இந்திய அறிவியல் ஆய்விதழ்கள் (அறிவியல்-போராட்டம்-வரலாறு): Inthiya Ariviyal Aaivithazhgal Tamil Article Written By Ayesha Era Natarasan | www.bookday.in

இந்திய அறிவியல் ஆய்விதழ்கள்:- ஆசிரியரின் கனவை கட்டியெழுப்பிய வேதியியல் மாணவர்கள்! – ஆயிஷா இரா.நடராசன்

இந்திய அறிவியல் ஆய்விதழ்கள் (அறிவியல்-போராட்டம்-வரலாறு):-

ஆசிரியரின் கனவை கட்டியெழுப்பிய வேதியியல் மாணவர்கள்!

– ஆயிஷா இரா.நடராசன்

இன்று இந்தியாவில் இருக்கும் ஆய்வு கூடங்களில் மிக அதிகமானவை வேதியியல் ஆய்வுக் கூடங்கள் தான் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? வேதியியல் ஆய்வுக் கூடம் என்று சொன்னதும் நமக்கு நினைவுக்கு வருவது நம்முடைய பள்ளிக்கூடங்களில் அமைக்கப்பட்டிருக்கின்ற ஆய்வுக்கூடம் தான்.. பட்டி தொட்டியெங்கும் ஆய்வுக்கூடம் இல்லாத பள்ளிக்கூடம் இருக்க முடியாது. ரொம்ப சாதாரணமாக இன்று உருவாகிவிட்ட நம்ம ஊரின் ரத்த பரிசோதனை நிலையம் ஒரு வேதியியல் ஆய்வுக்கூடம் தான். ஆனால் இந்தியாவில் முதன்முதலில் ஒரு வேதியியல் ஆய்வுக் கூடத்தை அமைத்தவர் யார்.. எங்கே அமைத்தார்கள்? இந்த கேள்விக்கான விடையை தேடிக் கொண்டிருங்கள் அதற்குள் நாம் கட்டுரைக்குள் நுழைவோம்.

Journal Of The Indian Chemical Society, vols.16-27 (1939 ...

இந்திய அறிவியல் ஆய்வு இதழ்களின் வரலாறு தொகுக்கப்பட்டால் கண்டிப்பாக அதில் மூன்றாவது இடம் கல்கத்தா வேதியியல் கழகத்தின் ஆய்வு இதழுக்கு ( JOURNAL OF THE CHEMICAL SOCIETY OF CALCUTTA) வழங்கப்பட வேண்டும். 1886 ஆம் ஆண்டு இந்த இதழை லண்டனின் ராயல் வேதியியல் கழகத்தோடு ஒப்பிட்டு இந்திய வேதியியலாளர்கள் உருவாக்கி மூன்று இதழ்கள் அடுத்தடுத்து வெளியிட்டார்கள். நான்காவது இதழ் தயாராகிக் கொண்டிருந்த பொழுது அதை பிரித்தானிய அரசு தடை செய்தது. முறையாக பதிவுசெய்து அங்கீகாரம் பெறவில்லை என்பதை ஒரு காரணமாக அப்போது தெரிவித்தார்கள்.

ஆனால் இந்திய வேதியியல் கழகம் என்கிற பெயரில் ஒரு ஆய்வு இதழைத் தொடங்குவதற்கு பிரித்தானிய வெள்ளைக்கார பேராசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆய்விதழ் 12 இதழ்கள் தொடர்ந்து வெளியிட அதில் ஒரு இதழில் கூட இந்தியர்களுக்கு தங்கள் ஆய்வு கட்டுரைகளை வெளியிட அனுமதி வழங்கப்படவில்லை. இதில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகள் இந்திய ஆய்வுக் கூடங்களில் உருவான கண்டுபிடிப்புகள் சம்பந்தமானவை என்றாலும் இந்தியர்களின் கண்டுபிடிப்புகள் சம்பந்தமானவை அல்ல.

3rd Commonwealth Chemistry Congress - Commonwealth Chemistry

நான் முன்பு குறிப்பிட்ட தடை செய்யப்பட்ட அந்த இதழை தொடங்கிய பெருமைக்குரியவர் பிரபல சந்திர ரே. இந்திய வேதியியலின் தந்தை என்று நாம் இப்போது அவரை அழைக்கிறோம். பி.சி. ரே நவீனகாலத்தின் முதல் இந்திய வேதியியல் அறிஞர் என்று போற்றப்படுகிறார். 1861 ஆம் ஆண்டு பிறந்த ரே தொடக்க காலத்தில் இருந்தே வேதி இயல் என்னும் துறையில் தன்னை ஸ்தாபித்துக் கொண்டார் கனிம வேதியியல் கரிம வேதியியல் ஆகிய இரு துறைகளிலும்மே அவருடைய பங்களிப்புகள் இருந்தன கல்கத்தாவினுடைய மாநில கல்லூரியில் வேதியியல் பட்டப்படிப்பு படிப்பதற்கு முதலில் அனுமதி வழங்கப்பட்ட இந்தியர் அவர்தான்.

செம்பு மைக் நிஸிம் குழுவின் இணைந்த சல்பேட்டுகள் ஐசோ மார்ப அஸ் கலவைகள் மற்றும் மூலக்கூறு சேர்க்கைகள் பற்றிய ஆய்வுக்காக இன்றைக்கும் உலக அளவில் கண்டுபிடிப்பாளராக பீ சீ ரே போற்றப்படுகிறார். ஜெகதீஷ் சந்திரபோஸ் மேக்நாத் சாகா போன்றவர்கள் எல்லாம் இவருடைய மாணவர்கள் தான். ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் ஆய்வுகளை வெளியிட மறுத்தார் ரே. இந்திய மொழிகளில் ஆய்வுக் கட்டுரைகள் வெளிவர வேண்டும் என்று முதலில் பிரகடனம் செய்தவர் அவருக்கு ஆங்கிலம் வடமொழி பாரசீக மொழி உட்பட ஏழு மொழிகளில் புலமை இருந்ததாக வரலாறு குறிப்பிடுகிறது தன்னுடைய கிராமத்தில் பெண்கள் கல்வி கற்பதற்கு என்று தன்னுடைய வீட்டை பெண்களுக்கான பள்ளிக்கூடமாக பிற்காலத்தில் மாற்றிய புரட்சியாளர் ரே.

ஈஸ்வர சந்திர வித்யாசாகர் இன்னும் மாபெரும் அறிஞர் க்கு கீழ் ரே கல்வி கற்றிருந்தார். மாநில கல்லூரியில் ஆரம்பத்தில் அவர் வெளிப்புற மாணவராக மட்டுமே இணைக்கப்பட்டார் இங்கிலாந்தில் இருந்து அவர் பட்டம் பெறுவதற்கான அனுமதிக்காக அவரு ஏழு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. இந்த கடும் போராட்டத்திற்கு நடுவில்தான் நமது எதிர்கால அறிவியல் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தபடி நிலைகளை அவர் உருவாக்க வேண்டியிருந்தது தான் கல்வி கற்ற நாட்களில் பல்வேறு ஆய்வுகளை தான் தங்கி இருந்த ஆய்வுக்கூடத்திலேயே அவர் மேற்கொள்ள தொடங்கினார் ஒரு பழுதடைந்த கருவி காரணமாக அவருடைய ஆய்வுக் கூடம் வெடித்து சிதறிய பொழுது வகையில் அவர் காயம் பட்டார் எனவே கல்வி கற்க லாயக்கு இல்லாதவர் என்று மீண்டும் பல்கலைக்கழகம் அவரை தள்ளி வைத்தது.

இப்படித்தான் இந்தியாவின் வேதியியல் இதழ் குறித்த போராட்டம் தொடங்கியது. சட் டென்று கல்விக்கூடங்களில் இருந்து காணாமல் போன மாமனிதர் பி சி ரே எடின்பர்க்கில் தனது வேதியியல் கல்வியைத் தொடர அலெக்சாண்டர் பிரௌன் என் ஓ மாமனிதரால் அழைக்கப்பட்டு அங்கே கல்வி கற்க அனுமதிக்கப்பட்டார். இளம்கலை பட்டம் பெற்று இந்தியா திரும்பிய 1885 ஆம் ஆண்டிலேயே நான் முன்னாள் குறிப்பிட்ட வேதியியல் ஆய்வு இதுவரை அவர் தொடங்கிவிட்டார். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை கடக்க கடுமையாக விமர்சித்து பல இதழ்களில் அவர் கட்டுரைகள் எழுதியதால் இந்த வேதியியல் ஆய்வு இதனையும் சேர்த்து வெள்ளைக்காரர்கள் தடை செய்தார்கள்.

ஆனால் கனிம வேதியியலில் அவருடைய கண்டுபிடிப்புகளை ஆங்கிலேயர்களால் புறக்கணிக்க முடியவில்லை இரட்டை உப்புகளின் உள்கட்டமைப்பை உடைத்து காட்டி உலோக இரட்டை சல்பைடுகள் ஐ எப்படி உருவாக்க வேண்டும் என்று அவர் காட்டிய அதன் விகிதாச்சார அடிப்படையில் தான் ஆரம்ப கால நோய் மருந்துகள் தயாரிக்கப்பட்டன. அவரு உருவாக்கி கொடுத்த அமோனியம் இரும்பு சல்பேட்டு இன்றுவரை உலக அளவில் அவரது முறையில் தான் தயாரிக்கப்படுகிறது. எனவே வேறு வழியில்லாமல் அவரை மாநில கல்லூரியின் வேதியியல் பேராசிரியராக அவர்கள் ஏற்க வேண்டியிருந்தது. ஆய்வுக்கூடத்திற்கு அவர்கள் கொடுக்கின்ற இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட கவச மேல் கோட் அணியாமல் சாக்குப்பையால் தைக்கப்பட்ட கதர் மேல் கோட் அணிந்து செல்லும் தைரியம் அவருக்கு மட்டுமே இருந்தது.

அவரிடம் கல்வி கற்ற இந்திய மாணவர்களில்.. மூன்று பேர் ஜெ என் முகர்ஜி, ஜே சி கோஷ், மற்றும் சாந்தி ஸ்வரூப் பட்நாகர்.. ஆகியோர் லண்டனின் பல்கலைக்கழக கல்லூரியில் இடம்கிடைத்து அங்கே வேதியியல் கற்பதற்காக செல்கிறார்கள்.

Jnanendra Nath Mukherjee - Wikipedia
ஜே.என்.முகர்ஜி என்கிற ஞானேந்திர நாத் முகர்ஜி (Jnanendra Nath Mukherjee)

இவர்களில் ஜே என் முகர்ஜி .. என்கிற ஞானேந்திர நாத் முகர்ஜி கூழ்ம வேதியியல் அறிஞர் ஆவார். அவரது தந்தை மாகாண நீதித்துறையில் முக்கியமான சேவையை செய்து கொண்டிருந்த பொழுது மேற்படிப்புக்காக லண்டன் சென்று படிப்பதற்கான ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது அதனை தன்னுடைய உற்ற தோழர்களுக்கும் சேர்த்து பெற்று வந்தார் அவர். பேராசிரியர் முகர்ஜி என்று பின்னாட்களில் அழைக்கப்பட்ட அவர் மாநில கல்லூரியில் பிசிரே அவர்களின் கீழ் இளம்கலை பட்டம் பெற்றவர் அங்கே அவருக்கு தோழர்களாக இருந்தவர்கள்தான் ஜே சி கோஷ் மற்றும் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் ஆகியோர். மூவரில் பேராசிரியர் முகர்ஜி முக்கியத்துவம் பெறுவதற்கு காரணம் அவ ரது எலெக்ட்ராநிக் இரட்டை அடுக்கு என்னும் அயனியாக்க வேதியியல் கட்டுரை ஒன்றை பி .சி. ரே.. அமெரிக்க வேதியியல் சங்கத்தின் இதழில் வரவழைத்து அவரை உலகம் அறிய வைத்தார்.

ஜெ சி கோஷ் எலக்ட்ரோலைட் எனப்படும் மின்வேதி பொருட்களுக்கான அறிஞராக பின்நாட்களில் போற்றப் பட்டவர் யுவர் பெயரில் தற்போது கல்கத்தாவின் அருகில் மேமின் பூ ரில் ஒரு பாலிடெக்னிக் உள்ளது ஜார்க்கண்டு மாகாணத்தை சேர்ந்தவர். தான் படித்த காலத்தில் கல்கத்தா மாநில கல்லூரியில் முதல் மதிப்பெண் பெற்று பிரிட்டிஷ் காரர்களை விட அதிக மதிப்பெண் பெற்ற பெருமையோடு லண்டனில் உள்ள பல்கலைக்கழக அறிவியல் கல்லூரியில் முனைவர் பட்டம் பெறுவதற்கு பீ சீ ரே அவர்களால் அனுப்பப்பட்டவர் கோஷ்.

சாந்தி ஸ்வரூப் பட்நாகர் என்றால் இப்போது தெரியாதவர்கள் இருக்க முடியுமா.. இந்திய அறிவியல் கூடங்கள் சி எஸ் ஐ ஆர் அமைப்பின் ஒட்டுமொத்த ஸ்தாபகராகவும் இந்திய அறிவியலின் பிதாமகராகவும் போற்றப்படும் அவர் சாந்தி ஸ்வரூப் பட்நாகர்… அந்த காலகட்டத்தில் தற்போது பாகிஸ்தானில் உள்ள லாகூரில் அவர் படித்துக் கொண்டிருந்த கல்லூரி திடீரென்று புது டெல்லிக்கு மாற்றப்பட்டது அதற்கு தன்னை தகவமைத்துக் கொள்வதற்கு அவர் பீ சீ ரே எனும் அறிஞரை நாடினார். அதன்மூலம் ஃபோர்மன் கிறித்துவ கல்லூரியில் அவர் படித்தது இயற்பியல். பீ சீ ரே அவர்களின் ஆய்வுகூடங்களில் ஓய்வு நேரத்தை கழித்துக் கொண்டிருந்தவர் முதுகலை அறிவியல் படிப்புக்கு வேதியியல் துறையை எடுத்துக் கொண்டவர்.

சாந்தி ஸ்வரூப் பட்நாகர் (Shanti Swarup Bhatnagar)

ஆக மேற்கண்ட மூவரும் லண்டனில் கல்வி கற்ற நாட்களில் அங்கே ராயல் வேதியியல் கழகத்தின் கூட்டங்களுக்கு தவறாமல் விஜயம் செய்து கொண்டிருந்தார்கள். 1919 ஆம் ஆண்டில் மூவருமாக இணைந்து ஒரு முடிவை எடுத்தார்கள் கல்வி கற்றுவிட்டு இந்தியா திரும்ப வேண்டும் அனைவரும் முயற்சிப்பதுபோல இங்கிலாந்திலோ வேறு நாடுகளிலோ பணிபுரிய கூடாது இந்தியா திரும்பியதும் தங்கள் ஆசிரியரின் கனவு இதழை தாங்கள் தொடர்ந்து நடத்த வேண்டும் தடை செய்யப்பட்ட இந்தியாவினுடைய வேதியியல் கனவுகளை மீண்டும் முளைவிட்டு எழுப்ப வேண்டும் என்பதுதான் அந்த முடிவு.

1920 ஆம் ஆண்டு கல்வி முடித்து மூவரும் இந்தியா திரும்பினார்கள். உறுதி எடுத்தது போலவே அவர்கள் தொடங்கி வைத்தது தான் இந்திய வேதியியல் கழகம். 4 ஆண்டு கால கடும் போராட்டத்திற்கு பிறகு 1924 ஆம் ஆண்டில் இந்திய வேதியியல் கழகம் மே 9 ஆம் தேதி அன்று முறைப்படி தொடங்கப் பட்டது அதன் முதல் தலைவராக தங்களுடைய ஆசிரியர் பி சி ரே அவர்கள் தான் இருக்க வேண்டுமென்பதில் மூவரும் பிடிவாதமாக இருந்தார்கள். துணைத்தலைவராக இரண்டு வெள்ளைக் காரர்களை நியமித்தார்கள் ஒருவர் கில்பர்ட் பவுலர். மற்றொருவர் வாட் சன். வெள்ளைக்காரர்களும் இணைந்து தொடங்கியிருந்ததால் பிரித்தானிய அரசாங்கம் உடனடியாக இந்த அமைப்புக்கு அனுமதி வழங்கியது.

செயலராக ஜெ என் முகர்ஜி பொறுப்பேற்றுக் கொண்டார் இவர்கள் இணைந்து இந்தியாவின் முதல் வேதியியல் ஆய்வு இதழை மீண்டும் உயிர்ப்பிக்க அரும்பாடுபட்டார்கள். இதனைக் கொண்டு வருவதற்கு போதுமான நிதி ஆதாரம் கிடைக்கவில்லை இதழினுடைய ஆரம்ப கால ஆசிரியர்களாக அறிஞர் என் ஆர் தார் மற்றும் ஆங்கிலேயர் என் மேல்ரம் ஆகியவர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. மீண்டும் தான் கனவு கண்டஇதழ் வெளிவரப்போகிறது என்கின்ற உத்வேகத்தோடு அறிஞர் பீ சீ ரே தனது சொத்துக்கள் சிலவற்றை விற்று 10,000 ரூபாயை இதழ் தொடங்குவதற்கு அன்பளிப்பாக வழங்கினார் அந்த காலகட்டத்தில் இது மிகப்பெரிய தொகையாகும் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இந்த இதழுக்காக அதனுடைய வேலைகளை  செய்வதற்கு மூன்று அறைகளை ஒதுக்கித்தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

1924 முடக்கப்பட்ட இந்திய வேதியியல் ஆய்வு இதழ் உண்மையான இந்திய இதழாக தன்னுடைய முதல் இதழை வெளியிட்டது. முதல் இதழில் 13 ஆய்வுக் கட்டுரைகள் இருந்தன லண்டனின் வேதியியல் கழகத்தின் அப்போதைய தலைவர் பேராசிரியர் வைன் இந்தியாவின் வேதியியல் அறிஞர் பீ சீ ரே அவர்களை பாராட்டி வாழ்த்தி ஒரு தந்தியை அனுப்பியிருந்தார். லண்டனில் இருந்து வெளிவந்துகொண்டிருந்த மிகப் பிரபலமான( இன்றைக்கும் வெளிவரும்) நேச்சர் இதழ் இந்த முதல் இதழை குறித்து ஒரு குறிப்பாணை வெளியிட்டது.

13 கட்டுரைகளில் 12 கட்டுரைகள் இந்தியாவின் வேதியியல் அறிஞர்கள் எழுதியவை என்று அந்தக் குறிப்பாணை குறிப்பிடுகிறது அதில் ஆறு கட்டுரைகள் கல்கத்தா பல்கலைக்கழகத்திலிருந்தும் நான்கு கட்டுரைகள் சென்னை பல்கலைக்கழகத்திலிருந்தும் வெளிவந்தவை என்று தற்போது அறிய முடிகிறது.

Dr. Jay Vakil with Dr. K. M. Shahani: University of Nebraska, Lincoln, USA.

ஜெ என் முகர்ஜி  வேதியியல் துறையை விவசாயத்தோடு இணைத்தவர். மண் வேதியியல் (SOIL CHEMISTRY) எனும் புதிய அறிவியல் துறையை இந்தியாவில் அறிமுகம் செய்தவர்.. இந்திய வேதியியல் கழக ஆய்வு இதழில் ஏறக்குறைய 20 ஆய்வுக் கட்டுரைகளை இந்த துறை சார்ந்து பேராசிரியர் முகர்ஜி வெளியிட்டார். அவை உலகின் பல ஆய்வு இதழ்களில் மறுபிரசுரம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க சாதனை ஆகும்.

ஜே சி கோஷ் 1920 ளில் வெளியிட்ட ஒளிச்சேர்க்கை வேதியியல் குறித்த மூன்று ஆய்வுக் கட்டுரைகள் உலக பிரசித்தி பெற்றன. சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியராக இணைந்த பின்னும்  இந்திய வேதியியல் கழகத்தின் ஆய்வு இதழை கைவிடாமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தார். அந்த காலகட்டத்தில் இந்தியாவில் கிடைத்த கச்சா எண்ணெயில் இருந்து பெட்ரோலை தனித்து எடுக்க புதிய வேதியல் ஒன்றை தொழில் துறைக்கு வழங்கியவர் சாந்தி ஸ்வரூப் பட்நாகர். இது குறித்த அவருடைய ஆய்வுக் கட்டுரை இந்திய வேதியியலாளர் சங்கம் இதழில் வெளிவந்த பொழுது அதற்கு ₹1,00,000- அன்று எவ்வளவு பெரிய தொகை! – அவருக்கு பரிசாக பிரிட்டிஷ் சாங்கம் கொடுத்தபொழுது இதழ் எந்த அளவிற்கு உலக அங்கீகாரம் பெற்றது.. என்பதை விளக்கத் தேவையில்லை.

கீழ்க்கண்ட மூன்று உலக சாதனைகளை இந்திய வேதியியல் கழகத்தின் ஆய்வு இதழ் அடைந்து இருந்தது

  • ராயல் கழகம் வெளியிட்டு வந்த ஆய்வு இதழ்களில் கூட இல்லாத ஒரு சிறப்பு அம்சத்தை 1925 ஆம் ஆண்டிலேயே அவர்கள் அடைந்து காட்டினார்கள் . அதுதான் சக மதிப்பாய்வு முறை (PEER REVIEW) . இது தர கட்டுப்பாட்டு செயல்முறை இதில் வேதியியல் வல்லுநர்கள் மற்றும் அறிவார்த்த குழு ஒன்றை அவர்கள் ஏற்படுத்தி ஒவ்வொரு ஆராய்ச்சி கட்டுரையையும் மதிப்பீடு செய்தார்கள். மதிப்பீடு செய்யப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமே வெளியிடும் உலகின் மிக சில இதழ்களில் ஒன்றாக இந்திய வேதியியல் ஆய்வுக் கழக இதழ் விளங்கியது..
  • இந்தியாவின் முதல் வேதியியல் பெண் விஞ்ஞானி எனும் சிறப்பை பெற்ற அசீமா சாட்டர்ஜி பிற்காலத்தில் மலேரியா எதிர்ப்பு மருந்துகள் தயாரித்த கரிம வேதியியல் பற்றிய அரிய மருத்துவ கட்டுரைகளை தாங்கும் இதழாக இந்தியா வேதியியல் ஆய்வுக் கழகத்தின் இதழ் மாறியது அப்போது இந்திய மருத்துவ தாவரங்களில் இருந்து வலிப்பு நோய்க்கு மருந்து தயா ரிக் கின்ற முறையையும் அறிமுகம்செய்து அசீமா சாட்டர்ஜி அவர்கள் எழுதிய ஏழு ஆய்வுக் கட்டுரைகள் உலக மருத்துவ அரங்கில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தின.
  • இன்றைக்கும் உலக அளவில் மாபெரும் வேதியலாளர்ராக போற்றப்படும் சி என் ஆர் ராவ் தன்னுடைய திடப் பொருள் வேதியியலையும் கட்டமைப்பு வேதியியலையும் அறிமுகம் செய்ததோடு உலக அளவிலான முதல் வேதியியல் மாநாட்டை இந்தியாவில் இந்திய வேதியியல் ஆய்வுக் கழகத்தின் வழியே ஏற்பாடு செய்து அடுத்த சாதனையை நிகழ்த்தினார்.

தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு வேதியியல் அறிஞர்கள் அவருடைய ஆய்வுக்கட்டுரைகள் உலகின் கவனத்தை ஈர்த்த இந்தியாவின் மூன்றாவது அற்புத ஆய்வு இதழான இந்திய வேதியியல் கழகத்தின் ஆய்விதழ்களில் ஆரம்பத்தில் இருந்தே வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. வேதியியல் பேரறிஞர் ஜி என் ராமச்சந்திரன்( தமிழகத்தை சேர்ந்தவர்) அவர்களின் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை பிற்காலத்தில் இந்திய வேதியியல் ஆய்வுக் கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பெருமைக்குரிய தமிழக விஞ்ஞானி அவர்.

English eBook: Memoirs of Ruchi Ram Sahni

இப்போது நாம் தொடக்கத்தில் கேட்ட கேள்விக்கு திரும்புவோம். இந்தியாவில் முதன்முதலில் ஒரு நவீன  வேதியியல் ஆய்வுக் கூடம் எங்கே தொடங்கப் பட்டது.. எப்போது? தொடங்கியவர் யார்.?

நம்முடைய பண்டைய இந்தியாவில் வளர்ச்சி அடையாத அறிவியல் துறைகளே இல்லை .. எனவே வேதியியல் என்கிற துறையும் வளர்ச்சி அடையாமல் இல்லை ஆனால் நாம் கேட்பது நவீன அர்த்தத்தில். பண்டைக் காலத்தில் ரசவாதம் அல்லது ரசாயனம் என்று அது அழைக்கப்பட்டது அப்போது ரசவாதம் உலகவியல் மருந்தியல் என்றெல்லாம் வைத்திருந்தார்கள் தமிழில் கூட சித்தர்கள் செய்யாத சோதனைகள் இல்லை பலவகையான உலக அளவிலான உலோக கலவைகள் கீழடி காலத்தில் இருந்து கிடைப்பதை மறுக்க முடியுமா?

ஆனால் நம்முடைய கேள்வி நவீன அர்த்தத்தில் ஒரு வேதியியல் ஆய்வு கூடம். இந்திய உலோகவியல் அல்லது வேதியியல் வரலாற்றில் மறக்க முடியாத மாமனிதர் ருச்சி ராம் சஹானி. பஞ்சாப்பை சேர்ந்தவர். 1878ஆம் ஆண்டு ஒரு மாணவரை பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இணைப்பதற்கு நேர்காணல் நடைபெறுகிறது அப்போது அங்கு ஒரு ஆங்கிலேய பேராசிரியர் இருந்தார் அவர் பெயர் ஹென்றி பிரான்சிஸ். வேதியியலில் மிக கடினமான கேள்விகளை கேட்பதில் பெயர் பெற்றவர். எதிரில் வந்த மாணவரின் பெயர் தான் ருச்சி ராம் சஹானி. ஆண்டிமணி பிஸ்மத் இரண்டு ம் ஒன்றுதான் என்கிற அடிப்படையில் கேள்வி அமைந்த பொழுது சஹானி கடுமையாக அதை மறுத்தார் இரண்டும் வேறு வேறு என்று மீண்டும் மீண்டும் வாதாடினார். உனக்கு எப்படி தெரியும் என்று இறுதியாக கேட்கப்பட்ட பொழுது நான் வீட்டில் ஒரு வேதியியல் ஆய்வகம் வைத்திருக்கிறேன் என்று சொன்னாராம் சஹானி.

நேர்காணல் முடிந்தவுடன் அந்த மாணவனை அழைத்துக்கொண்டு  அவர் சொன்ன ஆய்வகத்தை நோக்கி விரைந்தார் அந்த பேராசிரியர். ஒரு முழுமையான வேதியியல் ஆய்வுக்கூடம் அங்கே இருப்பதைக் கண்டு வியந்தார். இப்போதுகூட வரலாறு நம்புமா என்று தெரியவில்லை. . பெரும்பாலான ஆய்வுக்கூட குடுவைகள் ருச்சி ராம் சாஹ்னி என்கிற அந்த இளைஞர் மணலில் இருந்து தானே கண்ணாடிசெய்து அவற்றின் மூலம் சுயமாக உருவாக்கியவை. இதுதான் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட இந்தியாவின் முதல் வேதியியல் ஆய்வு கூடம்.

நம்முடைய தமிழில் முதல் அறிவியல் எழுத்தாளர் என்று நான் போற்றும் தோழர் சிங்காரவேலர் எழுத்துக்களில் இருந்துதான் நாம் ருச்சி ராம் சஹானி என்கிற இந்த மாமனிதரை குறித்து அறிந்து கொள்கிறோம். பிற்காலத்தில் கிராமம் கிராமமாக சென்று அறிவியல் ஆய்வுகளை நடத்தி காட்டி அறிவியல் மனப்பான்மையை உருவாக்கிய மாமனிதராக ருச்சி ராம் சாஹ்னி என்னும் அந்த விஞ்ஞானியை சிங்காரவேலர் நமக்கு அறிமுகம் செய்கிறார்.

📚 எழுதியவர்:

ஆயிஷா இரா நடராசன்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *