நூல் அறிமுகம்: தமிழில் மு.சிவலிங்கத்தின் லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும் – அ.கா.ஈஸ்வரன்

நூல் அறிமுகம்: தமிழில் மு.சிவலிங்கத்தின் லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும் – அ.கா.ஈஸ்வரன்
எங்கெல்ஸ் எழுதிய “லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்” என்ற நூலை நான் பல முறைப் படித்துள்ளேன். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் 25 தடவைக்கு மேல் படித்திருக்கிறேன். இன்று இந்த நூலை தோழர் மு.சிவலிங்கம் அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்ட அச்சு நூலைப் படிக்கத் தொடங்கியுள்ளேன். இணையத்தில் பல ஆண்டுகளாகப் படித்து வந்தாலும் அச்சில் இப்போது தான் படிக்கப் போகிறேன்.

சோவியத் நாட்டிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டு வந்த போது இந்த நூல் 50 பைசாவுக்கு விற்றனர். இந்த நூலை நான் 100க்கு மேலான படிகளை வாங்கி பலருக்கு இலவசமாகக் கொடுத்துள்ளேன். இந்த நூலோடு, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, டூரிங்குக்கு மறுப்பு ஆகிய மூன்று நூல்களை எனது அருகில் எப்போதும் வைத்திருப்பேன். படித்துக் கொண்டே இருப்பேன். இந்த நூலைப் பற்றி ஏற்கெனவே வகுப்பெடுத்துள்ளேன். இருந்தாலும் மீண்டும் மீண்டும் படிப்பது எனது வழக்கம்.

“டூரிங்குக்கு மறுப்பு” நூலுக்கு அடுத்தபடியாக மார்க்சிய தத்துவத்தை “லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்” என்ற இந்த நூல் சிறப்பாக விளக்குகிறது..

இன்று மார்க்சின் “ஃபாயர்பாக் ஆய்வுரைகளை” வைத்து குழப்ப முனையும் பலரை அம்பலப்படுத்தும் நூலாக இது இருக்கிறது. மார்க்சின் இந்த ஆய்வுரைகளை இந்த நூலின் பிற்சேர்க்கையாக முதலில் வெளியானது. எங்கெல்ஸ் தான் இந்த ஆய்வுரைகளை முதன்முறையாக வெளியிட்டார். அதனால் இந்த நூலில் அதற்கான விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்நூல் மார்க்சிய தத்துவத்தை மட்டும் பேசும் தனித்த நூலாகும். “மூலதனம்” நூலின் மூலம் மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை அறிந்து கொள்வதைப் போல மார்க்சிய தத்துவத்தை இந்த நூலில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

பாரதி புத்தகாலம் அண்மையில் இந்த நூலை வெளியிட்டுள்ளது, இந்த நூலின் விலை 75/- ரூபாய். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை எந்தளவுக்கு படிக்க வேண்டுமோ அந்த அளவுக்கு படிக்க வேண்டிய நூல் இது. இந்த நூலை தோழர் மு.சிவலிங்கம் அவர்கள் சிறப்பாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளார்.

-அ.கா.ஈஸ்வரன்

நூல் : லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்
ஆசிரியர் : தமிழில் மு.சிவலிங்கம்
விலை : ரூ.75
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *