தென்னங்கீற்றின் ஊடே
ஒளிக்கீற்று
ஜன்னல் வழியே வியாபித்துக் கிடக்கிறது!
என் பட்டாசாலையில்.
இடைவெளிகள்
இருபுறமும் இருத்தல்
நன்றென போதிக்கின்றன,
இயற்கை.
இறுகப் பற்றுதலன்று அன்பு
இறுதிவரை பற்றுதலே!
உற்று நோக்கு,
ஓலையின் விலகல் விலகல்ல,
பின்னிப் பிணைகிறது விசிறியாய்!
பரிணமிக்க
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

