இந்த நூலை வாங்க மறவாதீர்கள். அப்பப்பா எவ்வளவு சுதந்திரப் புதையல்கள் உள்ளே கொட்டி கிடக்கிறது! முற்றிலும் புதுமையான விஷயங்கள். வாய்ப்பை நழுவ விடாதீர்கள் தோழர்களே.

புத்தகம் வாங்குவதற்கான thamizhbooks.com முகவரியை மேலே கொடுத்திருக்கிறேன். உடனே பதிவு செய்ய வேண்டுகிறேன்.

ஒன்றரை வயது குழந்தை ஒன்பது மாத சிறைச்சாலையில் இருந்த வரலாறு, காவல்துறையில் இருக்கிற துப்பாக்கிகளை எடுப்பதற்கு போலி கணவனாக, சகோதரனாக நடிப்பில் அசத்தி காவல் நிலையத்திற்கு முன்பாக குடிகார கணவன் மனைவியை அடிப்பது போன்ற நாடகத்தில் இறுதியாக மனைவியை கொன்று விடுவதற்கு கல்லை எடுக்கிறார் போலி கணவர். மிரண்ட காவல்துறை வெளியே வர அங்கே இருந்த துப்பாக்கிகள், ரவைகள் களவாடப்படுகிறது. அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர் 17 வயது ‘ஹௌசாபாய் பாடில்’ அவர்கள். அவர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர். 2017ல் அவருக்கு 91வயது. பிறந்தக் குழந்தையை வேறு ஒருவரிடம் விட்டுவிட்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தவர். போலிக் கணவனாக நடித்தவர் உண்மையாகவே அவரை அடித்து விடுகிறார்.

இதுபோல் ஏராளம் ஏராளமான சுதந்திரப் போராட்ட வரலாறுகள் கொட்டிக் கிடக்கிறது இந்நூலில். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான அளவீடுகள் என்னென்ன என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணைகளை பார்க்கும் போது சுதந்திரப் போராட்ட வீரர்களை எவ்வளவு கொச்சைப்படுத்த முடியுமோ அவ்வளவு கொச்சைப்படுத்தி இருக்கிறார்களே அவ்வாணையில் என்று கோபம் தான் வந்தது. 49பக்கம் தான் கடந்திருக்கிறேன். அதற்குள் இவ்வளவு பொக்கிஷங்கள். இன்னும் முழு புத்தக 296 பக்கங்களில் எவ்வளவு தகவல் களஞ்சியங்கள் கொட்டிக் கிடக்குமோ. பிரதிக்கு முந்துங்கள் தோழர்களே!

 

                        நூலின் தகவல்கள் 

நூல் : “இறுதி நாயகர்கள்”

நூலாசிரியர்  : பி. சாய்நாத்

பதிப்பகம் :  பாரதி புத்தகாலயம்

நூலைப்  பெற : 44 2433 2924 https://thamizhbooks.com/product/iruthi-nayakargal/

விலை : 290.00

பக்கங்கள் : 296

 

               நூலறிமுகம் எழுதியவர் 

               இரா சண்முகசாமி

 


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *