கோவிட் 19 பெருந்தொற்று தன் கோரத்தாண்டவத்தை தொடங்கி 1 ஆண்டு 4 மாதங்கள் கடந்து விட்டது. அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் வியத்தகு முன்னேற்றத்தால் ஓராண்டிற்குள் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பயன்பட்டுக்கு வந்துள்ளது.

இந்தியாவில் தடுப்பூசிகளைத் தயரிக்கவல்ல பல பொதுத்துறை நிறுவனங்கள் இருந்தும் தனியார் நிறுவனங்களின் மூலம் தடுப்பு மருந்து, உயிர் காக்கும் ஆக்ஸிஜன் உற்பத்தியை அரசு செயல்படுத்தி வருகிறது. கொரோனா மருந்துகள் மற்றும் தடுப்பூசி வெளிச் சந்தையிலும் கிடைக்கும் என அறிவித்து, பெருந்தொற்று பெருந்துயரிலும் தனியாரின் பெருங்கொள்ளைக்கு வழிவகுத்துள்ளது.

இந்நிலையில் ஜெர்மனியில் இருந்தும், அரேபிய நாடுகளிலிருந்தும் ஆக்ஸிஜனை இறக்குமதி செய்து வருவதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. தலைநகர் டெல்லியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்து வருகின்றனர். உச்சநீதிமன்றமே தனது வளாகத்தை கோவிட் படுக்கை அமைக்க தருவதாக அறிவித்துள்ளது. சுத்தீகரிக்கப்பட்ட காற்றை சிலிண்டர்களில் அடைத்து பயன்பாட்டிற்கு உட்படுத்துவதற்கான எளிய தொழில் நுட்பம் இந்தியாவில் உள்ளது. அதிலும் பொதுத்துறை நிறுவனங்களில் நமது தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்வதற்குரியதிறன் மிகுந்து உள்ளது.

பல பொதுத்துறை நிறுவனங்கள் தங்களின் முழு உற்பத்தி திறனையும் பயன்படுத்த போதுமான நிதி ஓதுக்கீடும் அனுமதியும் இன்றி தவித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு கிரவுண்ட் நிலப்பகுதியில் 25 சதுர கி.மீ சுற்றளவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் ஆக்ஸிஜனை தயாரித்து அளித்திடுவதற்கான ஆக்ஸிஜன் உற்பத்தியை மேற்கொண்டிடத் தக்க எளிய தொழில் நுட்பங்கள் நிறைய உள்ளன. இதைவிட சிறிய யூனிட்டுகளையும் அமைத்து காற்றை தூய்மைப்படுத்தி தந்திடவும் இயலும் வளிமண்டலத்திலுள்ள காற்றை துகள்கள், கார்பண்டை ஆக்ஸைடு போன்றவற்றை நீக்கி, அழுத்தத்தோடு சிலிண்டர்களில் அடைப்பதுதான் இந்த தொழில் நுட்பம்.

கேரளா தனது மாநில மக்களின் தேவையை விட 3 மடங்கு கூடுதலாக உற்பத்தி செய்து மற்ற மாநிலங்களுக்கும் அளித்து வருகிறது. தமிழகத்திலும் நமது தற்போதைய தேவையைவிட கூடுதலான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து தமிழக அரசின் அனுமதியோடும், அனுமதியின்றியும் மற்ற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது மத்திய அரசு பெருந்தொற்றுக் காலத்தில் மக்கள் நலனை மனதில் கொண்டு மேற்கொள்ள வேண்டிய பணிகளை திட்டமிடலை. ஏற்பாடுகளை செய்யத் தவறியதன் விளைவாக இன்று இத்தகைய கொடுந்துயரில் நாடே சிக்கித் தவிக்கிறது. நாட்டிலுள்ள பல பொதுத்துறை நிறுவனங்கள் நமது நாட்டின் தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்திடும் திறன் இருந்தும் அதனை பயன்படுத்தத் தயங்குகிறது தடுப்பூசி உற்பத்தியிலும் கார்ப்பரேடுகளை ஊக்குவித்து அவர்களிடம் இருந்து கொள்முதல் செய்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. உள் நாட்டில் போதிய தடுப்பூசியும் கோவிட் மருந்துகளும் கிடைக்காமல் லட்சக்கணக்கானோர் செத்து மடிகிறார்கள்.

SC allows Vedanta to produce oxygen at its Sterlite copper plant in Tamil  Nadu

இந்தச் சூழலில் அரசின் அலட்சியத்தால் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியை பயன்படுத்திக் கொண்டு பொதுத்துறை நிறுவனங்களின் முழு திறனையும் பயன்படுத்தி, அவற்றை ஊக்கப்படுத்தி ஆக்க்ஸிஜன் உற்பத்தியை மேற்கொள்வதற்கு பதிலாக சுற்றுச் சூழலை மாசுபடுத்தி, மக்களை பலிகடாவாக்கி, கடும் எதிர்ப்பின் விளைவாக மூடப்பட்டு காலாவதியாகியுள்ள ஸ்டெர்லைட் ஆலைமூலம் மட்டுமே ஆக்ஸிஜனை தயாரிக்க முடியும் என்று மாயத்தோற்றத்தை உருவாக்கி, மக்களை ஏமாற்ற நினைப்பது சரியான ஒன்றல்ல மூடப்பட்டு கிடக்கும் வேதாந்தாவின் ஆலையை கொள்ளைப்புறமாக திறக்கும் அரசின் முயற்சியாகவே இதனை அறிவியல் இயக்கம் பார்க்கிறது அரசியல் கட்சிகள் அவர்களுக்குள்ள நிர்பந்தங்களின் காரணாமாக இதனை 4 மாத காலத்திற்கு திறந்து ஆக்ஸிஜன் உற்பத்தியை மேற்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் ஸ்டெர்லைட்டில் ஆக்ஸிஜன் உற்பத்தியை மேற்கொள்வது தொழில் நுட்ப ரீதியில் ஓரிரு நாளில் நிகழக்கூடிய உடனடி சாத்தியமான ஒன்றும் அல்ல அதற்கான கட்டமைப்பை ஏற்படுத்திட அவகாசம் தேவை ஸ்டெர்லைட்டை அரசே ஏற்று நடத்துவதிலும் உள்ள சட்ட மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் எளிதில் கலையப்படக்கூடிய ஒன்றல்ல. அரசின் வழக்கறிஞரே உயர் நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட்டிற்கு மருத்துவ பயன்பாட்டு தரத்தில் பெரிய அளவில் ஆக்சிஜன் தயாரிப்பிற்கு திறன் இல்லை என்பதை எடுத்துரைத்திருக்கிறார் அத்தோடு அந்த ஆலையைச் சுற்றி வசிக்கும் பூர்வீக மக்கள் காற்று மாசுபாட்டாலும், நீர் மாசுபாட்டாலும் பேரிழப்புக்களை சந்தித்ததோடு, அந்த ஆலையை மூடுவதற்கான போராட்டத்திலும் உயிர் நீத்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அவர்கள் ஒருபோதும் இந்த ஆலைத் திறக்கப்படுவதை அனுமதிக்க மாட்டார்கள்.

அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் தற்போதைய முயற்சிகளை சந்தேகக் கண்கொண்டே மக்கள் பார்க்கிறார்கள் ஆலையை பராமரிப்பதற்குக் கூட வேதாந்தாவை அனுமதிக்கக் கூடாது என்று போராடும் அவர்கள் அந்த ஆலையை வேதாந்தாவே திறந்து எந்தவித உற்பத்தியையும் மேற்கொள்வதை ஏற்கவே மாட்டார்கள்.

எனவே ஆக்ஸிஜன் உற்பத்திக்கு ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்து வேதாந்தாவை செயல்பட அனுமதிக்கும் முடிவை அரசு கைவிடுவதே நல்லது தமிழக அரசு ஏற்று நடத்தும் சாத்தியக்கூறுகளும் அருகில்இல்லை. ஏற்கனவே பேரிடரைப் போன்ற பெரும் பாதிப்பை எதிர்கொண்ட மக்களின் உணர்வுகளுக்கு மாறாக செயல்பட அனுமதிப்பது முற்றிலும் பொருத்தமற்றது எனவே ஸ்டெர்லைட்டில் ஆக்ஸிஜன் உற்பத்தியையும் காரிய சாத்தியமற்ற, உடனடி பயன்பாட்டிற்கு உதவிட இயலாத முயற்சியையும் கைவிட வேண்டும். இந்த ஆலையை அரசு கையகப்படுத்தும் முயற்சியை செய்தால் மட்டுமே மக்கள் அரசின் மீது நம்பிக்கை கொள்வார்கள் அதன் பின்னரே எந்தவித முடிவும் அரசு எடுக்க வேண்டும் என்று தமிழ் நாடு அறிவியல் இயக்கம் அரசை கேட்டுக் கொள்கிறது..! என தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *