ஜனவரி 15 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- பியர்-ஜோசப் புரூதோன் (Economist Pierre-Joseph Proudhon Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

ஜனவரி 15 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- பியர்-ஜோசப் புரூதோன் – பேராசிரியர் பு.அன்பழகன்

பியர்-ஜோசப் புரூதோன் (Pierre-Joseph Proudhon) ஜனவரி 15, 1809இல் பிறந்து ஜனவரி 19, 1865இல் மறைந்த பிரெஞ்சு அரசிலிக் கோட்பாட்டாளர் (அரசின்மையக் கோட்பாடுகளைப் பின்பற்றுபவர்), சமதருமவாதி (சோசலிஸ்ட்), தத்துவஞானி மற்றும் பொருளாதார நிபுணர் ஆவார். புரூதோ பரஸ்பர தத்துவத்தை நிறுவியவர் மேலும் “அரசிலிக் கோட்பாட்டின் தந்தை” என்றும் கருதப்படுகிறார். அவருடைய முதல் புத்தகம் ‘சொத்து என்றால் என்ன’ என்பதை 1876இல் வெளியிட்டார்.

இப்புத்தகம் அக்காலகட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது, ஏனெனில் புரூதோன், “நான் ஒரு அரசிலிக் கோட்பாட்டாளர்” என்று அறிவித்தது மட்டுமல்லாமல், “சொத்து என்பது திருட்டு!” என்றும் கூறினார். அவர் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அர்த்தத்தில் சொத்தைத் தாக்கவில்லை, ஆனால் ஒரு மனிதன் மற்றொருவரின் உழைப்பைச் சுரண்டும் சொத்தின் வகையை மட்டுமே தாக்கினார். சொத்து என்பது விவசாயி தான் வேலை செய்யும் நிலத்தையும், கைவினைஞர் தனது பட்டறை மற்றும் கருவிகளையும் வைத்திருக்கும் உரிமையிலும் – சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு அவசியமானது என்று அவர் கருதினார். மேலும் கம்யூனிசம் மீதான அவரது முக்கிய விமர்சனம், அது கற்பனாவாதமாக இருந்தாலும் சரி அல்லது மார்க்சிய வகையாக இருந்தாலும் சரி, அது உற்பத்தி வழிமுறைகளின் மீதான தனிப்பட்ட கட்டுப்பாட்டைப் பறிப்பதன் மூலம் சுதந்திரத்தை அழித்தது என்பதாகும்.

1846ஆம் ஆண்டில், சோசலிச (சமதரும) இயக்கத்தின் அமைப்பு குறித்து மார்க்ஸுடன் அவர் விவாதித்தார், மார்க்ஸின் சர்வாதிகார மற்றும் மையவாத கருத்துக்களை எதிர்த்தார். தனியார் சொத்துரிமை அல்லது நிலம் மற்றும் பணியிடங்களை தேசியமயமாக்குவதைவிடத் தொழிலாளர் மன்றங்கள் மற்றும் சங்கங்கள் அல்லது கூட்டுறவுகள் மற்றும் தனிப்பட்ட தொழிலாளி/விவசாயிகளின் உடைமை ஆகியவற்றை புரூதோன் ஆதரித்தார். சமூகப் புரட்சியை அமைதியான முறையில் அடைய முடியும் என்று அவர் கருதினார்.

ஆதாரம்: www.britannica.com ; www.marxists.org

📚 எழுதியவர்:

பேராசிரியர் பு.அன்பழகன்

******************************************************************************

*புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வு*

2026 ஆம் ஆண்டில் ஜனவரி 8 முதல் 21 வரை  49வது சென்னை புத்தகக்காட்சி நடைபெற உள்ளது.  ஆண்டுதோறும் புத்தக காட்சியில் சிறந்த நூல் அறிமுகம் எழுதுபவர்களுக்கான போட்டி, கதை சொல்லல் போட்டி, சிறுகதை போட்டி என நடத்தி சிறந்த படைப்புகளுக்கு தொடர்ந்து பரிசுகளை வழங்கி வருகிறது பாரதி புத்தகாலயத்தின் புக் டே இணைய இதழ். இந்த ஆண்டும்  ஜனவரி 8 முதல் 18 வரை சென்னை புத்தக கண்காட்சியின் ஏதாவது ஒரு அரங்கிற்கு நேரடியாக வந்து தங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து அதை நூல் அறிமுக கட்டுரையாக bookday24@gmail.com என்ற மெயிலில் அனுப்பி வைக்கவும். அதில் தேர்வாகும் சிறந்த அறிமுக கட்டுரைக்கு ரூ.10,000 மதிப்பிலான பரிசும்,  புத்தக கண்காட்சி அரங்கில் ஜனவரி 20 அன்று மாலை 5.30 மணியளவில் நடக்கும் புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வில் பரிசும் வழங்கப்படும்.  இந்நிகழ்வில் திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி, எழுத்தாளர்கள் இந்திரன், ஆயிஷா நடராசன், உமர் பாரூக் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி.செல்வா ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை  https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

*கூகுள் பார்ம்: https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56*

தோழமையுடன்

புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *