சாதியம் பற்றியும் மதவாதம் பற்றியும் அதன் உள் நோக்கங்களையும் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும் வரலாற்றின் மூலம் விளக்கும் கட்டுரை நூல்.
ஆதவன் தீட்சண்யா அவர்களின் பல உரைகளும் அனுபவங்களின் மூலம் இவை விவரிக்கப்பட்டுள்ளது. சாதி இல்லை என்று கூறுபவர்களுக்கும் சாதி மதத்தை மேலோட்டமாக மறுப்பவர்களுக்கும் கண்டிப்பாக ஆழமான புரிதலை உண்டாக்கும்.
சாதி இல்லை என்று சொல்வதை விட்டு அது எப்படி இருக்கிறது என்பதை உணர்ந்து அதிலிருந்து முதலில் தனிப்பட்ட முறையில் நாம் விடுபட வேண்டியதன் அவசியம் பற்றியும் பேசுகிறது. பெரியாரையும் அம்பேத்கரையும் பெயரளவில் மட்டும் பயன்படுத்தும் அபாயம் பற்றியும் கூறப்பட்டுள்ளது.
கெளரவக் கொலைகள், இனப் படுகொலை, பகுத்தறிவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட கடவுள் கோட்பாடு, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடிய தலைவனையே ஒடுக்கிய கூட்டம், இந்துத்துவாவின் உள்நோக்கங்களும் அது பரந்து பட்டு மக்கள் மனதில் ஊடுருவியிருக்கும் உண்மையும் அதிலிருந்து மீண்டு வர நாம் செய்ய வேண்டிய செயல்கள் மலை போல் இருக்க நாம் கடுகளவேனும் செய்து கொண்டிருக்கிறோமா என்ற கேள்வியுடன் முடிகிறது.
எல்லாத்துக்கும் நூறு பெரியார் வந்தால் தான் திருத்த முடியும் என்று புலம்பும் பலரிடமும் ஒரு கேள்வியை முன் வைக்கிறார். பகுத்தறிவுப் பரப்பல், சாதியொழிப்பு போன்ற வேலைகளையெல்லாம் மறுபடியும் பெரியார் தலையிலேயே கட்டிவிட்டு நீங்களும் நானும் அப்படியென்ன அதியுன்னத புல் புடுங்கப்போகிறோம்? என்ற அந்த கேள்வி எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று.
நன்றி,
ராம்குமார். ரா
புதுக்கோட்டை
நூலின் பெயர் : கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது
ஆசிரியர் : ஆதவன் தீட்சண்யா
பதிப்பகம் : நூல் வனம்
பக்கங்கள் : 112
விலை : ₹80
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.