ஓ… பரமேஸ்வரா!
எவ்வளவு மிருகத்தனமாக காலில் போட்டு மிதிக்கிறது எங்களை
உன்னுடைய வரலாறு.
பார், எங்களுடைய முகங்களைப் பார்
பசியின் தாக்குதலின் அடையாளம்
தெளிவாக காண்பிக்கும் உனக்கு
எங்களின் முதுகைத் தடவினால்
கருவேல முட்களால் உன்னுடைய இரண்டு
கைப்பிடியளவு நிறையும்
எங்களுடைய வீங்கிப்போன தோள்களைத் தொடு
காளை மாடுகளின் பழுத்த கழுத்தின் வலியை
இலகுவாக உணர்த்தும் உனக்கு.
எங்களின் காலனியில்
இருமிச் சுமை சுமக்கிற
பிணங்களைப் பார்
உயிர் வாழ்வதின் சாகசம் மட்டுமே!
தொலைந்து போவாய் நீ.
நாங்கள் மறுபடியும் வாழ்கிறோம்
மற்றும் நீ! மெளனமாய் இருக்கிறாய்
ஊமை போல மெளனமாய்.
சைத்தானுடயது தான் வழித்தோன்றலாக இருக்கிறது
அதை நாங்கள் அடக்கி ஆள
புரிந்து
பூஜை செய்து கொண்டிருக்கிறோம்
வாழ்வு முழுவதின்
கொடூரமான காயத்தின் பதில்
உள்ளங்கையின்
கிடைமட்ட ச் சாய்ந்த கோடுகளிலிருந்து புரிந்து வைத்துக் கொள்ளுங்கள்
சக்கரதாரி!
விரும்பியும்
நாங்கள்
விரும்பாமல் பெறுகிறோம் உன்னை
ஏனென்றால் எங்களுடைய கிராமத்துத் தலைவனின் தோற்றம்
சற்றும் வித்தியாசமில்லாத
உன்னுடைய
தோற்றத்திலிருந்து கிடைக்கிறது
மற்றும்
உன்னால் உருவாக்கப்பட்ட பெண்கள்
நகரின் மிக ஆடம்பரமானவர்களாக ஆவதாக
காண்பிக்கப்படுகிறார்கள் எங்களுக்கு.
உன்னுடைய காலடிகளில்
தலை வைக்க யோசிக்கிறோம்
உன்னுடைய பூமியில் புதைக்கப்பட்ட தடித்த லிங்கம்
மூத்தவர் ஏகல்யாவின் வெட்டப்பட்ட பெருவிரலாக
தெரிகிறது எங்களுக்கு.
உன்னுடைய முற்றத்தில்
சுற்றி அலைகிற கூட்டம்
மூதாதையர்களின்
புகையும் சிதையினை
நினைவுபடுத்துகின்றது
மற்றும் உன்னுடைய
பாதி பானை போன்ற யோனி மீது
சிதறிய சிவப்பு ரோஜா நிற இதழ்கள்
அழுகிற கண்களிலிருந்து
பிடுங்கிய
கனவுகளாகத் தோன்றுகின்றன.
லீலாதரா.!
நாங்கள் எங்கே நின்று இருக்கிறோம் அங்கே
ஒவ்வொரு பக்கம் வேட்டையாடுபவர்களின்
குடியிருப்புகள் தாம் இருக்கின்றன
பூமியிலிருந்து ஆகாயம் வரை
வானவில் வலைகளை விரித்திருக்கிறார்கள் அவர்கள்
சமதளமான நிலத்தைத்
தோண்டித் தோண்டி
முரட்டுத்தனமாக ஆக்கி இருக்கின்றன பன்றிகள்
வேர்களில் விஷம் , இருதயங்களில் வெறுப்பு
காற்றில் துப்பாக்கிக் குண்டுகளை விதைத்தனர் அயோக்கியர்கள்
வில்லாளி!
நாளை அயோக்கியர்களோடு,
நிகழும் இறுதிப் போரில்
நீ எங்களுடைய தேரோட்டியாக இருக்கமாட்டாய்
மற்றும் முழு போரில்
நாங்கள் எங்களுடைய புஜங்களால் மட்டுமே
வெற்றி பெறுவோம் என்பதை
இன்று அறிந்தோம்
நன்றாக அறிந்து இருக்கின்றோம்.iruthgippor
ஹிந்தியில் : மல்கான் சிங்
தமிழில் : வசந்ததீபன்