காடுகள் தினம் – ஹைக்கூ கவிதைகள்
எங்கள் இடம்
எங்கள் உரிமை
ஊருக்குள் வனவிலங்குகள் தர்ணா
உடன்படிக்கை மீறாமல்
தன் எல்லையில்
வாழும் வனவிலங்குகள்
சின்னது பெரியது
பேதமில்லாமல் பிணைந்து கொள்ளும்
காட்டுச் செடிகள்
வானவில்லின்
வர்ணங்களை மிஞ்சும்
காட்டு மலர் வண்ணங்கள்
மழை நீர்
ஸ்பரிசித்தவுடன்
நறுமணம் வீசும் காடு
பச்சை இலைப் பந்தலின் கீழ்
பயமின்றி விலங்குகள்
மனிதர்கள் யாருமில்லை
காடுகளுக்கு
மருத்துவம் பார்க்கும்
மழையும் வெயிலும்
எழுதியவர் :
திருமதி.சாந்தி சரவணன்
சென்னை – 40
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

