உடலரசியல் குறித்த அறிமுகத்தைத் தமிழில் செய்ததோடு, தொடர்ந்து அதனடிப்படையில் தனது ஆய்வினை மேற்கொண்டு வருபவரான ஜமாலன் அவர்கள் எழுதியுள்ள சினிமா குறித்த இந்நூல் வெறுமனே சினிமாக்களை சித்தாத்தங்களின் அடிப்படையில் விமர்சனம் செய்வதன்றி, சினிமாவுக்கு கோட்பாட்டுருவாக்கம் செய்வதோடு, அதன் புத்தாக்க வடிவம் குறித்தும் பேசுவதாலேயே பிற திரை நூல்களில் இருந்து இந்நூல் வேறுபட்டு நிற்கிறது. அதன்மூலம் இந்நூல் திரைக்கல்விப்புல மாணாக்கர்களுக்கும் முக்கியமான நூலாகிறது.
நூலானது கோட்பாட்டாக்கம், திரையாக்கம் மற்றும் புத்தாக்கம் என்ற மூன்று இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நூலின் தலைப்பான சினிமாத்துவம் என்ற கோட்பாட்டாக்கம் குறித்த அறிமுகக் கட்டுரைகள் நிறைந்துள்ளது முதல் இயல். மேற்படி நவீன சினிமா கோட்பாடுகளின்வழி சில திரைப்படங்கள் (என்று எழுதலாமா) எவ்வாறு திரையாக்கம் செய்யப்பட்டுள்ளன என்பதைப் பேசுகின்றன இரண்டாம் இயல். மரபான சினிமா முறையைக் கடந்து தற்கால சினிமாவானது எவ்வாறு பின்னைய சினிமாவாக மாறியுள்ளது என்பது குறித்து சில கட்டுரைகள் வழி பேசுகிறது மூன்றாம் இயல். ஜீல் டெல்யூஸின் சினிமா குறித்த இரண்டு முக்கியமான நூல்களின் (Cinema 1 – Movement Image & Cinema 2 – Time Image) அடிப்படையில் இந்நூலில் சினிமாத்துவம் குறித்த கோட்பாட்டுருவாக்கக் கருத்துகள் எழுதப்பட்டுள்ளதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
‘சினிமா பார்ப்பதற்கு மற்ற கலைகளைப் போல பிரத்யேக அறிவோ படிப்போ உணர்வோ தேவையில்லை. பார்த்தல் – கேட்டல் உள்ளிட்ட புலன் உறுப்புகள் இயங்கினால் போதும் என்ற வகையில் சினிமா புதிய தொன்மம் ஆக்கலைச் செய்கிறது’ என்பதும், பிற கலை வடிவங்களில் இருந்தும் கட்புலன் ஊடகங்களான நாடகம் உள்ளிட்டவற்றில் இருந்தும் சினிமா வேறுபடுவது அதன் பிம்பமாக்கல் தன்மையால் – அதிலும் – காலத்தையும் வெளியையும் வெட்டி – உருவாக்கப்படும் ஒரு புதிய யதார்த்த உருவமைவால் அல்லது காணும் எந்திரங்களான பார்வையாளர்களை (பார்வையாளர்கள் எப்படி காணும் எந்திரங்களாக மாற்றப்படுகின்றனர் என்று விழிப்புலனால் பார்த்தல் (view), நோக்குதல் (gaze) மற்றும் காணுதல் என்ற செயல்பாடுகள் வழி விரிவாக விளக்கப்படுகிறது – அதில் காணுதல் என்ற செயலே ஐந்து நிலைகள் வழி (கவனித்தல், கவனிக்கப்படுதல், காணுதல், காணப்படுதல், காட்சியாதல்) பார்வையாளர்களை காணும் எந்திரங்களாகவே மாற்றப்பபட்டு இயங்கச் செய்கிறது) உள்ளடக்கிய ஒரு புதிய உலகத்தை (காலபிம்பம் – வெளி பிம்பக் கட்டமைப்புடன்) உருவாக்குவதால் வேறுபட்டு நிற்கிறது போன்ற கருத்துகள் கோட்பாட்டாக்கத்தில் குறிப்பிடத்தகுந்தவை.
மேலும், ‘சினிமாவே பிம்பங்களின் வழியாக சிந்திக்கும் ஒரு செயலை உருவாக்கியுள்ளது’ என்று சொல்வதும் பல்வேறு சிந்தனைத் திறப்பிற்கு இட்டுச்செல்கிறது. மரபான சினிமா (அலை மருவு (Analog)ல் இருந்து எண் மருவு (Digital) நுட்பத்திற்கு – அனலாக், டிஜிட்டல் என்பவற்றிற்கான தமிழாக்கச் சொற்கள் சுவாரசியமூட்டுகின்றன) பின்னைய சினிமாவாக (Post – Cinema) மாறியதை டெல்யூஸ் கத்தாரியின் எல்லை நீக்கம் (de-territorialisation) மற்றும் மறு எல்லையாக்கம் (re – territorialisation) கருத்தாக்கத்தின் வழி திரையரங்குகள் இல்லாமல் போய் மாற்றுத்திரைகள் (கணிப்பொறி, செல்லிடப்பேசி உள்ளிட்டவை) கொண்டு புகலிடமாக மாற்றீடு செய்யப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டும் அதன் தொடர்ச்சியாக எவ்வாறு சேக்ஸ்பியரின் புகழ் பெற்ற நாடக வசனம் போல ‘உலகமே ஒரு நாடக மேடை..நாமெல்லாம் அதில் நடிகர்கள்’ ஆகி விட்டோம் என்பதையும் பின்னைய சினிமா குறித்த புத்தாக்கப் பகுதியில் விரிவாக எடுத்துரைக்கிறார்.
திரையாக்கம் குறித்த கோட்பாட்டாக்கக் கட்டுரைகள் மற்றும் பின்னைய சினிமா குறித்த கட்டுரைகள் தவிர்த்து உலக சினிமா தொடங்கி, மலையாளம் மற்றும் பல தமிழ்த் திரையாக்கங்கள் குறித்த அலசல் கட்டுரைகள் நூல் முழுதும் உள்ளன. அப்படங்கள் குறித்த மாறுபட்ட பார்வைகள் வழி அதிலிருந்து உரையாடல்கள் தொடங்க அவை வழி வகுக்கின்றன.
திரையாக்கத்துறை கல்விப்புலம் சார்ந்தவர்கள் மட்டுமின்றி, திரைமொழி – மன்னிக்கவும் – பிம்பமொழி குறித்த ஆர்வமுள்ளவர்களுக்கும் இந்நூல் மிகச்சிறந்த ஓர் அறிமுகக் கையேடாகவும் விரிந்த சிந்தனைத் தேடலுக்கான ஒரு
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | சினிமாத்துவம் – காட்சி எந்திரங்களும் காணும் எந்திரங்களும் |
| ஆசிரியர்: | ஜமாலன் |
| வெளியீடு: | |
| விலை: | ₹.340 (10% Discount price was: ₹.306) |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 அன்புச்செல்வன் |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
தொடர்புக்கு: 9444960935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

