Subscribe

Thamizhbooks ad

நூல் அறிமுகம்: ஆதவன் தீட்சண்யாவின் ‘கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது’ – பிரவீன் ராஜா




மொத்தம் 18 கட்டுரைகள்.

சாதியை பற்றிய புரிதல் கம்யூனிஸ்ட்களுக்கு அவ்வளவாக இல்லை என்ற புரிதலை மாற்றும் கட்டுரைகள் என நான் நினைக்கிறேன்.

தோழரி‌ன் பேச்சுகளை பெரும்பாலும் கேட்டதன் காரணமாக, புத்தகத்தை படிக்கும் போது, அவரின் குரல் வழியே படிப்பது போன்ற ஒரு உணர்வு.

100 பெரியார்கள் வேண்டும் என்றால் நமக்கு என்ன அதைவிட பெரிய புல் புடுங்குர வேளை இருக்க போகிறது என்ற வெளிப்படையான கேள்வி நடுநிலை என்னும் போர்வையில் வாழும் எலைட்கள் கன்னத்தில் பளீர் என்று அறைந்த வலியை கொடுக்கும்.

கல்வி என்பது அறிவின் வளர்ச்சியையும், சமூகத்துடன் சமமாக பழகும் குணத்தையும், பகுத்தறிவை வளர்க்கும் இடமாக இல்லாமல் போனதுக்கு தனியார் கல்வி நிறுவனங்களும், பெற்றோர்களின் வெட்டி தற்பெருமையுமே காரணம் என்பதை அரசு பள்ளி மாணவர்களின் பக்கம் நின்று பேசி இருக்கிறார்.

இறைவனின் படைப்பில் மனிதனுக்கு மட்டும் தான் பகுத்தறிவு உள்ளது என தொடங்கிய வரிகள் போதும், கொள்கை புரிதலுடன் எவ்வளவு பேர் பயணிக்கிறார்கள் எ‌ன்று.

சாதி ஒழிப்பில் தலித் மக்களை அரசியல்படுத்துவதில் உள்ள சிக்கலையும், தலித் அல்லாதார் செய்யவேண்டிய சுய சாதி எதிர்ப்பு, சாதி மறுப்பு திருமணம் போன்ற முன்னெடுப்புகள் பற்றியும் அழகாக பேசி இருக்கிறார்.

தோழர் திருமாவின் இயக்க அரசியல் முதல் ஓட்டு அரசியல் பயணம் வரை இருந்த ஈர்த்த மற்றும் முரண்பட்ட விஷயங்கள் குறித்து பேசியது எல்லாம் அருமை.

இருக்கையில் உட்காரும் போது குத்தும் சின்னஞ்சிறு ஊசி உண்டாக்கும் வலியை அனைத்து கட்டுரையிலும் உணர்த்தி இருக்கிறார்…

அந்த வலி சாதியும் மதமும் முக்கியமாக கருதும் கூட்டத்திற்கு எதிராக மனித மாண்பினை மீட்கும் உண்மையான மனிதர்களை ஒன்றிணைக்கும் என்று நானும் அவரை போலவே நம்புகிறேன்.

– பிரவீன் ராஜா

நூல் : கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது
ஆசிரியர் : ஆதவன் தீட்சண்யா
விலை : ரூ.₹80
வெளியீடு : நூல்வனம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Latest

நூல் அறிமுகம் : பனைவிடலி – கார்த்தி டாவின்சி

  இந்த நூல் தோழமை எழுத்தாளர் இலக்கியனின் முதல் சிறுகதைத் தொகுப்பாகும். மொத்தம்...

நூல் அறிமுகம் : நதியற்ற ஊர் -கார்த்தி டாவின்சி.

   கவிஞர் தினேஷ் பாரதியின் புதிய கவிதைத் தொகுப்பான 'நதியற்ற ஊர்' என்ற...

மு.முபாரக் கவிதை

முட்டாள் பைத்தியம் திமிர் பிடித்தவன் சுயநலவாதி தற்பெருமைக்காரன் சோம்பேறி கடன்காரன் கோபக்காரனென எத்தனையோ வார்த்தைகள் இந்த உலகத்தில் புழங்கிக்கொண்டிருக்கிறதென்பது இதுவரை  தெரியவில்லை... அன்பான...

கவிதை : செல்போன் விளையாட்டு – ந க துறைவன்

அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க அக்கா சாப்பிட கூப்பிட்டாங்க யாருக்கும் பதில் சொல்லாமல் தலைகுனிந்து இருக்கிறான். கையில் இருக்கும்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

நூல் அறிமுகம் : பனைவிடலி – கார்த்தி டாவின்சி

  இந்த நூல் தோழமை எழுத்தாளர் இலக்கியனின் முதல் சிறுகதைத் தொகுப்பாகும். மொத்தம் 12 சிறுகதைகளை இதில் கொடுத்திருக்கிறார். பல இலக்கிய இதழ்களில் வெளிவந்திருந்த சிறுகதைகளைத் தொகுத்திருக்கிறார். முதலில் 'பனைவிடலி' என்ற சொல்லாட்சிதான் என்னை ஈர்த்தது....

நூல் அறிமுகம் : நதியற்ற ஊர் -கார்த்தி டாவின்சி.

   கவிஞர் தினேஷ் பாரதியின் புதிய கவிதைத் தொகுப்பான 'நதியற்ற ஊர்' என்ற நூலின் மூலம் தனது கவிதை பயணத்தில் நம்மையும் இணைத்துக் கொண்டுள்ளார் கவிஞர் தினேஷ் பாரதி.    மொத்தம் முப்பத்தொரு கவிதைகள். இவற்றில் பெரும்பான்மையானவை...

மு.முபாரக் கவிதை

முட்டாள் பைத்தியம் திமிர் பிடித்தவன் சுயநலவாதி தற்பெருமைக்காரன் சோம்பேறி கடன்காரன் கோபக்காரனென எத்தனையோ வார்த்தைகள் இந்த உலகத்தில் புழங்கிக்கொண்டிருக்கிறதென்பது இதுவரை  தெரியவில்லை... அன்பான வார்த்தைகளைத் தவிர வேறெந்த வார்த்தைகளும் பேசத்தெரியாத அம்மாவிற்கு!

2 COMMENTS

  1. “கல்வி என்பது அறிவின் வளர்ச்சியையும், சமூகத்துடன் சமமாக பழகும் குணத்தையும், பகுத்தறிவை வளர்க்கும் இடமாக இல்லாமல் போனதுக்கு தனியார் கல்வி நிறுவனங்களும், பெற்றோர்களின் வெட்டி தற்பெருமையுமே காரணம் என்பதை அரசு பள்ளி மாணவர்களின் பக்கம் நின்று பேசி இருக்கிறார்.” பேச வேண்டியது இதுதான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here