செப்டம்பர் 30 : சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் 2024 (International Translation Day) - book day -Translation - september 30 - https://bookday.in/

செப்டம்பர் 30 : சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் 2024

செப்டம்பர் 30 : சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் 2024 (International Translation Day)

வாழ்க்கையின் மொழிபெயர்ப்புதான் கலைகளும் இலக்கியங்களும். அதன் தொடர்ச்சியாகப் பிற மொழிகளின் எழுத்தாக்கங்களை தங்களின் மொழிகளுக்கும், தங்கள் மொழியின் படைப்புகளைப் பிற மொழிகளுக்கும் ஆக்கித் தருகிற பணி உருவெடுத்தது. மனிதர்களின் பயணங்கள் விரிவடையவும், உலகத்தின் எல்லைகள் சுருங்கவும் மொழிபெயர்ப்புகள் துணையாகின்றன.

ஒரு மொழியின் படைப்பில் உள்ள வாக்கியங்களை அப்படியப்படியே நேரடியாக இன்னொரு மொழிக்கு மாற்றினால் அது வெற்றிபெறுவதில்லை. நல்ல மொழிபெயர்ப்பாளர்கள், “இதை நம் மக்கள் பேசினால் எப்படிப் பேசியிருப்பார்கள்,” என்று யோசித்துச் சரியான சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். அதற்காகவே வெளியே சென்று மற்றவர்களோடு உரையாடி மாற்றுச் சொற்களைக் கண்டுபிடிக்கிறவர்களும் உண்டு. இதன் மூலம் அவர்கள் வெறும் மொழிபெயர்ப்பாளர்களாக இல்லாமல், மூலப் படைப்பாக்கத்தின் பங்காளியாகவும் மாறுகிறார்கள்.

உலக மொழிபெயர்ப்பு தினத்தில் (செப்.30) இதற்காகத் தங்களை ஒப்படைத்துக்கொண்டுள்ள மொழிபெயர்ப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *