இருளுக்குள் ஒளி என்பது வெறும் வெளிச்சம் மட்டுமல்ல
அது நமக்கு ஒரு ஒளியை தருகிறது
ஒரு வழி பாதையை அமைக்கிறது
ஒரு போதனையை தருகிறது
ஒரு ஞானத்தை அளிக்கிறது
ஒளியின்றி இப்பிரபஞ்சம் எப்படி இருக்கும்
ஒளியாலே இப்பிரபஞ்சம் விரிவடைகிறது ..
அதுபோல தான் இந்த கவிதை தொகுப்பும் பல
சிந்தனை ஒளியை நமக்கு வெளிச்சமாய் காட்டுகிறது ..

போதனை செய்த ஞானிகளெல்லாம் புறமுதுகில்
குத்தும் மனிதர்களிடையே வாழவில்லை
அப்படி வாழ்ந்திருந்தால் அவர்கள் போதனைக்கு பதில்
அராஜகத்தையே அப்போது போதித்திருப்பார்கள் ..

உண்மை தான் ..

என் காலணி என் காவலன் என்ற கவிதையில்

“கர்ணன் மகாராஜனின்
கவசகுண்டலம் போல்
எந்த கால்களுக்கு
இணையான தோழா “

என்று கவிதையில் அந்த செயற்கைக் காலுறுப்பை சொல்லியவிதம் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது …

முற்றுபெரும் காதல்

சிறகடிக்கும் என் சிறகொடித்து
சிற்றின்பம் காணும் சிந்தை தான்
உன் காதலென்றால்
காதலிசம் வேண்டாம் எனக்கு
மோதலிசத்துடனே முற்றுப்பெறட்டும் நம் காதல் ..

தன்னை அடிமை படுத்தி புணர்ந்து இச்சைகொள்ளும் காதல் எனக்கு வேண்டாம்
மோதலுடனே பிரிந்தாலும் பரவாயில்லை
என்று தன் தூய காதலையும் தனக்குண்டான சுதந்திரத்தையும் விட்டுவிடாமல் சொல்லியிருக்கிறார் கவிஞர் ..

காலச்சூழல் நிதர்கனக் கவிதையில்

இன்று இருக்கும் நாம்
நாளை இருப்போமா தெரியாது
சிறு சிறு பிரச்சனைகளால் யாரிடமும் பேசாமல் இருக்காதீர்கள்
ஏனென்றால் பேச நினைக்கும் போது நாமும்
இறந்தவர் பட்டியலில்
இணைந்திருக்கலாம் …!

உண்மை தான் சின்ன சின்ன விசயங்களுக்கு கூட சண்ணைடை சச்சரவுகள் என நாம் நமக்கு பிடித்தவர்களிடம் கூட பிரிவினையை நோக்கியே நர்கிறது காலச்சூழல் நிதர்சனம் ..

முதிர்கன்னி கவிதையில்
பார்ப்பவர்கள் கண்களுக்கு
பருவங்கள் விருந்தாவதைத் தடுக்க தாவணிக்கும் வழியின்றி
மார் மறைக்க தாயின் பழைய சேலையைக் கிழித்து
தாவணியாகக் கட்ட ஆரம்பித்து
கண்கள் இரண்டிலும்
கனவுகள் மட்டுமே சுமந்து காலங்கள்
கடந்தோட
மணவிழா காண முடியா மடந்தையாய்
ஜாதகம் சாதகமின்றி சதி செய்ய
உணர்வுகளை உமிழ்நீராய் விழுங்கிக் கொண்டு
அகழிக்குள் சிறைப்பட்ட அகதிகளாய்
ஆரவாரமின்றி அஸ்தமித்துக் கொண்டிருக்கிறோம்
வற்றிய குளத்து மீன்களாய்
கண்ணீருடன் முதிர் கன்னிகள் நாங்கள் ..

முதிர்கன்னிகளாய் வாழ்வது தான் எத்தனை கொடுமை எத்தனை துன்பங்கள் துயரங்கள் அனைத்தையும்
கண்ணிவெடியாய் வெடிக்கின்றன. இவர்களுக்கான காலத்தை யார்தான் கணிப்பார்களோ …!!

தேடல் இனிது

பாரெங்கும் பரபரப்போடு
இயங்கிக் கொண்டிருக்க அவளின் அவனின்
வாழ்க்கைப் பக்கத்தின் சில நிமிடங்களை
நமதாக்கி நம்மோடு இருந்து
உரையாடி உறவாடி
அன்பைப் பரிமாறி
அகத்தில் நிறைந்திருக்கும்
அன்பர்களை தொந்தரவு செய்யாதீர்கள் …

அடடடே என்ன அழகிய காதல்
கண்களின் வழி நுழைந்து இதயத்தில் கலந்து
மனமெங்கும் காதல் சாமரம் வீச கலந்திருக்கும்
அன்பர்களை தொந்தரவு செய்யாதீர்கள்
காதல் வாழ்க ..

இன்னும் நிறைய புத்தகங்களை வெளியிட வாழ்த்துகள் ..

இனிய வாழ்த்துகளுடன்

கவிஞர் ச. இராஜ்குமார்
திருப்பத்தூர் மாவட்டம்

நூலின் பெயர் : இருளுக்குள் ஒளி
நூலாசிரியர் : ரேணுகா ஸ்டாலின்
நூலின் விலை : 110
நூல் பதிப்பு : ஜுன் 2023
வெளியீடு : மஞ்சிகை பதிப்பகம்
நூலை பெற : 9698915212.

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,  கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *