இரவின் வெளிச்சம் (கவிதை)
இரவின்
மொழியில் …..
ஏதோ எழுதிச் செல்கின்றன
பல வெளிச்சங்கள்.
முக்கு நுனியில்
நைந்த செருப்பை
கோர்த்துக் கொண்டிருந்தார் …
செருப்பின் காதுகளைத் தைக்கும் தொழிலாளி.
இந்த வெளிச்சம் பத்துமா? என்றேன்.
அவரும் நகைத்துக் கொண்டே,
அவனின் வெளிச்சம் மட்டுமே
என்னை வயிறு பிழைக்க வைக்கிறது
என்றார்.
விரித்து பார்த்தேன்.
நிலா….
முகம் காட்டி மறைத்தது.
அவர் அருகில்
நைந்த பத்து ரூபாய் நோட்டின் முகமும்,
அழுக்கு வாசனையும் ….
மலத்திக் கிடத்தியது.
தம்பி….
ஏன் அப்படி பார்க்கிறீர்கள் என்றார்.
உழைத்து சம்பாதித்தது ….
என முகம் பார்த்து சிரித்தார்.
ஏனோ,
என் வெளிச்சம் உலர்ந்து போனது.
இரவில் வெளிச்சம் தேடும்
எவரையும் கடந்து போகாதீர் ,
காதலியுங்கள்.
எழுதியவர் :
இராஜேஷ் சங்கரப்பிள்ளை
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

