இந்த இரவு கவிதை – இரா. கலையரசி

இந்த இரவு கவிதை – இரா. கலையரசி


இந்த இரவு

***************
நட்சத்திரங்கள் மின்னும்
பின்னிரவில்,
விடியக் காத்திருக்கும்
அடுத்த நாளை
மனம் விரும்பவே இல்லை.
விரல் சூப்பியபடி
படுத்திருக்கும் மகள்
அல்லி மலரின் மென்மையாய்,
கண்களை மூடித் துயில்கிறாள்..
அவன் கைப் பிடித்து
கண்களில் கதை பேசி,
மல்லிகை தலை சரிய,
மாலை கழுத்திலாட,,
மஞ்சள் தாலி நெஞ்சில்,
அவன் உறவை
எழுதி இருந்தது..
இணை பிரியா ஜோடி
இவர்களென இசை பாடினோம்.
எங்கு வந்தது பிணக்கு?
தெரியவே இல்லை எனக்கு!
இறங்குகிறது பின்னிரவு
இணைந்த கைகள்
இரு வேறு பாதையில்!
மனமொத்த பிரிவிற்கு
சம்மதித்து நானும் நீயும்
பிரிகிறோம்.
இந்த இரவு!!?????

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 


Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *