புத்தக அறிமுகம்: எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் “இருட்டு எனக்குப் பிடிக்கும்” – R. சாஹிதா ரஹீம்

புத்தக அறிமுகம்: எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் “இருட்டு எனக்குப் பிடிக்கும்” – R. சாஹிதா ரஹீம்

நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பல விதமான  சூழ்நிலைகள், விமர்சனங்கள், பிரச்னைகள், போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கும் இந்த நூல் பதிலடி கொடுத்து இருக்கு…!
மிக எளிமையாக எட்டு தலைப்பின் கீழ் ஓரு விவாதத்தையே முன் வைத்துள்ளார்…!
அதே சமயம் நம்மையும் சிந்திக்க வைத்துள்ளார்…
1.உனக்கு மூளை இருக்கா? இது தாங்க முதல் தலைப்பே…
பொதுவா நம்மள இப்படி கேட்ட சட்டென்று கோவம் வரும் ஆனா ,அது யார் கேக்குராங்கன்னு ஒன்னு இருக்குல்ல… இந்த தலைப்பில் மூளை மூளை னு பல தடவை பயன்படுத்தி இருப்பாங்க , அது என்ன உடல் உருப்பா? அது எப்படி வளரும் ? என்ற பல கேள்விக்கு இந்த நூல் ல விடை இருக்கு… அதே போல நமக்கும், மிருகத்திற்கும் எப்படி வேறுபாடு அடைஞ்சோம் என்ற விளக்கத்தையும் கொடுத்து இருக்காங்க…
முக்கியமான ஒரு விஷயம் எல்லாருக்கும் ஒன்னுலேர்ந்து ஒண்ணரை கிலோ வரைக்கும் தான் மூளையோட அளவு இருக்கும்,எல்லாரும் பிறக்கும் போதே அறிவாளி ஆகுறது இல்லை , அவங்க வாழ்க்கை ல விடா முயற்சி, கடின உழைப்பு, முழு ஈடுபாடு , போன்ற செயல்களை செய்து தனக்கென ஒரு இடத்தை பிடிக்கிறாங்க….
நீங்க என்ன பண்ண போறீங்க மூளையை கூர்மை படுத்தி அறிவாளி ஆக போறீங்களா? இல்லை தூங்க வச்சி தாலாட்டு பாட போறீங்களா?…
2.சமைப்பது யாருடைய வேலை?
அட அது என்னங்க கேள்வி பெண்களோடதது தான்…  இதை தான் நூல் ஆசிரியர் மாற்ற வேண்டும் என எண்ணுகிறார்…!
சமைக்க தெரியாமல் இருப்பது ஆண்களுக்கு கேவலம் என்றும்…
பெண்களுக்கு துணையாய் வேலையை பிரித்து, அவர்களின் சுமையைக் குறைத்து  சரி சமமாய் மாற்ற ஆசைப்படுகிறார்…
நீங்க என்ன பண்ண போறீங்க? உதவி செய்வீங்களா!?
3.நீங்க என்ன சாதி?
உலகத்தில் பல சாதி இருக்கு, பறவை,மிருகம்,ஊர்ந்து செல்லும் சாதி,நீந்தி வாழும் சாதி,பூச்சி அப்புறம் நம்ம மனித சாதி…. பறவை ல , குரங்கு ல, நாய்கள் ல பல வகைகள் இருக்கு அதனால அதுல சாதி இருக்கலாம்…
ஆனால் மனிதனை எடுத்து கொண்டால் கை, கால், னு எல்லா உறுப்பும் ஒரே மாதிரி தான், வேணும்னா அமெரிக்கா ல வெள்ளையா இருப்பாங்க அதனால வெள்ளை இனம் னு சொல்லாம்,நீக்ரோ ல கருப்பு இப்படி கருப்பு இனம் னு பிரிக்கலாம்… அதுவும் அறிவியல் பூர்வமா இல்லை… அப்புறம் எங்கேந்து வருது இந்த சாதி…
இன்னும் ஆராய்ந்து பார்த்தால் கீழ் சாதி, மேல் சாதி…
யோவ்… நம்ம தாத்தா பேர் கேட்ட சொல்லுவோம்,தாத்தாவோட தாத்தா பேர் கேட்ட சொல்ல மாட்டோம்…
மனிதன் குரங்கிலிருந்து தான் வந்தான் எல்லாருக்கும் தெரியும்…. அப்போ நம்ம தாத்தாக்கள் குரங்கு னு சொல்லிட்டு போங்க…
உலகத்தில் தேவையான இரண்டு சாதி, அது அறிவாளியா?முட்டாளா?ன்ற சாதி…
நீங்க எப்படி?…
Loyola College
4.கண்ணாடி முன்னால் நில்லுங்கள் : கண்ணாடியில் பார்த்து ரசிப்பது அல்ல அழகு… மேலும் விளம்பரங்களில் வருவதை பார்த்து வீட்டில் அடம் பிடித்து வாங்கும் பொருளல்ல அழகு….
நல்ல உழைப்பு,நல்ல படிப்பு,நல்ல பழக்கம், அன்பான பேச்சு….இதுவே சிறந்த அழகு…
அதுவே உங்களை பெருமை சேர்க்கும்…
5.கொஞ்சம் வரலாறு : இந்த மன்னன் இதை கட்டினான், இந்த அரசர் இதை செய்தார்.. உண்மையில் இதெல்லாம் செய்தது யார்? மன்னரா? இல்லை மக்கள் தான்…
காட்டு மிரண்டி காலம் முதல் இரும்பு காலம் ஒரு அலசல்…
பாலும் டிகாஷன் அட இந்திய,அமெரிக்கா கலர் அந்த ஆட்சி ஒரு பார்வை….
6.சாமி கண்ணை குத்திடும் : இதெல்லாம் சின்ன வயதிலேயே சொன்னா எல்லாரும் நம்புவோம், பாம்பு பால் குடிக்கும்,பாம்பு டான்ஸ், வெள்ளியும்,செவ்வாய் கிழமை நல்ல நாள் னு மத்த நாளெல்லாம் ஒர்ஸ்ட்.. ,ஜாதகம், ஜோசியம்,கிரங்கள், பால் வடியும் பிள்ளையார், போன்ற சில மூட நம்பிக்கை வைத்து அலைகிறார்கள்… பூனை குறுக்க வந்தா சகுனம் சரியில்லை.. போல பல வகையான காரியங்களை சொல்லி புரிய வைப்போம்… சுய சிந்தனையை பயன்படுத்துவோம்…
7.கொஞ்சம் புவியியல் : இந்த தலைப்பில் அருமையான தகவல்களை சொல்லிருக்கிறார்… என்னையே அந்த புவிக்குள் நுழைத்து சென்றுவிட்டார்…
மாணவர்களுக்கான பயனுள்ள பதிவு…
8.இருட்டு எனக்கு பிடிக்கும்… எனக்கும் ரொம்ப பிடிக்கும்… இருட்டின் அழகை ரசிக்கும் படி சொல்லிருக்கிறார்…
இந்த நூலில் பல தகவல்கள் மாணவர்களுக்கு மட்டும் அல்ல எல்லாருக்குமானவை…
நிச்சயம் இருட்டு உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்…
இருட்டை பற்றி என்னோட வரிகள்:
“Our life begins in the darkness of mother’s womb,
And it ends in the darkness of coffin box,
So don’t get scary about the dark,
Let’s enjoy and cherishes the beauty of it,
I wish you all to understand the secret of dark;
And  that’s y I love to be in the dark;”
வாசியுங்கள்… நேசியுங்கள்…
வாசிப்போம்… பகிருவோம்…
R. சாஹிதா ரஹீம்
இருட்டு எனக்குப் பிடிக்கும் (ச ...
நூல் : இருட்டு எனக்குப் பிடிக்கும்…
ஆசிரியர் : ச. தமிழ்ச்செல்வன்
வெளியீடு: வாசல் பதிப்பகம்
விலை: ரூ.66
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *