யாழ் ராகவன் கவிதை

புளியமரத்திற்கும் அரசமரத்திற்கும்
திருமணம் நடந்த நாளில் இருந்தே தொடங்கியது
மணமகன் புளியமரத்தை சுரண்டும்
வன்கொடுமை
இலைகள் பூக்கள் காய் பழம்
மரப்பட்டை உட்பட
எதையும் விட்டு வைக்கவில்லை
மணமகன் தரப்பு
அரசமரங்கள் எப்போதும்
அதிகாரம் கொண்டவை
இப்போது கூடுதல் மமதையில்
வலிகளைத் தாங்கிய புளியமரங்கள் தியாகப்பட்டமும் புனிதப்பட்டமும் கட்டாயத்தின் பேரில்  பெற்றுக்கொண்டன
விதியின் விளிம்பில்
அரசமரம் வேறு வழியின்றி
இன்று போதிமரமானது….
யாழ் ராகவன்….