இஸ்ரோ விஞ்ஞானி ஆவது எப்படி? – நூல் அறிமுகம்
இன்று ஒரு செய்தி கண்டேன்.
ஆடு மேய்ப்பவரின் மகன் மத்திய அரசு வேலையில் உயர் அதிகாரியாக பதவி ஏற்கிறார் என்று. வறுமை காரணமாக அவர் எந்த பயிற்சி வகுப்பிலும் சேர இயலவில்லை. தனது கைபேசி மூலம் இணையத்தில் தகவல்கள் சேகரித்து அவர் தேர்விற்கு தயாராகி உள்ளார். இதை அவரே அவரது பேட்டியில் கூறுகிறார்.
சாமானியனும் சாதிக்கின்றார் என்றால் நமது இந்தியாவை பொருத்தவரை அது இஸ்ரோவினால் தான் என்பதை இந்த நூல் வாசித்த பிறகு யாவரும் ஒப்புக் கொள்வர்.
ஆம் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இணையத் தொடர்பு இருக்கும் பொழுது எதுவும் சாத்தியமாகிறது.
அது போல் மக்கள் நலனில் அக்கறை கொண்டே நமது இஸ்ரோ நிறுவனம் விண்வெளி ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது.
எதற்குச் சொல்கிறேன் என்றால் பெருவாரியான மக்கள் வாழ்வாதாரத்திற்கு போராடும் பொழுது பெரும் செலவில் விண்வெளிக்கு ஏவூர்தி செலுத்துவதால் என்ன பயன் என்கின்றனர். விண்வெளி ஆராய்ச்சி தொடங்கிய நாள் முதல் மக்கள் பயன்பாட்டிற்கான அதாவது விவசாயம், தொழிற்சாலை போன்ற பல அடிப்படை கட்டமைப்பிற்கு இஸ்ரோ முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
இப்படிப்பட்ட உயர்ந்த நோக்கு உள்ள பெருமைக்குரிய நிறுவனத்தில், “இஸ்ரோ விஞ்ஞானியாவது எப்படி ?” என்றால் இந்நூலை படித்தால் தெளிவு கிடைக்கும்.
இந்நிறுவனத்தில் பணியில் சேர எந்த அளவிற்கு உழைப்பு மற்றும் ஈடுபாடு வேண்டி இருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம்.
இஸ்ரோவை பற்றின புத்தகங்கள் என்னென்ன? யாரெல்லாம் இஸ்ரோ தொடங்க மற்றும் இஸ்ரோவை உருவாக்க பாடுபட்டார்கள் என்பதை அறியலாம்.
ஒரு தலைவனுக்கான பண்புகள் குறித்து மேதகு திரு. சதீஷ் தவன் ஐயா பற்றியும், எந்த நாடும் ஒத்துழைப்பு நல்காத காலத்தில் சொந்த நாட்டில் செயற்கைக்கோளை உருவாக்கி சொந்த ஏவூர்தியயை விண்ணில் செலுத்தி மகத்தான சாதனை புரிந்த மேதகு.திரு அப்துல் கலாம் ஐயா அவர்கள் பற்றியும், இஸ்ரோவிற்கு ஒரு இதயம் இருந்து அது துடிக்குமேயானால் அது விக்ரம் விக்ரம் என்று துடிக்கும் என்று இஸ்ரோ உருவாக காரணமாக இருந்த விக்ரம் சாராபாய் பற்றியும், சொல்லப்போனால் இன்றைய விஞ்ஞானி முத்துக்குமாரவேல் ஐயா அவர்கள் வரை பல விஞ்ஞானிகளை இந்நூலில் அறிய முடிகிறது.
நமது இந்திய விண்வெளி சாதனைகள் அனைத்தும் இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டிருக்கிறது.
ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டால் இஸ்ரோவில் பணியில் சேரலாம் என்ற ஒரு அறியாமை நிலவுவதை சுட்டிக்காட்ட ஆசிரியர் தவறவில்லை.
உங்களுக்கான தேடல் இஸ்ரோ என்றால் அதில் சேருவதற்கான வழிவகைகள் இந்நூலில் உள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்கள் ஒரு நல்ல புரிதலை ஏற்படுத்திக் கொள்ள இந்த நூல் பெரிதும் உதவும்.
இப்படிப்பட்ட மாணவர்களுக்கு அத்தியாவசியமான இந்த புது வரவு அரசு நடத்திய கடலூர் புத்தகத் திருவிழாவில் இந்நூலை அவர்கள் வெளியிடுவதற்கு பதிலாக இயல் இசை நாடகம் எனும் போர்வையில் பாட்டுக் கச்சேரி கூத்து நடந்ததை பார்த்து வியந்து போனேன்.
பிள்ளைகள் சரியாக படிக்கவில்லை என்று வருத்தப்படும் பல பெற்றோர்கள் மீது சந்தேகமும் எழுகிறது!…
அவர்களும் அந்த பாட்டுகச்சேரியைத்தான் கொண்டாடினார்கள்.
புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதற்கு பதிலாக ஒரு புத்தக கண்காட்சி என்ற போர்வையில் சினிமா பாட்டு கச்சேரி நடத்தியதால் வாங்க வந்தவர்கள் கூட புத்தகம் வாங்குவதை தவிர்த்து அவர்கள் பொழுதுபோக்கி சென்றார்கள்.
ஆனாலும் இந்த அற்புதமான நூலை முனைவர். திரு. பெ. சசிக்குமார் இஸ்ரோ விஞ்ஞானி அவர்கள் திருவனந்தபுரத்திலிருந்து வந்து பாரதி புத்தகாலய அரங்கிலேயே வெளியிட்டு தனது சிறப்புரையை வழங்கி இந்நூலிற்கு பெருமை சேர்த்தார்.
புத்தகங்கள் பரிசளிக்க இந்நூல் ஒரு சிறந்த நூல். அனைவரும் வாங்கி படியுங்கள். இந்நூலை பரிசளியுங்கள். இந்த நூலை பரிசளித்தால் உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் கூடும் என்பதும் நிச்சயம்.
நன்றி 😊🙏🏻
நூலின் விவரம்:
நூல்: இஸ்ரோ விஞ்ஞானி ஆவது எப்படி?
ஆசிரியர்: ஆயிஷா இரா.நடராசன்
பதிப்பகம்: Books for children, பாரதி புத்தகாலயம்
விலை: ₹80
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
எழுதியவர்:-
சு. ஹரிகிருஷ்ணன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

