இந்தியா அறிவியலா? பாரத அறிவியலா..? | இயற்பியல் | இந்தியா | எடிங்டன் | Ayesha Era Natarasan | https://bookday.in/

இந்தியா அறிவியலா? பாரத அறிவியலா..?

 

இந்தியா அறிவியலா? பாரத அறிவியலா..?

பாரதமா இந்தியாவா?

இந்திய தேசிய பாட நூல் கழகம் இப்போது அவசரம் அவசரமாக மத்திய அரசினுடைய பள்ளி பாடபுத்தகங்களில் இருந்து இந்தியா என்கிற பெயரை எடுத்து விட்டு பாரதம் என்கிற பெயரை திணித்துக்கொண்டிருக்கிறது. தேர்தல் முடிந்து ஒரு முறை கூட இன்னும் பாராளுமன்றம் கூடாத நிலையில் இந்த வேலைகள் எப்போது தொடங்கின என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

நாடு எந்தப் பெயரில் இருந்தால் என்ன? பாரதம் என்றாலும் இந்தியா என்றாலும் ஒன்று தான் என்று வழக்கம் போல் சமரசவாதிகள் குரல் எழுப்புகிறார்கள். இந்திய அறிவியலும் பாரத அறிவியலும் ஒன்றா? வெறும் தேசத்தின் பெயர் மாற்றம் மட்டுமா நடந்து கொண்டிருப்பது? அறிவியலின் இந்தியமயமாக்குதல் என்பதும் பாரதமயமாக்குதல் என்பதும்…உலக அறிவியல்மயமாக்குதல் என்பதற்கு இணையாகுமா? என்று நாம் சிந்திக்கவேண்டியிருக்கிறது…

எடிங்டன் எனும் முன் உதாரணம்

இதை நாம் உலக அளவில் 100 ஆண்டுகளுக்கு முன் நடந்த அனைத்தையும் குறித்த அறிவியல் கோட்பாடு என்கிற ஒரு சம்பவத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியும். அனைத்தை குறித்த அறிவியல் கோட்பாடு என்பது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்,மேக்ஸ்பிளாக் மற்றும் பிறரோடு இணைந்து இயற்பியலின் பூரிப்பு  என்று அழைக்கப்படுகின்ற ஒரு காலத்தை நிர்மாணித்து ஒரு நூற்றாண்டு ஆகிறது.

உதாரணமாக  ஆர்தர் எடிங்டன் நீங்கள் கேள்விப்படாத ஆனால் அதேசமயத்தில் மிகப் பெரியவிஞ்ஞானி. இந்தவானியலாளர் ஐன்ஸ்டீன் ஆய்வு சார்புக்கொள்கையை 1919ல் ஒரு சூரிய கிரகணத்தின் போது நிரூபித்து காட்டியவர் என்பதை உலகம் பதிவு செய்துவைத்திருக்கிறது. ஐன்ஸ்டீனே சூப்பர்ஸ்டார் ஆவதற்கு எடிங்டன் ஒரு முக்கியகாரணம்.

இந்தியா அறிவியலா? பாரத அறிவியலா..? | இயற்பியல் | இந்தியா | எடிங்டன் | Ayesha Era Natarasan | https://bookday.in/

எடிங்டன் ஒரு அடிப்படை எண் கணித கோட்பாட்டில் [நியூமராலஜி] தீவிர நாட்டம் காரணமாக இன்றைக்கு தெளிவற்ற நிலையில் ஒதுக்கப்பட்டுவிட்டார்.
அவர்  எண்களின் மகிமை பற்றி விசித்திரமான ஆர்வம் கொண்டிருந்தார். மரணத்திற்கு பின் என்ன நடக்கின்றது என்பது குறித்த நம்பமுடியாத சில விஷயங்களை அவர் வெளியிட்டுக் கொண்டிருந்தார். ஒரு எண் மற்றும் நிகழ்வுகளுக்கு இடையே உள்ள மாய உறவில் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். சில எண்களின் சக்தியில் அவருடைய விசித்திர ஆர்வம் மற்ற விஞ்ஞானிகளால் கேலிசெய்யப்பட்டது. மேலும் பல குறிப்பிடத்தக்க வானியல் வல்லுநர்கள் சுட்டிகாட்டியபடி அது வெளியிடப்பட்டதிலிருந்து எந்த மதிப்பையும் உருவாக்கவில்லை. எடிங்டன் விரைவில் மறக்கப்பட்டார். இந்த நிலை தான் இன்றைய வேதகால இயற்பியல் பாடபுத்தகம் எழுதிக் கொண்டிருக்கும் நம்முடைய தேசிய கல்விகொள்கை புலிகளான பேராசிரியர்களுக்கும் நடக்கும்.

இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவை நோக்கி சென்ற அறிவியலின் மையம்.

நான் எதற்காக இதை குறிப்பிடுகிறேன்? இந்த நிலை பிரமிக்க வைக்கும். இறுதி தோல்வியாக பார்க்கப்படுகிறது. நீங்கள் குறிதவறி நோக்கம் இழந்து நம்பிக்கைவாத அறிவியலுக்குள் நுழையும் பொழுது என்ன ஆவீர்கள் என்பதற்கு சக்திவாய்ந்த எச்சரிக்கையாக ஆர்தர் எடிங்டனின் வாழ்க்கையை சொல்லலாம். அது இங்கிலாந்தில் பல சந்ததியினரை இயற்பியல் துறையை விட்டே  விரட்டியது. அறிவியல் ஆய்வின்மையத்தையே இது போன்ற செயல்கள் இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு இடம் மாற்றின என்பது வரலாறு.

இந்தியா மாதிரியான ஒரு நாட்டில் மத்திய அரசு எண்ணி எண்ணி ஆய்வுகளுக்கு செலவுசெய்கின்ற. ஒரு மோசமான காலகட்டத்தை நாம் கடந்து கொண்டிருக்கும் பொழுது கடந்த பத்தாண்டுகளில் நம்முடைய பல ஆய்வுகள் நிறுத்தப்பட்டுவிட்டன என்கின்ற கசப்பான உண்மையோடு அதன் பின்னணியில் இருந்து பார்க்கிற பொழுது நம்முடைய இளைஞர்கள் இன்று கல்லூரியில் இயற்பியல் கற்பது என்பதே குதிரைக்கொம்பாக இருக்கிறது. ஏற்கனவே பல கல்லூரிகளில் கணித துறையே மூடப்படும் அவலம் இந்தியாவிலிருந்து.

ஒரு காலகட்டத்தில் உருவாகி பெரிய எழுச்சிபெற்ற ஒரு இயற்பியல் சுனாமி இன்றைக்கு வீசுவதாக தெரியவில்லை..ராக்கெட் விடுவதை தவிர வேறுஎதையுமே அறிவியல் சாதனையாக கருதாத ஒரு ஆபத்தான போக்கிற்கு நாம் சென்று விட்டோம். கோட்பாடு ரீதியிலான ஆய்வுகளுக்கு நிதி ஆதாரமின்றி டாட்டா அறிவியல் தொழில் நுட்பமையம் உட்பட பல அறிவியல் ஆய்வகங்கள் இன்று தங்கள் முக்கியத்துவத்தை இழந்துவிட்டன என்பது மிக துயரமான உண்மையாகும்.

சர்வதேச ஆய்வுமையங்களில் அண்டார்ட்டிகா உட்பட செயல்பட்டுக்கொண்டிருக்கும் இந்தியாவினுடைய ஒத்துழைப்பு நிதி ஒதுக்கீடு மேலும் மேலும் குறைந்து வந்து தற்போது மோசமான நிலையை எட்டிவிட்டதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்ற.  இந்தியா என்கிற பெயரை எடுத்து விட்டு பாரத் என்று மாற்றிவிட்டால் உலக அறிவியல் அரங்கில் இடம் பெற்று விட முடியுமா?

இன்றைய உலக அறிவியலின் சவால்கள்.

இன்று இரண்டு அற்புத சவால்களை நவீன இயற்பியல் தன்னகத்தே கொண்டுள்ளது.

1. இயற்பியல் முன்வைத்திருக்ககூடிய உலக அளவிலான நான்கு விசைகளையும் [ஈர்ப்புவிசை, மெல்லிய, அணுவிசை, தீவிரஅணுவிசை, மற்றும்மின்னணுவிசை.] ஒன்றினைக்கின்ற ஒற்றை சமன்பாடு தேவை

2. வழக்கமாய் நாம் சொல்லகூடிய ஐன்ஸ்டீன் சார் புதத்துவத்தை குவாண்டம் உலகோடு இணைக்கின்ற ஒரு இணைவு கோட்பாடு அது. ஸ்டீபன் ஹாக்கின்ஸ் சொல்வதை போல ஸ்ட்ரிங்தியரினுடைய எம்கோட்பாடாகவும் இருக்கலாம். ஆனால் அதை இந்த நூற்றாண்டின் முதல் 50 ஆண்டுகளுக்குள் நிறுவ வேண்டிய கட்டாயம்  இயற்பியலாளர்கள்க்கு உள்ளது.

இயற்பியல் மட்டுமல்ல வேதியியலில் இன்று பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக புதிய உலகை அடைவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அதே போல உயிரியல் துறையை தட்பவெட்ப மாறுதல் துறையோடு இணைக்க பலவகை முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால் நம்முடைய இந்தியாவிலிருந்து ஜெயந்த்நர்லிகர் யூ ஆர்ராவ் போன்ற அறிஞர்கள் அயல் நாடுகளுக்கு சென்று உழைக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர் என்பதே எதார்த்தம் ஆகும்.

இந்த பின்னணி எதுவும் தெரியாமல் அது குறித்த எந்த கவலையும் இல்லாமல் இருப்பது என்பது நம்முடைய இந்திய பல்கலைக்கழக பேராசிரியர்களின் இயல்பாக நான் எடுத்துக்கொள்கிறேன்.  இந்த சூரணை இல்லாவிட்டாலும் பரவாயில்லை யூஜிசியே நம்கையை விட்டு போய்விட்டது. புதிய கல்விக்கொள்கை என்கிற பெயரில் ஆதிகால வேதகால இயற்பியல் பாடபுத்தகத்தை எழுதும் அளவிற்கு பல நூற்றாண்டுகள் பின்னுக்கு செல்வது மிகுந்த வேதனை தரக்கூடிய இன்றைய எதார்த்தம்.

நடப்பது பெயர் மாற்றம் மட்டுமா ?

தேசிய பாட புத்தககுழு என்சிஇஆர்டி புத்தகங்களை வேதகால இயற்பியல் வேதியியல் உயிரியல் பாடங்களாக மாற்றிடார். வினியத்துக்கு பதிலாக தசாவதாரத்தையும் இயந்திர பொறியியல்லுக்கு பதிலாக புராதனகாலத்து கற்பனை வானூர்திகளையும் வேதி அட்டவணையை எடுத்துவிட்டு வேதகால அக்னிகுண்ட பொருட்களையும் திணித்து சமஸ்கிருதமயமாக்குதல் கல்வியா என்பது தான் கேள்வி.

இந்தியா அறிவியலா? பாரத அறிவியலா..? | இயற்பியல் | இந்தியா | எடிங்டன் | Ayesha Era Natarasan | https://bookday.in/

இப்படி  உருவாகி கொண்டிருக்கின்ற இன்றைய சூழலை நினைக்கும் பொழுது அவற்றைகற்கக்கூடிய புதிய தலை முறை  எந்த அளவிற்கு உலக அறிவியலின் அடிப்படைகளை உள்வாங்கிக்கொள்ளும் என்பதில் மிகப்பெரிய அச்சம் நமக்கு ஏற்படுகிறது. எனவே இந்தியா என்பதை பாரதம் என்று மாற்றுவது மட்டுமே அல்லபிரச்சனை சத்தமின்றி சந்தடிஇன்றி நுழைந்து கொண்டிருக்கும் இந்த காவிகொடுமையை மாநில அரசுகள் என்ன செய்யப்போகின்றன?

 

இந்தியா அறிவியலா? பாரத அறிவியலா..? | இயற்பியல் | இந்தியா | எடிங்டன் | Ayesha Era Natarasan | https://bookday.in/

நம்முடைய மாணவர்களை ஒருகாலத்தில் அறிவியலை நோக்கி ஈர்த்து வந்த பிரம்மாண்ட ஹோமிபாபா  சர்சி.வி.ராமன் , சத்யேந்திரநாத் போஸ், மேக்நாத்சாஹா, விக்ரம் சாராபாய் என்கிற சகாப்தம் விட்டுச்சென்ற வரலாறு நம்மை கைகொட்டி சிரிக்கிறது என்பதே உண்மை..

 

நன்றி 

இந்து தமிழ் திசை

கட்டுரையாளர் : 

இந்தியா அறிவியலா? பாரத அறிவியலா..? | இயற்பியல் | இந்தியா | எடிங்டன் | Ayesha Era Natarasan | https://bookday.in/

ஆயிஷா இரா.நடராசன்

 



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 3 Comments

3 Comments

  1. N. Mani

    ஆயிஷா நடராசன் எழுதிய “இந்தியா அறிவியலா? பாரத அறிவியலா..?” என்ற கட்டுரை எளிய தலைப்பு. அதற்குள் ஆழமான வேறுபாடுகளை எப்படி உள்ளடக்கியது என்பதை விளக்கும் கட்டுரை. சிந்தனையைத் தூண்டும் கட்டுரை. கட்டுரை முழுவதும் ஆயிஷா அவர்கள் வெளிப்படுத்தும் கருத்துகள் நுட்பமானது.‌ ஆழமானது.

    ஆயிஷா நடராசன் இந்தியா என்ற பெயரை மாற்றி பாரதமாக்கும் முயற்சியின் அறிவியல் மற்றும் கல்வி துறைகளில் ஏற்படும் தாக்கங்களை உரிய வரலாற்று ஆதாரங்கள் மற்றும் தற்போதைய நிகழ்வுப் போக்குகளுடன் ஒருங்கிணைத்து எடுத்துரைக்கிறார். ஆர்தர் எடிங்டன் போன்ற விஞ்ஞானிகளின் வரலாற்று உதாரணங்கள் மூலம், இன்று அறிவியலின் மறுமுகமாக்கலால் ஏற்படும் அபாயங்களை வலுவாக பதிவு செய்கிறார்.

    ஆயிஷா நடராசன் குறிப்பிடும் அறிஞர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் வரலாற்று தகவல்கள், அவரது கட்டுரையை மேலும் பலப்படுத்துகின்றன. குறிப்பாக, ஹோமி பாபா, சி.வி. ராமன், சத்யேந்திரநாத் போஸ் போன்ற அறிவியல் முன்னோடிகள் குறித்த அவர் கொண்டுவரும் வரலாற்று விவரங்கள், இன்றைய கல்வி மற்றும் அறிவியல் நிலையுடன் ஒப்பிடும்போது, ஒரு சிந்தனையைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

    ஆயிஷா நடராசன் எழுத்து நடை தெளிவு மற்றும் நுணுக்கம் கொண்டது. சமகால அரசியல் மற்றும் கல்வி மாற்றங்கள் குறித்து எளிமையாகவும், ஆனால் ஆழமாகவும் விளக்குகிறார். இது தமிழ்த் தாய்மொழியில் எழுதப்பட்டுள்ளதால், எல்லா வயதினரும், அனைத்து சமூகத்தினரும் படித்து புரிந்துகொள்ள இயலும்.

    மொத்தத்தில், ஆயிஷா நடராசன் எழுதிய இந்த கட்டுரை அறிவியல், கல்வி, மற்றும் அரசியல் பற்றிய கவலையை நேர்மையாகவும், அழுத்தமாகவும் வெளிப்படுத்துகிறது. இது நம் நாட்டின் அறிவியல் வளர்ச்சியைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் சிந்தனையை நமக்கு ஏற்படுத்துகிறது.

    • இந்த கட்டுரை இன்று 2/7/2024 இந்து தமிழ் திசையில் படித்தேன். திரு.மணியளவில் அவர்களின் பதிவு கருத்துக்கணிப்பின் எனக்கும் தோன்றியது. கட்டுரையை வாசிப்பு இயக்கத்திற்கு கொண்டு செல்ல உள்ளோம். நன்றி!

  2. N. சித்து முருகானந்தம்

    இது மட்டுமல்ல மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் ஜோதிடத்தை (அறிவியல், சோதனைக்கு உட்பட்டது, ஆனால் ஜோதிடம் சோதனைக்கு அப்பாற்பட்டது) ஒரு பாடமாக பி எச் டி வரைக்கும், வைத்துள்ளார்கள். அதே போல் யோகாவை பி எச்டி வரை ஒரு பாடமாக அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பாடமாக வைத்துள்ளனர். உலகமே அறிவியலில் அசுர பாய்ச்சலில் குறிப்பாக துகள் இயற்பியலில் (Particle Physics- High energy Physics) சென்று கொண்டிருக்கிறது. சுவிட்சர்லாந்தில் உள்ள CERN என்ற பூமிக்கு அடியில் 300 அடி ஆழ சுரங்கத்தில் அணுகுங்கள் இருக்கும் புரோட்டான்களை ஒளியின் வேகத்தில் மோதவிட்டு ஒரு நொடியில் (Second) நூறு கோடி பகுதியின் ஒரு பங்கின் நெரத்தில் எப்படி வெடித்துச் சிதருகின்றன, அதனால் என்னென்ன மேலும் அடிப்படைத்துகள்கள் வெளியேறுகின்றன என்று பார்த்து ஆராய்கின்றனர். இந்த அய்வு பிரபஞ்சத்தின் பெரு வெடிப்பின் ஆரம்பத்தில் என்ன நடந்தது என்பதைப் பார்க்கும் ஆராய்ச்சி. இதன் உள்ளே சென்று பார்த்தால் வியப்புக்கு மேல் வியப்பின் எல்லையில்லா வியப்பில் நம்மை மூழ்கடித்து விடுகிறது. அந்த ஆராய்ச்சிக் கூடம்தான், 27 கிலோ மீட்டர் வட்டச்சுற்றளவு கொண்ட சுரங்கம், உலகில் இயற்பியலின் தலைமை பீடம். ஆனால் நமக்குப்பக்கத்தில் இருக்கிற சீனாவில் இதே மாதிரி அடிப்படைத் துகள் ஆய்வுக்கூடத்தை 100 கிலோ மீட்டர் வட்டச் சுற்றளவு கொண்ட ஒரு ஆய்வுக்கூடத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். சீனாக்காரன் நம்மை விட 75 ஆண்டுகள் அறிவியலில் முன்னோக்கிச் சென்று விட்டான். ஆனால் நாமோ தேனி பொட்டிபட்டியில் ஒரு வெறும் 2 கிலோமீட்டர் நீளத்தில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைப்பதற்கு இந்தத் தமிழ்நாடே அழிந்து போகும் என்று அறிவியலில் அரிச்சுவடி கூடத் தெரியாத அரசியல்வாதிகளால் அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *