சே குவேரா.
பாரதி புத்தகாலயம்
பதிப்புரையோடும்
நூலாசிரியர்
மாதவராஜ் அவர்களின் முன்னுரையோடும்
தொடங்குகின்றது.
சே குவேரா.
ஒரு போராளி என்பதால் மட்டும் நாம் அவர் மீது மதிப்பு வைக்கவில்லை.
ஒருநாள் கூட அவர் ஓய்வு எடுத்துக் கொண்டது கிடையாது.
தேசிய வங்கியின் தலைவர். திட்டக்குழுவின் இயக்குநர்.
தொழில்துறை அமைச்சர்.
இராணுவ கமாண்டர்.
அதிகாரப்பூர்வமான அரசியல் மற்றும் பொருளாதார குழுக்களின் தலைவர்.
எந்த வேலை கொடுத்தாலும் அதை மிக உறுதியோடு செய்யும் அசாத்திய அறிவாற்றல் அவருக்கு இருந்தது.
பல சர்வதேச மாநாடுகளில்
தமது தேசத்தை மிகச்சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கிறார்.
அவர் தனது தூக்கத்திலிருந்து நேரத்தை திருடிப் படித்தார்.
அவர் மருத்துவரும் கூட.
இளம் வயதிலேயே சுவாசக்கோளாறு கொண்டதினால்
ஆக்சிஜன் இன்ஹேலரை
எப்பொழுதும் வைத்திருப்பார்.
உடற்பயிற்சி, மீன்பிடித்தல், வேட்டை, மலையேறுதல், போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர்.
மருத்துவத்தகுதியின் பேரில்
கொரில்லா படையில் இணைந்தார்.
அலெக்சாண்டர்
நாடுகளைக் கைப்பற்றிப்
பெயர் வாங்க எண்ணினார்
ஆனால் இந்த மாமனிதரோ
அடிமையாக்கப்பட்ட நாடுகளை எல்லாம்
விடுதலையாக்கவே போராடினார்.
சுவாமி விவேகானந்தரின் புகழ்பெற்ற முழக்கமான “நூறு இளைஞர்களைக் கொடுங்கள், இந்தியாவை மாற்றி காட்டுகிறேன்” என்பதைப்போலவே..
” 30 லிருந்து 50 பேர் வரை இருந்தால் போதும். இந்த எண்ணிக்கையை வைத்துக் கொண்டு லத்தின் அமெரிக்காவின் எந்த நாட்டிலும் ஆயுதம் தாங்கியப் போராட்டத்தை ஆரம்பித்து விடலாம் ”
என்றார் சே குவேரா.
” தான் எந்த கம்யூனிஸ்ட் கட்சியோடும் இணைந்தது இல்லை ” என்று சொன்ன சே அவர்கள்
” நாங்கள் செய்வதெல்லாம்
கம்யூனிஸ்ட் போலவே உங்களுக்குத் தோன்றினால் நாங்கள் கம்யூனிஸ்டுகள்தான் என்கிறார்.”
சே குவேரா கொலை செய்யப்பட்டு விட்டார் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்றெல்லாம் சரமாரியாகப் பேசப்பட்டன
இதுதான் சந்தர்ப்பம் என ஏகாதிபத்தியக் குரல்கள் வதந்திகளையும் அவதூறுகளையும் வேகவேகமாக கியூபாவிற்கு எதிராகப் பரப்ப ஆரம்பித்தனர்.
கைது செய்யப்பட்டு விட்டார் இரகசியங்களை 10 மில்லியன் டாலருக்கு விற்று விட்டுத் தலைமறைவாகி விட்டார் என்று அமெரிக்கப் பத்திரிகை நியூஸ்வீக் எழுதியது
கியூபா மக்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
ஏகாதிபத்தியங்கள் வதந்திகளை உற்பத்தி செய்துகொண்டே இருந்தன
அவர் எழுதிய கடிதங்கள்
அவரது தியாகத்தையும் அவரது வீரத்தையும் காண்பிக்கிறது
அவர் மனைவிக்கு எழுதிய கடிதத்திலும் மக்களுக்கு எழுதிய கடிதத்திலும் மூத்த மகளுக்குத் தனியாக எழுதிய கடிதத்தையும்
படித்து முடித்ததும்,
எதற்காக தன் குடும்பத்தைப் பாராமல்
தன் குடும்பத்தை விட்டு
ஒரு பாசம் கொண்ட மனிதன்
ஏன் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்காகப் போராடினார்
என்று கலக்கமுடன் வினவத் தோன்றுகிறது.
