தியாகம் செய்யும், ஆயுதப் பந்தயத்தை விரைவுபடுத்தும், அத்தகைய ஆயுதங்களின் எதிர்கால கட்டுப்பாடு குறித்த ஒரு சர்வதேச உடன்பாட்டை எட்டுவதற்கான சாத்தியக்கூறை பாரபட்சமாக மாற்றும்.

பொருத்தமான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் வசிக்காத பகுதியில் ஒரு விளம்பரப்படுத்தி அணுகுண்டுகள் முதன்முதலில் உலகிற்கு வெளிப்படுத்தப்பட்டிருந்தால், அத்தகைய உடன்பாட்டின் இறுதி அடைவதற்கு மிகவும் சாதகமான நிலைமைகள் உருவாக்கப்படலாம்.
அணுவாயுதங்கள் மீதான ஒரு திறமையான சர்வதேசக் கட்டுப்பாட்டை நிறுவுவதற்கான வாய்ப்புகள் தற்போது சிறிதளவே என்றாலும், இந்த ஆயுதங்களை ஜப்பானுக்கு எதிராக பயன்படுத்துவது சரியல்ல.

அணுவாயுதப் போட்டியின் தொடக்கத்தை முடிந்தவரை தாமதப்படுத்த இந்தக் குண்டு வீச்சு உதவாது ஏனென்றால் மற்ற நாடுகள் ஆயுதப் போட்டியைத் தொடங்குவதற்கு போதுமான தகவல்கள் கசிந்துவிடும், அதில் நாம் ஒரு பாதகமான நிலையில் இருப்போம். அதே நேரத்தில், மற்ற நாடுகளின் அவநம்பிக்கை இரகசியம் என்ற போர்வையில் உறுதிப்படும், இறுதியில் அவர்களுடன் ஒரு உடன்பாட்டை எட்டுவது மிகவும் கடினம்.

அணு ஆயுதங்களை முன்கூட்டியே விளக்குவதற்கு ஆதரவாக அரசாங்கம் முடிவு செய்தால், ஜப்பானுக்கு எதிரான போரில் இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட வேண்டுமா என்பதை முடிவு செய்வதற்கு முன்பு நேச நாடுகளின் பொதுக் கருத்தை கணக்கில் எடுத்துக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கும். இந்த வழியில், மற்ற நாடுகள் அத்தகைய துரதிர்ஷ்டவசமான முடிவுக்கு பொறுப்பேற்கலாம்.

சுருக்கமாக, இந்தப் போரில் அணுகுண்டுகளைப் பயன்படுத்துவது இராணுவத் தேவையை விட நீண்ட தூர தேசியக் கொள்கையின் பிரச்சினையாக கருதப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம், மேலும் இந்தக் கொள்கை முதன்மையாக அணுஆயுதப் போர் வழிமுறைகளின் மீது ஒரு திறம்பட சர்வதேசக் கட்டுப்பாட்டை அனுமதிக்கும் ஒரு ஒப்பந்தத்தை அடைவதை நோக்கி இயக்கப்பட வேண்டும்.

இந்த நாட்டைப் பாதுகாப்பதற்கான ஒரே பயனுள்ள மாற்று வழி, நமது முக்கிய நகரங்கள் மற்றும் அத்தியாவசிய தொழில்களை சிதறடிப்பதுதான் என்பதை நாம் அறிவோம் என்ற உண்மையிலிருந்து நம் நாட்டிற்கு அத்தகைய கட்டுப்பாட்டின் இன்றியமையாத முக்கியத்துவம் தெளிவாகிறது என்று அந்த அறிக்கை அமெரிக்க நலனை பாதுகாக்க ஜப்பான் மீது குண்டு வீசுவதை தவிர்க் கோருகிறது.

சோவியத் யூனியன் யுத்தம் முடிந்த பிறகு அணுசக்தியை கொண்டு மின்சாரம் தயாரித்து பாமர மக்களும் புரிகிற முறையில் அணுசக்தி ஒரு தொழிலாளி போர்வீரனல்ல என்ற சிறுபிரசுரத்தை ஐரேப்பிய மொழிகளில் வெளியிட்டது. ஏகாதிபத்திய நாடுகளின் விஞ்ஞானிகளும் தத்துவ மேதைகளும் பக்வாஷ் இயக்கத்தின் மூலம் பேரழிவு ஆயுத உற்பத்தியின் ஆபத்தை மக்களின் பார்வைக்கு கொண்டு சென்றனர்.

2025ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகில் சுமார் 12,241 அணு ஆயுதங்கள் உள்ளன. சுமார் 9,614 இராணுவ இருப்புகளிலும், 3,904 செயல்பாட்டுப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ரஷ்யா மற்றும் அமெரிக்கா முறையே சுமார் 5,459 மற்றும் 5,177 ஆயுதங்களை வைத்திருக்கும் மிகப்பெரிய கையிருப்புகளைக் கொண்டுள்ளன, மேலும் சுமார் 2,100 ஆயுதங்களை அதிக எச்சரிக்கையுடன் வைத்துள்ளன.

புதிய உறவிற்கு கட்டியம் கூறும் அணுக் கொள்கை உலக ரஷ்யாவின் புதுமையான அணுமின் உற்பத்தி கட்டமைப்பு தொழில்நுட்ப காலனி ஆதிக்கத்தை புதைக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உலக அணு வார விழாவில் பேசுகையில், உலகில் ஒரு புதிய தொழில்நுட்ப ஒழுங்கு உருவாகி வருகிறது என்று கூறினார்.
முழு அணுமின் நிலைய கட்டுமான சங்கிலியில் ரஷ்யா விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது என்று விளாடிமிர் புடின் வலியுறுத்தினார். அமைதியான அணுசக்திக்கான வளர்ந்து வரும் தேவை முதன்மையாக உலகளாவிய தெற்கு மற்றும் கிழக்கு நாடுகளால் இயக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலக அணு வார மன்றத்தில் ரஷ்ய அதிபரின் பிற முக்கிய அறிக்கைகள்:

2030ஆம் ஆண்டுக்குள் மூடிய எரிபொருள் சுழற்சியுடன் கூடிய உலகின் முதல் அணுசக்தி அமைப்பை ரஷ்யா அறிமுகப்படுத்தும்.
ரஷ்யா வடிவமைத்த அணுமின் நிலையங்களுக்கு உலகில் அதிகத் தேவை உள்ளது.

அமைதியான அணுசக்தி வளர்ச்சி, அணு ஆயுதப் பரவல் தடை அமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு இடையே சமநிலையைப் பேணுவது முக்கியம்.
அணுமின் நிலைய கட்டுமானத்திற்கு நிதியளிப்பதற்கான நவீன மாதிரிகள் தேவை.

2090ஆம் ஆண்டில் யுரேனியம் வளங்கள் குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் இது முன்பே நிகழக்கூடும்.
யுரேனிய சுரங்கம் மற்றும் அணு உலை செயல்பாடு உட்பட அணுசக்தி சுழற்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் பாதுகாப்பு தேவைகளை அதிகரிக்க புட்டின் அழைப்பு விடுத்தார்.

அமைதியான அணுசக்தி தொழில்நுட்பங்களை சமமாக அணுகுவது நீடித்த உலகளாவிய வளர்ச்சியை உறுதி செய்ய உதவும்.

அணுசக்தி நிலையங்களின் அணுசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் ரஷ்யாவின் முன்னுரிமை நீண்டகால அணுசக்தி திட்டங்களில் ரஷ்யா ஆர்வமாக உள்ளது.
சர்வதேச ஒத்துழைப்பு, நாடுகளுக்கிடையேயான நல்லிணக்கத்திற்கான அமைதியான அணுசக்தி தொழில்நுட்ப அடிப்படை.

ரஷ்யா அதன் அணுசக்தி கூட்டாளிகளுக்கு வளர்ச்சியில் உண்மையான முன்னேற்றத்தை ஏற்படுத்த உதவுகிறது.
ரஷ்யா தனது பங்காளிகளை அதன் தொழில்நுட்பத் தீர்வுகளை நம்பியிருக்க வைக்கவில்லை, ஆனால் இறையாண்மை அணுசக்தி தொழிலை உருவாக்க உதவுகிறது.

ரஷ்யா தொழில்நுட்ப காலனித்துவத்தை நிராகரிக்கிறது. ரஷ்யா அதன் அணுசக்தி தொழில்நுட்பப் பங்காளிகளுக்கான அனைத்து ஒப்பந்தக் கடமைகளையும் கண்டிப்பாக நிறைவேற்றுகிறது.

இன்று உலக முதலாளித்துவத்தை பேணும் கார்ப்பரேட் சக்திகளில் முதலிடத்தில் இருப்பது பெட்ரோலிய கார்ப்பரேட்டுகளே இரண்டாம் ஆயுத உற்பத்தி கார்ப்பரேட்டுகளே 20ம் நூற்றாண்டு காலனி ஆதிக்கம் பெரும்பாலும் ராணுவ நடவடிக்கையை நம்பி இருந்தது இன்று நாணய மண்டலம் மற்றும் தொழில்நுட்ப ஆதிக்கம் முன்னுக்கு வந்துவிட்டது. அணுகுண்டுகளாக குவிந்து கிடக்கும் அணுசக்தியை பெட்ரோலிய கார்ப்பரேஷன் பயன்படுத்த தள்ளப்படும். அதுமட்டுமல்ல அதற்கான மூலப் பொருள் இருக்கிற நாடுகளிலே கலவரத்தை உருவாக்கிட ராணுவத்தை பயன்படுத்த ராணுவத் தளங்களை விரிவுபடுத்த என்னதான் முயற்சித்தாலும் முதலாளித்துவத்தின் சுரண்டல் இயல்பு அதனை புதைக்கிற சக்தியை உருவாக்கிவிடும்.

அறிவியல் நோக்கில தங்கம் பக்தி – பணமான கலாசார மாற்றம் (கியூபா நாட்டு கிரான்மாவில் வந்த கட்டுரை)

கட்டுரை ஆசிரியர்: அன்டோனியோ ரோட்ரிக்ஸ் சால்வடார் [internet@granma.cu ஏப்ரல்1, 2022], உயிரினங்களின் உடல்கள் மானுடம் உட்பட அடிப்படையில் கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜன் ஆகியவற்றால் ஆனவை. இவை மட்டுமே நம்மை உருவாக்கும் பொருட்கள் அல்ல என்பதால், சிலர் CHONPS என்று சொல்ல விரும்புகிறார்கள், மேலும் பாஸ்பரஸ் மற்றும் சல்பர் சேர்க்கிறார்கள். உண்மையில், நாம் ஒரு சிக்கலான உயிர்வேதியியல் எதிர்வினையின் விளைவாக இருக்கிறோம், இதில் இன்னும் பல கூறுகள் ஈடுபட்டுள்ளன: பொட்டாசியம் இல்லாமல் நாம் நடக்க முடியாது, இரும்பு இல்லாமல் நமக்கு இரத்தம் இருக்காது, கால்சியம் இல்லாமல் எலும்புகள் இருக்காது.

குளோரின், சோடியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை உடல் ஆரோக்கியமாக இருக்க அவசியம்; மேலும், 0.01%க்கும் குறைவான விகிதத்தில், நம் உடலில் போரான், குரோமியம், கோபால்ட், தாமிரம், புளோரின், அயோடின், மாங்கனீசு, மாலிப்டினம், செலினியம், சிலிக்கான், தகரம், வனேடியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை உள்ளன. எப்படியிருந்தாலும், இது ஒரு பொய்யாகத் தோன்றலாம், ஆனால் இந்தக் கட்டுரையை “மெண்டல் என்ற உயிரியல் ஆய்வாளர் பாணியில் தொடங்குவதற்கான காரணம் என்னவென்றால் தங்கமில்லாமல், மில்லியன் கணக்கான ஆண்டுகளாக நாம் வாழ முடிந்திருக்கிறது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

இது சாத்தியமா? என சாதாரண மனிதர்கள் கேள்வி எழுப்புவார்கள்; நாம் தங்கத்தின் நாகரிகம்: அதை அடைய எத்தனை பயணங்கள் மற்றும் தவறான செயல்கள் மற்றும் போர்கள் மேற்கொள்ளப்படவில்லையா? தங்கம் மதிப்பு மற்றும் செழிப்புக்கு ஒத்ததாக உள்ளது; அவர்களின் இருப்புகள் பொறாமையுடன் பாதுகாக்கப்படுகின்றன. அமெரிக்காவின் கென்டக்கியின் ஃபோர்ட் நாக்ஸில் உள்ள பாதாள அறையில் உலக நாடுகள் டெப்பாசிட் செய்த பல ஆயிரம் டன் தங்கம் குவிக்கப்பட்டுள்ளன, இதனை அணு ஆயுத- வீச்சால்கூட தொடமுடியாது. இருப்பினும், வாழ்க்கையில் எந்த வகையிலும் தங்கம் தேவையில்லை என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள்.

நிச்சயமாக, அறிவியலுக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த உலோகம் இப்போது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதய நோய் அல்லது கட்டிகள் உள்ள நோயாளிகளுக்கு மேம்பட்ட சிகிச்சைக்காக லேசர் கற்றைகளில் இது பயன்படுத்தப்படுகிறது; உயிரணுக்களின் மரபணுப் பொருளைப் படிப்பதற்கான டி.என்.ஏ. இழைகளில், மேலும் இது துல்லியமான தெர்மோமீட்டர்களிலும், உயர் தொழில்நுட்ப மருந்துகளை (புரதங்கள் போன்றவை) தயாரிக்க பயன்படுகிறது.

அப்படியிருந்தும், அதன் தொழில்துறை பயன்பாடுகள் மிகக் குறைவு: உலகின் பிரித்தெடுத்தலில் 10% மட்டுமே உற்பத்தித் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது; மீதமுள்ளவை நகைகள் தயாரிக்க அல்லது பண இருப்பாக பயன்படுத்தப்படுகின்றன. வெப்பம், ஈரப்பதம் மற்றும் மிகவும் அரிக்கும் இரசாயன மாற்றத்திற்கு தங்கம் உட்படுவதில்லை என்றாலும் பெரும்பாலான நேரங்களில் தங்கம் அத்தகைய நோக்கங்களுக்காக பயன்படுவதில்லை: அதனுடன் இருக்கும் ஆடம்பரமான தயாரிப்புகளின் அதிக கூடுதல் மதிப்பால் விற்பனை சிரமப்படுகிறது.

அதாவது, மனித வீண் பெருமையின் காரணமாக, தங்கத்தால் முடிந்தவரை பல உயிர்களைக் காப்பாற்ற முடியாது போகிறது. எடுத்துக்காட்டாக, ஏர்பேக்குகள் என்று அழைக்கப்படுவது உரிய நேரத்தில் தவறாமல் செயல்படவைக்க, காரைச் சுற்றி பொருத்தப்பட்டிருக்கும் பல்வேறு சென்சார்களில் தங்கக் கம்பிகளான தொடர்புகளைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது. இருப்பினும், இந்த செயல்முறை எவ்வளவு விலை உயர்ந்தது என்பதைப் பற்றி யோசித்தால் சில கிராம் தங்கத்தின் விலை சில கார்களை விட மதிப்புமிக்கது என்று சொல்வது போதுமானது.

ஆனால் தங்கம் எப்படி ஒரு அதிசயமாக மாறியது? – இதில் சமூக உளவியலின் தன்மையை கவனிக்க வேண்டும் – நான் உங்களுக்கு ஒரு கதையைச் சொல்கிறேன். சில காலத்திற்கு முன்பு, ஸ்மார்ட்போன்கள் இன்னும் பொதுவானதாக இல்லாத போது, இரண்டு இளைஞர்களுக்கு இடையிலான உரையாடலைக் கேட்டேன். ஒருவர் மற்றவரிடம் கூறினார்: ஃபுலானிடோவின் செல்போன் “தப்பித்துக் கொள்கிறது”: இது ஜி.பி.எஸ். உள்ளது, இது புவியியல் ஆயத்தொலைவுகளைக் கணக்கிடுகிறது, மேலும் இது பூகம்பத்தின் தீவிரத்தையும் அளவிடுகிறது. நான் குழப்பமடைந்தேன்: அந்தப் பையன் ஏன் அத்தகைய அப்பிளிகேஷனை விரும்புகிறார், ஜாடிபோனிகோவில் எல்லாம் நெருக்கமாக இருந்தால், அதனால் யாரை காப்பாற்றமுடியும்? தவிர, பூமி நடுங்கும்போது தொலைபேசியைப் பார்க்க யார் நினைப்பார்கள்?

பதில் என்னவென்றால், அந்தப் பையனுக்கு, ஃபுலானிடோவின் செல்போன் ஒரு தொலைபேசி அல்ல, ஆனால் சமூக அந்தஸ்தின் அடையாளம். இவ்வாறு, சாதனம் அது உருவாக்கப்பட்ட பயன்பாட்டு செயல்பாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதை நிறுத்துகிறது, மேலும் உரிமையாளரின் சமூக ஒப்புதலின் அளவை அதிகரிக்கும் திறன் கொண்ட ஒரு வகையான தாயத்தாக மாறுகிறது.

