பெண்கள் எவ்வளவோ சாதனைகள் புரிந்தாலும், உயர்ந்தாலும் , அவர்கள் எதிர்கொள்ளும் தொல்லைகளும் , சீண்டல்களும் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது….
உதாரணத்திக்கு , இந்தியாவின் மல்யுத்த வீராங்கனிகள் தெருவில் இறங்கி போராடியும், நீதி மன்றம் சென்றுதான் அவர்களுடய புகார்களே சம்பத்தப்பட்ட நபர்கள் மீது பதியப்படுகிறது.
விசாரணை நடந்து , உரிய தண்டணை வழங்கி, குற்றம் புரிந்த நபரை தண்டிப்பது என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி?
பில்கிஸ் பானோ வழக்கு அனைவரும் அறிந்ததே …… குற்றவாளிகள் 11 நபர்களை முன்கூட்டியே விடுதலை செய்கிறது குஜராஜ் மாநில அரசாங்கம்.
பிறகு ஆயுள் கைதிகள் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ததை உச்சநீதிமன்றம் ரத்து செய்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது …. இன்னும் நீதி துறைமீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இது போல அரிதான தீர்ப்புகள் மூலம் உறுதி படுகின்றன.
பெண்களின் மீதான சீண்டல்கள் புகார்கள் பொது வெளியில் வெளிப்படும் எண்ணிக்கை மிக மிகக் குறைவே….
அந்த புகார்களால் , புகார் அளிக்கும் பெண்களே மேலும் தொடர்ந்து இன்னல்களை சந்திக்கின்றனர் …
பெரும்பாலான பெண்கள் தங்கள் மீது தொடுக்கும் தொல்லைகள் , சீண்டல்கள் யாரிடமும் சொல்லாமல் தனுக்குள்ளே அடக்கி, அதிலிருந்து தப்பித்தும் , கடந்தும் சென்றுவிடுகின்றனர்.
இதுபோன்ற கருவை மையமாக கொண்ட நாவல்தான் இசைவு …..
பிரீத்தி அவருடைய மேலதிகாரியின் சீண்டலுக்கு அவர் மனம் அடையும் இன்னல்களால் நாவல் படிப்போரின் மனமும் அமைதி இழக்கிறது…
நாவல் படிக்க படிக்க விறுவிறுப்பாக எல்லா கதாபாத்திரங்களுடன் நாமும் பிரீத்தியின் அலுவலகம் , ஃபுட்கோர்ட், அலுவலக கட்டிடமும் ஃபுட்கோர்டும் இணைக்கும் நடைபாதை தோட்டம் , பூசெடிகள், அவருடைய கணவர், குழந்தைகள், அலுவலக மீட்டிங் என பிரீத்தியுடன் அவருக்கு துணையாக உள்ள பல சக தோழமைகளுடன் நம்மையும் பயணிக்க வைக்கிறார் ஆசிரியர் .
நாவல் படிக்க ரொம்ப சவுகரியமாக படிக்கும் நடையில் தொய்வு இல்லாமல் ஒரு உயிர் ஓட்டமாக நாவல் படிக்கும் ஒவ்வொருவரையும் ப்ரீத்திக்கு துணையாக நிறுத்துகிறார் ஆசிரியர்.
மேலதிகாரி ராஜ்யின் தவறான அணுகுமுறையை நேருக்கு நேராக கண்டிக்காமல், அதனை தன்னுடைய கணவரிடமும் , தன்னுடன் வேலைசெய்யும் சக நம்பர்களிடமும் சொல்லாமல் தன்னந்தனியாக சவால்களை எதிர்கொண்டு துவண்டுவிடாமல் , தன்னுடைய வலியை, வலிமையாக்கி வெற்றிபெறுகிறார் பிரீத்தி.
அலுவலகத்தில் பெண் சீண்டல்களுக்கு எதிராக , இதற்காகவே உருவாக்கப்பட்ட குழுவிடம் புகார் அளித்தாலும் ஆதாரம் என்ற ஒன்றை கேட்டு சீண்டலிருந்து பாதுகாப்பை பெறமுடியாமல் தவிக்கும் அவல நிலை மாறவேண்டும்.
பெண் சீண்டல், பெண்ணடிமை, etc என்பது சமுதாயத்தின் புற்று நோய் ஆகும். இதனை வேரோடு கலையவேண்டும் .
சேலை மீது முள் பட்டாலும், முள் மீது சேலை பட்டாலும் சேதாரம் சேலைக்குத்தான்’, என்று பெண் ஆடை சார்ந்தே குற்றங்களை நோக்கும் பொது சமூகம், வேட்டி முள் மீது பட்டாலும் முள் வேட்டி மீது பட்டாலும் சேதாரம் வேட்டிக்குத்தான் என்று ஆண்களின் குற்றப்பின்னணிகளை நியாயப்படுத்தாமல் கண்டித்து திருத்த முற்பட வேண்டும்….
பெண்கள் மீது தொல்லை , சீண்டல்கள் கொள்ளாத குற்றமற்ற ஆண் சமுதாயத்தை கட்டமைக்க உறுதியேற்போம் !!!….
தோழர் அவர்களின் பணி மேலும் பரந்து விரிந்து பல படைப்புகளை உருவாக்க வாழ்த்துக்கள்!!!
நன்றி !!
நூலின் தகவல்
நூல் : “இசைவு” (குறு நாவல் )
ஆசிரியர் : ப்ரியா ஜெயகாந்த்
வெளியீடு : முகவரி வெளியீடு
விலை : ரூ.100
பக்கங்கள் : 72.
எழுதியவர்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

