தொடர்- 14 : இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
சர்வதேச புகழ்பெற்ற இந்திய வானியலாளர் தருண் சுரதீப் (Tarun Souradeep)
சர் சி வீ ராமன் அமைத்த ராமன் ஆய்வுக் கூடம் மற்றும் ராமன் ஆராய்ச்சி கல்விக் கூடம் பெங்களூரில் உள்ளது. இதன் இயக்குநராக இருப்பவர் தான் தருண் சுரதீப். ஃபிஃபா உலக அளவில் பெயர் பெற்ற இந்திய காஸ்மிக் மைக்ரோவேவ் பின்னணி ஆய்வாளர். இந்தியாவில் ஈர்ப்பு அலைகள் குறித்த LIGO திட்டத்தின் உலக அளவிலான செய்தி தொடர்பாளர் அவர். விண்வெளியில் பல்வேறு மர்மங்களை வெளிக்கொண்டு வருவதில் தனக்கென்று ஒரு முத்திரை பதித்த சிறப்பான விஞ்ஞானி தருண் சுரதீப்.
காஸ்மிக் மைக்ரோவேவ் பின்னணி அல்லது CMB என்பது நுண்ணலை கதிர்வீச்சு ஆகும். இது கவனிக்கக் கூடிய நம் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து இடத்தையும் ஆக்கிரமித்து இருக்கிறது. இது ஏதோ ஒன்றின் மிச்சமாக தொடருகிறது. ஆதிகால பிரபஞ்சத்தின் தொடக்கத்திலிருந்தே இது நம்மை நோக்கி வந்துகொண்டே இருக்கிறது. இதை ஆய்வு செய்தால் நம்முடைய பிரபஞ்சத்தின் தொடக்க காலத்தை நாம் புரிந்து கொள்ள முடியும் என்று இயற்பியலாளர்கள் நம்புகிறார்கள்.
நிலையான ஆப்டிகல் தொலைநோக்கி மூலம் நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்களுக்கு இடையே உள்ள இடைவெளி இருட்டாகத்தான் தெரிகிறது ஆனால் ரேடியோ தொலைநோக்கி மங்கலான பின்னணி பரபரப்பை நமக்கு காட்ட முனைகிறது. இந்த மைக்ரோவேவ் பின்னணி கிட்டத்தட்ட ஒரே மாதிரியானது எந்த நட்சத்திரம், விண்மீன் அல்லது பிற பொருளுடன் அது எந்த தொடர்பிலும் இருக்கவில்லை.
இது குறித்த மர்மங்களை துலக்குவதில் உலகம் முழுவதும் இன்று ஆய்வுகள் நடந்து வருகின்றன அவற்றின் ஒரு பகுதியாக தான் ஈர்ப்பு அலைகளினுடைய கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது. கோட்பாட்டளவில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்கள் ஏற்கனவே இது குறித்து தன்னுடைய விரிவான கொள்கையை வெளியிட்டு இருந்தார். ஆனால் அதை சரிபார்ப்பது என்பது இன்று வரை ஒரு பெரிய வேலையாகத் தொடருகிறது. ரேடியோ ஸ்பெக்ட்ரம் என்னும் நிறமாலையில் மைக்ரோவேவ் பகுதியில் இந்த பின்னணியின் பளபளப்பு வலுவானதாக இருக்கிறது. 1965 ஆம் ஆண்டு அமெரிக்கா வானொலி வானியலாளர்கள் காஸ்மிக் மைக்ரோவேவ் பின்னணி குறித்த வலுவான ஆதாரங்களை வெளியிட்டார்கள் ஆனால் விவரங்களை துல்லியங்களைத் தேடி அறிவியல் இன்று வரை அலைந்து கொண்டிருக்கிறது.
பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கான பிக் பேங் கோட்பாட்டின் முக்கிய ஆதாரமாக அடிப்படையாக CMB இருந்து வருகிறது. பிக் பேங் அண்டவியல் மாதிரிகள் ஆரம்ப காலங்களில் பிரபஞ்சம் துணை அணு துகள்களின் அடர்த்தியான சூடான பிளாஸ்மாவின் ஒளி புகா மூடுபனியால் நிரப்பப்பட்டிருந்தது. பிரபஞ்சம் விரிவடைந்து பொழுது இந்த பிளாஸ்மா புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்கள் இணைந்து பெரும்பாலும் ஹைட்ரஜனின் நடுநிலை அணுக்களை உருவாக்கும் அளவிற்கு குளிர்ந்தது. பிளாஸ்மாவைப் போல இந்த அணுக்கள் தாம்சன் சிதரல் என்கிற ஒன்றால் வெப்ப கதிர்வீச்சை சிதறடித்தன இதனால் பிரபஞ்சம் வெளிப்படையானதாக மாறியது. மறுசீரமைப்பு சகாப்தம் என அறியப்படும் இந்த துண்டிப்பு நிகழ்வு குறித்து ஆய்வு செய்து வருபவர் தான் இந்தியாவின் மிக முக்கியமான வானியல் அறிஞர் சுரதீப்.
CMB BHARAT என்கிற இந்தியாவின் கனவை தலைமை இயக்குநராக இருந்து சுமந்து கொண்டிருப்பவர்தான் தருண் சுரதீப். இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் திம்பாகட் எனும் கிராமத்தில் காஸ்மிக் மைக்ரோவேவ் பின்னணி குறித்த பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். காஸ்மிக் மைக்ரோவேவ் பின்னணி கதிர்வீச்சில் நிற மாலையில் அசாதாரண விண்வெளி சிக்னல்கள் நிகழ்வதை உறுதிப்படுத்த இந்திய விஞ்ஞானிகள் தருண் சுரதீப் தலைமையில் சோதனைகளை நடத்தி வருகின்றனர். இந்தCMB என்று அழைக்கப்படுவது அனைத்து பரவலான ஆனால் பலவீனமான மின்காந்த கதிர்வீச்சு ஆகும் இது பொருட்கள் உருவாகும் பொழுது ஆரம்பகால பிரபஞ்சத்தில் இருந்து வந்துகொண்டு இருக்கிறது. இந்த கதிர்வீச்சு பிரபஞ்சத்தில் காணப்படும் நட்சத்திரங்கள் அல்லது விண்மீன் திரள்கள் போன்ற எந்த ஒரு பொருளோடும் வராதது எனவே இருள் ஆற்றல், இருள் பொருள் இந்த இரண்டினுடைய அடிப்படையாக இந்தCMB இருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.
CMB BHARAT திட்டத்தின் நோக்கம் என்ன, முக்கியத்துவம் என்ன, அதில் விஞ்ஞானி தருண் சுரதீப் பங்கு என்ன, இந்த விஷயத்தை ஆராயும் பொழுது அதன் பண்புகளிலிருந்து ஆரம்பகால பிரபஞ்சம் வெப்பமான அடர்த்தியான மற்றும் மிகவும் சீரான வாயு பெரும்பாலும் ஹைட்ரஜனால் நிரப்பப்பட்டுள்ளதை நாம் கண்டறிந்திருக்கிறோம். பொதுவான காஸ்மிக் அழை என்று குறிப்பிடப்படும் நமக்கு புலப்படும் ஒளியை வெளிப்படுத்தும் ஈர்ப்பு விசையின் செல்வாக்கின் கீழ் எந்தெந்த வாயுக்கள் உள்ளன என்பதை இப்போது நாம் அறிய முடியும். தருண் குழுவின் ஆய்வின் காரணமாக பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய தற்போதைய கோட்பாடுகளை நாம் நிரூபிக்கவோ அல்லது தவறு என்று சொல்லவோ முடியும். இந்தியாவில் இத்தகைய ஆய்வுகளுக்காக ஆந்திராவிலுள்ள கிராமத்தை தருண் தேர்வு செய்தது ஏன்..
