ஆல்ஃபிரட் ஹாஸ்கெல் கான்ராட் (Alfred Haskell Conrad) ஜனவரி 2, 1924இல் அமெரிக்காவில் பிறந்தார். நியூயார்க்கின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் சிட்டி கல்லூரியில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றினர். இவர் கிளியோமெட்ரிக்ஸ் (வரலாற்றுப் போக்குகள், நிகழ்வுகளுக்கு முறையான பொருளாதார மாதிரிகள், பொருளாதார அளவீடு) பள்ளியைச் சேர்ந்தவர் ஆவார். கான்ராட் பொருளாதார வரலாறு, பொருளாதார அளவியலில் போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார்.
கான்ராட், தெற்குக்கு முந்தைய சகாப்த்த (தெற்கு அமெரிக்காவின் வரலாற்றில் 1812ஆம் ஆண்டு போரின் முடிவிலிருந்து 1861 இல் அமெரிக்க உள்நாட்டுப் போரின் ஆரம்பம் வரை நீடித்த ஒரு காலகட்டமாகும்) அடிமைத்தனத்தின் பொருளாதாரத்தில் சிறந்த வல்லுநர் ஆவார். அவர் எழுதிய கட்டுரையில் அடிமைத்தனம் அந்த பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முதன்மையான தடையாக இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
கான்ராட் மற்றும் மேயர் எழுதிய “ஆண்டிபெல்லம் தெற்கில் அடிமைத்தனத்தின் பொருளாதாரம்” (1958) என்ற கட்டுரையின் மூலம் கிளியோமெட்ரிக்ஸ் புரட்சியைத் தொடங்கினர், இது அதிநவீன மற்றும் தீர்க்கமான அளவீட்டு முறையால் ஆய்விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். அடிமைத்தனம் சராசரி அடிமைப்படுத்துபவருக்கு ஆதாயம் தருவதாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தனர். பின்னால் நடந்த பல விவாதங்களுக்குப் பிறகு, அவர் தொழில்நுட்ப இலக்கியத்தில் முப்பது கட்டுரைகளை வெளியிட்டார், அதில் அவரின் கருத்து உறுதியானதாக அமைந்திருந்தது.
அடிமை தொழிலாளர்களின் உற்பத்தி வருமானமானது அடிமைப்படுத்தப்பட்ட நபரின் உற்பத்திக்குச் சமமான வருமான ஓட்டத்தை உருவாக்கியது, இதில் அவர்களின் வாழ்வாதாரம், பராமரிப்பு மற்றும் மேலாண்மைக்கான செலவைக் கழித்தாகும். இவர் தனது 46வது வயதில் அக்டோபர் 18, 1970 தற்கொலை செய்துகொண்டார்.
ஆதாரம்: www.nytimes.com ; www.econlib.org
📚 எழுதியவர்:

******************************************************************************
புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வு
2026 ஆம் ஆண்டில் ஜனவரி 8 முதல் 21 வரை 49வது சென்னை புத்தகக்காட்சி நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் புத்தக காட்சியில் சிறந்த நூல் அறிமுகம் எழுதுபவர்களுக்கான போட்டி, கதை சொல்லல் போட்டி, சிறுகதை போட்டி என நடத்தி சிறந்த படைப்புகளுக்கு தொடர்ந்து பரிசுகளை வழங்கி வருகிறது பாரதி புத்தகாலயத்தின் புக் டே இணைய இதழ். இந்த ஆண்டும் ஜனவரி 8 முதல் 18 வரை சென்னை புத்தக கண்காட்சியின் ஏதாவது ஒரு அரங்கிற்கு நேரடியாக வந்து தங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து அதை நூல் அறிமுக கட்டுரையாக bookday24@gmail.com என்ற மெயிலில் அனுப்பி வைக்கவும். அதில் தேர்வாகும் சிறந்த அறிமுக கட்டுரைக்கு ரூ.10,000 மதிப்பிலான பரிசும், புத்தக கண்காட்சி அரங்கில் ஜனவரி 20 அன்று மாலை 5.30 மணியளவில் நடக்கும் புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வில் பரிசும் வழங்கப்படும். இந்நிகழ்வில் திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி, எழுத்தாளர்கள் இந்திரன், ஆயிஷா நடராசன், உமர் பாரூக் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி.செல்வா ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

