சர்வதேச சூரிய அணுக்கரு விஞ்ஞானி செஜல் ஷா (Sejal Shah)
தொடர் : 34 இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
சர்வதேச தர்மோ நியூக்ளியர் பரிசோதனை உலை என்பது உலக அடிப்படையிலான அணுக்கரு இணைவு ஆராய்ச்சி ஆகும். இந்த ஆராய்ச்சியில் இந்தியாவிலிருந்து இணைந்திருப்பவர்தான் நம்முடைய பெண் விஞ்ஞானி செஜல் ஷா (Sejal Shah) ஆவார். தெற்கு பிரான்ஸில் உள்ள CADARCHE என்னுமிடத்திற்கு அடுத்ததாக இது கட்டப்பட்டது. இந்தியா, ஜப்பான், தென் கொரியா, ரஷியா, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகள் இந்த மாபெரும் ஆராய்ச்சியில் உறுப்பினர்களாக உள்ளனர். சூரியனையே பூமியில் ஒரு இடத்தில் உருவாக்கி அதற்குள் என்ன இருக்கிறது என்பதை ஆய்வு செய்து அதன் மூலம் மின்சாரம் போன்ற பயன்களை பெறுவது தான் இந்த ஆராய்ச்சியின் நோக்கம். அதில் இந்தியாவிலிருந்து பங்காற்றும் முக்கிய விஞ்ஞானி தான் செஜல் ஷா.
உலக அளவில் அணுக்கரு பிளவு என்பது அனைவராலும் செய்யப்படும் ஒரு விஷயம். அனைத்து அணு உலைகளிலும் அதுதான் நடக்கின்றது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வழங்கிய E=Mc2 என்னும் வேதி சமன்பாட்டை பயன்படுத்தி அனு குண்டுகளும் கூட அணுக்கரு பிளவு முறையில் தான் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் சூரியனில் நடைபெறும் வேதி வினை அணுக்கரு இணைவு ஆகும், அணுக்கரு இணைவு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கருக்கள் பொதுவாக ட்விட்டர்யம் மற்றும் டிட்டர்யம் என்கிற ஹைட்ரஜன் ஐசோடோப்புகள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு அணுக்கருக்கள் மற்றும் துணை அணுத்துகள்கள் உருவாவதற்கான ஒரு இணைப்பு வினை ஆகும். அணுப் பிணைப்பு ஆற்றலில் உள்ள வேறுபாடுகள் இன்று உலகெங்கும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்த அபூர்வமான அணு இணைவு என்ன விஞ்ஞானத்தில் இந்தியாவிலிருந்து கிடைத்திருக்கும் அரிய விஞ்ஞானி செஜல் ஷா (Sejal Shah).
19 ஆம் நூற்றாண்டின் தொழில் புரட்சி என்பது FOSSIL FUELS பெட்ரோலிய பொருட்கள் குறித்தது ஆகும். இவை வெளியிடுகின்ற கார்பன் மோனாக்சைடு மற்றும் மீத்தேன் போன்றவை பசுமை இல்ல வாயுக்கள் ஆகி பூவி வெப்ப மாற்றத்தை நோக்கி பேரழிவு தற்போது ஏற்படுவதை நோக்கி நம்மை அழைத்துச் சென்றுவிட்டன. இதற்கு மாற்றாக கருதப்படுகிறது சூரியனிலிருந்து வெளிவரும் பிரம்மாண்ட ஆற்றல் ஆகும். சூரியன் மற்றும் பில்லியன் கணக்கான நட்சத்திரங்கள் இந்த பிரபஞ்சம் முழுவதும் இருந்து ஆற்றலை வெளியிடுகின்ற பிரம்மாண்டங்களாக இருந்து வருகின்றன. இவை ஒளியையும் வெப்ப ஆற்றலையும் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கின்றன. ஹைட்ரஜன் வாயு என்கிற ஒரு விஷயத்தைக் கொண்டு இந்த நட்சத்திரங்கள் புதிதாக பிறக்கின்றன. இந்த பிரபஞ்சம் முழுவதும் அவை வெப்பப் சூடேற்றுவதோடு ஒலியையும் உமிழ்கின்றன. ஒரு நட்சத்திரத்தின் வெப்பம் என்பது 15000000 டிகிரி செல்சியஸ் ஆகும். எனவே இந்த ஆற்றல்தான் அடுத்து நாம் பயன்படுத்த வேண்டிய ஒரு ஆற்றலாக இருக்க முடியும். இந்த ஆற்றலைப் பயன்படுத்துவதற்கு நாம் சூரியனில் நடைபெறும் அணுக்கரு இணைவு வினைகளை புரிந்து கொள்ள வேண்டும். அப்படியான புரிதல்களை உருவாக்கிக் கொள்ளும் விஞ்ஞானிகளில் மிக அபூர்வமான ஒருவர் செஜல் ஷா.
அணுக்கரு இணைவு சோதனையில் செஜல் ஷா (Sejal Shah) அவர்களின் கண்டுபிடிப்புகள் அணுக்கரு பிணைப்பு ஆற்றலில் உள்ள வேறுபாடுகளை உலகிற்கு கொண்டுவந்தது. இன்டர்நேஷனல் தெர்மோ நியூக்ளியர் எக்ஸ்பெரிமெண்டல் ரியாக்டர் என்பது 33 நாடுகளின் கூட்டு முயற்சி. இதற்கு பிரம்மாண்ட செலவு பிடிக்கும், இந்த விஷயத்தில் இந்தியாவிலிருந்து முழுமையான புரிதலோடு ஒருவரை இணைப்பது மிகப்பெரிய சிரமமாக இருந்தது. ஏனெனில் நம்மிடம் இருக்கும் விஞ்ஞானிகள் பெரும்பாலும் அணுப் பிளவு அறிவியலை அடிப்படையாக கொண்டவர்கள். ஆனால் அணுக்கரு பிணைப்பு என்பது அணுக்கரு பிளவு எனப்படும் தலைகீழ் செயல்முறைக்கு நேர்மாறானது. அணுக்கரு இணைவு ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் போன்ற லகுவானா தனிமங்களை பயன்படுத்துகிறது. இவை பொதுவாக அதிகம் உருக கூடியவை அதேசமயம் யுரேனியம் தோரியம் என்று அணுப் பிளவுக்குப் பயன்படுத்த கூடிய தனிமங்கள் கடினமானவை. ஒரு சூப்பர்நோவாவின் தீவிர வான் இயற்பியல் நிகழ்வு அணுக்கருக்களை இரும்பை விட கடினமான தனிமங்களாக இணைக்கு போதுமான ஆற்றலை உருவாக்க முடியும் என்பது செஜல் ஷாவின் கண்டுபிடிப்பாகும். இன்ஸ்ட்டிட்யூட் ஆப் பிளாஸ்மா ரிசர்ச் ஏன்னும் ஒரு நிறுவனம் காந்திநகரின் இருந்து செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் அவர் முதன்மை விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.
பூமியிலேயே சூரியனின் ஒரு பகுதியை உருவாக்குவது தான் பிளாஸ்மா அறிவியலின் அடிப்படை நோக்கம் சூரியனில் நடைபெறும் அணுக்கரு இணைவை பூமியில் உருவாக்க அவர்கள் போராடுகிறார்கள். சீனா அதிவேகமாக இந்த துறையில் முன்னேறிக் கொண்டிருக்கும் பொழுது இந்தியா பின் தங்கி விட முடியாது. இந்தியாவில் ஆதித்யா மற்றும் SST-1 ஆகிய இரண்டு உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பிளாஸ்மா ரியாக்டர்கள் உள்ளன. இவற்றை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்தவர் செஜல் ஷா (Sejal Shah).
இந்த இரண்டு PLASMA REACTOR களும் சூரியனை புரிந்துகொள்ள ஏராளமான விவரங்களை நமக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. அணுப் பிளவை போல அணு இணைவு சோதனைகள் மனித உயிருக்கும் சுற்று சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் கதிர்வீச்சுகளையும் கழிவுகளையும் வெளியிடுவதில்லை. விஞ்ஞானிகள் எதிர்காலத்தில் உண்மையிலேயே தூய்மையான ஆற்றலை பெறுவதற்கு அணு இணைப்பு சோதனைகள் உதவும் என்று நம்புகிறார்கள். ஷா மற்றும் பிற விஞ்ஞானிகள் இணைந்து ITER எனப்படும் உலகின் பிரம்மாண்ட சோதனையில் ஒன்றிணைந்து உள்ளார்கள். TOKAMAK முறையில் அல்ட்ரா வெற்றிடத்தை உருவாக்கி மின்சார தயாரிப்பு அணு இணைவு சோதனையில் சாத்தியமா என்பதை இவர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். செஜல் ஷாவினுடைய கதிர்வீச்சு குறித்த தரவுகள் உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளுக்கு இன்று பயன்படுகின்றன.
இந்தியாவின் ITER சோதனைக் கூடத்தில் செஜல் ஷா மற்றும் அவரது குழு நியூட்ரல் பிம் என்று அழைக்கப்படும் ஹைட்ரஜன் ஒளிக்கற்றைகளை இரிடியம் வில்லைகள் ஓடு- இணைக்கும் மிக முக்கிய சோதனைகளில் ஈடுபடுகிறார்கள். செஜல் ஷா உருவாக்கிய கருவி அமைப்புகள் வெற்றிட மின்னாற்றல் தனித்த தொகுப்புகளை உருவாக்க நமக்கு பயன்படுகிறது. அதிகமான மின்னாற்றல் வழங்கப்படும் பொழுது இந்த அமைப்பு பெரிய ஆற்றலை வெளியிடுகிறது. கல்லூரியில் தான் படித்த அடிப்படை இயற்பியலை நேரில் செய்து பார்ப்பது மிகப்பெரிய ஆர்வமூட்டும் அற்புதமாக இருக்கிறது என்று செஜல் ஷா அதனை வர்ணிக்கிறார்.
செஜல் ஷா (Sejal Shah) குஜராத்தில் கல்லூரியோ பள்ளியோ இல்லாத ஒரு குக்கிராமத்தில் பிறந்தவர். 16 மைல்களுக்கு அப்பால் இருந்த காந்திநகர் பகுதியில் ஒரு கல்லூரியில் இளம் அறிவியல் பட்டம் இயற்பியலில் பெற்றவர். இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம் பரோடாவில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்கு அணுக்கதிர் இயற்பியல் துறையை அவர் எடுத்துக் கொண்டார். இன்று உலக அளவில் அறியப்பட்ட அணுக்கரு இணைவு ஆராய்ச்சி விஞ்ஞானி இந்தியாவின் செஜல் ஷா என்பது நமக்கெல்லாம் பெருமை.
கட்டுரையாளர் :
தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: இந்திய நியூட்ரினோ- சிதைவு பரிசோதனைகளின் முன்னோடி பேராசிரியர் நாபா குமார் மொண்டல் (Naba Kumar Mondal)
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
ஆகா, சிறப்பான கட்டுரை.
இந்த துறை எனக்கு மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்தும் துறையாகும். டோக்கமாக் என்ற பெயரில் மின் நூல் கூட எழுதியுள்ளேன்
திரு ஆயிஷா நடராசன் அவர்கள், தேடித்தேடி அறிவியல் முத்துக்களை கண்டறிந்து விளக்குகிறார். இப்போது அவர் அடுத்துக்கொண்டது நான் பணி செய்த அணுவியல் துறையைப் பற்றியது. இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஃபிசிக்ஸ் விஞ்ஞானியான முனைவர் செஜல் ஷா அவர்கள் ஒரு ஆராய்ச்சியாளராகத் தொடங்கி இன்று அனுபவமுள்ள விஞ்ஞானியாக ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள ITER அனுப்பினைவு உலை வெற்றிபெற உழைக்கிறார் என்பது மகிழ்ச்சிக்குறியது. இந்த உலை உள்ளீட்டு ஆற்றலைப் போல் 10 மடங்கு பசுமை ஆற்றலை தரவல்லது. இந்த சோதனையின் வெற்றியில் தான் வருங்கால சந்ததியினரின் வாழ்க்கையே அடங்கியுள்ளது.