வர்க்கம் காதலைப் பறிக்கும், பரிதவிக்க வைக்கும், பிரியலை புரிதலுடன் பேசும் என இருவேறு உலகை உணர்வுபுர்வமாக பேசியிருக்கும் படம் Is love enough? sir – எஸ்.சிந்துகடந்த 2018 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட்டுப் பல விருதுகளைப் பெற்றது இப்படம். தற்போது சமீபத்தில் நெட்பிலிக்ஸில் வெளிவந்த சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம்பெற்ற இப்படம் காதலை வலிமிகுந்த காவியமாய் பேசியிருக்கிறார் இயக்குநர் ரொஹனா கீரா. காதல் சாதி, மதம், பாலினம் மட்டும் கடந்து வருவதில்லை. காதலை வர்க்கத்தோடு தொடர்புபடுத்திப் பல காதல் கதைகள் வந்திருந்தாலும் அதை மையக்கருத்தாய் வைத்துப் பேசிய படம் பெரிதாகயில்லை. ஆனால் இது வழக்கமான பணக்கார வீட்டுப் பெண்ணும், ஏழை ஆணுக்கும் பிறக்கும் காதல் இல்லை. மாறாக
மும்பையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழும் ஒரு பணக்கார வீட்டின் ஆணுக்கும் அந்த வீட்டில் வீட்டுவேலை பார்க்கும் கிராமத்து விதவை பெண்ணுக்குக்கிடையான காதல். இதில் என்ன சுவாரசியம் என்றால், வர்க்கம் சார்ந்த காதல் எப்படிக் கையாளப்படுகிறது என்பதை அப்படியே காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர்.

கிராமத்து வயல்வெளியைக் கடந்து பஸ்ஸில் பையில் ஒளித்து வைத்திருந்த வளையல்களை அணிந்து கொண்டு அதன் சினுங்கலையை கேட்டபடியே மும்பை வருகிறார் ரத்னா. கிராமங்கள் இன்னும் விதவைகளை எப்படி வைத்திருக்கிறது என்பதற்குச் சாட்சி இக்காட்சி. கிராமம் தராத சுதந்திரம் மும்பையில் மக்கள் தொகையில் லட்சத்தில் ஒருத்தியாய் அவளின் வளையல் குலுங்கலில் கிடைத்ததாக உணர்கிறார்.

இஸ் லவ் எனப்? சார் ? சாதாரண காதல் கதைபோல் அல்லாமல் வர்க்கத்தின் பிடியில் காதல் எப்படி மாறுபடும் என்பதை ஒரு சுவர் தான் முடிவெடுக்கிறது. அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் அமெரிக்க ரிட்டன் ஆர்கிடெக் அஸ்வின் (விவேக் கொம்பர்) அந்த வீட்டில் வேலை செய்யும் ரத்னா (திலோத்தமா ஷோம்). ரத்னா ஒரு சுயச்சார்பு பெண். தனக்குப் பிடிக்காத வீட்டு வேலை செய்து, வீட்டையும், அவளின் தங்கையின் படிப்பையும் பார்த்துக்கொண்டே பேஷன் டிசைனாராக வேண்டும் என்பதே அவள் கனவு. தன்நம்பிக்கை ததும்பும் ரத்னா நம்மில் ஒருவர் என்பதே நிதர்சனம். கனவுக்கு மட்டும் தான் எல்லையில்லை என்பதால் தான் என்னவோ நல்ல தூக்கம் கனவுகளை அள்ளி தருகிறது. ஒன்றரை மணி சினிமா ஒரு புத்தகத்தைப் படித்தது போன்ற பயணம். அஸ்வின் திருமணத்தன்று திருமணத்தை நிறுத்தி விட்டு மும்பை திரும்புகிறார். வேலைக்காரி ரத்னா தனது அன்றாட வேலைகளைச் செய்து நாட்கள் கழிகிறது. நின்றுபோன திருமணத்தால் மன உலைச்சலுக்கு ஆகிறார் அஸ்வின். அஸ்வினிற்கு வந்த திருமண பரிசுகளை அவரிடம் அனுமதி பெற்று அவற்றை அவர் பார்க்காத படி தனது அறையில் எடுத்து வைக்கிறார் ரத்னா. இப்படியான அவரின் நாட்கள் வீட்டு வேலையைச் செய்து விட்டு பக்கத்து விட்டு வேலைக்காரியிடம் ஒரு தையல்காரரிடம் தையல் கற்க ஒருயிடத்தைத் தேடுகிறார் ரத்னா. வீட்டிற்கு வரும் போது எப்போதும் செருப்பைக் கழற்றி கையில் எடுத்துக்கொண்டு தன் அறையில் வைப்பார். இது தான் வர்க்கம் காட்டும் பாகுபாடு செருப்பு கூட சமமில்லை.

Image result for Is love enough? sir
Image Source: Dailyhunt

இருவரின் வாழ்க்கை இப்படிப் போக ஒரு நாள் ரத்னா தன்னைப்பற்றி அஸ்வினிடம் தான் 19 வயதில் விதவையானேன் என்பதை தெரிவித்து இருக்கிறார்.. காரணம் படிக்க விருப்பமிருந்தும் வறுமையால் கிராமத்தில் நோயுற்ற ஒருவருக்கு மணம் முடித்து வைத்தார்கள் எனது பெற்றோர்கள்,அது காரணம் வரதட்சணையில்லா திருமணம். திருமணம் முடிந்த 4 மாதத்தில் கணவர் இறந்தார். ஆனால் பழி என்னவோ என் மீது இருந்தும் என் வாழ்க்கை முடிந்திடவில்லை. முற்றுப் பெறாத ஒன்று தொடர்ந்து தெடரக்கப்புள்ளியாக என்று சொல்ல அஷ்வினுக்கு கிடைத்த முதல் ஆறுதல். இப்படியே நாட்கள் செல்ல அஸ்வினை புரிந்து நடந்து கொள்ளும் ரத்னா. ஒரு நாள் அஸ்வின் அம்மா தொலைப்பேசியில் பேசு அது அஸ்வினுக்கு பிடிக்கவில்லை என்பதால் அவனிருந்தும் இல்லை எனச் சொல்வார். அதைத் தொடர்ந்து ஒரு நாள் வீட்டிற்கு வந்து விருந்தாளியின் ஆடையில் குளிர்பானத்தை ஊற்றி விடுவார். அதற்கு அந்த பெண் ரத்னாவிடம் கடுமையாக நடக்க அஸ்வின் ரத்னா தனது வீட்டு வேலைக்காரி என்று சொல்லி ரத்னாவிற்காக மன்னிப்பு கேட்கிறார். இதைப் பார்த்த ரத்னா அஷ்வினிடம் மன்னிப்பு கேட்க இருவருக்கிடையில் நட்பு மலர்கிறது. பிறகு ரத்னா தையல் காரரிடம் தையல் கற்கச் செல்கிறார். அங்கும் அவருக்குச் சுத்தம் செய்யும் வேலையே தருகிறார் தையல்காரர். அதனை தன்னுடன் குடியிருப்பில் வேலை செய்பவர் சொல்ல அவர் ஒரு தையல் பயிற்சிக் கூடத்தில் சேரச் சொல்கிறார். பணம் பற்றாக்குறை என்கிறார் ரத்னா. பின் அந்த பக்கத்து வீட்டு வேலைக்காரியே கடனும் தருகிறார். அப்போதும் அஸ்வினிடம் பணம் கேட்காத ரத்னாவின் சுயமரியாதை தான் சிறப்பு. அஸ்வினும் வீட்டின் உரிமையாளர் போல் அல்லாத சக மனிதராய் சமையலறை வரை வந்து ரத்னாவிடம் பேசுவதில் தொடங்குகிறது அன்பு. அஸ்வின் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் அதில் ஒரு முத்தக் காட்சி பார்த்து விட்டு தலைகுணிந்துவாறே சொல்கிறார். அன்றைய இரவு பாருக்கு சென்று ஒரு பெண்ணுடன் என மறுநாள் காலை விடிகிறது.

அதைப் பார்த்தும் பார்க்காமல் இருப்பது தான் வேலைக்காரியின் வேலை என்பது போல் முகம் சோர்வுடன் செல்கிறார் ரத்னா.ஆஸ்வினிடம் நீங்கள் ஏன் இங்கிருந்த கஷ்டப் பட வேண்டும் திரும்ப வெளிநாட்டிற்குச் சென்று உங்களுக்குப் பிடித்ததை செய்யுங்க சார் எனச் சொல்லப் பேசாமல் போய் விடுகிறார் அஸ்வின். பின்னொரு நாள் அஸ்வின் ஜூஸ் கேட்க அவளிடம் அவளைப்பற்றிக் கேட்க அவள் தான் பெரிய பேஷன் டிசைனாராக ஆகப் போவதாகச் சொல்ல அஷ்வின் அதைக்கேட்டுச் சிரிக்க ஒரு நிமிடம் நம்மிடம் நமது இடம் எது என்பது போல ஒரு உரையாடல் அது. பின் அங்கிருந்து மன்னிப்பு கேட்டு விட்டு மறுநாள் ஒரு தையல் புத்தகத்துடன் வருகிறார் . பின்னொரு நாள் அஷ்வின் வீட்டிற்கு ஒரு பார்சல் வர அதை அஸ்வினிடம் சொல்கிறார் ரத்னா. அதைப் பிரித்தால் அதில் ஒரு தையல் மிஷின். பார்த்தும் தங்க் யூ சார் என மகிழ்கிறார்கள்.எந்தவித எதிர் பார்ப்புயின்றி வரும் அன்பு தான் எத்தனை சுகம்.அஸ்வின் பிறந்தநாள் அன்று ஒரு சட்டையைப் பரிசாகத் தருகிறாள் . அதை அவர் உடுத்திக்கொண்டு வெளியே போக சமையலறைலிருந்து வெளியே வந்து தான் இந்த சட்டையை நான் தான் கொடுத்தேன் என்பதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொல்கிறாள் ரத்னா. பிறகு ஒருநாள் தன் தங்கைக்காகத் தைத்த ஆடையைப் போட்டுப் பார்க்க அறைக்குச் செல்ல அஷ்வினும் வருகிறார். தயக்கத்தில் வெளியே வந்து புடவையை உடுத்திக்கொண்டு தான் தைத்த ஆடையைச் சரி பார்க்கவே அந்த அறைக்குச் சென்றேன் என்பதைத் தயங்கிச் சொல்லத் தொலைப்பேசி அழைப்பு ரத்னாவின் தங்கைக்குத் திருமணம் என்ற சொல்லி ஊருக்கு செல்ல ஆயுத்தமாகிறார் ரத்னா. ரத்னாவின் ஆசை தங்கை படிக்க வேண்டும் தங்கையோ மும்பை வர வேண்டும் என்பது. கிராமவாசிகளுக்கு நகரம் என்றுமே ஒரு சுதந்திரக்காற்று. தான் புறப்படுகையில் அஸ்வின் பணம் தருகிறார் வாங்க மறுக்கிறார் ரத்னா. பின் அது தனது கல்யாண பரிசு என்கிறார் அஸ்வின். அவள் இல்லாத அந்த இரண்டு நாட்கள் வெறுமையை உணர்கிறார் அஸ்வின்.

ரத்னா தங்கையுடன் பேசுகையில் தனது வீட்டின் முதலாளி பற்றிச் சொல்லும் போது அவளின் தங்கை கம்பீர் போல இருப்பாரா எனக்கேட்க அவர் ஒரு நல்ல மனிதர் என்பதே அவளின் பதில். ஓரே வீட்டிலிருந்தும் எப்போதுமே தன்னை தவறாகப் பார்க்காத ஒருவர் நல்ல முதலாளியைக் கடந்து ஒரு நம்பிக்கை. நாம் அன்புக்கொள்பவரிடம் எல்லோரும் எதிர்பார்க்கும் ஒற்றை சொல் நம்பிக்கையே. அஸ்வின் ரத்னாவைத் தொலைப்பேசியில் அழைக்க அவளோ வீட்டிலிருந்து சிறிது தூரம் சென்று பேசுகிறார். ஆனால் வார்த்தைகள் மௌனிக்கிறது. பின் மும்பை திரும்புகிறார் விநாயகர் சதுர்த்தி அன்று வழக்கம் போல வேலையை முடித்து விட்டு வெளியில் சதுர்த்தி ஊர்வலத்தில் நடனமாடுகிறார் ரத்னா. அப்போது அஸ்வின் வருகிறார் ரத்னாவைப் பார்த்து விட்டுப் போக பின் ரத்னாவும் ஓடி கதவைத் திறக்கிறார். எப்போதும் செருப்பைக் கையில் எடுக்கும் ரத்னா தன்னை மறந்து போகிறார் அஸ்வின் கை ரத்னாவை இழுத்து அனைத்து நெற்றியில் ஒரு முத்தம்.

Image result for Is love enough? sir
Image Source: Youtube

அவளும் தன்னை மறந்து இரு இதழ்களும் ஒன்றானது இடையில்  தொலைப்பேசி அழைக்கத் தான் யார் என்பதை உணர்த்தியது. அது அஸ்வினின் அம்மா வீட்டில் நடக்கும் பார்டி ஓன்றில்  வேலை செய்ய ரத்னாவை அழைத்திருக்கிறார் . பார்ட்டியில் யாருமே பார்க்காத அவளின் முகத்தையே பார்க்கிறார் அஸ்வின். எல்லா வேலையும் முடித்து விட்டு வேலையாட்களுடன் சாப்பிடுகிறார். சமையலறைக்குச் சென்று தான் உனக்காகக் காத்திருக்கவா என அஸ்வின் கேட்க அது வினையாகிறது. பின் வீட்டிற்கு வந்த ரத்னா ஏன் சார் எனக்காகக் காத்திருக்கவா எனக் கேட்டீர்கள், அது எனக்கு மிகுந்த  சங்கடத்தை ஏற்படுத்தியது எனச் சொல்ல. Don’t call me sir. Dont you feel what I feel with you  என்று சொல்லி நான் உன்னைக் காதலிக்கிறேன் என உடைகிறான் அஸ்வின். இதைக்கேட்ட ரத்னா தான் கிராமத்திலிருந்து இங்கு வந்தது வேலை செய்து ஊருக்குப் பணம் அனுப்புகிறேன் என்பதால் தான். இது எனது கணவரின் தம்பிக்குத் தெரிந்தால் என்னை அடித்து இழுத்துச் சென்று விடுவார் என்று சொல்லி, நமக்கு இடையே இருக்கும் வெவ்வேறு சூழ்நிலை அதனால் இது சரிவராது எனச் சொல்ல அஸ்வின் மறுத்துப் பேசுகிறான். இந்த குழப்பத்தில் நண்பனிடம் பேசு இருவரும் வீட்டிற்கு வந்து ரத்னா உனக்காகத் தான் வீட்டிற்கு வந்தோம் எனச் சொல்லப் பயத்தில் நம்மைப் பற்றி உங்கள் நண்பரிடம் பேசினீர்களா எனக் கேட்க இல்லை என மறுக்கிறார் அஸ்வின்.

பிறகு நண்பரிடம் விவரிக்கிறார்  Did you date with your maid? எனக் கேட்க No, I am in love with her என அஸ்வின் பதில் செல்ல. பின் ரத்னா தன் அறைக்குச் சென்று அழத்தொடங்குகிறாள் அங்கிருந்து புறப்படுகிறாள். அப்போதும் எந்த எதிர்பார்ப்பு இல்லாமல் புறப்படுகிறார். இதைப்பற்றி அஸ்வின்  அப்பாவின் காதிற்கு சொல்ல வேலைக்காரியுடன் என்ன படுக்கை  எனக் கேட்க, இல்லை நான் அவளைக் காதலிக்கிறேன். ஆகையால் இங்கிருந்து அமெரிக்கா புறப்படுகிறேன் என்கிறார் அஸ்வின். ரத்னா மும்பையில் உள்ள தங்கை வீட்டிற்குப் போக ஒரு அழைப்பு வருகிறது பேஷன் கம்பேனிலிருந்து. பின் அங்குச் சொல்ல  அது ஒரு நாள் அஸ்வின் வீட்டு பார்டிலில் குளிர்பானத்தை ஊற்றிய போது தீட்டியப்பெண் அஸ்வின் தோழி அதுவும் அவளிடம் தீட்டு வாங்கிய அதே ஆடையின் வடிவமைப்புடன். அஸ்வின் வீட்டிற்குச் செல்ல அவர் அங்கில்லை. பின் தன் வீட்டின் மொட்டை மாடியில் நின்று அழத்தொடங்குகிறாள். அஸ்வின் அழைப்பு  Hello Ratna…… Hi………..Ashwin  என படம் முடிவடைகிறது. இந்த படத்தில் நான் ரசித்த காட்சி இரு வேறு உலகம் ஆனால் உணர்வு என்னவோ ஒன்றே அதை உணர்த்துவது ஒரு சுவர் தான் என அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஓளிப்பதிவாளார். மொத்தத்தில் காதல் கண்ணாடியில் வர்க்கும்  பேசுபொருளே…….

Image result for Is love enough? sir
Image Source: The Indian Express

வர்க்கம் காட்டும் வேறுபாட்டில் மேல்தட்டு மக்கள் கொண்டிருக்கும் பார்வையைக் கேள்விக்குட்படுத்தி இருக்கிறது. இந்தப் படத்தில் வேலைக்காரப் பெண்ணை ப்ரொட்டாகனிஸ்டாக மட்டுமின்றி, எந்த இடத்திலும் கண்ணியம் குறைவாகக் காட்டாமல் பார்த்துக்கொண்டதே இந்தப் படைப்பின் மேன்மையைப் புரியவைக்கிறது.

இதில் சொல்லப்பட்ட இன்னொரு அழகான மெசேஜ், ‘City Boys are not So bad’. பொதுவாக நகரத்தில் வாழும் இளைஞர்கள் எப்போதும் எதற்கும் கவலைப்படாதவர்களாகவும், சுயநலமானவர்களாகவுமாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். ஆனால், இந்தப் படத்தில் அஸ்வின், ரத்னாவின் லட்சியத்திற்கு அவரை ஊக்குவிக்கும் காட்சி நம்மை நெகிழவைக்கிறது. ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண் எனில், பெண்ணிற்கும் அது ஆணால் என்பது நம்பிக்கையில் பேசியிருக்கிறது

படத்தின் அழகு மேற்பரப்புக்கு அடியில் சிக்கலான அடுக்குகளுடன் உறவை ஆராய்வதில் உள்ளது. படம் ரத்னாவும் அஸ்வினும் ஒன்றாக இருப்பார்களா என்பது பற்றியது அல்ல, ஆனால் நாம் தொடங்கும் இடத்திலிருந்து அதே கேள்வியை நினைவூட்டுவதைத் தாண்டி ‘காதல் போதுமானதா? சார்
ஒரு திறந்த முடிவோடு, திரைச்சீலைகள் கீழே வந்த பிறகும் படம் நீடிப்பது போலவே இருக்கிறது.