திம்பக்து என்பது ஆந்திராவில் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய குக்கிராமம் ஆகும். இது அசாதாரணமான பாறை அமைப்புகளுடன் மலைகளால் சூழப்பட்டுள்ளது. இந்த இடம் வெளி உலகத்துடன் குறைந்தபட்ச தொடர்பு மற்றும் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் குறைந்தபட்ச தடையங்களைக் கொண்டுள்ளது. இந்த இடத்தில் இருக்கும் காற்று மிகவும் தூய்மையானது, வானம் மிகத் தெளிவானது நடைமுறையில் ஓசையில்லாத ஒரு இடமாகவும் இது இருக்கிறது. ரேடியோ அலைகளின் பின்னணியை ஆய்வு செய்வதற்கு இந்தியாவில் மிகச் சிறப்பான ஒரு இடம் இது. இதுபோன்ற ஒரு இடம் உலகத்தில் இரண்டு தான் உள்ளது என்பது தருண் கண்டுபிடித்து இருக்கிற விஷயம் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தருண் மற்றும் அவரது குழுவினரின் வானியல் குறித்த முக்கிய இந்த பயணம் ராமன் ஆய்வுக் கூடத்தில் அடுத்த முக்கியமான உலக அளவிலான திருப்புமுனையைச் சாதிக்கும் கட்டத்தை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது.
இஸ்ரோவின் செயற்கைக்கோள்களின் உதவியோடு இந்தியாவில் நம்முடைய மண்ணுக்கே உரிய அனைத்து உபகரணங்களையும் கொண்டு முழுக்க முழுக்க இந்திய மைய வானியல் ஆய்வக CMB BHARAT தொடருகிறது.. இந்த ஆய்வுக்கு வருவதற்கு முன் 2008 ஆம் ஆண்டு சுரதீப் இந்திய ஈர்ப்பலைகளை திட்டமான IndIGO திட்டத்திற்கு விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்கள்லோடு இணைந்து செயல்பட்டு உலக அளவிலான ஈர்ப்பு அலைகளின் அனைத்து வகை கண்டுபிடிப்புகளோடு இந்தியாவையும் இணைத்தார். LIGO எனும் பிரம்மாண்டமான 2026 செயல் திட்டத்திற்கு தற்போது உலக அளவிலான இந்திய செய்தி தொடர்பாளராக தருண் சுரதீப் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தருண் சுரதீப் 1967 பிறந்தார். கான்பூர் IIT ல் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் B TECH முடித்து அதன் பிறகு இயற்பியலின் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக PUNE சென்று முதுகலை அறிவியல் பட்டம் வென்றார். அதே பூனா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் வானியலில் முனைவர் பட்டம் பெற்றார். இன்று உலக வானியலில் இந்தியாவின் குரலாக தருண் எதிரொளித்துக் கொண்டிருக்கிறார்.
கட்டுரையாளர் :
தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: 13. இந்தியாவின் வேதிப் பொறியியல் மற்றும் உணவு பதப்படுத்துதல் அறிவியலின் உலக வித்தகர் அனந்தராமகிருஷ்ணன்!
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
2026’ல் செயல்படத் துவங்கும் LIGO அமைப்பு, அறிவியலாளர் தருண் சுதீப் அவர்களால் உலகளவில் புகழ் பெற வேண்டும். நமது பிரபஞ்சம் பற்றி ரகசியங்கள் மேலும் அறியப்பட வேண்டும். வாழ்த்துகள்.
Pingback: ஸ்ரீநிவாசன் ராமகிருஷ்ணன் - Srinivasan Ramakrishnan
காஸ்மிக் கதிர்கள் பற்றிய ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்ற விக்ரம் சாராபாய் இந்திய விண்வெளி ஆராய்ச்சி தோற்றுவித்தார். இந்த ஆராய்ச்சியில் இந்தியா தருண் சுரதீப் மூலம் இந்த அளவு முன்னேறி இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. அமைதியான கிராமத்தைப் பற்றி அறிந்து கொண்டதும் சிறப்பு.