இசைப்பாடல்: காட்டு நெருப்பினில் சிக்கிய மான்கள் (கண்ணிகள்) - மனோந்திரா | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

இசைப்பாடல்: காட்டு நெருப்பினில் சிக்கிய மான்கள் (கண்ணிகள்) – மனோந்திரா

இசைப்பாடல்: காட்டு நெருப்பினில் சிக்கிய மான்கள் (கண்ணிகள்)

கொஞ்சி மகிழ்ந்து குலவிக் களித்துக்
குதிக்கும் வயதினிலே- காசாவில்
கஞ்சியும் தண்ணியும் இன்றிக் குழந்தையர்
காய்ந்து கிடக்கின்றார்- தினம்
அஞ்சி நடுங்கியும் ஆவி துடித்தும்
அவதிப் படுகின்றார்- இஸ்ரேல்
வஞ்சகர் பிடியினில் மாட்டித் தினம்தினம்
மாண்டு மடிகின்றார்

குண்டுகள் போட்டுக் குடியிருப் போர்தமைக்
கொன்று குவிக்கிறது- இஸ்ரேல்
தொண்டுகள் செய்திடப் போகிற பேரைத்
துரத்தி அடிக்கிறது- உலகைத்
துண்டு படுத்தும் அமெரிக் காவும்
துணைதான் புரிகிறது- அதனைக்
கண்டு வெதும்பிப் பொதுவில் உலகம்
கவலைப் படுகிறது

காட்டு நெருப்பினில் சிக்கிய மான்களாய்
காசா மனிதருளார்- தமை
மீட்டி எடுத்திட நாதிகள் இன்றியே
வீணில் மடிகின்றார்- அவர்
நாட்டைப் பிடுங்கிட இஸ்ரேல் நினைக்குது
நாசங்கள் செய்கிறது- இஸ்ரேல்
குண்டுகள் போட்டு மனிதர் உயிருண்ணும்
கூற்றுவ னாகிறது

எந்த நொடியினில் செத்திடப் போகிறோம்
என்று தெரியவில்லை- இப்பயம்
சிந்தையில் நின்று நிம்மதி தன்னைச்
சிதைப்பது நிற்பதில்லை- மக்கள்
சிந்தும் குருதியில் நீந்திடும் யூதரின்
தீவிரம் போகவில்லை- அட
இந்தக் கொடுமையை எங்கு முறையிட
என்று தெரியவில்லை

போர்களால் பூமியைப் புண்ணாக்கு வோர்தமைப்
பூண்டுடன் தான்அழிப்போம்!- பல
ஊர்களை ஆயுதம் கொண்டு அழிக்கிற
உன்மத்த ரைஒழிப்போம்!- நல்ல
சீர்மிகு பூமியில் வாழும் மனிதர்தம்
ஜீவன் களைக்காப்போம்!- நித்தம்
சோர்வறி யாமல் உழைக்கும் தொழிலாளர்
சொத்துச் சுகம்காப்போம்!

எழுதியவர் : 

✍️ – மனோந்திரா

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *