உடம்பின் வாசனை
—————————–
பறக்கும் வண்டின் தொடர்ந்த ரீங்கரிப்பு போல்
உறவுக்குத் தூண்டும் அழைப்புகள்.
காட்டின் ஒவ்வொரு ஒற்றையடிப் பாதையையும்
அறிந்திருப்பது போல்
அந்தரங்கமான முறையில்
அறிவேன் நான் அவள் உடம்பை.
தீயின் இருதயத்துக்குள் விழுந்து விட்டது போல
காம நெருப்பு தீ நாக்குகளால்
என்னைக் கட்டி அணைக்கிறது.
தீயை அள்ளித் தலையில்
ஊற்றிக் குளிக்கிறேன்.
நானே நெருப்பு
நெருப்பே நான்
கண்ணாடி முன்னால்
மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து
கண்மூடி அவளை தியானித்து நிற்கிறேன்
நெருப்பில் எரிந்து போய்
எனது ஸ்தூல உடம்பு சாம்பலாய்ப் போக
எனது உன்மையான நான்
திகம்பர சொரூபமாய் நின்று நெருப்பாய் எரிகிறது.
அவளது உடம்பின் வாசனை
கண்ணாடியில் நீராவியாய் வந்து படிய
மேக மூட்டத்தில்
கொசு வலைக்குள் சயனித்தது போல் அவள் உருவம்
முந்தைய கவிதைகள் படிக்க:
முத்திரைக் கவிதைகள் 1: வாக்குமூலம் – இந்திரன்
முத்திரைக் கவிதைகள் 2: ராப்பிச்சைக்காரன்– இந்திரன்
முத்திரைக் கவிதைகள் 3: கேள்வி, சிரிப்பொலி, உனது புகைப்படம் – இந்திரன்
முத்திரைக் கவிதைகள் 4: முகமூடிகளின் யுகம் – இந்திரன்
முத்திரைக் கவிதைகள் 5: பனிச்சிற்பம் – இந்திரன் (Indran Rajendran)
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.