இன்றைய வாசிப்பில்.. ஆயிஷா இரா.நடராசன் எழுதிய “இது யாருடைய வகுப்பறை”

“ஒரு நாட்டில் ஏறத்தாள எல்லாரும் 100% கல்வி பெறுகிற உலகின் ஒரே நாடாக பின்லாந்து உள்ளது. இன்றைய கார்ப்பரேட் உலகில் கல்வி சுற்றுலா என்பதே அந்த நாட்டிற்கு இன்று 27% அந்நிய செலாவணி வருமானத்தை வாரி வழங்குமளவிற்கு, அந்த நாட்டு வகுப்பறையை பார்த்து கற்றுக் கொள்ள ஆண்டு தோறும் நேரடியாக அங்கே விஜயம் செய்யும் கல்வியாளர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. ஆண்டுக்கு சுமார் 15000 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பின்லாந்தின் பள்ளிக்கல்வி குறித்து அறிந்துவர உலகின் சுமார் 56 நாடுகளில் இருந்து படை எடுக்கிறார்கள்.

பின்லாந்தின் கல்விமுறை தேர்வுகளே இல்லாத கல்வி முறை.

13 வயதாகும் வரை வகுப்பில் யார் முதல் யார் எந்த இடம் என தரம் பிரிப்பதே கிடையாது. அப்படி அந்த வயதில் பிரித்து சொல்ல வேண்டுமானால் பெற்றோர்கள் முறைப்படி விண்ணப்பித்தால் மட்டுமே சொல்வார்கள்.

ஒரு தனியார் பள்ளி கூட இல்லாத பின்லாந்தில் தனிக் கவன வெளி டியூசன் (தனி வகுப்பு) எனும் பேச்சுக்கே இடமில்லை.

ஒவ்வொரு திறனுக்கும் ஏழெட்டு புத்தகம் இருக்கும். அதில் எதையும் தேர்ந்தெடுக்கும் உரிமை குழந்தைக்கு மட்டுமே உண்டு!”

வெளியீடு: Books for Children
விலை: ரூ.195/-
கிடைக்குமிடம்: பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு: 044 24332424

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/idhu-yaarudaya-vaguparai-721/

Aloor Sha Navas 

விசிக மாநில துணைப்பொதுச்செயலாளர்