1.சேரி என்றால்
ஊர் என்கிறது பேரகராதி
கிழக்கே தப்பு சத்தம் கேட்குதே
சேரியில் சாவு விழுந்திடுச்சாம்
ஊருக்குள் சொல்கிறார்கள்
2.
எந்த ஊர்?
இன்னாரைத் தெரியுமா?
இன்னார் உங்களுக்கு என்ன வேண்டும்?
நான் இன்னார் என்பதோடும்
அவர் இன்னார் என்பதோடும்
முடிகிறது கேள்வியும் பதிலும்
3.
இன்னசாதியென்கிறபோது
விழும் பார்வையும்
இன்னசாதியென்கிறபோது
கடைசிப் பந்தியில் சாப்பாடும்
இன்னசாதியென்கிறபோது
வாசற்படியோடு முடிகிற பேச்சுமுள்ள ஊரில்
காதில் கேட்கிறது
இப்போதெல்லாம் யாருங்க சாதி பார்க்கிறா!
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