கியூபாவில் உதிரிப் பாகங்களை வாங்கி கார்களை உருவாக்குகிற
ஒரு கம்பெனியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஒருவரின் முறையீட்டினால்
அரசிடமிருந்து முறையற்ற சலுகைகள் பெற்று இருப்பதாகக் கூறி அங்கிருந்த 360 கார்களோடு கம்பெனியையும் அரசு எடுத்துக் கொள்வதாக சேகுவாரா அறிவிக்கிறார்
இது நடந்த ஒன்றரை மாதங்களில் கார் கம்பெனி முதலாளி தூக்க மாத்திரை சாப்பிட்டு இறந்து போகிறார்
கார் கம்பெனி முதலாளி தற்கொலை செய்துகொள்ள
முதலாளியின் மகன் வில்லோடோ
கம்யூனிசத்துக்கு எதிராக
அமெரிக்காவின்
சி ஐ ஏ நிறுவனத்தில் அதிகாரியாக நுழைந்து
சேகுவாராவை கொல்லத் திட்டமிடுகிறார்.
” ஒவ்வொரு அநீதியையும் கண்டு ஆத்திரத்தில் அதிர்ந்து போவாயானால்
நீ எனது தோழன் ”
என்று கூறிய சேகுவேராவின் குரல்.. வாலேகிராண்டாவில்
ஒரு பள்ளிக்கூடத்தின் அறையில்
அடங்கியது.
சேகுவேரா மீது வெடித்த துப்பாக்கி குண்டுகள் உலகையே
பதற வைத்த போதிலும்
சே வை
தான் கொல்லவில்லை என்றும் அவர் இறந்த இரண்டு மணி நேரம் கழித்துத்தான்
தான் வந்ததாகவும்
புதைக்க மட்டுமே செய்தேன் என்றும் வில்லோடோ கூறுகிறார்
எந்த மண்ணின் விடுதலைக்காக சேகுவேராவும் அவரது கொரில்லா தோழர்களும்
வந்தார்களோ
அங்கேயே தங்களை முழுவதுமாக கரைத்துக் கொண்டனர்
சேகுவாராவின் இரண்டு கைகளும் வெட்டப்பட்டு அவர் [1967 ல்] புதைக்கப்பட்டு இருக்கின்றார்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு
சிலுவையில் அறையப்பட்ட மரித்தவர்களின்
கால்களை முட்டிக்குக் கீழ் முறித்து அடக்கம் செய்வார்களாம்
இயேசுவைத் தவிர.
இதற்கு நேர்மாறாக
தோழர் சேகுவேராவின்
அடக்கம் அமைந்திருக்கிறது.
கொல்லப்பட்ட தோழர்களை அடக்கம் செய்துவிட்டு
தோழர் சே குவேராவின்
கைகளை முறித்து அடக்கம் செய்திருக்கிறார்கள்.
சக போராளிகளின் எலும்புக்கூடுகளுக்கு நடுவில்
1996 ஆம் ஆண்டில்
இவர் சேகுவேரா என கண்டுபிடித்ததாக இந்நூல் கூறுகின்றது.
இவருடைய முன்னோர்களின் நாடு ஸ்பெயின் என்றாலும்
இவர் கியூபா, வியட்நாம், பொலிவியா உள்ளிட்ட நாடுகளுக்கு இரட்சகராகத் தோன்றினார்.
பொலிவியாவின்
நாட்டு மக்கள் அவரை
சான்டோ எர்னஸ்டோ என்ற இறைவனாக இன்றும் வணங்கிக் கொண்டிருக்கின்றனர்
அவருடைய தத்துவங்களோடு
காணக்கிடைக்காத அரிதான புகைப்படங்களோடு
சேகுவேரா எனும் இந்த நூல்
ஒவ்வொரு பக்கத்தையும்
அலங்கரிக்கின்றது.
இந்த நூலின் முதற் பதிப்பு
டிசம்பர் 2004.
இதுவரை 13-ஆம்
அச்சு பதிப்பு வரை
தொடருகின்றது.
வாங்கிப் படியுங்கள்.
சேகுவேரா தோழரை அறியுங்கள்.
எழுதுங்கள். உயரட்டும் தமிழ்
நூலின் விவரங்கள்:
நூல்: “சே குவேரா” அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய குறிப்புகளின் பின்னணியிலிருந்து…
ஆசிரியர்: ஜா.மாதவராஜ்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.90
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
எழுதியவர் :
✍🏻 – ஜேபி நீக்கிழார்🌹
Jparts1996@gmail.com
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
