#1
மௌனம்
பேசியது
இசை
#2
இயற்கை ரசனை
விபத்துக்குள்ளாக்கியது
செல்பி
#3
கூட்டத்திலும்
அமைதி
நூலகம்
#4
அழகு சாதனம்
வெண்மை தோற்றம்
ரசாயனம்
#5
மருதாணியின் அருமை
புரிந்தது
“சிவந்த கைகள்”
#6
பாசத்தந்தை
திடீர் மரணம்
“புகைப்பழக்கம்”
#7
சாலையில் கடந்தேன்
மூச்சு முட்டியது
தொழிற்சாலை
#8
வெட்டப்படுகிறது மரங்கள்
வளர்கின்றது
ஜாதி
#9
பள்ளிகள் மூடல்
திறக்கப்படுகிறது
டாஸ்மாக்
#10
யாரோ
விபத்துக்குள்ளானார்
“குடி” மகனால்
ஜமீல் அஹ்மத்
வாணியம்பாடி

7 thoughts on “ஜமீல் அஹ்மத் ஹைக்கூ கவிதைகள்”
  1. மிகவும் சிறப்பு தோழர். கவன குறைவால் ஏற்படும் விபத்து. நூலகம், மருதாணி என அழகான படைப்பு. வாழ்த்துகள் தோழர்

  2. அருமையான படைப்பு
    நூலகம்,புகைப்பழக்கம், ரசாயனம், செல்ஃபி, என சமூக சிந்தனையோடு உங்களுடைய ஹைக்கூ கவிதைகள் உருவம் எடுத்துள்ளது…

    சில ஹைக்கூக்களில் இயற்கையின் காட்சிகள் நம் முன் வந்தும் நான் ரசிக்க தவறிய ஹைக்கூகளாக மாற்றிய விதம் அருமை…

    “மருதாணியின்
    அருமை புரிந்தது
    அவளின் சிவந்த கைகள்”

    இந்தக் கவிதை இப்படியும் வந்திருக்கலாம் என நினைக்கிறேன்…

    வாழ்த்துக்கள் தோழர் நன்றி

  3. அருமையான படைப்பு
    நூலகம்,புகைப்பழக்கம், ரசாயனம், செல்ஃபி, என சமூக சிந்தனையோடு உங்களுடைய ஹைக்கூ கவிதைகள் உருவம் எடுத்துள்ளது…

    சில ஹைக்கூக்களில் இயற்கையின் காட்சிகள் நம் முன் வந்தும் நான் ரசிக்க தவறிய ஹைக்கூகளாக மாற்றிய விதம் அருமை…

    நல்ல ஆரம்பம் தோழர்

    வாழ்த்துக்கள் தோழர் நன்றி

  4. வார்த்தைச் சிக்கனம் உடன் நன்றாக வெளிக்கொண்டு வந்தீர்கள். புகைப்பழக்கம் இருப்பவர்க்கு திடீர் மரணம் ஏற்படுமா?
    கூட்டத்தில்
    அமைதி
    நூலகம்
    எனக்கு பிடித்த ஹைக்கூ

    1. நன்றி தோழர் . சில தினங்களுக்கு முன் உறவினர்களின் தந்தை அல்பாயுசில் இறந்தார் அவரின் ஒரே கெட்ட பழக்கம் புகைப்பழக்கம் மட்டுமே, அச்சம்பவம் ஹைகு வாக உருவெடுத்தது.

  5. சிறப்பான முயற்சி… தோழர்…

    ஆயினும் இன்னும் பொறுமையாக மாற்றி … மாற்றி எழுதி பார்த்து … இன்னும் மெருகேற்றிய வார்த்தைகளை கோர்த்தால்… தங்களுடைய உட்கருத்து இன்னும் அழகாக பரிணமிக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *