இசை - கவிதை - கவிஞர் பாவலன் | Isai (Music) A Tamil Poetry Written By Pavalan Ellappan - Book Day -Kavithaikal - https://bookday.in/

இசை – கவிதை

இசை – கவிதை

என் அன்பான
அழகான
இனிய இசையே..!
உன்னால்
எத்தனைப் பெரிய இன்பம்..?
நீ –
சப்தமாய்,
இரைச்சலாய்,
கவிதையாய்,
இசையாய்,
அவர்களது
தேவைக்கு ஏற்பது
போலவே இருக்கிறாய்.

ஒரு நிசப்தத்தின் முடிவில்
எங்கிருந்து பிறந்தாய்.
என்னையும்
உன்னுடன் அழைத்துச் செல்
என் இனிய இசையே..!

பறையில்,
மத்தளத்தில்,
வீணையில்,
நையாண்டியில்,
நாதஸ்வரத்தில்,
ஒரே நேரத்தில்
எப்படி இத்தனை
இடங்களில் – நீ

படித்தவனும்,
பாமரனும்,
உழைத்தவனும்,
கலைத்தவனும்,
உன்னிடத்தில் சற்று
இளைப்பாறத்தான் வேண்டும்…
என் இனிய இசையே.

நீ –
நடக்க மறந்தாய்,
ஒரே இடத்தில்
இருக்கம் மறந்தாய்.
மொழியை மறந்தாய்.
சாதியை வெறுத்தாய்,
மதத்தை மறந்தாய்,
எல்லோருக்கும்
சொந்தமானாய் – நீ

அப்படித்தான்
என்னையும்
வருடி,
திருடி
சென்றாய் – நீ

என்
அருமையான
சின்ன இசையே
ஒரு கல்வி சாலையில்
உன்னை
அடைத்து வைத்துப்
பட்டம் பெறத் துடிக்கின்றனர்.

அவர்களுக்கு
எப்படி தெரியாமல் போனது?
நீ உழைப்பை விரும்பும்
அத்துனைப் பேருக்கும்
சொந்தம் என்று.

 

எழுதியவர் : 

கவிஞர் பாவலன்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 2 Comments

2 Comments

  1. முனைவர் அ.கோகிலா

    எளிமையாக எல்லோராலும் சுவாசிக்கக்கூடிய மொழியாக உம் கவிதை எங்கள் உள்ளம் நிறைத்து மகிழ்வித்தது.

  2. சாந்திபாய்

    இசையை இசைவாய் அத்தனை பேருக்கும் சொந்தமாக்கியதற்காய் நன்றி.
    ஏறியிறங்கும் அதன் நளினமும்
    உச்சந்தலையில் கொட்டி இறங்கும் அதன் கோபமும்
    நட்பும் சோகமும் மகிழ்வும் என
    எத்தனை எத்தனை பாவங்கள்
    அத்தனையும் ரசிக்கும் வண்ணங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *