பாவாடை பெண்களின் அடையாளமா? – எஸ். சிந்துநம்மில் பலர் எங்கோ ஓரிடத்தில் இந்த வாக்கியத்தை கேட்டியிருப்போம் பெண்கள் மாதிரி அழக்கூடாது. ஆண்களுக்கு தைரியமில்லாத இடத்தில் பாவடைகட்டியிட்டு போ. இந்த வார்த்தைமெல்லாம் என்ன சற்று சிந்திப்போமானால் உண்மை புலப்படும். மேலே சொன்ன வார்த்தைகள் பெண்களுக்கானது என்று வரையறைத்த சமூகம் ஏன் அதன் வரலாற்றை பேச மறுக்கிறது. ஏன் ஆண்கள் அழக்கூடாதா என்ன விதக்கப்படாத விதி இது. அது போன்று தான் ஆண்கள் ஏன் பாவாடை அணியக்கூடாதா? அது ஏன் கேலிக்கூத்தாக பார்க்கப்படுகிறது. வாருங்கள் சற்று வரலாற்றை திருப்பிப் பார்ப்போம்.

நாம் தெருவில் நடக்கையில் யாரேனும் ஒரு பெண் ஜீன்ஸ் அணிந்து சென்றால் அதை பார்த்துவிட்டு மறு நிமிடம் வேலையை பார்க்கும் நாம். அதைப் போன்றே ஓரு ஆண் பாவாடை அணிந்து சென்றால் அவ்வளவு எளிதாக கடப்பதுதில்லை. அதை அணிவதில் ஏன் அவ்வளவு தயக்கம். ஏன் பாவாடை பெண்ணின் அடையாளமா ? எனில் பதில் இல்லை. பாவாடை பல நூற்றாண்டு வரலாற்றை தன்னிடத்தில் கொண்டு அன்றைய மாக்ஸி முதல் இன்று பெண்கள் உடுத்தும் பிரபலமான மாக்ஸி, மினி வரை பயணிக்கிறது. ஆனால் உன்மை என்வெனில் இந்த பாவாடையானது ஆண் பெண் இருபாலருக்கும் உடுத்தும் உடையாக இருந்து வந்துள்ளது. பண்டைய கால ஆசியா மற்றும் எகிப்த்தில் பாவாடை அவர்களின் தினசரி ஆடையாக இருந்து வந்துள்ளது.

File:Thutmose I, copy of relief, Deir el-Bahari (MMA 30.4.137).jpg -  Wikimedia Commons
Shendyt

பண்டைய எகிப்த்தில் முதன் முதலில் பாவாடை உடுத்தியதும் ஆண்களே. இடுப்பிற்கு கீழ் துணிகளை சுற்றி உடம்பை மறைக்கும் ஓரு அங்கி. அதன் பெயர் ஷன்டட்(Shendyt) . இது மிகவும் மெல்லியதாகவும் உடம்பிலிருந்து வெப்பத்தை வெளியேற்றும் என்று கருதி அவர்களின் சூழல்களுக்கு ஏற்றவாறு ஆடையை வடிவமைத்திருந்தனர். அந்த ஆடையானது லினின் நூலால் நெய்யப்பட்டது. அப்போது அங்கு ஆட்சி செய்த அரசர் முதல் விவசாயி வரை இதை தான் உடுத்தி வந்தனர். விலைக்கேற்ப ஆடையின் தரம் கூடுதலே தவிர ஆடையில் எந்த மாற்றமும் இல்லை. அதைப்போன்றே பெண்களும் நீண்ட ஆடையை உடுத்தும் வழக்கத்தை கொண்டனர். ஆனால் தரத்தில் ஆண்களைவிட குறைவான விலையில் ஆடையை அணிந்திருந்தனர். காரணம் அப்போது தான் பாலின பாகுபாடு தலைத்தூக்கிய காலம்.

இதைப் போன்றே சீனாவிலும் பேரரசர்கள் ஜரிகையால் நெய்ப்பட்ட நீண்டமஞ்சள் நிற பாவாடைகளையே ஆடைகளையே அணிந்திருந்தனர். அதைப்போன்றே தென் அமெரிக்காவிலுள்ள இன்கா நாகரிக மக்கள் ஆண், பெண் என இரு பாலரும் பாவாடையயே உடுத்தி வந்தனர். அதைத்தொடர்ந்து பண்டைய கீரிஸ் மற்றும் ரோமா பூரியில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் டுனிக்ஸ் (Tunics) என்ற ஆடையை பயன்படுத்தினர். அது உடல் முழுவதும் துணிகளை சுற்றி தோள்பட்டையில் கிடத்தி கையில் ஏந்தியவாறு நடப்பது வழக்கம். அவற்றை இன்றைய அருங்காட்சியத்திலும் பார்க்க முடியும். பெண்களுக்கும் அதே ஆடையே ஆனால் நீளமான நிலத்தை தவழும் வடிவமைப்பு. இதே போன்ற ஐரோப்பியர்களும் பாவாடையை பயன்படுத்தி வந்துள்ளனர். இப்படி பாவாடை வரலாறு முழுக்க ஆண்களுடன் பயணித்து வந்திருக்கிறது. பின் எப்படி இந்த பாகுபாடு தொடங்கியது. மதங்கள் வேறுன்ற தொடங்கியதும் மத நூல்கள் பல கருத்துகளை முன் வைத்தது. அப்படி பைபிலில் இடம்பெற்ற வார்த்தைகள் ஆண் பெண் பாகுப்பாட்டை வெளிக்கொணர்ந்தது.

Europe and America: History of Dress (400-1900 C.E.) | LoveToKnow

“The women shall not put on the weapons (armour) of the warrior, neither shall a warrior put on a women’s garment for all that do are abomination and the LORD thy God. “

பண்டைய காலத்தில் ஆண், பெண் என இரு பாலரும் போருக்கு சென்று வந்தனார். பின் மதங்கள் பிறக்க தொடங்கியதும் கடவுளை பின்பற்றுபவர்கள் ஆண்கள் மட்டுமே போருக்கு செல்ல வேண்டும். அதைப்போன்றே பெண்களின் ஆடைகள் அணிந்து போருக்கு செல்லக்கூடாது என்பதே இதன் பொருள். கி. பி 1604 பின் இங்கிலாந்தை ஆண்ட அரசர் ஜெம்ஸ் I பைபிலை ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டு மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த மொழிப்பெயர்ப்பு சில இடங்களில் தவறான புரிதலை உருவாக்கியது. அதன் பின் ” Modern International English”யில் மொழிப் பெயர்க்கப்பட்டது.

” A women must not wear Mens clothing nor a man wear women’s clothing for the Lord your God detests anyone who does this”

இதன் விளைவாக பெண்கள் ஆடையும் ஆண்களின் ஆடையும் தனித்தனியாக வளர்ந்து வந்தது. ஆனால் இதற்கு மத நூல்கள் மட்டும் காரணமல்ல. அதை கடந்த நடைமுறை டிரவுசர்ஸ்(Trousees) வேலைகளை எளிமையாக செய்யவும், குதிரை சவாரி செய்யவும், போர் புரியவும் உதவியது. பெண்கள் நீண்ட ஆடையை அணிவதற்கு கழிவறைகளை எளிதாக பயன்படுத்தவும், அதையே சமயத்தில பெண்கள் மாதவிடாய் காலத்தில் ரத்தப்போக்கை வெளியேற்ற துணிகளை பயன்படுத்துவது விலை உயர்வு என்பதால் துணிகள்யின்றி அவற்றை சுத்தப் படுத்திக்கொள்ள பாவாடை உதவியது. பெண்களின் மகப்பேறு காலத்தில் சுலபமாக இருந்தது. அப்போதெல்லாம் இப்போது போன்ற மகப்பேறு டிரவுசர்ஸ்(Trousers) எதுவுமில்லை.ஆடை காலத்திற்கேற்ப நாகரிகம் வளர்ந்த விட்ட மேற்கத்திய நாடுகளிலும் இன்றும் ஓரு ஆண் பாவாடை அணிந்த தெருவில் நடந்தால் கேலியாகவும் கிண்டலாகவும் பார்க்க நாம் நம் மூலையில் ஏற்றி வைத்திருந்த பாகுப்பாட்டின் விளைவே. ஆனால் இன்றும் கூட பல நாடுகளிலும் பாவாடை போன்ற ஆடைகள் புழக்கத்தில் இருக்கிறது. ஓரு சுற்றலாவாசியாக நான் பூட்டானில் பார்த்துதிருக்கிறேன். பூட்டானில் ஆண்கள் அறியும் அடர்த்தியான பின்னிலான கோ(Gho) என்ற ஆடையும் ஒருவித பாவாடைப்போன்ற தோற்றத்தையும் தருகின்றது. பெண்கள் அணியும் கீரா(Kira) கனுக்கால் வரை நீண்டு யிருக்கும். ஆசிய புத்தத் துறவிகள் அணியும் ஆடை கூட ஓரு வித சீலைப்போன்ற தோற்றத்தை தருகிறது. ஆனால் அதை பார்த்து நாம் சிரிப்பதுயில்லை. அதைப்போன்று பாலி நாட்டில் உடுத்தும் சாராங்(Sarang) நீண்ட துணிகளை இடுப்பிற்கு கீழ் உடுத்தும் பழக்கம் இருக்கிறது. ஸ்காட்லாந்தில் ஆண்கள் கில்டு(Kilt) என்ற ஆடையை அணிந்து வேலைகளை செய்கின்றனர்.

As they say in Scotland, It takes a real Man to wear a skirt”.

Hashtag #வேஷ்டி na Twitteru

ஓரு பழமொழிக்கூட உண்டு ஸ்காட்லாந்தில் உள்ளவர்களுக்கு மிகவும் பிடித்த ஆடையும் கீல்டு (Kilt) . ஏன் தென் இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் வேஷ்டி கட்டும் பழக்கம் இருக்கிறது. இன்றும் தமிழர் திருநாளன்று அனைவரும் விரும்பி அனியும் உடை வேஷ்டி.

இப்போது சொல்லுங்கள் ஆண் பாவாடை அணிந்தால் என்ன தவறு. அடுத்த முறை யாரேனும் ஆண்களை பார்த்து பாவாடை கட்டிக்கொள் என்றால் அதை பெறுமையுடன் எதிர்க் கொள்ளுங்கள். குறிப்பாக பெண்களை பாவாடை என்பதை பாலின பாகுப்பாட்டின் அடிப்படையில் கேலிக்கூத்தாக்கவது நம்மை நாமே தூற்றிக்கொள்வது போன்றது. ஆடை வெறும் அடையாளம் அல்ல. அது பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கம். Then ask , Why dont Men wear skirt?