இது யாருடைய வகுப்பறை? (Ithu Yarudaiya Vagupparai) – நூல் அறிமுகம்
ஆரம்பகால குருகுலக் கல்வி முதல் இன்றைய டிஜிட்டல் கல்விமுறை வரை ஒரு விரிவான அலசல் இந்த புத்தகத்தில் உள்ளது.
ஆசிரியர் மாணவர் உறவு என்பது உலக அளவிலான மனித வளர்ச்சியின் வரலாற்றில் எல்லா அவசியமான திருப்புமுனைகளையும் சாதித்தது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
ஆனால் பெற்றோரின் அபரிமிதமான அன்பு, யார் சொல்வதற்கும் செவிமடுக்க தயாராக இல்லாத நடத்தை மற்றும் எதையும் குறுக்குவழியில் சாதித்துக் கொள்ள முடியும் என்ற மனப்பான்மையும் இன்றைய குழந்தைகளிடம் உருவாக முக்கிய காரணம் சில பெற்றோர்கள் தங்களை தங்கள் குழந்தைகளை ஒரு ரேஸ் குதிரை போல கட்டமைத்து அவர்களை வருங்காலத்திற்கான முதலீடாக மட்டுமே பார்க்கிறார்கள். பணம் கொட்ட வேண்டும் அவர்களின் மூலமாக என்பது சிலரின் தலையாய குறிக்கோளாக உள்ளது.அதற்காக குழந்தைமையைக் கூட கொண்டாட முடியாத அளவிற்கு பல வகுப்புகளுக்கும் போட்டிகளுக்கும் அனுப்பி வெற்றி பெற்றால் குதித்து கொண்டாட வேண்டும், தோல்வியடைந்தால் அழுது கவலை உள்ள வேண்டும் என்ற ஒரு விதியை உருவாக்கியுள்ளனர்.
இது குழந்தைகளின் மீதான எதிர்பார்ப்பு மட்டுமின்றி குழந்தைப் பருவத்தை வேட்டையாடுவது ஆகவே கல்வியாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர் என்கிறார் ஆசிரியர்.
இது சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆசிரியர் திட்டக்கூடாது அடிக்கக்கூடாது அவர்கள் குரல் உயர்த்தி பேசக்கூடாது என்று சொல்வதும், கல்வித்துறையும் இதுபோன்ற சட்டங்களை ஆசிரியர்களின் மீது சுமத்தும் போது ஆசிரியர் என்பவர் தேர்வுக்கு தயார் செய்பவர், தேர்வு நடத்துபவர், தேர்வுத் தாளை திருத்துபவர் என்ற அளவிலேயே நின்றுவிடுகிறது. ஆனால் உண்மையில் ஆசிரியர் என்பவர் மனிதவள மேம்பாட்டு கல்வி அலுவலர், திறனாய்வு மற்றும் ஊக்க அலுவலர், கண்காணிப்பு மற்றும் அறிவுரைக்கும் அலுவலர், சமூக நலப்பணிகளில் மேலாளர், குழந்தை உரிமைப் போராளி என்ற ஆசிரியரின் பல நிலைகுழைந்து போகிறது என்கிறார்.

அதுபோல ஆசிரியர் என்பவர் குழந்தைகளின் உளவியல் சார்ந்து நடந்துகொள்வது அதி முக்கியமான ஒன்று என்கிறார். ஒரு குழந்தை ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அந்தக் குழந்தையை அன்போடும் அரவணைப்போடும் முதலில் பிரச்சனையைத் தீர்க்க முயற்சிக்க வேண்டுமே தவிர அவர்களை ஒரு குற்றவாளி போல நடத்துவதும், மேலும் பேசாதே, நிமிர்ந்து உட்கார், கவனி என்று சொல்வதும் சில ஆசிரியர்கள் தண்ணீர் குடிக்கக்கூடாது பிறரிடம் பேச கூடாது கழிவறைக்கு கூட போகக்கூடாது என்பதுபோல ஹிட்லர் முகாம்களை விட அதிக உக்கிரமான விதிகளை வகுப்பறை விதிகளாக கொண்டிருப்பதே வகுப்பறை மீதும் ஆசிரியர்கள் மீதும் பள்ளியின் மீதும் குழந்தைகளுக்கு வெறுப்பை விதைக்கின்ற மூலகாரணம் என்கிறார் நடராசன். ஆசிரியர் ஆசிரியராக இருக்க வேண்டுமே தவிர ஆசிரியர் காவல்துறை கண்காணிப்பாளராக வகுப்பில் இருக்க வேண்டிய அவசியமில்லை ஒழுக்கம் என்ற பெயரில் இன்றைக்கு நாம் வகுப்பறையில் குழந்தைகளின் மீது திணிக்கப்படும் வன்முறையையும் அதை எளிமையாக எப்படி மாற்றலாம் .
ஆசிரியரின் செயல்திறனை வளப்படுத்தி இன்றைய கல்வி சூழலில் தைரியம் ஊட்டுதல் ஆதரவு அளித்தல் வகுப்பறையின் இறுக்கமான சூழலை கலகலப்பாக்குவது மாணவர்கள் தங்களது திறமையை அறியச் செய்தல் பாகுபாடு காட்டாத நேர்மை மனிதநேயம் உணர்வைக் காட்ட வெட்கப்படாத தன்மை அறிவாற்றலை உணர்ந்து புதுபுது உத்திகளை வளர்ப்பது குற்ற உணர்வற்ற குழந்தைகளை உருவாக்குவது எப்படி என்பதை எல்லாம் இது யாருடைய வகுப்பறை ஏழு தலைப்புகளின் கீழ் விரிவாகவும் அவசியமான தேவைகளையும் தெளிவாக எடுத்து கையாண்டுள்ளார்.
இந்த புத்தகத்தின் முழு நோக்கம் இந்தச் சமூகத்திற்கு நல்ல மனிதர்களை சமூக அக்கறை கொண்ட மனிதர்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வகுப்பறையில் இருந்து மகிழ்ச்சியாக தொடங்குவது எப்படி என்பதை ஆசிரியர் சிறப்பாக கையாண்டு உள்ளார். ஆசிரியர்கள் பெற்றோர்கள் கல்வியாளர்கள் வாசிக்க வேண்டிய அவசியமான புத்தகம் ஆயிஷா நடராசன் அவர்களின் இது யாருடைய வகுப்பறை .
நூலின் தகவல்கள் :
நூல் : இது யாருடைய வகுப்பறை?
ஆசிரியர் : ஆயிஷா நடராசன்
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன் பாரதி புத்தகாலயம்
விலை : 195 ரூபாய்
தொடர்புக்கு : 04424332924
நூல் அறிமுகம் எழுதியவர் :
– நான்சிகோமகன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

