1. ராகேஷ் மோகன் (Rakesh Mohan) ஜனவரி 14, 1948இல் பிறந்த தலைசிறந்த இந்தியப் பொருளாதார அறிஞர்களில் ஒருவர் ஆவார். அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சியினை மேற்கொண்டார். பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் தாராளமயமாக்கல், தொழில்துறை பொருளாதாரம், நகர்ப்புற பொருளாதாரம், உள்கட்டமைப்பு ஆய்வுகள், பொருளாதார முறைப்படுத்தல், பணவியல் கொள்கை மற்றும் நிதித் துறை ஆகியவற்றில் அவர் விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். 1980களின் பிற்பகுதியிலிருந்து இந்தியப் பொருளாதார சீர்திருத்த நடைமுறைப்படுத்துதலில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
பன்னாட்டு பண நிதியத்தில் வாரியத்தில் நிர்வாக இயக்குநராகவும், இந்திய ரிசர்வ் வங்கியின் துணைநிலை ஆளுநராகவும், பொருளாதார விவகாரச் செயலாளராகவும், இந்திய நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராகவும், தொழில்துறை அமைச்சகத்தில் பொருளாதார ஆலோசகராகவும் இருந்தார். அக்டோபர் 2020 முதல் மே 2023 வரை CSEPஇன் தலைவராகவும், சிறப்பு உறுப்பினராகவும் இருந்தார். மார்ச் 2024இல், உலக வங்கி குழுவின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் பணியாற்ற அவர் நியமிக்கப்பட்டார். அக்டோபர் 2021முதல் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் (EAC-PM) ஒரு பகுதியாக அவர் இருந்து வருகிறார்.
இந்திய உள்கட்டமைப்பு அறிக்கை (1996), இந்திய ரயில்வே அறிக்கை (2001) மற்றும் இந்தியப் போக்குவரத்து அறிக்கை (2014) உள்ளிட்ட உள்கட்டமைப்பு குறித்த முக்கிய அறிக்கைகளைத் தயாரித்த இந்திய அரசின் குழுக்களின் தலைவராகவும் அவர் பணியாற்றினார். நகர்ப்புற பொருளாதாரம் மற்றும் நகர்ப்புற மேம்பாடு குறித்த மூன்று புத்தகங்களையும், பணவியல் கொள்கை குறித்த இரண்டு புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார் (Monetary Policy in a Globaliized Economy: A Practitioner’s View; Growth with Financial Stability: Central Banking in an Emergin Market). India Transformed: 2025 Years of Economic Reforms” என்ற புத்தகத்தை அன்மையில் வெளியிட்டுள்ளார்.
ஆதாரம்: www.csep.org; www.iihs.co.in; www.rakeshmohan.com
***************************************************************************
2. ட்ரெவர் வின்செஸ்டர் ஸ்வான் (Trevor Winchester Swan), ஜனவரி 14, 1918இல் பிறந்து ஜனவரி 15, 1989இல் மறைந்த ஆஸ்திரேலிய பொருளாதார அறிஞர் ஆவார். சோலோ-ஸ்வான் வளர்ச்சி மாதிரி (Solow-Swan growth model) அவருடைய புகழ்பெற்ற பங்களிப்பாகும். ஜே.எம். கீன்ஸின் கோட்பாடு மற்றும் கொள்கையை ஒருங்கிணைக்கும் திறனாலும், கீன்ஸின் பேரியல் பொருளாதார மேலாண்மைக்கு அளித்த முக்கியத்துவத்தாலும் அவர் பெரிதும் அறியப்பட்டார். பின்னர், பொருளாதாரத்தில் கவனம் குறுகிய கால நிலைப்படுத்தலில் இருந்து நீண்ட கால வளர்ச்சிக்கு மாறியதால், ஸ்வான் கீன்ஸின் பொருளாதாரத்தில் இருந்ததைப் போலவே புதிய தொன்மைப் பொருளாதாரக் கோட்பாட்டிலும் புலமை பெற்றிருந்தார்.
புதிய தொன்மை வளர்ச்சி மாதிரியை உருவாக்குவதில் ராபர்ட் சோலோ மற்றும் ட்ரெவர் ஸ்வான் ஆகியோரின் தன்னிச்சையான பங்களிப்பினை “சோலோ-ஸ்வான்” மாதிரி என்று அறியப்படுகின்றது, ஆனால் பெரும்பாலும் இதனை “சோலோ” மாதிரி என்றே குறிப்பிடப்படுகிறது. சோலோ-ஸ்வான் மாதிரி வெளிப்புற வளர்ச்சி மாதிரி என்றும் அழைக்கப்படும், இது நீண்டகால பொருளாதார வளர்ச்சியை விளக்கும் ஒரு பொருளாதார மாதிரியாகும். மூலதனக் குவிப்பு, மக்கள்தொகை வளர்ச்சி, தொழிலாளர் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவை பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வாறு பங்களிக்கின்றன என்பதை இது ஆராய்கிறது.
உள் மற்றும் வெளிப்புற சமநிலையின் மாதிரியினை விளக்கும் “ஸ்வான் வரைபடம்”, மற்றும் தன்னிச்சையான புதிய தொன்மை வளர்ச்சி மாதிரியினை ராபர்ட் சோலோவின் முக்கிய பங்களிப்பாக கருதப்படுகிறது. ஸ்வான் வரைபடம் என்பது ஒரு பொருளாதாரக் கொள்கையையும், உள் மற்றும் வெளிப்புற சமநிலையை எவ்வாறு அடைவது என்பதையும் பகுப்பாய்வு செய்ய உதவும் ஒரு பொருளாதார கருவியாகும். ஸ்வான் வரைபடத்தின் சில முக்கிய அம்சங்கள் :
அச்சுகள்: கிடைமட்ட அச்சு உள்நாட்டு செலவினங்களைக் குறிக்கிறது, செங்குத்து அச்சு மாற்று விகிதத்தைக் குறிக்கிறது.
கோடுகள்: இரண்டு கோடுகள் நாட்டின் உள் மற்றும் வெளிப்புற சமநிலையைக் குறிக்கின்றன.
YY கோடு: உள் சமநிலையின் புள்ளிகளைக் குறிக்கிறது.
EE கோடு: வெளிப்புற சமநிலையின் புள்ளிகளைக் குறிக்கிறது.
பகுதிகள்: இந்த வரைபடம் உபரி அல்லது பற்றாக்குறை உள்ளதா, வேலையின்மை அல்லது பணவீக்கம் உள்ளதா என்பதைக் குறிக்கும் நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது:
பகுதி I: உபரி, வேலையின்மை
பகுதி II: உபரி, பணவீக்கம்
பகுதி III: பற்றாக்குறை, வேலையின்மை
பகுதி IV: பற்றாக்குறை, பணவீக்கம்
உள் இருப்பு: முழு வேலைவாய்ப்பு மற்றும் நிலையான விலைகள்.
வெளிப்புற இருப்பு: ஒரு நாட்டின் செலாவணி வழங்கல் மற்றும் தேவையில் உள்ள இருப்பு.
கொள்கை மாற்றங்கள் மூலம் ஒரு நாட்டின் வர்த்தக சமநிலையை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை கொள்கை வகுப்பாளர்கள் பகுப்பாய்வு செய்ய ஸ்வான் வரைபடம் உதவும்.
ஆதாரம்: www.albany.edu; www.hetwebsite.net
📚 எழுதியவர்:

******************************************************************************
*புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வு*
2026 ஆம் ஆண்டில் ஜனவரி 8 முதல் 21 வரை 49வது சென்னை புத்தகக்காட்சி நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் புத்தக காட்சியில் சிறந்த நூல் அறிமுகம் எழுதுபவர்களுக்கான போட்டி, கதை சொல்லல் போட்டி, சிறுகதை போட்டி என நடத்தி சிறந்த படைப்புகளுக்கு தொடர்ந்து பரிசுகளை வழங்கி வருகிறது பாரதி புத்தகாலயத்தின் புக் டே இணைய இதழ். இந்த ஆண்டும் ஜனவரி 8 முதல் 18 வரை சென்னை புத்தக கண்காட்சியின் ஏதாவது ஒரு அரங்கிற்கு நேரடியாக வந்து தங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து அதை நூல் அறிமுக கட்டுரையாக bookday24@gmail.com என்ற மெயிலில் அனுப்பி வைக்கவும். அதில் தேர்வாகும் சிறந்த அறிமுக கட்டுரைக்கு ரூ.10,000 மதிப்பிலான பரிசும், புத்தக கண்காட்சி அரங்கில் ஜனவரி 20 அன்று மாலை 5.30 மணியளவில் நடக்கும் புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வில் பரிசும் வழங்கப்படும். இந்நிகழ்வில் திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி, எழுத்தாளர்கள் இந்திரன், ஆயிஷா நடராசன், உமர் பாரூக் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி.செல்வா ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
*கூகுள் பார்ம்: https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56*
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