எப்படியிருந்தாலும், தங்கத்திற்கும் இதே தாயத்து அந்தஸ்து கிடைத்துள்ளது. ஒரு உலோகத்தை விட, இன்று அது சக்தியின் அடையாளமாக உள்ளது. இயற்கையாகவே, ஒரு நபரின் சிறப்புத் தன்மை ஒரு தொலைபேசி, ஒரு பிராண்ட்-பெயர் உருப்படி அல்லது தங்கப் பதக்கத்தால் தீர்மானிக்கப்படுவதில்லை, ஆனால் சில தனிப்பட்ட பண்புகள் மற்றும் மதிப்புகளால் தீர்மானிக்கப்படுகிறது; ஆனால் நாம் ஏற்கெனவே அறிவோம்: மனிதர்கள் கரிமக் கலவைகள் மட்டுமல்ல, சமூக உயிரினங்களும் கூட.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் பருப்பொருளைக் கடந்து ஒரு குறியீட்டுத் திறனை உருவாக்கியுள்ளோம். கற்பனையுடன், இல்லாததை யதார்த்தத்திற்கு கொண்டு வர முடியும், மற்ற பண்புகளுடன் விஷயங்களை வழங்க முடியும், இதனால், இலட்சியமயமாக்கலின் அற்புதமான பீடத்தின் மூலம், நாம் தங்கத்தை ஒரு பக்தி பொருளாக மாற்றுகிறோம். மேலும், நாம் அதற்கு ஒரு தெய்வீகத் தன்மையைக் கொடுக்கிறோம்.

நான் மிகைப்படுத்தவில்லை. பண்டைய காலங்களிலிருந்தே, இது கடவுளுக்குப் பிடித்த உலோகம் என்று அநேகர் கருதினர். இடைக்காலங்களில், ஒரு தங்கத் தட்டில் சாப்பிடுவது நீடிக்கும் மற்றும் வாழ்க்கையை ஆரோக்கியமாக்குகிறது என்று பலர் நம்பியது மட்டுமல்லாமல், இது ஒரு பயனுள்ள மருந்து. சில நோய்களை எதிர்கொண்ட மருத்துவர்கள், தங்கப்பொடியை உட்கொள்ள பரிந்துரைத்தனர். மறுமலர்ச்சியின் போது, கோட் ஆஃப் ஆர்ம்ஸில் உள்ள தங்க நிறம் எல்லாவற்றிலும் உன்னதமானதாகக் கருதப்பட்டது, இந்தக் காரணத்திற்காக, இது தூய்மை, அன்பு, மகிழ்ச்சி, புனிதம், மகிமை, ஞானம் ஆகியவற்றைக் குறிக்கிறது. அது இன்னும் அதன் “தெய்வீக வம்சாவளியை” இழக்கவில்லை, இதன் விளைவாக, புகழ்பெற்ற பண்புகள் அவருக்கு ஒதுக்கப்பட்டன; ஆனால் காலப்போக்கில் விஷயங்கள் மாறுகின்றன, தங்கத்திற்கு இனி அந்தக் காதல் ஒளிவட்டம் இல்லை: இப்போது அது பணத்துடன் அடையாளம் காணப்படுகிறது.

எனவே, தெருவில் தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்ட ஒருவரை நாம் சந்தித்தால் – பெரிய சங்கிலிகள் மற்றும் தடிமனான மோதிரங்கள் – உன்னதமான குறிப்புகள் அல்லது ஆன்மிக மதிப்புகள் இனி நினைவுக்கு வராது, ஆனால் அந்த நபர் உச்சியில் கத்துகிறார்: என்னிடம் பணம் உள்ளது! என்னிடம் நிறைய பணம் இருக்கிறது! இவரிடம் ஆணவம் தவிர, சற்றே அபத்தமுமிருக்கிறது என்று கட்டுரை முடிகிறது

இந்த முன்னுரை பதிவின் நோக்கம்

விஞ்ஞானிகளின் வாழ்க்கை அறிவியல் பார்வையோடு பிரச்சினைகளை அணுக சராசரி மானுடத்திற்கு உதவுகிறது.
தைரியத்தோடு இடர்களை சந்திக்க உதவுகிறது.

அரசியலிலும் சந்தையிலும் குறிப்பாக பங்குச்சந்தையிலும் ஏமாறமல் இருக்க உதவுகிறது.

யுத்தம் வருமா வராதா என்ற சந்தேகம் அறிவியல் பார்வயல்ல. வந்தால் என்ன செய்யவேண்டும். வராமல் தடுக்கும் இயக்கத்தில் எப்படி பங்கு பெறுவது என்பவைகளை யோசிப்பது அறிவியல் பார்வையாகும்.

எழுதியவர் : 

✍🏻 வே. மீனாட்சிசுந்தரம்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *