Is Pegasus Spyware Spying on Us? So what is Pegasus? What does it do? article Sindhuja Sundaraj. Book Day is Branch of Bharathi Puthakalayam.

பெகாசஸ் ஸ்பைவேர் நம்மை உளவு பார்க்கிறதா? அப்படியானால் பெகாசஸ் என்றால் என்ன? அது என்ன செய்கிறது?



கடந்த சில நாட்களாக செய்தித்தாள்களிலும், ஊடகத்திலும் பெகாசாஸ் என்ற வார்த்தை உலவிக்கொண்டு இருக்கிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் “பெகாசஸ்” மீது கேள்வி எழுப்பி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர்.

பெகாசஸ் திட்டத்தைப் புலனாய்வு செய்த சர்வதேச ஊடக கூட்டமைப்பானது (International Media Consortium) பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் உலகம் முழுக்க சுமார் 50000 தொலைப்பேசி எண்கள் உளவு பார்க்கப்படுகிறது என்கிறது இந்த அமைப்பு. இஸ்ரேலில் உள்ள மென்பொருள் நிறுவனமான NSO “பெகாசஸ் ஸ்பைவேர்” மென்பொருளை உருவாக்கியது. இந்த மென்பொருளைப் பயன்படுத்தி உளவு பார்க்கப்பட்ட பட்டியலில் சுமார் 300 தொலைப்பேசி எண்கள் இந்தியாவைச் சேர்ந்த மந்திரிகள், எதிர்க்கட்சி தலைவர்கள், பணியிலிருக்கும் நீதிபதி, 40க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள், மனித உரிமையாளர்கள், தொழிலதிபர்கள் என இப்பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது.

அப்படியானால் இந்த பெகாசஸ் என்ன செய்கிறது ? எப்படி தொலைப்பேசியை உளவு பார்க்கிறது . அப்படிப் பார்த்த தகவலை என்ன செய்கிறது.

பெகாசஸ் ஸ்பைவேர்

ஸ்பைவேர் என்பது தீங்கிழைக்கும் மென்பொருளை உருவாக்கி கணினி அல்லது தொலைப்பேசியில் நிறுவி தகவல்களைச் சேகரித்து , சேகரித்த தகவலை அந்த பயனாளரின் அனுமதி இல்லாமல் மற்றொரு மூன்றாம் நபருக்கு அனுப்புதல் ஸ்பைவேரின் வேலை .

NSO அமைப்பால் உருவாக்கப்பட்ட பெகாசஸ் ஸ்பைவேர் மிகவும் சக்தி வாய்ந்தாக பார்க்கப்படுகிறது . இது உருவாக்கப்பட்டதன் நோக்கம் தொலைப்பேசியில் ஊடுருவி அதாவது ஸ்மார்ட்போன்களான – அன்ட்ராய்டு அல்லது ஐபோனில் செலுத்தி அவற்றைக் கண்காணிக்கும் கருவியாக மாற்றுகிறது.

இஸ்ரேலிய அமைப்பான NSO இந்த மென்பொருளைச் சந்தையில் ஒரு கண்காணிக்கும் கருவியாக விற்கிறது . இதன் மூலம் குற்றவாளிகளையும் , தீவிரவாத அமைப்புகளையும் டிரேக் செய்து பிடிக்க உதவும் என்கிறது. அது மட்டுமல்லாது இந்த மென்பொருளை அங்கீகரிக்கப்பட்ட அரசாங்களுக்கு மட்டும் தான் விற்கப்படும் என்கிறது. பெகாசஸ் மென்பொருளானது குறிப்பிட்ட சிலரை இலக்கு வைத்து கண்காணிப்பட உதவுகிறது . இதை அந்த நிறுவனம் வெகுஜன கண்காணிப்பக பயன்படுத்த வில்லை என்பதும் தெரிகிறது. ஏன் என்றால் அந்த மென்பொருளுக்கான உரிமம் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்டது . ஒரு பெகாசஸ் உரிமம் பெற்றுப் பல ஸ்மார்ட்போன்களை வேவு பார்க்கமுடியும் . ஒரு உரிமத்தின் விலை சுமார் 70 லட்சம் . 2016ம் ஆண்டு விலைப்பட்டியில் படி NSO அமைப்பான தனது வாடிக்கையாளர்களிடம் சுமார் 6,50000 லட்சம் டாலர்களுடன் மென்பொருளை நிறுவுவதற்கு என்று தனியாக 50000 ஆயிரம் டாலர்களை வசூல் செய்தது.

பெகாசஸ் எப்படிச் செயல்படுகிறது:

பெகாசஸ் அன்டராய்டு மற்றும் ஐஒஸ் கண்டுபிடிக்காத தீங்குவிளைவிக்ககுடியது பிழைகள் மற்றும் பக்ஸ்களை பயன்படுத்தி உள்ளே நுழைகிறது. அதுமட்டுமல்லாமல் நீங்கள் சமிபத்தில் ஏதேனும் பாதுகாப்பு இணைப்பு நிறுவப்பட்டு இருந்தாலும் கூட அவற்றை இந்த ஸ்பைவேர் பொருட்டுபடுத்திக்கொள்வது இல்லை. அதன் வழியாகவே உள்ளே நுழைகிறது.

2016 பாதிப்புக்குள்ளான தொலைப்பேசியை நுட்பமாகக் கையாண்டு தகவல்களைத் திருடுவது (Spear fishing) : இதன் மூலம் குறுஞ்செய்தி,மின்னஞ்சல் ,வாட்ஸ்அப் மூலமாகத் தவறான இணைப்பின் (Malicious link) லிங்கை டச் செய்தவுடன் கருவிக்குள் நிறுவிக்கொள்ளும். 2019ல் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட பெகாசஸ் ஸ்பைவேர் தொலைப்பேசியினுள் ஊடுருவித் தீங்கிழைக்கும் இணைப்பின் (Malicious link) செய்தியை அழித்துவிடும் . இதன் மூலம் இலக்கு நிர்ணயக்கிப்பட்ட நபருக்குப் பாதிப்புக்குள்ளான தொலைப்பேசி பற்றித் தெரிந்து எந்த தகவலும் தெரிந்து கொள்ள முடியாது. ஆகையால் இது பற்றி பெரிதாகப் பாதிப்பு வெளிப்படையாகத் தெரியாது. அதன் பின் அடுத்த ஓராண்டிலே வாட்ஸ்அப் நிறுவனம் பெகாசஸ் ஸ்பைவேர் சுமார் 1400 அன்டராய்டு தொலைப்பேசியில் உள்ள செயலிகளின் மூலம் அரசு அதிகாரிகள், ஊடாகவியளர்கள் ,மனித உரிமை செயற்பட்டார்கள் கண்காணிக்கிறது என்று புதிய குற்றச்சாட்டை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டது. மேலும் இந்த ஸ்பைவேர் கம்பில்லா ட்ரான்ஸ் ரிசிவரிலும் தாக்குதல் நடத்த முடியும் என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

பெகாசஸ் என்ன செய்யும் ?

ஒரு முறை தொலைப்பேசியில் பெகாசஸ் நிறுவப்பட்டால் தொடர்பில் இருக்கும் இருவருக்குமான செய்தி பரிமாற்றத்தை இடைமறித்து உங்கள் தொலைப்பேசியில் இருந்து குறுஞ்செய்தி, மின்னஞ்சல், கண்டக்ட்ஸ், காலேண்டர், பாஸ்வோர்ட், அழைப்பு பற்றிய தகவல், ப்ரௌசெர் தரவுகள், தேடுப்பொறி வரலாறு போன்ற அனைத்தும் திருடப்பட்டு தங்களின் அனுமதியின்றி வேறுவொரு மூன்றாம் நபருக்கு அனுப்பிவிடும் . நீங்கள் பேசுவதையும் பதிவு செய்யும், மறைமுகமாக உங்களின் கேமராவை ஆன் செய்து உளவு பார்க்கும், ஜிபிஸ் மூலம் உங்களது இடத்தையும் டிரேக் செய்து அனுப்பும். இப்படி பல்வேறு உளவு வேலைகளை உங்களின் அனுமதியின்றி செய்யும் ஆற்றல் இந்த பெகாசுஸ்க்கு உள்ளது.

பெகாசஸின் வரலாறு:

2016ம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த செக்கியூரிட்டி அமைப்பான சிட்டிசன் லேப் பெகாசசை முதன் முதலில் எதிர்கொண்டது . அதுவும் அந்நாட்டின் மனித உரிமை செயல்பாட்டாளர் அஹமது மன்சூரின் தொலைப்பேசியில் தான் கண்டுபிடக்கபட்டது. பின் 2018ல் சிட்டிசன் லேப் வெளியிட்ட அறிக்கையில் சுமார் 45 நாடுகள் பெகாசஸ் மென்பொருளை NSO விடமிருந்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அதில் இந்தியாவும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 2021ல் சர்வதேச புலனாய்வு பத்திரிக்கை செய்த ஆய்வில் வெளியான தகவலின் படி பல அரசாங்கள் இந்த மென்பொருளை வாங்கி உளவு வேலையை பார்க்கிறது என்பது தெரிகிறது. ஆனால் கேள்வி என்னவென்றால் இதைப் போன்ற மென்பொருள் தேச பாதுகாப்பு என்ற பெயரில் தன் நாட்டு மக்களிடமே அதிலும் சிலரை அதுவும் குறிப்பாக அரசு பணியில் உள்ள நீதிபதி, ஊடாகவியளர்கள், செயற்பட்டார்கள் மீது பயன்படுத்துவதன் நோக்கம் தான் என்ன ? இதில் உச்ச நீதி மன்றத்தில் வேலை செய்யும் 11 பெண் ஊழியர்களும் அடங்கும். இது பற்றி அரசு ஏன் இன்னும் தெளிவான எந்த பதிலும் தராமல் காலம் தாழ்த்துவது ஏன்?

தொடர்ச்சி அடுத்து கட்டுரையில்

சிந்துஜா
கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *