நூல் : கிளியும் அதன் தாத்தாவும்
ஆசிரியர் : ச.சுப்பாராவ்
விலை : ரூ.60
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
ஆண்டு : செப்டம்பர் 2022
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
ஆசிரியருக்கு பெருந்தொற்று காலத்தில் இணையத்தில் கிடைத்த கதைகளை நமக்குத் தேவையானதை மட்டும் மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறார்.
பீகார் பகுதிகளில் வாயில் வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டு உட்கார்ந்து கதை பேசிக்கொண்டிருந்த பெரிசுகளிடமிருந்து பெறப்பட்ட மைதிலி மொழி சிறார் கதைகள். இதில் போஜ்புரி, மைதிலி, மகாஹி, அங்கிகா, வஜ்ஜிகா என்று ஐந்து மொழிகளில் வழங்கப்பட்டவை.
இக்கதைகள் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டது. தமிழ்ச் சிறார்களுக்கான கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நமக்கு கொடுத்திருக்கிறார். அதிலும் நீதிபோதனைகள் உள்ளே வராமல் வெட்டிவிட்ட பின்பே வழங்கியிருக்கிறார். குழந்தைகளின் வயிறு குலுங்கும் வண்ணம் கதைகள் சொல்லலாம். நான் ‘நகர, கிராமத்து காக்கா’ கதையை வாசித்து குலுங்கி சிரித்துவிட்டேன். பேருந்தில் பக்கத்தில் உட்கார்ந்தவர் ஒரு மாதிரியாக பார்த்தார். இது என்னுடைய வாசிப்பில். உங்களுக்கு எப்படி இருக்குமோ எனக்குத் தெரியாது தோழர்களே.
அந்தக் கதையின் சுருக்கம்-
கிராமத்து காக்காவுக்கு எதுவும் கிடைக்காம நகரத்துக்கு வந்து நகர காக்காவிடம் உதவி கேட்க, நகர காக்கா கிண்டல் மட்டுமே செய்தது. அதாவது நாம பேசுவோமே கிராமத்தான் என்று அதுபோல. அப்போது ஒரு சிறுவன் கையில் ஜாங்கிரியுடன் வர நகரத்துக் காக்கா தன்னுடைய திறமையை பீத்துவதாக எண்ணி அவனிடம் பிடுங்க அருகே சென்றது. சிறுவன் காகத்தை பார்த்து ஜாங்கிரியை வாயில் போட்டுக்கொண்டான். நகர காக்கா ஏமாந்தது. இப்போது கிராம காக்கா அதே சிறுவனின் அருகில் சென்று அவன் தலையில் தன் அலகால் லேசாக தட்டியது. ஆ என்று சிறுவன் வாய் திறக்க ஜாங்கிரி கீழே விழ தூக்கிகொண்டு பறந்தது. யார் திறமைசாலிங்க என்று தயவுசெய்து நீதியை குழந்தைக்கு சொல்லக்கூடாது. மீதியை புத்தகத்தில் காண வாரீர். எழுத்தாளருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
இதில் 16 கதைகள் உள்ளது. வாசிப்போம். குழந்தைகளை வாசிக்க வைப்போம் தோழர்களே.
வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!
தோழமையுடன்
இரா.சண்முகசாமி
புதுச்சேரி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.