இந்திய மக்களுக்கு பொதுத்துறை என்பது தேவை. இந்த கோவிட் 19 காலம் இதை சந்தேகத்திற்கிடமின்றி உறுதி செய்துள்ளது..நரேந்திர மோடியின் அரசாங்கம் பொதுத்துறையினை தனியார் மயமாக்கியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டுள்ளது.  நமது நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீத்தாராமன் அவர்கள்  மே 17 இல்  செய்துள்ள அறிவிப்புகளைப் பார்த்தால், பாதுகாப்பு தொடர்பான உற்பத்தி துறை நீங்கலாக உள்ள இதர மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் இந்த அரசாங்கம் தனியார் மயமாக்கி விடும் என்பது தெளிவாகத் தெரிகிறது.  பாதுகாப்பு தொடர்பான உற்பத்தி துறையில்,  மிக அதிக பட்சமாக நான்கு நிறுவனங்கள் மட்டுமே பொதுத்துறையில் செயல் படும் -அங்கும் தனியார் உள்ளே நுழைய அனுமதிக்கப் படுவர்., விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட விண்வெளி சார்ந்த அனைத்து நடவடிக்கைகளிலும் தனியார் முதலீடுகள் அனுமதிக்கப்படும். ஆக .பாதுகாப்பு துறை என்பதில் ஒரு தெளிவற்ற நிலையே உள்ளது. பொதுத்துறை தொடர்பான கொள்கை அறிவிப்பு விரைவில் அறிவிக்கப் படும் என நிதி அமைச்சர் கூறியுள்ளார். உற்பத்தி துறை மற்றும் பொது சேவைத்துறைகள் அனைத்தின் தலை மீதும் தனியார் மயமாக்கல் என்னும் அபாயம் தொங்கிக் கொண்டிருக்கிறது.

         “ இறக்குமதியில் சார்புத்தன்மை குறைப்பு  மற்றும் தன்னிறைவு பெற்ற இந்தியா” -இவைகளை அடையும் சுயசார்பு பாரதம் என்ற திட்டத்தின் கீழ் இந்த மகா அறிவிப்புகள் வந்துள்ளதுதான் ஒரு மிகப்பெரிய முரணாகும்..  மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை 2.10 லட்சம் கோடி வருமானத்தை இலக்காக வைத்துள்ளது. .அதில் 1.20 லட்சம் கோடி மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் முதலீடுகளை தனியாருக்கு விற்பதன் மூலம்தான் கிடைக்கும்.

நாட்டு பாதுகாப்பு தொடர்பான உற்பத்தி மற்றுமுள்ள இதர துறைகள்

      பொதுத்துறையை தனியார்மயமாக்கும் இந்த முடிவு 2020-21 நிதி நிலை அறிக்கையின் படியும்  “சுய சார்பு பாரதம்” திட்ட தொகுப்புகளின் அடிப்படையிலும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இது குழப்பமான ஒன்றாகும். தொழில் நுட்பம், , சந்தை உற்பத்தி,  இறக்குமதிக்கு மாற்றான உற்பத்தி ஊக்குவிப்பு ,இவற்றின் மூலம்தான்  தன்னிறைவு பெற்ற இந்தியா என்பதே சாத்தியம். இதை நிறைவேற்ற  பொதுதுறை நிறுவனங்களால்தான் முடியும். நாட்டு பாதுகாப்பு தொடர்பான உற்பத்தி துறை என்பது ஆயுதங்கள், இராணுவ தளவாடங்கள், அதற்கு தேவையான இதர உபகரண தயாரிப்புகள், போர்க் கப்பல், போர் விமானங்கள் அணு சக்தி  மற்றும் தொடர்வண்டி போக்குவரத்து இவற்றோடு சம்பந்தப் பட்டதாகும். இவை தவிர மீதமுள்ள அனைத்தும் இதர பொதுத்துறை நிறுவனங்களாக கருதப் படும். இப்படி பிரிக்கப் பட்டவை எல்லாம்  சுய சார்பு பாரதம் என்ற தர்க்கத்திற்கு எதிராக செல்கிறது. பொதுத்துறை முழுவதுமே அழிவுகரமான போட்டிக்கு உட்படுத்தப் படுகிறது. வெளி நாட்டு முதலீட்டாளர்கள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். பொருளாதார இறையாண்மை, தொழில்நுட்ப தன்னாட்சி, தேசப் பாதுகாப்பு, அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவற்றிகு இந்த வெளிநாட்டு மூலதனங்கள் பெரும் சவாலாய் உள்ளன.  தொலைத்தொடர்பு,  வாகனங்கள், வேதியல் பொருட்கள், ஜவுளி, விமானப்போக்குவரத்து, தோட்டம் மற்றும் பயிர்த்தொழில், கனிம வளம்,, பெட்ரொலியம்,, இயற்கை எரிவாயு, பாதுகாப்பு தளவாட உற்பத்தி, ஒலி-ஒளிபரப்பு, விவசாயம், கால்நடை பராமரிப்பு, தொடர்வண்டிக்குரிய உள்கட்டுமானம், தொழில் பூங்காக்கள், நேரடி பணப் பரிவர்த்தனை மொத்த வணிகம், மின் வணிகம், மருந்துகள் அகிய இவை அனைத்திலும் 100 சத நேரடி அன்னிய மூலதனம்——-தனியார் வங்கித்துறையில் 74 சதம் நேரடி அன்னிய மூலதனம் ——- ;காப்பீட்டுத் துறையில் 49 சதம் நேரடி அன்னிய மூலதனம். இவ்வாறுதான்  இந்த ‘சுயசார்பு பாரதம் ‘ திட்டத்தின் கவனம் செல்கிறது.

Discoms in Union Territories to be privatised: Finance Minister

சில்லறை வணிகத்திலும் நேரடி அன்னிய மூலதனத்தினை வரவேற்கின்றனர். இந்த முறை தனியார் மயமாக்கல் என்பது  அதிகமான நவீன  தொழில் நுட்பம் வாய்ந்த, “இரயில்வே” , “ஏர் இந்தியா”,  “பாரத் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் மற்றும் எரி வாயு நிறுவனங்கள்”, “இந்திய எஃகு ஆணயம்”, “இந்திய கப்பல் கழகம்”, மற்றும் “வட கிழக்கு மின் சக்தி கழகம்” என ஏராளமாக இருக்கும்.. வலுவான மூலதன ஆதாரங்கள் உள்ள பொதுத்துறைகள் மீதுதான் தனியார் மயம் என்ற சுத்தியல் இறங்க உள்ளது.  மின் சாதன இயந்திரங்கள் மற்றுமுள்ள இதர இயந்திரங்கள், உலோகம், இர்சாயனம் மற்றும் உரம், கப்பல்,  வானூர்தி,  தொடர்வண்டி இயந்திரங்கள்,  கன ரக இயந்திரம் போன்ற உற்பத்தி துறைகளும்,  மின்சாரம்,  நிலக்கரி,  எண்ணெய்,  எரிவாயு, ரயில்வே,  விமான போக்குவரத்து,  தொலைத் தொடர்பு,  பாதுகாப்பு, மின்னணுவியல்,   மருந்துகள்,  போன்ற பொது சேவைத் துறைகளும் இந்த அபாயத்தை எதிர் கொள்ளவிருக்கின்றன.  இந்த துறைகள் இறக்குமதிக்கு மாற்றாக செயல் பட்டு வந்தது.. மேலும் வெளிநாட்டு தொழில்நுட்பத்தை உள்வாங்கி  உற்பத்தி செய்து நமது ஏற்றுமதியை ஊக்குவிப்பதிலும் பெரும்பங்கு ஆற்றியுள்ளன.

பொதுத்துறை நிறுவனங்களின் தனித்துவமான தொழில் நுட்ப மேம்பாடு, பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நலன், இவற்றில் அவர்களது தற்போதைய மற்றும் எதிர்கால பாத்திரங்களை முற்றிலுமாக புறக்கணித்து விட்டு, அவைகளை ஒட்டு மொத்தமாக தனியார் மயமாக்குவது,— அப்படியே தனியார் மயமாக்கினாலும் அதனால் அரசுக்கு கிடைக்கவிருக்கும் வருமானம் பற்றிய ஒரு உறுதியற்ற நிலயில்– குறிப்பாக இன்று நிலவும் இந்த குழப்பமான சூழ்நிலையில் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக தனியார் மயமாக்குவதென்பது மிகுந்த அபாயகரமானதாகும். அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் மயமாக்குவது அர்த்தமற்றதாகும். நவீன தாராளவாத அதிகாரத்துவ பணியாளர்களும்,, அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க வாடகைக்கு எடுக்கப் பட்டுள்ள வெளி நாட்டு ஆலோசகர்களும், இந் நிறுவனங்களை திறம்பட செயல் பட வழங்கும், திட்டங்கள், ஆலோசனைகள் அனைத்தும் அபத்த களஞ்சியங்களே

உற்பத்தி துறையிலும்,இதர துறைகளிலும்,  மூலதனம் ஈட்டும் லாபம் அல்லது அது கொடுக்கும் வரி போன்றவற்றில் தனியார் துறை நிறுவனங்களை விட பொதுத் துறை நிறுவனங்களே மேலான செயல் திறன் வாய்ந்தவை என்பது நிரூபணம் ஆகிக் கொண்டிருக்கும் தருணத்தில் இவை நடப்பதென்பது விசித்திரமாக உள்ளது.  தனியார் துறையை விட மேலாக நுண் செயல்திறனோடு, பொதுத்துறை நிறுவனங்கள் வெகு சிறப்பாக செயல் பட்டு வருகின்றன., தொழில்நுட்பத்தில் நல்ல முன்னேற்றம் அடைந்தது மட்டுமின்றி, உற்பத்தியில்  மீண்டும் முதலீடு செய்ய பெரிய உபரி கையில் வைத்திருக்கும் போது, கோவிட் டிற்கு பிந்தைய கால கட்டத்தை எதிர்த்து செல்வதில் பொதுத்துறை நிறுவனங்களுக்குரிய முக்கிய பாத்திரத்தை இந்த அரசு கவனத்தில் எடுக்கத் தவறுவது ஒரு மிகப் பெரிய முரணாகும். அட்டவணை 1 பொதுத் துறை மற்றும் தனியார் துறை செயல்பாடுகளின் ஒரு ஒப்புநோக்கு

             CENTRAL  PUBLIC  SECTOR  ENTERPRISES  AT  A  GLANCE    (RUPEES IN LAKH CRORES)

