இரக்கமற்றவனின் இதயம்
ஆத்திரக்காரன்.
அவசரக்காரன்.
நயந்து பேசியதில்லை.
பூவாய் புன்னகைத்ததை விட
பட்டாசாய் வெடித்ததே அதிகம்.
எதிர்நிற்பவரின் மனநிலை
குறித்தெல்லாம் கிஞ்சித்தும்
சிந்திப்பதில்லை.
பட்டதைப்பேசிவிடுவான்.
படும்பாடு நமக்குத்தான்.
வற்றிப்போன கிணற்றிலும்
கொஞ்சம் ஈரமிருக்கும்.
இங்கே அதுவுமிருக்காது.
இப்படியெல்லாம்
உருவகப்படுத்தப்பட்ட அவன்தான்
காலுடைந்த நாய்க்குட்டி
தத்தி தத்தி நடப்பதைக்கண்டு
இரவெல்லாம் அழுதவன்.
எழுதியவர்:
கௌ.ஆனந்தபிரபு
திருப்பூர்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.