ஜனவரி 17 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜார்ஜ் ஜே. ஸ்டிக்லர் (Economist George J.Stigler Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

ஜனவரி 17 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜார்ஜ் ஜே. ஸ்டிக்லர் – பேராசிரியர் பு.அன்பழகன்

ஜார்ஜ் ஜே. ஸ்டிக்லர் (George J.Stigler), ஜனவரி 17, 1911இல் பிறந்து டிசம்பர் 1, 1991இல் மறைந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார். சந்தையின் போக்கு மற்றும் அரசின் ஒழுங்குமுறைபடுத்துதளின் விளைவுகள் பற்றிய ஆழமான மற்றும் புதுமையான ஆய்வுக்காக அவருக்கு 1982ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசைப் பெற்றுத் தந்தன. பொருளாதாரக் கோட்பாட்டைப் பற்றிய ஸ்டிக்லரின் பார்வை, ஆர்வமுள்ள ஒரு பாடமாகவோ, வெறுமனே கணிதத்தின் ஒரு பிரிவாகவோ இல்லாமல், உண்மையான உலகத்தைப் பற்றிய உண்மையைக் கண்டறியும் ஒரு தடமாக இருந்தது.

பொருளாதாரத்தில் ஸ்டிக்லரின் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளில் தகவல்களின் பொருளாதாரம் பற்றிய ஆய்வு, சந்தைகள் எவ்வாறு திறம்பட இயங்குகின்றன என்பது பற்றிய பாரம்பரிய புரிதலின் அத்தியாவசிய விரிவாக்கம் மற்றும் சமுதாய முறை பற்றியதாகும். தொழில்துறை அமைப்பில், சந்தை எவ்வாறு செயல்படுகின்றன என்ற முக்கிய கருத்தை விவாதித்தார். 1962 ஆம் ஆண்டு அவர் எழுதிய “தொழிலாளர் சந்தையில் தகவல்” என்ற கட்டுரை வேலையின்மை குறித்த மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ள ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

ஸ்டிக்லரின் கூற்றுப்படி, அதிக ஊதியத்தைத் தேடுவதற்கு வேலை தேடுபவர்களுக்குக் குறுகிய கால வேலையின்மை தேவைப்பட்டது என்பதாகும். “இயக்க ஊதியம்” உள்ள தொழில்களில் கூட, ஊதிய விகிதங்களில் வேறுபாடுகள் தற்போதும் காணப்படுகின்றன என்றார். எனவே, வேலையில்லாதவர்கள் வேலை தேடுபவர்களைப் போலவே தகவல் தேடுபவர்களாகவும் உள்ளனர். அவரது ஆய்வினை, தேடல் வேலையின்மை கோட்பாடு என்று அழைக்கப்படுகிறது. 1977 ஆம் ஆண்டில், ஸ்டிக்லர் பொருளாதாரம் மற்றும் அரசு ஆய்வு மையத்தை நிறுவினார், இது அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் இடையில் உள்ள சிக்கல்களைப் புரிந்துகொள்வதற்கு உருவாக்கப்பட்டது.

ஆதாரம்: www.britannica.com; www.newworldencyclopedia.org; www.econlib.org; www.chicagobooth.edu; www.encyclopedia.com

📚 எழுதியவர்:

பேராசிரியர் பு.அன்பழகன்

******************************************************************************

*புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வு*

2026 ஆம் ஆண்டில் ஜனவரி 8 முதல் 21 வரை  49வது சென்னை புத்தகக்காட்சி நடைபெற உள்ளது.  ஆண்டுதோறும் புத்தக காட்சியில் சிறந்த நூல் அறிமுகம் எழுதுபவர்களுக்கான போட்டி, கதை சொல்லல் போட்டி, சிறுகதை போட்டி என நடத்தி சிறந்த படைப்புகளுக்கு தொடர்ந்து பரிசுகளை வழங்கி வருகிறது பாரதி புத்தகாலயத்தின் புக் டே இணைய இதழ். இந்த ஆண்டும்  ஜனவரி 8 முதல் 18 வரை சென்னை புத்தக கண்காட்சியின் ஏதாவது ஒரு அரங்கிற்கு நேரடியாக வந்து தங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து அதை நூல் அறிமுக கட்டுரையாக bookday24@gmail.com என்ற மெயிலில் அனுப்பி வைக்கவும். அதில் தேர்வாகும் சிறந்த அறிமுக கட்டுரைக்கு ரூ.10,000 மதிப்பிலான பரிசும்,  புத்தக கண்காட்சி அரங்கில் ஜனவரி 20 அன்று மாலை 5.30 மணியளவில் நடக்கும் புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வில் பரிசும் வழங்கப்படும்.  இந்நிகழ்வில் திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி, எழுத்தாளர்கள் இந்திரன், ஆயிஷா நடராசன், உமர் பாரூக் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி.செல்வா ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை  https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

*கூகுள் பார்ம்: https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56*

தோழமையுடன்

புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

இந்திய வேளாண் கடனும் விவசாயிகளின் தற்கொலைகளும் கட்டுரை – முனைவர் பு.அன்பழகன்

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *