கென்னத் எவர்ட் போல்டிங் (Kenneth Ewart Boulding) ஜனவரி 18, 1910இல் பிறந்து மார்ச் 18, 1993இல் மறைந்த ஆங்கிலேய-அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார். போல்டிங், அரசியல் அறிவியல், சமூகவியல், தத்துவம் மற்றும் சமூக உளவியல் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்புகளை வழங்கியுள்ளார். போல்டிங் ஃபிராங்க் நைட் மற்றும் ஹென்றி ஷூல்ட்ஸ் அறிஞர்களின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு மூலதனக் கோட்பாடு குறித்துத் தொடர் கட்டுரைகளை சிகாகோ பல்கலைக்கழகத்தில் இருக்கும்போது எழுதினார்.
போல்டிங் அடிப்படையில் அவரது பாடப்புத்தகமான “பொருளாதார பகுப்பாய்வு” மூலம் முதன்மையாக அறியப்படுகிறார். போல்டிங் மனநல மூலதனம் மற்றும் மேம்பட்ட கோட்பாடுகள் (பரிணாம பொருளாதாரம்) ஆகிய சொற்களை உருவாக்கினார், அவை கல்வித் துறையின் பிரிவுகளை ஒன்றிணைத்து மனிதகுலத்தைப் பற்றிய சிறந்த புரிதல்களுக்கு வழிவகுத்தன. அவரது பணி இயல்பிற்கு மாறானது என்று கருதப்பட்டாலும், போல்டிங் பொருளாதார மற்றும் அமைதி கோட்பாட்டிற்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளைத் தந்துள்ளது. மனநல மூலதனம் என்ற சொல்லை போல்டிங் 1950இல் முதன்முதலில் பயன்படுத்தியுள்ளார். மூலதனம் என்பது செல்வத்தின் குவிப்பு, மேலும் மனநல மூலதனத்துடன், குவிப்பு என்பது விரும்பத்தக்க மன நிலைகளில் ஒன்றாகும், இது மிகவும் நிலையற்றது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்கிறார். மன நிலைகள் இன்பம், வெற்றி, சாதனை, அங்கீகாரம் ஆகியவற்றின் நினைவுகளாக இருக்கலாம், இது மனநல மூலதனத்தைக் கூடுதலாக்குவதற்கு ஒரு சக்திவாய்ந்த ஊக்கச் சக்தியாக இருக்க வாய்ப்புள்ளது என்று குறிப்பிடுகின்றார். முடிவெடுக்கும் நிலை அல்லது நிகழ்வுகள் வழியாக மனநல மூலதனத்தின் அதிகரிப்பு அல்லது குறைவானது எந்த நேரத்திலும் நிகழ வாய்ப்புள்ளது.
மனித பொருளாதார மற்றும் பிற நடத்தைகள் அதிக அளவில், ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட நிலையில் காணப்படும் என்று போல்டிங் குறிப்பிடுகிறார். நமது நடத்தையின் விளைவுகளை, அது பொருளாதாரமாக இருந்தாலும் சரி, வேறுவிதமாக இருந்தாலும் சரி, புரிந்து கொள்ள, முதலில் நாம் வாழும் உலகளாவிய சமூகமான பொது அமைப்பின் சுற்றுச்சூழல் இயக்கவியல் பற்றிய அறிவியல் புரிதலை ஆராய்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டும். போல்டிங் பரிணாம பொருளாதார இயக்கத்தின் நிறுவனர் ஆவார். பொருளாதாரம் மற்றும் பரிணாமம் இரண்டும் பிரபஞ்சத்தின் இந்த பகுதியில் மிக நீண்ட காலமாகச் செயல்பட்டு வரும் ஒரு பெரிய செயல்முறையின் எடுத்துக்காட்டுகள். இது அதிகரித்து வரும் சிக்கலான தன்மை மற்றும் சாத்தியமற்ற தன்மை கொண்ட கட்டமைப்புகளை உருவாக்கும் செயல்முறையாகும். பரிணாம செயல்முறை எப்போதும் பிறழ்வு (மாறக்கூடிய) மற்றும் தேர்வு மூலம் செயல்படுகிறது, இதில் பிறழ்வு அடையும் மரபணு வகைக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட புறத்தோற்றத்திற்கும் இடையிலான வேறுபாடு அடங்கும். மரபணு வகை புறத்தோற்றத்தை உருவாக்கும் செயல்முறையை “அமைப்பு” என்று விவரிக்கலாம் என்று குறிப்பிடுகிறார்.
ஆதாரம்: www.hetwebsite.net ; www.montgomery.dartmouth.edu ; www.bionity.com
📚 எழுதியவர்:

******************************************************************************
*புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வு*

2026 ஆம் ஆண்டில் ஜனவரி 8 முதல் 21 வரை 49வது சென்னை புத்தகக்காட்சி நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் புத்தக காட்சியில் சிறந்த நூல் அறிமுகம் எழுதுபவர்களுக்கான போட்டி, கதை சொல்லல் போட்டி, சிறுகதை போட்டி என நடத்தி சிறந்த படைப்புகளுக்கு தொடர்ந்து பரிசுகளை வழங்கி வருகிறது பாரதி புத்தகாலயத்தின் புக் டே இணைய இதழ். இந்த ஆண்டும் ஜனவரி 8 முதல் 18 வரை சென்னை புத்தக கண்காட்சியின் ஏதாவது ஒரு அரங்கிற்கு நேரடியாக வந்து தங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து அதை நூல் அறிமுக கட்டுரையாக bookday24@gmail.com என்ற மெயிலில் அனுப்பி வைக்கவும். அதில் தேர்வாகும் சிறந்த அறிமுக கட்டுரைக்கு ரூ.10,000 மதிப்பிலான பரிசும், புத்தக கண்காட்சி அரங்கில் ஜனவரி 20 அன்று மாலை 5.30 மணியளவில் நடக்கும் புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வில் பரிசும் வழங்கப்படும். இந்நிகழ்வில் திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி, எழுத்தாளர்கள் இந்திரன், ஆயிஷா நடராசன், உமர் பாரூக் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி.செல்வா ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
*கூகுள் பார்ம்: https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56*
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
