இரை தேடும் பறவையே
சபிக்காதே
எங்கள் நிலத்தை இழந்து
விட்டோம்
கண்ணீரில் நனைந்து காலம் கடத்துகிறோம்
நிலங்களை விற்றுத் தெருவில் நிற்கிறோம்
நிற்பதற்கு நிழலும் இல்லை
உறங்குவதற்கு வீடும் இல்லை
ஒரு சாண் வயிற்றுக்கு
ஓடித் திரிகிறோம்
கண்ணிருந்தும் குருடரானோம்
எங்களையறியாமலே ஏமாந்தோம்
இரை தேடும் பறவையே
சபிக்காதே
வயல்களில் சிந்தும் உணவைத் தேடி வாருங்கள்
வயிற்றுப் பசி நீங்கி குஞ்சுகளோடு குலாவுங்கள்
குடும்பம் குடும்பமாக குடியிருக்க வாருங்கள்
மழை பொழிந்த நிலத்தில் உண்ட விதைகளைத் தாருங்கள்
நிலமும் செழித்திருக்கையில்
வனமும் பூத்திருக்கையில்
வறுமை நீங்கி வளமும் சேர்ந்திருக்கையில்
வாசலுக்கு வாருங்கள்
உணவும் நீரும் உங்களுக்கு உண்டு.
எழுதியவர்
வ.சு.வசந்தா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
தோழரே! அருமையான படைப்பு
எண்ணத்தில் மட்டுமே வாய்ப்புள்ள
ஈகையின் மிச்சங்கள்
தந்த ஏக்கங்கள்
இயலாமையின் கடுந்துயரங்கள்
படைப்பினூடே வெளிவருகின்றன.
வாழ்த்துக்கள்!