இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு நூலிலிருந்து…
சீர் வாசகர் வட்டம் மூலமாக ஒரு நூற்றாண்டுக் காலத்தில் உருவான ஆயிரக்கணக்கான கதைகள் பற்றிய புரிதல் இல்லாததை ஒரு தொகுப்பாக கொண்டு வந்து , தமிழ்ச் சமூகம் இயங்கிய போக்கின் பல கூறுகளை இக்கதைகள் வழி உணரச் செய்தமைக்கு முதலில் வாழ்த்துக்கள்.
ஒவ்வொரு படைப்பாளியின் சிறந்த கதைகள் , மற்றும் அவர்கள் பற்றிய சிறிய அறிமுகம் ஆகியவற்றை ஒவ்வொரு கதையின் முன்னரும் கொடுத்துள்ளனர்.
பேச்சு மரபு , எழுத்து மரபு என்னும் இரு மரபுகளையும் நீண்ட காலம் உயிரோட்டமாகக் கொண்டிருக்கும் தமிழ் மொழியில் கதை சொல்லல் மரபிற்க்கும் நெடிய தொடர்ச்சி இருப்பது இயல்பு. தமிழ் மரபில் கதை சொல்லும் நிகழ்வு எவ்வாறெல்லாம் கட்டமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது எனும் புரிதல், பிற பண்பாட்டு மரபுகள் தமிழ்க் கதை சொல்லல் மரபோடு எவ்வகையில் தொடர்புடவையாக உருவாயின என அறிதல் , நவீன அச்சுக்கருவி வருகையால் கதை சூழல் மரபு பெற்ற புதிய வடிவம் குறித்த விவரணங்களைக் கண்டறிதல் போன்றவற்றை அடிப்படையாக வைத்து சிறுகதைகள் உருவான விதத்தை கட்டமைக்க முடியும்.
தமிழில் நவீன சிறுகதைகளை முதன் முதலில் உருவாக்கியவராக “புதுமைப்பித்தன்” அமைகிறார். புதுமைப்பித்தன் தமிழில் சிறுகதைகள் முழுமையாக நடைபெற வழிகண்டவர் என்று கூற முடிகிறது. தமிழ்ச் சிறுகதை உருவாக்க வரலாற்றில் புதுமைப்பித்தனைத் தொடர்ந்து அவரது மரபில் உருவான அணியினர் வளமான கதைகளை எழுதியுள்ளனர். கு.அழகிரிசாமி, தொ.மு.சி. ரகுநாதன் , வள்ளிக்கண்ணன் , விந்தன் , ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி கி.ரா என்று அந்த மரபு வளமாக குறிப்பிடப்படுகிறது.

இந்த தொகுப்பு மொத்தம் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சிறுகதையின் வடிவம் நிலைபேறு கொண்ட காலமாக 1930 முதல் 1950 என்ற காலத்தைச் சொல்ல முடியும் . புதுமைப்பித்தன் தொடங்கி சி. சு.செல்லப்பா முடிய உள்ள 20 எழுத்தாள்களின் சிறுகதைகள் பகுதி ஒன்றில் உள்ளது. கதைகளின் தலைப்பைப் பார்த்தாலே கதை என்ன சொல்கிறது என்பதை நம்மால் நினைவு கூற முடியுமளவுக்கு கதை மனதில் நினைவில் இருக்கிறது.
1950 முதல் 70 காலப்பகுதியில் எழுதிய பெரும்பாலான எழுத்தாளர்களின் கதைகள் பகுதி இரண்டில் உள்ளது.
1970 முதல் 80 காலப்பகுதியில் அமைந்த சிறுகதைப் புனைவுகள் பகுதி மூன்றில் உள்ளது. இந்த பகுதியில் புனைவாளர்களின் எண்ணிக்கை கூடி இருப்பதை உணர முடிகிறது. தமிழில் சிறு பத்திரிக்கை மரபின் உச்ச வளர்ச்சி காலம் இது. இந்த காலகட்டத்தில் படைப்பாளிகளை வளர்த்தெடுப்பதற்கான இதழ்களும் , கலை இலக்கிய இயக்கங்களும் வளர்ச்சி பெற்று உள்ளது. தமிழகத்தின் கிராம மனிதர்கள் புனைவுகளில் இடம்பெறத் தொடங்கிய காலம் இது.
1990 முதல் 2000 காலப்பகுதி பகுதி ஐந்தாகும். இந்த பகுதியில் தமிழ் புனைவும் தலித்திய மரபும் என்று சொல்லும் அளவிற்கு ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை தலித் எழுத்து என்னும் அடையாளத்துடன் உருப்பெற்ற காலமாக இந்த காலத்தைச் சொல்லலாம். வட்டார மரபு சார்ந்த புதிய மொழியில் இக்கால கதைகள் உரு பெற்றுள்ளன.
17.09.24 – 31.12.24 வரை இந்த புத்தகத்தை நான் வாசித்து உள்ளேன். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வாழ்வியலைச் சொல்லிச் சென்றது என்றாலும் எழுத்தாளர்களில் பெண்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். எழுத்துலகமும் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு என்றிருந்த காலம் மாறுவதை இந்த புத்தகங்கள் முடியும்பொழுது காண முடிந்தது . அதிலும் பெண்களின் இருப்பு இல்லை என்பது மனதுக்கு வேதனை தந்தது.
காணொளிகளாய் நிரம்பியுள்ள உலகத்தில் சிறுகதைகள் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டும். அதற்கு இதுபோன்ற தொகுப்புகள் கட்டாயம் வெளிவர வேண்டும் . வாசித்ததில் மகிழ்ச்சி.
21- ம் நூற்றாண்டுச் சிறுகதைகளில் சரிக்கு சமமாக பெண்களின் சிறுகதைகளும், ஆழ் உணர்வுகளை வெளிக்கொணர வேண்டும் .
நூலின் தகவல்கள்:
புத்தகத்தின் பெயர் : இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு
தொகுப்பு ஆசிரியர் : வீ.அரசு
தலைப்பு : சிறுகதைகள்
பக்கங்கள் : 1064
விலை : 500
நூல் அறிமுகம் எழுதியவர்:

✍️பா விமலா தேவி
பட்டுக்கோட்டை
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

