மணிமாலா மதியழகன் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது சிங்கப்பூர் நாட்டில் வாழும் எழுத்தாளர் .அந்த நாட்டு பின்னணியிலும் அந்த நாட்டின் கலாச்சார அம்சங்களிலும் அக்கறை கொண்டு எழுதியிருக்கும் கதைகள் இவை. தமிழ்நாட்டுச் சூழலில் சிங்கப்பூர் சூழலிலும் இருக்கும் அந்நியமாதல் மாறி மாறி சிங்கப்பூர் எழுத்தாளர்கள் எழுதும் சூழலில் சிங்கப்பூர் சூழலை முழுதாக மனதில் கொண்டு எழுதப்பட்டவை இந்த கதைகள் .
தொலைந்துபோன பொருட்கள் பற்றிய தேடலாக சில கதைகள் இருக்கின்றன தொலைந்து போன தேன்சிட்டுk கூடுகள் , ஒற்றை செருப்புகள் மற்றும் காதல் என்பதைப் பற்றி என்ன தேடலாய் சில கதைகள் அமைந்திருக்கின்றன, தேன்சிட்டு கூடு அவ்வப்போது சிதைந்து விடுகிறது ,காணாமல் போய்விடுகிறது காரணமென்ன இதனால் குடும்ப பெண்ணின் மனம் சிதைகிறது ,அது யாரால் என்ற ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது , பிறகு அது சாதாரண மனித இயல்பாl நடக்கும் சிதைவு என்றபோது அந்தப் பெண் அதிர்ச்சி அடைகிறாள் . இதே போல ஒற்றை செருப்பு காணாமல் போகிறது .ஒரு கால் உள்ள ஒருவர்தான் காரணம் என்பது இதில் தெளிவாகிறது . பிரச்சனைகள் உள்ளதா என்பது பற்றிய விசாரணை தர்க்கங்கள் ஒரு கதையில் வருகின்றன .ஆனால் கணவன் வேலைக்குப் போக முடிவதில்லை. வேலை இழந்து விட்டான் என்று வருகிற போது அவை வேறு ஒரு கோணத்தில் பயணிக்கின்றன.
சிங்கப்பூரில் வந்து வேலை செய்யும் ஒரு இந்தியனும் அதேபோல் இந்தியாவிலிருந்து வந்து சமையல் வேலை செய்யும் பெண்ணுக்கும் உள்ள காதலைப் பற்றி ஒரு கதை உள்ளது அ.ந்த கதையின் இறுதியில் அவள் சாதாரண வேலைக்காரி என்பதற்காகவே அவள் உதாசீனப்படுத்தப் பெறுவது சொல்லப்பட்டிருக்கிறது .தனிமையை விரும்பும் ஒரு வயதானவர் மகளையும் விரட்டுகிறார் ஏன் என்பது ஒரு கதையின் மையமாக இருக்கிறது . சரி ..ஒற்றைச் செருப்பை விரும்பும் ஒன்று இருக்கிறார் அவர் ஏன் அப்படி ஆகிப் போனார் என்பது உடைய கதையின் மையம் கூட வித்தியாசமானது . தனிமை என்பது வீட்டில் மட்டுமல்ல வெளியில்தான் என்று இன்னொரு வயதானவர் திரும்புகிறார் . வயதானவர்கள் பிரச்சனை வேறு கோணங்களை அளிப்பதாக இருக்கிறது அதேசமயம் இளைய தலைமுறை பெற்றோருடன் கொள்கிற ஊசலாட்டத்தைப் பல கதைகளில் சொல்கிறார் . மகள் தன்னுடைய புத்தகப் பையில் ஆணுறை ஒன்று இருப்பதைப் பார்த்துச் சிதைகிறது ஒரு அம்மாவின் மனம் .ஆனால் அது உண்மை நிலை தெரிய வரும் போது மகள் அம்மாவைப் பார்க்கும் கோணம் அதிர்ச்சிகரமாக இருக்கிறது .வெயிலோடு நேசிப்பவள் ..ஒரு பெண் வெயிலைக் குடிப்பவள் .
ஆனால் வெயில் இல்லாத புது இடத்திற்குச் செல்கிற போது அவளின் மனசு வேறுவிதமாக இருக்கிறது .அங்கு வெயிலிலிருந்து அந்நியப்படுகிறாள். குடும்பத்தை தள்ளி வைக்ற பலர் இருக்கிறார்கள் . பச்சை குத்திக் கொண்டவர்கள். புற்றுநோயால் இறந்தவர்களுடைய பெயர்களைக் கொண்டிருக்கிறார்கள் . கனவில் வந்து எழுப்பியவர்கள் இறந்து போகிற விசித்திரம் ஒரு கதையில் சொல்லப்பட்டிருக்கிறது இந்தக்கதையில் சிங்கப்பூர் நடுத்தர குடும்பத்துத் தலைவனுடைய பார்வையிலேயே மொத்த கதைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன என்று சொல்லலாம். முதல் தொகுப்பில் இடம் பெற்றிருந்த நகைச்சுவை இந்த தொகுப்பு இல்லாமல் போய்விட்டது . மேலுலகத்தில் செல்கிறவர்கள் நெகிழி வாகனப் புகை போன்றவற்றால் தண்டனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர் .
விழிப்புணர்வு சார்ந்த இக்கதையில் நகைச்சுவை உணர்வுடன் உருவாக்கும் சூழல் தவறி இருக்கிறது முந்தினத் தொகுப்பில் இயல்பாக இருந்த நகைச்சுவை உணர்வு இந்த தொகுப்பில் இல்லாமல் போவது குறை. புற்றுநோய் பாதித்த ஒருவரின் பாகத்தை வெட்டி எரித்து விடுவது போல இருக்கிறது . ஆனால் வாழ்க்கையின் நடவடிக்கைகளும் அது சார்ந்த கோணங்களும் ஒரு எழுத்தாளரின் பார்வையில் பெண்களின் மனதினூடே பதிவுகளாகப் பட்டிருப்பது இத்தொகுப்பின் முக்கிய அம்சங்களாகக் கொள்ளலாம்..
இவள்..மணிமாலா மதியழகன்
தொகுப்பின் விலை – ரூ. 150
கரங்கள் பதிப்பகம், கோயம்புத்தூர்.