PARAMETER

2018-19

2017-18

PERCENT

TOTAL PAID UP CAPITAL

2.75

2.53

8.55%

TOTAL FIN. INVES

16.4

14.31

14.65%

CAPITAL EMPLOYED

26.33

23.57

11.71%

TOTAL GROSS TO

25.43

21.54

18%

TOTAL INCOME

24.4

20.32

20.12%

NET PROFIT

1.74

1.55

178nosOF CPSE

NET LOSS

0.31

0.32

70  NOS OF CPSE

OVERALL NET PROFIT

1.42

1.23

15.52%

RESERVES

9.93

9.26

7.17%

NET WORTH

12.08

11.15

8.36%

DIVIDEND

0.71

0.76

128 NOS OF CPSE

CONT.TO EXCHEQUER

3.68

3.52

4.67%

FOREIGN EXCHANGE

6.64

5.22

27%@144NOS OF CPSE

CSR

0.38

0.34

150 NOS OF CPSE

SALARY & WAGES

1.52

1.53

SLIGHTLY DECREASED

TOTAL MARKET CAP

13.71

15.2

DECREASED

MARKET CAP AS % OF BSE

9.08

10.69

DECREASED

TOTAL CPSE

335

NUMBER OF CPSE

MAHARATNA

10

NUMBER OF CPSE

NAVARATNA

14

NUMBER OF CPSE

MINIRATNA – I

73

NUMBER OF CPSE

MINIRATNA – II

12

NUMBER OF CPSE

SOURCE PUIBLIC SECTOR SURVEY FOR 2018-19 AT  DPE WEBS.COM

       தனியார் நுழைவுகளுக்கான பெரும் ஆதரவு, சுயேச்சையான ஒழுங்குமுறை ஆணையங்களின் உருவாக்கம், எங்கெல்லாம் பொதுத்துறை நிறுவனஙளுடன் தனியார் நிறுவனங்கள் போட்டி போடுகிறதோ அந்த துறையில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த அரசாங்க உள்கட்டமைப்பை விலக்குவது (அரசுக்கு சொந்தமான விமானநிலையங்கள்- அரசுக்கு சொந்தமான விமான சேவை) விலை நிர்ணயிப்பில் அளிக்கப் பட்ட தாராளவாதம் இப்படிப்பட்ட நடவடிக்கைகளை உள்ளடக்கியதுதான் 1990களில் துவங்கிய பொருளாதார சீர்திருத்தங்கள். செயல்பாட்டு ஒப்பந்தங்கள் ,புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் சந்தைப்படுத்துதல் மற்றும் செயல் திறன் முன்னேற்றம் கோரப்பட்டது. ஒரு பொதுத்துறை நிறுவனம் மற்றும் அதனை நிர்வகிக்கும் அமைச்சகத்திற்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் காணப்பட்டு, அதன் அடிப்படையில் அதிக பொறுப்புகளுக்கு ஈடாக அந்நிறுவனங்களுக்கு சுயாட்சி வழங்கப்பட்டது.  எந்த நிறுவனத்திலும் 20 சதமான பங்குகளுக்கு மேல் தனியாருக்கு தரப்படவில்லை. சில பகுதிகளில் அந்த பங்கு விற்பனை முழுவதும் முடிவதற்கு முன்னரே  தனியார் வசமாக்கும் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப் பட்டன அல்லது திரும்பப் பெறப்பட்டது. 2005 இல் தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளிலிருந்து அரசாங்கம் பின் வாங்கியது.  மின் உற்பத்தி சாதனம் தயாரிக்கும் ‘பாரத மிகு மின் கழகம்’ (Bharat Heavy Electricals Limited) , கனிம நிறுவனமான ‘தேசிய அலுமினிய நிறுவனம்’  (National

Aluminum Company,)  மேலும் கட்டுமானப் பணி, கப்பல் கட்டும் நிறுவனம்,  உரத் தயாரிப்பு நிறுவனம்  போன்ற கேந்திரமான 13 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கும் திட்டம் அரசால் கை விடப்பட்டது. அதிக பரிவர்த்தனை செலவுகள் போன்ற பொருளாதார பிரச்சினைகளாலும்,  தனியார் நிறுவனங்களின் ஆர்வமின்மை போன்ற சிக்கல்கள் காரணமாகவும்  சில திட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன.  தனியார் மய நடவடிக்கைகள் திரும்பப் பெறப் பட்டதில், தொழிற்சங்கங்களுக்கும், கம்யூனிஸ்டுகளின் ஆதரவு கொண்ட கூட்டணி அரசாங்கங்களுக்கும் ஒரு முக்கியப் பங்கு உண்டு.

அரசின் பொறுப்பு குறைப்பு 

இருப்பினும், அரசாங்கம்  பொதுத்துறைக்கு அளித்து வந்த ஆதரவின் அளவைக் குறைத்தது. பொதுத்துறைகள் தன்னிறைவு அடைவதற்குரிய பங்களிப்பிற்கு  அரசு முன்னுரிமை அளிக்கவில்லை. அதாவது பொதுத்துறைகள் பெரிய அளவில் இறக்குமதிக்கு  மாற்றாக வருவதற்கும், உள்நாட்டு தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கும் ஊக்கமளிக்கவில்லை. பொதுத்துறை நிறுவனங்கள் திறமையற்றவை, அவை கிடைக்கக் கூடிய வாய்ப்புகளை தனியார் துறையப் போல்மிகவும் திறமையாக பயன்படுத்துவதில்லை.என்வே பொதுத் துறை நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சியைகுறைக்கின்றன என்பது சந்தை பொருளாதார சீர்திருத்த ஆதரவு கருத்துக்களில் உள்ள ஒரு வழக்கமான நம்பிக்கை. இது தறான ஒன்றாகும். ஏனெனில் தொழில்நுட்ப வளர்ச்சியும் முன்னேற்றமும்தான் பொருளாதார வளர்ச்சியின் மையமாக செயல்படும்.

     தனியார் மயமாக்கல் என்பது,  பாகாசுரப் பெரும் நிறுவனங்களுக்கு (கார்ப்பொரேட்டுகளுக்கு) உதவியாய் இருந்தது. எண்ணெய் சுத்திகரிப்பு தொழிலை ரிலயன்ஸ் நிறுவனத்திற்கு தாரை வார்த்துக் கொடுத்ததன் மூலம் அம்பானியை அத்துறையின் ஏகபோக உரிமையாளராக ஆக்கினர்.  “விதேஷ் சன்சார் நிகாம்” எனும் தொலைத்தொடர்பு  நிறுவனத்திற்கு சொந்தமாக மும்பையிலிருந்த ஒரு சில சொத்துக்களை மட்டுமே விற்றதன் மூலம் அந்நிறுவனத்தின் மொத்த மூலதனத்தையும்  டாட்டா திரும்பப் பெற்றுக் கொண்டார்.. இப்போது டாட்டா தொலைதொடர்பு நிறுவனம் செயலற்றுக் கிடக்கிறது. இதுதான் திறமையா? குஜராத்தில்,அதானி, அம்பானி மற்றும் டாடாக்கள் மானியம் பெறுகின்றனர். பெரும்பாலானஅவர்களின் திட்டங்களுக்கு ”சாத்தியக் கூறு இடைவெளி நிதி”யினை (viability gap fund) அரசாங்கம்  வழங்கியது. இது முழுக்க முழுக்க இலவசமாகும்.

Privatisation comes to the rescue of Modi govt, but accompanied by ...

2019 ஆம் ஆண்டில், உலகின் மொத்த காற்று விசையாழிகளின் 40 சதம் சீனாவால் உற்பத்தி செய்யப்பட்டது.  சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட சூரிய ஒளி சக்தி தடுகள் உலக உற்பத்தியில் நான்கில் மூன்று பகுதியாகும். உலகின் மின்சார வாகனங்களில் பாதியும் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்களில் பாதியும் சீனர்களுக்கு சொந்தமானவை. அதிக சாத்தியமான இலாபம், மற்றும் நிலையான விரைவான பொருளாதார வளர்ச்சி இவற்றை அடைந்திட,  தொழில்நுட்பத்திற்கான அர்ப்பணிப்பும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும், போதுமான சந்தை தேவையும். வேண்டும்.  கொள்கை உருவாக்குவர்களுக்கு,பொது சுகாதாரம், தொழிலாளர் நலம் ஆகியவற்றின் அருமையினை கோவிட் – 19 கற்றுத் தந்துள்ளது.

           பொருளாதார வளர்ச்சி மற்றும் சாத்தியமான முன்னேற்றம் இவற்றை பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்குகின்றன என்பதைக் காட்ட ஆதாரங்கள் பல உள்ளன. வெறும் 105 கோடி மட்டுமே இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (Life Insurance Corporation of India) அரசாங்கத்தால் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்நிறுவனம் கடந்த ஆண்டில் மட்டுமே அரசின் திட்டங்களில் 21,40,106 கோடி ரூபாய்கள் முதலீடு செய்துள்ளது. தன்னுடைய இலாபத்தில் 95 சதத்தினை தனது பாலிசிதாரர்களுக்கு ஈவுத்தொகையாக அளிக்கும் ஒரே நிறுவனம் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஒன்றே.  இருந்த போதிலும் இந்நிறுவனத்தை சந்தைக்கு கொண்டு வந்து தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுக்க நினைப்பது மிகப் பெரும் குற்றமே. வளர்ச்சியுடன் இணந்த உற்பத்தி திறன், மற்றும் கால்டோர்-வெர்டோர்னின் விளைவுகள் என்பதின் அடிப்படையாக விளங்குவதுதான் பொதுத்துறை நிறுவனங்களாகும்.

பொதுத்துறை உள்கட்டுமானம்.

    தொழில் முன்னேற்றத்திற்கான கொள்கையின் முன்னுரிமைப் பகுதியாக விளங்குவது கூட்டு மேம்பாடாகும்..  பொதுத் துறை நிறுவனங்கள் மட்டுமே இது வரை தொழில்நுட்ப பரவலை எளிதாக்கி வந்தன; இனியும் அப்படித்தான்.  பெங்களூரு, சென்னை, டில்லி, ஹைதராபாத், கொச்சி, கொல்கத்தா, மும்பை, புனே போன்ற பல நகரங்களில் மிகப்பரந்து பட்டு  எற்பட்டுள்ள தொழில் வளர்ச்சிக்கும், தொழில் நுட்ப பரவலுக்கும், பொதுத்துறை நிறுவனங்கள் ஆற்றியுள்ள பங்கிற்கு நிகர் எதுவும் கிடையாது. ஆனால் இன்று முன்னுதாரணமாக கூறப்படும் நவீன தாராள மயமாக்கல் ,அரசாங்கத்தின்   பங்களிப்பினை மிகக் குறைவாகவே சித்தரித்துக் காட்டுகிறது.

கட்டுப்பாட்டாளாராகவோ, அல்லது ஒரு நிர்வாகியாகவோ இல்லை என்றால் நிதி திரட்டுபவராகவோ மட்டுமே அரசு இருந்தால் போதும் என்ற அளவிற்கு அதன் பணிகள் சுருக்கப் படுகின்றன. ஒரு பொதுக் கட்டுமானத்தை உருவாக்குவது போன்ற சித்தரிப்பு தனியாரின் செலவுச் சுமையைக் குறைப்பதற்காக  உருவாக்கப்பட்ட ஒருதலைப்பட்சமான தந்திரமே. இதன் மூலம் தனியார் துறை நிறுவனங்களின் குவி மையங்கள் எதுவும் உருவாகவில்லை.தொழில் தாழ்வாரங்கள்,( Industry corridors) சிறப்பு பொருளாதார மண்டலங்கள், மாவட்டத் தொழில் மையங்கள், மென்பொருள் பூங்காக்கள், உயிரியல் தொழில் நுட்ப பூங்காக்கள்,

அடைகாக்கும் மையங்கள் (incubation centres) போன்றவை எல்லாம்  அரசு முதலீட்டில் தனியாருக்காக உருவாக்கப் பட்டவையாகும். ஆனாலும் இவை எல்லாம் ‘இந்தியாவிலேயே தயாரிப்போம்’ என்பதை செயல்படுத்தப் போவதாக கூறும் தனியார் துறையினை உருவாக்கத் தவறி விட்டது. மருந்துத்  துறையில் தற்போதுள்ள  பொதுத்துறை நிறுவனங்களை அரசு பலப் படுத்த விரும்பவில்லை. அதிலிருக்கும் ஐந்து நிறுவனங்களில் நான்கினை தனியார் வசம் ஒப்படைக்க அரசு விரும்புகிறது..அதற்கான் நடவடிக்கைகளையும் எடுக்க ஆர்ம்பித்து விட்டது.

சீன  இறக்குமதி சார்புத் தன்மையினை குறைக்கும் வகையில் பரிந்துரைக்கப்பட்ட உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம் அதனை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. இறக்குமதி சார்ந்த பேரளவு மருந்துகள் (bulk drugs) உற்பத்தியில் உள்நாட்டு தொழில் நுட்பத்தை ஊக்குவிக்கும் வகையில்அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி ஆலோசனைக் குழுவின் (CSIR) கீழ் இயங்கும் ஆய்வகங்கள், செயல்படவில்லை. கோவிட் – 19 காலத்தில், மருந்துகளுக்கான துறை இன்னுமொரு முக்கிய அறிவிப்பினை செய்துள்ளது.  செயல் திறன் கொண்ட மருந்துகளின் சேர்மானங்களை உள் நாட்டில் உற்பத்தி செய்வதை பலப் படுத்துவதற்காக மொத்த மருந்து பூங்காக்கள்/ பேரளவு மருந்து உற்பத்தி நிறுவனங்களின் அமைவிடம் அமைக்கப் படும் என்பதுதான் அது. ஆனால் உண்மையில் சில பொதுவான வசதிகள் மற்றும் நிதி உதவிகள் ஆகியவைதான் வந்துள்ளன. இதேபோன்ற அணுகுமுறை இமாச்சல பிரதேசத்தின் பட்டி மற்றும் ஆந்திராவின் விசாகப்பட்டினம் ஆகியவற்றில் முயற்சிக்கப்பட்டது. ஆனால் அவை  தொழில்நுட்ப ரீதியாகவும்

கட்டமைப்புரீதியாகவும் செயல் திறனற்று இருந்தது விந்தையான ஒன்று. இந்திய மருந்து ஏற்றுமதி மேம்பாட்டு ஆலோசனைக் குழுஅளித்துள்ள   சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையின் பரிந்துரைகளை நிதி ஆயோக் புறக்கணித்திருப்பது கவலைக்குரிய விஷயமாகும்.மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூரால் அறிவிக்கப் பட்ட  இமாச்சல் பிரதேசத்தின்,பட்டி நகைல்  உள்ள மொத்த மருந்து பூங்கா அடிப்படையிலேயே செயல் திறன் கொண்ட மருந்துகளின் சேர்மானங்கள் உற்பத்திக்கு ஏற்றதாக அமையவில்லை. மேலும் பார்மெக்ஸில் அறிக்கையால் அது பரிந்துரைக்கப் படவுமில்லை..

Forget selling PSUs, govt can't even shut loss-makers - The ...

       இப்படிப்பட்ட  குறுகிய பார்வையுடனான அணுகுமுறைகளின் அறிவிப்பு பொதுத்துறைகளுக்கான எதிர்கால பங்களிப்பு எப்படியிருக்கும் என்பதைத் தெளிவாக்குகிறது. தன்னிறைவு பெறும் உற்பத்திக்கு தேவையான, தொழில் நுட்ப மறுமலர்ச்சியில் இத்தகைய பேரளவு மருந்து பூங்காக்கள் ஒரு முக்கிய பங்காற்றுகின்றன.  பொதுத்துறை மருந்து பிரிவுகளை தனியார் மயமாக்கும் முடிவு  மத்திய அரசின் அரசியல் உறுதிப்பாட்டில் கடுமையான சந்தேகங்களை வீசி எறிகிறது. கேரள மாநில மருந்துகள் மற்றும் மருந்தாக்கத் துறைக்கு அளிக்கப்பட்டுள்ள புத்துயிரானது, கோவிட்-19 ஐக் கேரளத்தில் கையாள்வதில் மிகச் சிறப்பான பங்காற்றியுள்ளது. கொள்கை உருவாக்கத்திலும்,நிறுவனத்தைக் கட்டமைப்பதிலும் உறுதியுடன் செயல்படும் அரசியல் தலைமை இருக்குமானால் பொதுத்துறையின் திறனை சுட்டிக் காட்ட முடியும் என்பதைத்தான் இது வெளிப்படுத்துகிறது.  1991 க்குப் பிறகு உருவான, “வணிகத்திலிருந்து அரசாங்கத்தை ஒதுக்கி வைக்கும் உத்தி”  நம் நாட்டு நிலைமைகளுக்கேற்ப உற்பத்தியில் முதலீடு செய்யும் திறனை வளர்ப்பதிலும், மற்றும் உள் நாட்டு நவீன தொழில் நுட்ப கண்டுபிடிப்புக்களையும், அதன் பரவலாக்கத்தினையும் தடுத்தது.“ இந்தியாவிலேயே தயாரிப்போம்” எனும் திட்டத்தின் தோல்விகளில் இருந்து அரசாங்கம் பாடங்களை  கற்றுக்கொள்ள வேண்டும். அன்னிய நேரடி முதலீடுகளும், உள்நாட்டு தனியார் முதலீடுகளும் உற்பத்தி துறைக்கு வரவில்லை பொதுத்துறைகளால் கையெழுத்திடப்பட்ட  “ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில்” பெரும்பகுதி தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பானது மட்டுமே. நான்கில் ஐந்து பங்கு ஒப்பந்தங்கள் உற்பத்தி துறையோடு தொடர்புடையது..ஒப்பந்தப்படியான தொழில் நுட்பத்தை வாங்குவதற்கான தொகையின் கணிசமான அளவு பொதுத்துறையால் ஒரே தவணையில் கொடுக்கப் பட்டது.

நிரந்தரமாக வெளியேறும்நிலையில் உரிமைக்காக தரப்படும் பங்குத் தொகை குறைவாகத்தான் இருந்தது. ஆய்வு & மேம்பாடு  மற்றும் – தொழில் நுட்ப இறக்குமதிக்கு இடையிலான நிரப்புத்தன்மை, முக்கிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதில் சராசரிக்கும் அதிகமான முன்கணிப்பு அத்துடன் பிற நிறுவனங்களுக்கு தொழில்நுட்பத்தினைத் தந்து உதவுவது இவைதாம் தொழில்நுட்ப திறனின் குறிகாட்டிகளாகும்.  தொழில் நுட்பங்களை ஒருங்கிணைத்து, உள்வாங்கி  செய்யப்படும் முதலீடுகள் வழியாகத்தான் இவை சாத்தியப்படும். பொதுத்துறை நிறுவனங்கள் செய்துள்ள எல்லையற்ற தொழில்நுட்ப பகிர்விற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.  கனரக பொறியியல் துறை, பெட்ரோலியம், எண்ணெய் ஆய்வு,தொலைத் தொடர்பு, வேதியல் துறை மற்றும் மருந்தாக்கத் துறை இவற்றில் செயல் பட்டு வரும் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் நமது நாட்டின் தொழில வளர்ச்சிக்கு தளம் அமைத்துக் கொடுப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்துள்ளன. ஆனால் அவர்கள் நீட்டிய உதவி கரங்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை

பொதுத்துறை மட்டுமே உற்பத்தித் துறையில் பலனளிப்பவராக இருக்க முடியும்: அதன் உபரிகள் மற்றும் திறன்கள் மட்டுமே இந்தியா தன்னிறைவு  அடைய உதவும்.இந்தியா தன்னிறைவு பெற முக்கியத் தேவையாக விளங்குவது, தொலைத் தொடர்பு, மின்சாரம், ரயில்வே, எண்ணெய் மற்றும் எரிவாயு, விண்வெளித் தொழில் நுட்பம், மருந்துகள், புதிய தொழில்நுட்பங்கள், காப்பீடு,வங்கி போன்ற துறைகளே. இவைகள் பொதுத் துறையில் இருந்தால் மட்டுமே இந்தியத் தன்னிறைவு என்பது சாத்தியப் படும். சுய சார்புத் திட்டத்தின் கீழ் அறிவிக்கப் பட்டுள்ள நிதித் தொகுப்புகளில் 80 சதமானம் வங்கித் துறையைச் சேர்ந்தது; அதிலும் குறிப்பாக பொதுத்துறை

வங்கிகளைச் சார்ந்தது. ஆனால் அரசாங்கம் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையை குறைக்க விரும்புகிறது..ஏற்கனவே 20 ஆக இருந்த பொதுத் துறை வங்கிகளின் எண்ணிக்கை மார்ச் 2020 க்கு முன் 12 ஆக குறைக்கப் பட்டது. அதையும்  நான்காக குறைக்க மத்திய அரசு விரும்புகிறது. மீதமுள்ளவை தனியாருக்கு தாரை வார்க்கப்பட உள்ளது. இது பொருளாதாரத்தை அழித்து விடும். ஒரு சில பாகாசுர பெரு நிறுவனங்கள் பலன் பெறுவதற்குப் பதிலாக  பெரும்பான்மையான மக்களை பயனடைய வைக்கும் பொதுத் துறையின் மூலம் பொருளாதார மறு கட்டமைப்பினை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது.

கட்டுரையின் ஆசிரியர்கள் :-

திரு. தினேஷ் அப்ரோல்- மக்களே முதன்மையானவர்கள் என்ற பிரச்சாரக் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளர்,  CSIR-NISTADS முன்னாள் தலைமை விஞ்ஞானி

திரு. தாமஸ் ஃப்ராங்கொ- மக்களே முதன்மையானவர்கள் என்ற பிரச்சாரக் குழுவின் ஒருங்கிணைப்பாளர், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர்

New banks: red flag for public sector?

அடிக்குறிப்புகள்

2018-2019 நிதியாண்டில் அரசின் முதலீடுகளை விற்பனை செய்த வகையில் ரூ.84,972 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக 22.07.2019 அன்று நிதி அமைச்சகம்  நாடாளுமன்றத்தில் அறிவித்தது. சந்தைப் போட்டிகள் நிறைந்துள்ள காலத்தில் முதலீட்டாளர்களிடம் மூலதனப் புகுத்தல், தொழில்நுட்பமேம்பாடு, மற்றும் திறமையான மேலாண்மை நடைமுறைகள் போன்ற பல்வேறு காரணிகள் சிறப்பாக கண்டறியப்படலாம் எனவே பொருட்கள் உற்பத்தி மற்றும் சேவைத்துறைகளில் அரசாங்கம் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளக்கூடாது என்பது அடிப்படை பொருளாதாரக் கொள்கையாக  வழிகாட்டப்பட்டது: கேந்திரமான துறைகளில் அரசின் மூலதன விற்பனை நடத்தப் பட்டது. மேலும், பொதுத்துறைகளின் முதலீட்டைப் பணமாக்க முடியும் என்றும்  நிதி அமைச்சகம்  கூறியது

இந்த தனியார்மய தாக்குதல்களின் கீழ் பின்வருவன அடங்கும்:

ப்ராஜக்ட் & டெவலெப்மென்ட் இந்தியா லிமிடெட், ( Project & Development India Ltd,) இந்துஸ்தான் பிரீஃபாப் லிமிடெட் – (Hindustan Prefab Limited (HPL),   இங்ஜினியரிங் ப்ராஜக்ட் (இந்தியா) லிமிடெட்,  (Engineering Project (India) Ltd, )   பிரிட்ஜ் மற்றும் ரூஃப் கோ. இந்தியா லிமிடெட், ,   (Bridgeand Roof Co. India Ltd.,  )  பவன் ஹான்ஸ் லிமிடெட்,  (Pawan Hans Ltd.,)   இந்துஸ்தான் நியூஸ்பிரிண்ட் லிமிடெட்  ( Hindustan Newsprint Ltd (subsidiary),)   ஸ்கூட்டர்ஸ் இந்தியா லிமிடெட்,  (Scooters India Limited,) பாரத் பம்ப்ஸ் & கம்ப்ரசர்ஸ் லிமிடெட், , ( Bharat Pumps & Compressors Ltd, )  இந்துஸ்தான் ஃப்ளோரோகார்பன் லிமிடெட் ( Hindustan Fluorocarbon Ltd. (HFL) (sub.),)   சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், ( Central Electronics  Ltd,)  பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட்  (Bharat Earth Movers Ltd. (BEML), )  ஃபெரோ ஸ் கிராப் நிகாம் லிமிடெட். ( Ferro Scrap Nigam Ltd. (sub.), )  சிமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்   (Cement Corporation of India Ltd (CCI)) , நாகமர் என்.எம்.டி.சி மற்றும் அலாய் ஸ்டீல் ஆலை,  (Nagamar Steel Plant of NMDC and Alloy Steel Plant)   துர்காபூரில் உள்ள SAIL   (Durgapur of SAIL.).  கடந்த இரண்டு வருடங்களில் ஹெச்.பி.சி.எல்.( HPCL,)   ஆர்.இ.சி (REC,)   என்.பி.சி.சி

(NPCC,  )  ஹெச்.எஸ்.சி.சி (HSCC )   மற்றும் டி.சி.ஐ.எல் ( DCIL )— என்ற இந்த ஐந்து பொதுத்துறை நிறுவனங்களை பொதுத் துறையிலிருந்து கழட்டி விடும் போது இலாபம் என்பதை ஒரு காரணியாக அரசு நிர்ணயிக்கவில்லை.

2. பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள அரசாங்க பங்குகளை விற்பனை செய்தல் சமீபத்திய காலத்தில் வரி அல்லாத வருவாயின் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது. 2018 நிதியாண்டில் ரூ 100,000 கோடியும் 2019 நிதியாண்டில் ரூ 85,000 கோடியும்,2020 நிதியாண்டில் ரூ 50,300 கோடியும் வசூலாகியுள்ளது. சந்தை நிலைமைகள் உகந்ததாக இல்லாததால்,2021 நிதியாண்டில் மத்திய அரசு அதன் பங்கு விற்பனை வருவாய் இலக்கான ரூ.2.1 லட்சம் கோடியை பாதியாக குறைக்கலாம்.. பி.பி.சி..எல். (BPCL)  நிறுவனத்தின், எண்ணெய் சில்லறை விற்பனையில் மத்திய அரசின் வசமுள்ள மொத்த 53..3 சதவீதத்தினையும் ஒரேயடியாக விற்பனை செய்வதன் மூலம் ரூ. .70,000 – 80,000 கோடி வருவாயினை எதிர்பார்க்கிறது  சமீபத்தில் முதலீடு  மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை, (The Department of Investment and Public Asset Management ) பங்குகளை வாங்க  சாத்தியமானவர்கள், தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்துவதற்கான காலக்கெடுவை ஜூலை 31 வரை நீட்டித்தது

3.உற்பத்தி துறையில் பொதுத்துறை நிறுவனங்கள் முதலீட்டின் மீது எத்துணை நன்றாக வருவாய் ஈட்டுகின்றன- ஒட்டு மொத்த தனியார் துறையை விடவும் அல்லது தனியார் துறையின் எந்த பிரிவை விடவும் அல்லது அயல் நாட்டு தனியார் நிறுவனங்களை விடவும், நமது பொதுத்துறை நிறுவனங்கள்,  உற்பத்தி துறையில் செய்துள்ள  முதலீட்டின் மீது எப்படி மிக நன்றாக வருவாய் ஈட்டுகின்றன என்பதை, பொருளாதார மற்றும் அரசியல் வார இதழிலும், (Economic & Political  Weekly,  January 31, 2015, Vol. 1, No. 5,)  ‘சுஷில் கன்னா வின்’ (2015),  “இந்திய பொதுத் துறையின் உருமாற்றம்” (Sushil Khanna (2015), The Transformation of India’s Public Sector,) என்ற நூலிலும் பார்க்கலாம். சேவைத்துறையில் ,பொதுத்துறை நிறுவனங்கள் பெரும்பாலும் லாபகரமாகவே இயங்குகின்றன. தனியாரை விட சற்று குறைந்த வருமானத்தை ஈட்டினாலும், 2000-2005 இல் செயல்திறனில் நல்ல மேம்பாடு காணப்பட்டது. 2009 க்குப் பிறகு அவை இழப்புகளை எதிர் கொண்டது.

Public Sector | PSU Industries | GIS Consortium India

4. 1990-1993 க்கு இடையில், சுமார் 120 பொதுத் துறை நிறுவனங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டது அல்லது கையெழுத்திட அடையாளம் காணப்பட்டது.

5. உதாரணமாக, 1991 வரை, பொதுத் துறை நிறுவனங்கள் அந்த துறையில்  அரசாங்கத்தில் கொள்முதல் செய்யும் தனியார் போட்டியாளர்களை விட விலை விருப்பத்தில் 10 சதவீதம் முன்னுரிமை அனுபவித்தன இது  1992 முதல் 1995 வரையிலான காலகட்டத்தில் படிப்படியாக நீக்கப்பட்டது.

நிதி நிலை அறிக்கையில் பொதுத் துறை நிறுவனங்களுக்கான திட்ட முதலீடுகளுக்கு  அரசு அளித்து வந்த ஆதரவின் பங்கும் குறைந்துள்ளது அது 1991-1992ல் 23.5 சதமாக இருந்தது. இதுவே 1992-1993ல் 18.6 சதமாக குறைந்தது. ஆயினும்கூட, இணை சீர்திருத்தங்களை ஏற்றுக்கொண்ட போதிலும், அரசாங்கம் இன்னும் கறாரான பட்ஜெட் கொள்கையை பின்பற்றவில்லை நஷ்டத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு இன்னும் மானியம் வழங்கப்படுகிறது,  அரசுக்கு சொந்தமான வங்கிகளிடமிருந்து கடன் வாங்குவதையே அவை பெரிதும் நம்பியுள்ளன. உதாரணமாக, வங்கித் துறையில் சீர்திருத்தங்கள் இருந்த போதிலும், அண்மையில் பாரத ஸ்டேட் வங்கி நட்டத்தில் மூழ்கிய ஒரு ஜவுளி ஆலையினையும்  மற்றும் ஒரு தொடர் வண்டிப் பெட்டி உற்பத்தி ஆலையினையும் மீட்டெடுக்க நிர்ப்பந்திக்கப் பட்டது.

6. BHEL, BEL, IDPL, HAL, HMT, IPCL, ONGC, DOT  மற்றுமுள்ள இதர பொதுத்துறை நிறுவனங்கள் இடையேயான தொழில்நுட்பத்தின் பரவலான பரிமாற்றத்தினை, பொதுத் துறை  நிறுவனங்களின் பங்களிப்பினை மதிப்பீடு செய்யும் அளவீட்டிற்கான  எடுத்துக்காட்டுகளாக இந்திய கொள்கை வகுப்பாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *