இறுதி நாயகர்கள் - நூல் அறிமுகம் ,  பி. சாய்நாத் - பாரதி புத்தகாலயம் | Iruthi nayakargal Book review tamil - publiced by Bharathiputhakalayam - https://bookday.in/

இறுதி நாயகர்கள் – நூல் அறிமுகம்

 இறுதி நாயகர்கள் – நூல் அறிமுகம்

நூலின் தகவல்கள் 

நூல்: இறுதி நாயகர்கள்

ஆசிரியர் :  பி. சாய்நாத்

தமிழில் : ராஜசங்கீதன்

பதிப்பகம்: பாரதி புத்தகாலயம் 

விலை: ரூ.290

நூலைப் பெற :   44 2433 2924

 

“புத்தகத்தில் உலகைப் படிப்போம், உலகத்தையே புத்தகமாய்ப் படிப்போம்” என்றார் முத்தமிழறிஞர் கலைஞர். அப்படி சுயமரியாதை-சமத்துவம்-சமூக நீதி நிரம்பிய உலகைப் படிக்க, படைக்க அவசியமான புத்தகங்களை வாரந்தோறும் அறிமுகம் செய்கிறது இந்தப் பகுதி… இந்தியாவின் வெகுமக்கள் இயக்கங்கள் என்று எடுத்துக்கொண்டால், ‘தேசிய இயக்கம்’, ‘கம்யூனிச இயக்கம்’,தலித் இயக்கம்’, ‘திராவிட இயக்கம்’ என்று வகைப்படுத்தலாம். இந்த இயக்கங்களின் வரலாறு எழுதப்படும்போது, அவ்வியக்கங்களின் முக்கியமான முகங்களே முதன்மைப் படுத்தப்படுவர். ‘தேசிய இயக்கம்’ என்றால், காந்தி, நேரு, படேல், போஸ். ‘கம்யூனிச இயக்கம்’ என்றால் எம்.என்.ராய், அபானி முகர்ஜி, சிங்காரவேலர் போன்றவர்கள், ‘தலித் இயக்கம்’ என்றால், அம்பேத்கர், கன்ஷி ராம் போன்றவர்கள் என்பதே வழக்கமாக இருந்து வருகிறது. இப்படியான மைய நீரோட்ட வரலாற்று எழுத்துக்களில் இருந்து, சற்று விலகி புதிய வரலாற்று எழுத்துக்கள் அவ்வப்போது எழுதப்படுவதுண்டு.

அவை இந்த இயக்கங்களில்பங்கேற்ற விளிம்புநிலை மக்களின் வாழ்வியலைக் குறித்துப் பேசும். குறிப்பாக பெண்கள், பிறப்படுத்தப்பட்டோர். ஒடுக்கப்பட்டோர் ஆகியோரைச் சொல்லலாம். அப்படி இந்திய தேசிய இயக்கத்தில் பங்கேற்ற முகம் தெரியாத முகங்களைப் பற்றி பேசும் நூல்தான் ஊடகர் பி.சாய்நாத் எழுதி சமீபத்தில் வெளியாகி இருக்கும் “THE LAST HEROES FOOT SOLDIERS OF INDIANFREEDOM”. ராஜ சங்கீதன் மொழிபெயர்ப்பில், பாரதி புத்தகாலயம்  இந்நூலை தமிழில் வெளியிட்டுள்ளது. வெகுமக்கள் இயக்கத்தின் மூலக்கல்லாக இருந்த எளிய மக்களைத்தான், அவ்வியக்கத்தின் இறுதி நாயகர்கள் என்கிறார் சாய்நாத்.

இறுதி நாயகர்கள் - நூல் அறிமுகம் ,  பி. சாய்நாத் - பாரதி புத்தகாலயம் | Iruthi nayakargal Book review tamil - publiced by Bharathiputhakalayam - https://bookday.in/
   பி. சாய்நாத் எழுதிய “THE LAST HEROES FOOT SOLDIERS OF INDIAN FREEDOM”

இந்திய விடுதலைக்காக களத்தில் போராடி சிறைசென்ற சங்கரைய்யா, நல்லகண்ணு உள்ளிட்ட 15 பேரின் வாழ்க்கை இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நூலில் இடம்பெற்ற ஒரு சிலரைத் தவிர, பெரும்பா லான விடுதலை போராட்ட வீரர்கள் மறைவெய்திவிட்டனர். அவர்களில் பலர் தங்களின் வாழ் நாளில் ஒருமுறை கூட விடுதலைப் போராட்ட வீரருக்கான ஓய்வூதியம் வாங்காதவர்கள். காரணம், இந்திய அரசின் விதிமுறைகளின்படி அவர்கள் செய்த போராட்டமெல்லாம் விடுதலைப் போராட்டம் என்ற வரையறைக்குள் அடங்காது என்பதால். ஒரு விடுதலைப் போராட்ட வீரருக்கும் அவரது 20 சகாக்களுக்கும் சமைத்துப் போடும் அந்த பெண் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர் தானே? யார் ஒருவரையும் கொல்லாமல், காட்டில் பதுங்கி இந்திய தேசிய ராணுவத்திற்கு (INA) உளவு வேலை பார்க்கும் ஒருவர் விடுதலைப் போராட்ட வீரர் தானே? உள்நாட்டிலுள்ள சாதி மற்றும் வர்க்கப் பாகு பாடுகளுக்கு எதிராகக் குரல் எழுப்பியவர்களும் நிலவு டைமை ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர்களும் இந்தியாவின் சமூக விடுதலை யைப் பேசிய விடுதலைப் போராட்ட வீரர் தானே?

இப்படி இதுவரை பெரிதாகக் கேள்விப்படாத மற்றும் பேசப்படாத பகுதிகள் மீது இந்நூல் கவனம் குவிக்கிறது. பி.சாய்நாத் தேசிய விடுதலை இயக்கத்தை போலவே, அனைத்து வெகுஜன இயக்கங்களுக்கும் இதுபோன்ற விளிம்புநிலையினர்தான் ஆதாரமாக இருந்துள்ளனர். அவர்களுடைய வரலாறும் பதிவு செய்ய படவேண்டும் என்பதைத்தான் இந்நூல் அழுத்தமாக சுட்டிக்காட்டுகிறது. இறுதி நாயகர்களை, கதாநாயகர்களாக வர்ணிக்கும் இந்தப் புத்தகம் அவசியம் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று. …வாசிப்போம்.

நூல் அறிமுகம் எழுதியவர் :

கௌதம் ராஜ்

நன்றி
முரசொலி நாளிதழ்

 இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *