நூல் அறிமுகம்: இது யாருடைய வகுப்பறை? – ‘புத்தக ஆர்வலன்’ வ.பெரியசாமி,புத்தகத் தலைப்பு: இது யாருடைய வகுப்பறை?
ஆசிரியர்: “ஆயிஷா” இரா.நடராசன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/idhu-yaarudaya-vaguparai-721/

** காலையில் பள்ளிக்கு குழந்தைகள் புன்னகையோடு வரும் சூழ்நிலை நிலவினால் மட்டுமே கல்வியில் மாற்றம் ஏற்பட்டதாக
பொருள்.

**அடிக்காமல்,திட்டாமல் குழந்தைகளை
அன்பால் அரவணைக்க இந்தப்புத்தகத்தை படித்தாலே போதும்

** விடைகள் கேட்டு பழக்கப்பட்ட குழந்தைகளை கேள்விகள் கேட்டு பழக்க இந்தப்புத்தகம் உதவும்.

**இந்த நூல் ஏழு பெரும் கட்டுரைகளைக் கொண்டது.

**முதலாவது கட்டுரை பழங்காலத்தில் இருந்து இப்போது வரை குருகுலம், திண்ணைப்பள்ளி, மதரஸா, தேவாலயக்கல்வி , மறுமலர்ச்சி யுகக் கல்வி என கல்வி முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றிப் பேசுகிறது.

** மாற்றம் என்பது மானிடதத்துவம்

**இரண்டாவது கட்டுரையின் தலைப்பு “இது யாருடைய வகுப்பறை?” . கல்வியில் பெரிய தாக்கத்தை உண்டுபண்ணியவை ரூசோவின் சிந்தனைகளும், ஜான் டூயியின் சிந்தனைகளும். ரூஸோ கல்வியை(Education) முன் வைக்க, ஜான் டூயி பள்ளியை(Schooling) முன் வைத்தார் என்கிறார் நடராசன்.

**“ கல்வி என்பது பரந்துபட்ட செயலாக்கம்; ஆனால் பள்ளி ஒரு குறுகிய செயலாக்கம்.” என இரண்டையும் வேறுபடுத்தி காட்டுகிறார்.

**மூன்றாவது இயலின் தலைப்பு ‘அறிவியல் தெரியும் ராமலிங்கத்தைத் தெரியுமா?’ என்பது. ஓர் அறிவியல் ஆசிரியர்க்கு அறிவியலும் தெரிந்திருக்க வேண்டும். அறிவியல் கற்கும் மாணவன் ராமலிங்கத்தைப் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும் என்பது இக்கட்டுரையின் நோக்கம்.

** “ குழந்தையைப் புரிந்து கொள்வதே ஒரு ஆசிரியனின் அடிப்படைத் தகுதி” என்று பெருங்குரலெடுத்து நூலாசிரியர் கூறுகிறார்.**நான்காவது கட்டுரையின் தலைப்பு “ வகுப்பறையின் மேற்கூரை தீப்பற்றிய போது” என்பதாகும். துள்ளி ஓட வேண்டிய குழந்தைகள் கை கட்டி வாய் பொத்தி நெருப்பில் வெந்து மடிந்த கும்பகோணத்துத் துயரத்தை நினைவூட்டிப் பதைக்க வைக்கும் கட்டுரை இதுவாகும்.

**ஐந்தாவது கட்டுரையின் தலைப்பு “ உள்ளேன் டீச்சர்” என்பதாகும். எங்கு மாணவர்கள் பாதுகாப்பை உணருகிறார்களோ, எங்கு பயம் இல்லாமல் இருக்கிறதோ அப்படிப்பட்ட வகுப்பறைச் சூழலே வல்லமையுள்ள கற்றுணரும் சரியான இடம் ஆகும் என்கிறார் நூலாசிரியர்.

**ஆறாவது கட்டுரையின் தலைப்பு, “ அவங்க வகுப்பறை நம்ம வகுப்பறை” என்பதாகும். பிறநாட்டு வகுப்பறைகளை அலசும் இக்கட்டுரை , பின்லாந்து, கியூபா நாடுகளின் கல்விமுறையைப் பரவசத்துடன் பகிர்ந்து கொள்கிறது.

**கெடுபிடியும் இறுக்கமும் அற்ற வகுப்பறைகளை உருவாக்கி இன்று கல்வித்தரத்தில் முன்னுக்கு நிற்கிறது பின்லாந்து. கியூபாவில்வகுப்பறை என்பது பாடப்புத்தக ஆதிக்கத்தில் சிக்கிய வகுப்பறை அல்ல. முழு மனிதனை உருவாக்கும் பட்டறை அது. ஜப்பானின் சுமையற்ற யுட்டோரி கல்வித்திட்டமும் வெகுவாக நம்மை ஈர்க்கிறது

**கடைசி கட்டுரை “ வகுப்பறையின் சுவர்களைத் தகர்த்தெறிவோம்” என்பது ஆகும். ஆசிரியர் என்பவர் பாடம் நடத்திப் போகிறவர் மட்டுமல்லர். அவர் வகிக்க வேண்டிய பாத்திரங்கள் ஏராளம் இருக்கின்றன. அவற்றைப் பட்டியலிடுகிறது இக்கட்டுரை.

** வகுப்பறை மகிழ்வான மாணவருக்கான வகுப்பறையாக மாற முதன்மையான பணி
ஆசிரியர் தினந்தோறும் படிக்க வேண்டும்.கற்பிப்பதை விட மாணவர்களோடு கற்றுக்கொள்ள வேண்டும்

நன்றிகளுடன்
‘புத்தக ஆர்வலன்’ வ.பெரியசாமி,
பட்டதாரி ஆசிரியர் கணிதம்,
அரசு உயர்நிலைப்பள்ளி,
பக்கநாடு ஆடையூர்,
ஆடையூர் அஞ்சல்,
எடப்பாடி வட்டம்,
சேலம் மாவட்டம்-636501
தொடர்புக்கு:9080290529
முகநூல்: Periasamy Varudharaj