ஐம்பொறி ஆட்சிகொள்- கவிதை| Iyyam Pori Aatchikol - Poem - Anu

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல்

அடக்கி ஆளும் ஐம்பொறி வாழ்வு

ஏழேழு பிறவிக்கும் குன்றா நலமாகும்

பிராணனை நாம் அறிய

உள்ளடக்கிய ஐம்பூதங்களை அறிவோம்

அகமும் புறமும் நன்றென அமைய

தன்வசமாய் ஐம்பொறிகளை

ஆக்கிடணும்

ஆட்சி கொள்ளாவிடின் என்றும்

அவ்வறிவு இல்லா உயிரொடு ஒப்பர்

நன்னெறியாம் செந்நெறியைக் கடைபிடித்தால்

மன அறிவை நெறிப்பட உணர்வர்

நல்வினை தீவினை அறிய

உயிரைப் பிணித்துப் பயணிக்க

வினைகள் உணர்விக்க

ஐம்பொறியை ஆட்சி கொள்

சிற்றின்பத்தைக் கட்டுப்படுத்தி

அற்ப இன்பங்களை அறவே அறுத்து

வாஞ்சையுடன் வலிமை சேர்க்க

ஐம்பொறி வேட்கையில் கலக்காமல்

காத்து நிற்கும் வலிமையை

ஒழுக்கத்தோடு இணையப்பெற்ற

புதிய சுயத்தினை பெறுவோம்

அவ்வழியே எழுமையும் ஏமாப் புடைத்து

 

எழுதியவர் 

முனைவர் போ. அனு

 


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 One thought on ““ஐம்பொறி ஆட்சிகொள்” கவிதை – முனைவர் போ. அனு”
  1. ஆமையும் ஐந்தடக்கல் என்பது சரி.ஆனால் ஏழேழு பிறவிக்கு என்பது அறிவியலுக்கு முரணாக உள்ளது. இப்பிறவியில் நன்மை பயக்கும் என்பது தான் சரி. மறைமுகமாக அறிவியல் எதிர்ப்பு என்பதில் கவிதை அழகை கெடுக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *