டேவிட் காஸ் (David Cass) ஜனவரி 19, 1937இல் பிறந்து ஏப்ரல் 15, 2008இல் மறைந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார். “காஸ்-கூப்மேன்” வளர்ச்சி மாதிரியை அறிமுகப்படுத்தியது, உடன் நிகழ் தலைமுறை மாதிரிகளில் பரேட்டோ செயல்திறனுக்கான (Pareto efficiency) “காஸ்” அளவுகோலைக் கண்டுபிடித்தது உள்ளிட்ட பொருளாதாரக் கோட்பாடுகள் அவரின் தனித்துவமான பங்களிப்புகளாகும். பொருளாதார இயக்கவியலில் உள்ளார்ந்த நிச்சயமற்ற தன்மையின் (சூரிய புள்ளிகள்) முக்கியத்துவத்தை கார்ல் ஷெல் அறிமுகப்படுத்தினார்.
காஸ்-கூப்மன்ஸ் மாதிரி என்பது நீண்டகால பொருளாதார வளர்ச்சியை விளக்கும் ஒரு புதிய தொன்மை பொருளாதார வளர்ச்சி மாதிரியாகும். இந்த மாதிரி ஃபிராங்க் பி. ராம்சேயின் பொருளாதாரக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டது, இத்துடன் டேவிட் காஸ் மற்றும் டிஜாலிங் கூப்மன்ஸ் ஆகியோரின் கருத்துகளும் இதில் கூடுதலாக வெளிப்படுகின்றன. இது காலப்போக்கில் பயன்பாட்டை உச்ச அளவில் அதிகரிக்க சமூக நலச் செயல்பாட்டைப் பயன்படுத்தும் ஒரு மேம்பாட்டு இயக்க மாதிரியாகும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நுகர்வோர் எவ்வாறு நுகர்வைத் தேர்வு செய்கிறார்கள் என்பதைப் பற்றி இம் மாதிரி விளக்குகிறது. மூலதனம் மற்றும் நுகர்வு தொடக்க நிலைகளில் எவ்வாறு சமநிலைக்கு ஒன்றிணைவதைப் பாதிக்கும் என்பதைக் கணக்கிட இந்த மாதிரியைப் பயன்படுத்தலாம். தனிநபர் பகுத்தறிவுக்கும் சமூக பகுத்தறிவுக்கும் இடையிலான தொடர்பை ஆராய்வதற்கான ஒரு வழிமுறையாக டேவ் சூரிய புள்ளி சமநிலை (SSE) என்ற கருத்தை அறிமுகப்படுத்தினார்.
வாணிப சுழற்சியின் சூரிய புள்ளி கோட்பாடானது சூரியனில் காணப்படும் புள்ளிகள் எவ்வாறு பொருளாதாரத்தைக் குறிப்பாக வேளாண் நடவடிக்கைகளைப் பாதிக்கின்றது என்பதாகும். சூரிய புள்ளி கோட்பாடானது முதலில் வில்லியம் ஸ்டான்லி ஜீவேன் (William Stanley Jevons) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இவரின் கருத்துப்படி சூரிய புள்ளி சுழற்சியானது புவியின் காலநிலையினை பாதிக்கக் கூடியது இதனுடைய விளைவால் வேளாண் உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்பதாகும்.
சூரிய புள்ளி நவீன கோட்பாட்டை டேவில் காஸ்-கூப்மன்ஸ் 1983ல் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையான Do Sunsports Matter? மூலமாக வழங்கியுள்ளனர். இது பகுத்தறிவு தொடர்பான ஒரு வடிவமைப்பாகும், முடிவில் இது சூரிய புள்ளி சமநிலைக்குச் சென்றடையும் என்றார். உறுதியின்மை, தனித்தன்மை, சந்தை படுத்தல், வரம்புகடந்த நிலை போன்ற முக்கிய புறக் காரணிகளை சார்ந்தே இச் சமநிலை எட்ட முடியும். இக்கோட்பாடானது பொருளாதார இயக்கத்தைத் தெளிவற்ற நிலையினை புரிந்துகொள்ளவும் உதவுகிறது. முற்றிலும் வெளிப்புற சீரற்ற மாறி (சூரிய புள்ளிகள்) உணர்தலில் முற்றிலும் பகுத்தறிவின்படி செயல்களை ஒருங்கிணைக்க முடியுமா என்பது ஐயமாக உள்ளது.
ஆதாரம்: www.economics.sas.upenn.edu; www.karlshell.com
📚 எழுதியவர்:

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

