ஜனவரி 10 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:-ஜான் மத்தாய் (Economist John Matthai) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

ஜனவரி 10 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜான் மத்தாய் – பேராசிரியர் பு.அன்பழகன்

ஜான் மத்தாய் (John Matthai), ஜனவரி 10, 1886இல் கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் பிறந்த இந்தியப் பொருளாதார அறிஞர் ஆவார். மத்தாய், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலும், சென்னை சட்டக் கல்லூரியிலும் பயின்றார். பிரிட்டிஷ் இந்தியாவில் கூட்டுறவு இயக்கம் மற்றும் கிராமப்புற அரசாங்கம் பற்றி ஆய்வு செய்து தன்னுடைய முனைவர் பட்டத்தை லண்டன் பொருளாதாரப் பள்ளியில் முடித்தார்.

மத்தாய் புகழ்பெற்ற  கல்வியாளர் ஆவர், 1922- 1925வரை சென்னை மாநிலக் கல்லூரியில்  பொருளாதார பேராசிரியராக பணியாற்றினார். அவர் ஒரு சிறந்த அரசு அதிகாரியாகவும் திறம்படச் செயல்பட்டார் மேலும் சென்னை மாகாணத்தின் சட்டமன்றத்தில் மேலவையில் உறுப்பினராகவும் சில காலம் பணியாற்றினார், நிதி மற்றும் புள்ளிவிவரங்கள் தொடர்பான முக்கியமான குழுக்கள் மற்றும் துறைகளுக்குத் தலைமை வகித்தார்.

பொருளாதார நிபுணத்துவத்தின் காரணமாக மத்தாய் 1940இல் தொழில் அதிபர் டாடாவால், டாட்டா குழுமத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டிய முதலீட்டுத் திட்டம் மற்றும் கொள்கை முன்னுரிமைகளைக் கொண்டு பம்பாய் திட்டத்தின் வடிவமைத்ததில் மத்தாயும் ஒருவராக இருந்தார். “இந்தியாவிற்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தைக் குறிப்பிட்டுக் காட்டும் ஒரு சுருக்கமான குறிப்பாணை” என்ற இரண்டு பகுதி ஆவணம் 1944-45இல் மத்தாய் மற்றும் அன்றைய ஏழு முன்னணி தொழிலதிபர்கள் மற்றும் வங்கியாளர்களால் தயாரிக்கப்பட்டது.

இந்தியாவின் முதல் ரயில்வே அமைச்சராக மத்தாய் பணியாற்றினார். 1948ஆம் ஆண்டு முதல் வரவு-செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவின் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். 1949 மற்றும் 1951க்கு இடையில் இரண்டு வரவு-செலவு திட்டங்களை அவர் தாக்கல் செய்தார். 1948 செப்டம்பரில் மத்தாய் இந்தியாவின் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றபோது, புயல்கள், பஞ்சம், வெள்ளம் போன்றவற்றால் வேளாண்மையில் ஏற்பட்ட தோல்விகள் நாட்டின் சில பகுதிகளை அதிகளவிற்கு பாதிப்பினை ஏற்படுத்தியது.

இதனால் உணவு இறக்குமதி துரிதமான அளவில் அதிகரித்தது, மேலும் அந்நியச் செலாவணி ஸ்டெர்லிங்கின் செலுத்துநிலை இருப்பு குறைந்தது  மற்றும் அதிகரித்து வந்த பணவீக்கம் ஆகியவை மத்தாய் பணவீக்க கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த வழிவகுத்தன.  ஒன்றிய அரசினால் திட்டக் குழுவிற்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டதை எதிர்த்து அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். வரி விசாரணைக் குழு மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட இந்திய ஸ்டேட் வங்கி ஆகிய இரண்டு நிறுவனங்களின் தலைவராக அவர் இருந்தார்.

பின்னர் அவர் பம்பாய் பல்கலைக்கழகம் (1955-57),  கேரள பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் (1957-59) பணியாற்றினார். ஜான் மத்தாய் நவம்பர் 2, 1959 அன்று பம்பாயில் காலமானார்.

ஆதாரம்: www.constitutionofindia.net ; www.drjohnmatthai.com

📚 எழுதியவர்:

பேராசிரியர் பு.அன்பழகன்

******************************************************************************

புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வு

2026 ஆம் ஆண்டில் ஜனவரி 8 முதல் 21 வரை  49வது சென்னை புத்தகக்காட்சி நடைபெற உள்ளது.  ஆண்டுதோறும் புத்தக காட்சியில் சிறந்த நூல் அறிமுகம் எழுதுபவர்களுக்கான போட்டி, கதை சொல்லல் போட்டி, சிறுகதை போட்டி என நடத்தி சிறந்த படைப்புகளுக்கு தொடர்ந்து பரிசுகளை வழங்கி வருகிறது பாரதி புத்தகாலயத்தின் புக் டே இணைய இதழ். இந்த ஆண்டும்  ஜனவரி 8 முதல் 18 வரை சென்னை புத்தக கண்காட்சியின் ஏதாவது ஒரு அரங்கிற்கு நேரடியாக வந்து தங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து அதை நூல் அறிமுக கட்டுரையாக bookday24@gmail.com என்ற மெயிலில் அனுப்பி வைக்கவும். அதில் தேர்வாகும் சிறந்த அறிமுக கட்டுரைக்கு ரூ.10,000 மதிப்பிலான பரிசும்,  புத்தக கண்காட்சி அரங்கில் ஜனவரி 20 அன்று மாலை 5.30 மணியளவில் நடக்கும் புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வில் பரிசும் வழங்கப்படும்.  இந்நிகழ்வில் திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி, எழுத்தாளர்கள் இந்திரன், ஆயிஷா நடராசன், உமர் பாரூக் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி.செல்வா ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை  https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *