Subscribe

Thamizhbooks ad

நூல் அறிமுகம்: மூடநம்பிக்கையை மட்டுமல்ல! அறிவியல் தொடர்பான மூடநம்பிக்கைகளையும் அகற்றும் – அ. பாக்கியம்



நூல்: ஜே.டி. பெர்னாலின் வரலாற்றில் அறிவியல்
ஆசிரியர்: பேரா. வி. முருகன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம் 
விலை: 350.00
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/j-d-bernalin-varalatril-ariviyal/

பிரிட்டிஷ் அறிவியல் அறிஞர் ஜே.டி பெருனால் அறிவியலுக்கும் சமுதாயத்திற்கும் உள்ள தொடர்புகளைப் பற்றி பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றில் பிரபலமானது  வரலாற்றில் அறிவியல் என்ற புத்தகம். நான்கு பாகங்களை கொண்ட மிகப்பெரிய நூலான இந்த புத்தகத்தின் முதல் பாகம் மட்டும் 1400 பக்கங்களைக் கொண்டது. பேராசிரியர் முருகன் புததகத்தின் முக்கிய அம்சங்களை எளிய முறையில், புரிந்து கொள்ளக்கூடிய வகையில், உள்ளூர் உதாரணங்களோடு விளக்கி இருப்பது இந்த புத்தகத்தின் சிறப்பாகும்.

  நாம் அறிவியலின் வரலாற்றை படித்திருப்போம். வரலாற்றில் அறிவியலின் பங்குபற்றி அறிந்து கொள்ள இப்புத்தகம் உதவி செய்யும். சமுதாய மாற்றத்தில் அறிவியலுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அதேபோல் அறிவியல் வளர்ச்சியில் சமுதாயத்திற்கும் முக்கிய பங்கு உள்ளது. நமது சிந்தனைகளை சமூக கட்டமைப்பு தான் தீர்மானிக்கிறது என்பதை பல்வேறு உதாரணங்களோடு நிரூபிக்கப்பட்டுள்ளது.  

அறிவியல் என்றால் என்ன?

  அறிவியல் என்பதற்கான  பொருளை நான்கு வரிகளுக்கான விளக்கமாக அளிப்பதை  ஜே.டி. பெர்னால்   ஏற்றுக்கொள்ளவில்லை. அறிவியல்என்பதற்கு பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும்   அந்த விளக்கங்களையும் கடந்து அறிவியலின் வரையறை இருக்கிறது என்பதை முன்வைத்துள்ளார். இறுதியாக அறிவியல் பற்றி அவர் முடிக்கிற பொழுது ஐந்து அம்சங்களை குறிப்பிட்டுவிட்டு கீழ்க்கண்ட பகுதியோடு முடிக்கிறானர்.”அறிவியல் என்பது  பழங்காலத்திலிருந்தே உள்ளது. அது மாறிக்கொண்டே இருக்கிறது. அறிவியலை சமூகத்திலிருந்து தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. இதுபோன்ற காரணங்களால் அறிவியலை இன்னதென்று துல்லியமாகவும் சுருக்கமாகவும் வரையறுக்க முடியாது. அறிவியலுக்கு இரண்டு முகங்கள் உண்டு அவை உள்கட்டமைப்பு, வெளியில் உள்ள சமூகத்தின் தாக்கம், இந்த இரண்டு விஷயங்களையும் சேர்த்து பார்த்தால் தான் அறிவியலை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.  இந்த நிலை நமக்கு உணர்த்தும் செய்தி∶ சமுதாய மாறிக்கொண்டே இருப்பதால் அறிவியல் என்றால் என்ன என்ற புரிதலும் மாறிக்கொண்டே இருக்கிறது”. என்று விடை பகர்கிறார்.

பொருளாதாரம் போக்குதான் அறிவியல் வளர்ச்சியில் ஏற்படும் முன்னேற்றத்தையும் தேகத்தையும் தீர்மானிக்கும் மிக முக்கியமான காரணம் என்ற  கருத்தை ஜே.டி.பெர்னால் முன்வைக்கிறார். இதற்கான ஆதாரங்களை கிரீஸ், எகிப்து, மெசபடோமியா, ரோம. இந்தியா,சீனா, ஐரோப்பாவில் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வரலாற்று ரீதியான வளர்ச்சிப் போக்குகளையும் அதில் ஏற்பட்ட மாற்றங்களையும் தெளிவாக  முன்வைக்கிறார். பொருளாதார நெருக்கடிகள் அறிவியல் வளர்ச்சிபோக்கில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது என்று இந்த புத்தகத்தின் வாயிலாக நாம் புரிந்துகொண்டால் தற்போது நமது நாட்டில் நடந்து கொண்டிருக்கக் கூடிய போக்குகளை இணைத்து தெரிந்துகொள்ள முடியும். 



இன்றைய இந்தியா கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. மோடி ஆட்சியில் கார்ப்பொரேட்களிடம் செலவகுவிப்பும, மறுபக்கம்  வறுமை தாண்டவமாடுகிறது.  வகுப்பு வாதிகள் அறிவியல் வளர்ச்சிக்கு தடையை ஏற்படுத்துகின்றனர. ஆய்வுகளை தடுக்கின்றனர். மூடப்பழக்க வழக்கங்களை வளர்ப்பது வரலாற்றை திருத்துவது, விஞ்ஞானிகளை படுகொலை செய்வது, வேதத்தில்  அனைத்தும் இருக்கிறது என்று இதர புத்தகங்களை அழிப்பது நமது நாட்டில் அன்றாட காட்சிகளாக மாறிவிட்டன. இவை இந்திய பொருளாதார நெருக்கடியுடன் தொடர்புடையது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.

ரோமானிய, கிரேக்க நாகரீகத்திற்கும், அதற்குப் பின்வந்த நாகரிகங்களுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உள்ளது. அது கிறிஸ்தவ மதமும் இஸ்லாமிய மதமும் ஆகும்.  கடவுள், நம்பிக்கை, மதங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள், ஆகியவை எல்லா காலங்களிலும் இருந்தன. ஆனால் கிறிஸ்துவ மதமும் இஸ்லாமிய மதமும் அவற்றுக்கு முன்பிருந்த மதங்களில் இருந்து மாறுபட்டவை. அவை நிர்வாக அமைப்பில் செயல்பட்டவை. இந்த மதங்களின் நிர்வாக அமைப்புகள் ஒரு அரசியல் நிர்வாக அமைப்பிற்கு இணையானவை. அரசுகளை விட நிலைத்த தன்மை உள்ளவை. மக்களின் சிந்தனைகளில் மிகப்பெரிய அளவிற்கு ஆட்சிபுரிந்தது. அரசியல் தளத்திலும் மிகுந்த சக்தி வாய்ந்தவை. இஸ்லாமிய மதமும் கிறிஸ்துவ மதமும் அறிவியல் வளர்ச்சியை தடுத்தது என்று பெர்னால் சுட்டிக்காட்டுகிறார். இந்த மதங்களை பெர்னால் கடுமையாக சாடவில்லை. மாறாக இந்த மதங்கள் தோன்றியதற்கான பொருளாதார சூழ்நிலைகளை சுட்டி காண்பிக்கிறார்.

கி.பி. 1400 ஆண்டுகளுக்கு முன்பு சீனா, கிரீஸ், இந்தியாவிலும் அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டிருந்தது.  ஆனால் இங்கெல்லாம் ஏன் தொழில் புரட்சி ஏற்பட வில்லை? ஏன் நவீன அறிவியல் வளர்ச்சி ஏற்படவில்லை? ஐரோப்பாவில் மட்டும் ஏற்பட்டது என்பதற்கான காரணத்தை பல புதிய பரிணாமங்களுடன்  விளக்கியுள்ளார். 

குறிப்பாக கிரீஸ் நாகரீகத்தில் எந்திரஇயலில் நன்கு வளர்ச்சி அடைந்திருந்தது. அவர்கள் அடைந்திருந்த அந்த வளர்ச்சியை தொழில்  புரட்சியில் பெரும் பங்காற்றிய நீராவி என்ஜின் மற்றும் துணிநெய்வது ஆகிய தொழிலில் ஏற்பட்ட நுணுக்கங்களை அடைவதற்கு போதுமானது ஆனாலும் ஏன் அங்கு தொழில்புரட்சி நடைபெறவில்லை? என்பதற்கான பொருளாதார ரீதியிலான விளக்கங்களை முன்வைத்துள்ளது.

“தொழில் புரட்சியை நோக்கி போவதற்கான பொருளாதாரத் தேவை அன்று இல்லை. அதனால் தொழில் புரட்சியை நோக்கி போவதற்கான ஊக்கமும் ஆர்வமும் அன்று எழவில்லை. பெருமளவில் பொருட்களை உருவாக்க தேவையான சந்தை இல்லை. செல்வந்தர்களுக்கு கையால் உருவாக்கப்பட்ட பொருட்கள் போதுமான அளவில் கிடைத்தன. ஏழைகளுக்கு பொருட்களை வாங்கும் சக்தி இல்லை. அவை இல்லாமலேயே வாழ்ந்தார்கள். பொருளாதார சூழ்நிலையில் காரணமாகத்தான் தொழில் புரட்சியை நோக்கி செல்லவில்லை.



கிபி 1000 ஆண்டுகளுக்குப் பிற்பாடு ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் தொழில் நுட்பங்கள் முக்கிய பங்காற்றின. குறிப்பாக சீனா கண்டுபிடித்திருந்த குதிரையின் கழுத்துப்பட்டை, கேம்பஸ் (கப்பலை இயக்கும் சுக்கான்) வெடிமருந்து, காகிதம், அச்சுஇயந்திரம், ஆகியவை ஐரோப்பாவின் நிலப்பிரபுத்துவம் கண்டுபிடிக்கவில்லை. அவை கிழக்கு நாடுகளிலிருந்தும், சைனாவிலிருந்தும் கிடைத்தவை. இந்த தொழில்நுட்பங்களும் அவற்றால் ஏற்பட்ட வியாபாரத்தில் வளர்ச்சியாலும் ஐரோப்பாவின் நிலப்பிரபுத்துவம் உடைந்தது. 

இதேபோன்று கிரேக்க ரோமானிய நாகரீகம் அழிந்தாலும் அவர்களுடைய அறிவியலையும், தொழில்நுட்பங்களையும் தொடர்ந்து எடுத்துச் சென்று  செழுமைப்படுத்தியது இஸ்லாமிய நாகரீகத்தின் முக்கியமான பங்காகும். ஐரோப்பாவினர்தான், அரபு நாடுகளில் வளர்ந்த அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்களின் முழுப் பயன்களை அடைந்தவர்கள் என்று பெர்னால் கூறுகிறார்

தத்துவார்த்த வளர்ச்சியில் கிரேக்க நாட்டில் அயோனி பள்ளியின் வளர்ச்சியை அதன் சிறப்புகளை குறிப்பிட்டு விவரிக்கிறார் அதே நேரத்தில் சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றவர்கள் இயற்கைதத்துவம் அறிவியல் வளர்வதற்கு எவ்வாறு தடையாக இருந்தார்கள் முற்போக்கான தத்துவத்தை மடைமாற்றியதில் சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில் பங்கு பிற்போக்குத்தனமக இருந்தது என்பதை வலுவான முறையில் எடுத்துரைக்கிறார். சாக்ரடீஸ் இயற்கை ஆய்வுகளை மடைமாற்றி வாழ்க்கைக்கான ஆய்வாக கொண்டு சென்றார். இருப்பதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று போதித்தார். பிளாட்டோ ஜனநாயக அமைப்பை வெறுத்ததுடன் அடிமை முறைகளை ஆதரிக்கவும் செய்தார் அரிஸ்டாட்டில் இயற்பியலை தூக்கி எறிந்ததே கலிலியோ செய்த மாபெரும் சாதனை என்று பெர்னால் கூறுகிறார்.

 நகரங்களில் இருந்துதான் நாகரீகங்கள் வந்தன என்ற கருத்தை மறுத்து நாகரீகங்களின் வளர்ச்சிப்போக்கில் நகரங்கள் உருவாகின என்ற  கருத்தை முன்வைக்கிறார். நகரங்களும் அரசு அமைப்பும் தோன்றியதை அளவு மாற்றத்தில் இருந்து உருவான பண்பு மாற்றமாக பெர்னால் குறிப்பிடுகிறார்

இந்தப் புத்தகத்தில் வரலாற்றில் அறிவியலின் பங்கு அதன் நாகரீக காலங்களை தனித்தனியாக பிரித்து அதனுடைய வேறுபாடுகளையும் தொடர்புகளையும் ஆய்வு செய்கிறார். வரலாற்றில் அறிவியல் என்ற இந்த புத்தகம் இதுவரை வாசிக்காதவர்களுக்கு புதிய வெளிச்சத்தைகொடுக்கும். முடநம்பிக்கையை மட்டுமல்ல அறிவியல் தொடர்பான முடநம்பிக்கைகளையும் அகற்றும்.

அ.பாக்கியம்



Latest

கவிதை : பட்டாம்பூச்சி – ச. இராஜ்குமார்

பட்டாம்பூச்சி  *************** தகிக்கின்ற வெயிலில் எதன் மீதும் அமரவில்லை பட்டாம்பூச்சி.... மலர்களை தேடி அலைந்து கொண்டேயிருக்கிறது பசியாறவில்லை சிறு ஓடையிலும் நீர் பாய்ச்சுகின்ற நிலத்தின்...

கவிதை : நிராகரிப்பு நிஜங்கள் – சே கார்கவி கார்த்திக்

நிராகரிப்பு நிஜங்கள் _____ தூண்களை பற்றிய படி படரும் வெற்றிலைக்கொடி குழந்தைகளின் தீண்டலில் நிலைகுளைவதில்லை கிள்ளியெறியப்பட்ட காம்பில் சிறு பச்சையமும் துளிர்விட்ட வித்தின் மொத்த...

கவிதை : பிரிவு – மஹேஷ்

பிரிவு!   பிரிவுக்கு முந்தைய கேளிக்கைகள் இறந்தகாலத்தின் தொலைதூரப்புள்ளியில்!    காலத்தால் நெய்யப்பட்டது பயணம்!  நொடிகளின் பின்னே  ஓடுவது சாத்தியமின்றி  நோய்வாய்ப்பட்டுக் கைபிசைகிறது  நிதர்சனம்!    இரவும் பகலும் நிமிட நொடிகளும்  ஒன்றையொன்று  விழுங்கிக் கொள்கின்றன!    சடுதியில் சத்தமின்றி நரைத்துப்போன  வயதின் பின்னணி  அறிய...

திரைவிமர்சனம் : விடுதலை – ம.செல்லமுத்து

படம் : விடுதலை நான் பார்த்து ரசித்த படங்களில் மிக நீண்ட வருடங்களுக்குப்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

கவிதை : பட்டாம்பூச்சி – ச. இராஜ்குமார்

பட்டாம்பூச்சி  *************** தகிக்கின்ற வெயிலில் எதன் மீதும் அமரவில்லை பட்டாம்பூச்சி.... மலர்களை தேடி அலைந்து கொண்டேயிருக்கிறது பசியாறவில்லை சிறு ஓடையிலும் நீர் பாய்ச்சுகின்ற நிலத்தின் வரப்புகளிலும் நீர் பருகிவிட்டு மீண்டும் மலர்களை தேடியலைகிறது .. உழைப்பின் களைப்பில் மரத்தின் நிழலில் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டிருந்த என் மனதில் பல வண்ணங்களைத் தூவிச் சென்றது அந்த பட்டாம்பூச்சி ....!! ச. இராஜ்குமார் திருப்பத்தூர்...

கவிதை : நிராகரிப்பு நிஜங்கள் – சே கார்கவி கார்த்திக்

நிராகரிப்பு நிஜங்கள் _____ தூண்களை பற்றிய படி படரும் வெற்றிலைக்கொடி குழந்தைகளின் தீண்டலில் நிலைகுளைவதில்லை கிள்ளியெறியப்பட்ட காம்பில் சிறு பச்சையமும் துளிர்விட்ட வித்தின் மொத்த பச்சையமும் நிரம்பியுள்ளன ஆள்காட்டி விரல் நீட்டும் தூரத்தில் வேண்டிய நிலமும் உண்டு வேண்டாத நபரின் பயணமும் உண்டு அண்ணனிடம் தம்பியின் மரியாதையையும் தம்பியிடம் அண்ணனின் பாசத்தையும் வரப்பில்லாமல் பிரிக்கிறது கம்பிகள் வளைந்தாடும் அப்பாவின்...

கவிதை : பிரிவு – மஹேஷ்

பிரிவு!   பிரிவுக்கு முந்தைய கேளிக்கைகள் இறந்தகாலத்தின் தொலைதூரப்புள்ளியில்!    காலத்தால் நெய்யப்பட்டது பயணம்!  நொடிகளின் பின்னே  ஓடுவது சாத்தியமின்றி  நோய்வாய்ப்பட்டுக் கைபிசைகிறது  நிதர்சனம்!    இரவும் பகலும் நிமிட நொடிகளும்  ஒன்றையொன்று  விழுங்கிக் கொள்கின்றன!    சடுதியில் சத்தமின்றி நரைத்துப்போன  வயதின் பின்னணி  அறிய முற்பட  காலமில்லை!   உருமாற்றப்பட்ட  சந்திப்புகளைக்கடந்தபடி  ஓடுகிறது நிகழ்காலம்!    அறிய முற்பட்டு பிரிவுக்கான பிடிபடாத காரணங்கள்  பலவாயின!  தொடர்கதைகளில் இணைகின்றன வேறு வேறு சிறுகதைகளும் கவிதைகளும்!  ......   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here